Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 8 ஜூலை, 2023

Mass Proper in Latin - Tamil - JULY 8, ST. ELIZABETH OF PORTUGAL, QUEEN & WIDOW

JULY 8, ST. ELIZABETH OF PORTUGAL,

QUEEN & WIDOW

Latin Mass Prayer Tamil Mass Prayer

INTROIT Psalms 118: 75, 120

Cognóvi, Dómine, quia ǽquitas judícia tua, et in veritáte tua humiliásti me: confíge timóre tuo carnes meas, a mandátis tuis tímui. (Ps. 118: 1) Beáti immaculáti in via: qui ámbulant in lege Dómini. Glória Patri et Fílio et Spirítui Sancto, sicut erat in princípio, et nunc, et semper, et in sǽcula sæculórum. Amen. Cognóvi, Dómine, quia ǽquitas judícia tua, et in veritáte tua humiliásti me: confíge timóre tuo carnes meas, a mandátis tuis tímui.

பிரவேச கீதம்: சங். 118 : 75, 120.

ஆண்டவரே, உம்முடைய ஆணைகள் நீதியானவை என அறிந்திருக்கிறேன்; நீர் எனக்குத் துயர் தந்தது முறையே: என் உடலை உம் அச்சத்தால் ஊடுருவும்: உம் ஆணைக்கே அஞ்சி நின்றேன். (T.P. அல்லேலூயா, அல்லேலூயா.) (சங். 118 : 1) ஆண்டவருடைய நெறியைப் பின்பற்றி பழுதற்று வாழ்வோர் பேறுபெற்றோர். V. பிதாவுக்கும்... ஆண்டவரே.

COLLECT

Clementíssime Deus, qui beátam Elísabeth reginam, inter céteras egrégias dotes, béllici furóris sedándi prærogatíva decorásti: da nobis, ejus intercessióne; post mortális vitae, quam supplíciter pétimus, pacem, ad ætérna gáudia perveníre. Per Dóminum nostrum Jesum Christum, Fílium tuum, qui tecum vivit et regnat in unitáte Spíritus Sancti, Deus, per ómnia sǽcula sæculórum.

சபை மன்றாட்டு:

செபிப்போமாக: இரக்க மிகுந்த சர்வேசுரா, அரசியான அர்ச். எலிசபெத்தம்மாளுக்குப் பல்வேறு சிறந்த கொடைகளுடன், போர் வெறியை அடக்கும் மேலான வரத்தையும் தந்து அவளை அணி செய்தீர்: அவளுடைய வேண்டுதலால், இவ்வுலக வாழ்வில் நாங்கள் பணிவுடன் வேண்டும் அமைதியைப் பெற்றபின், நித்திய பேரின்பத்திற்கு வந்து சேர எங்களுக்கு அருள்புரிவீராக உம்மோடு...

LESSON: Prov 31:10-31

Mulíerem fortem quis invéniet? Proculet de últimis fínibus prétium ejus. Confídit in ea cor viri sui, et spóliis non indigébit. Reddet ei bonum, et non malum, ómnibus diébus vitæ suæ. Quæsívit lanam et linum, et operáta est consílio mánuum suárum. Facta est quasi navis institóris, de longe portans panem suum. Et de nocte surréxit, dedítque prædam domésticis suis, et cibária ancíllis suis. Considerávit agrum, et emit eum: de fructu mánuum suárum plantávit víneam. Accínxit fortitúdine lumbos suos, et roborávit bráchium suum. Gustávit, et vidit, quia bona est negotiátio ejus: non exstinguétur in nocte lucérna ejus. Manum suam misit ad fórtia, et dígiti ejus apprehénderent fusum. Manum suam apéruit ínopi, et palmas suas exténdit ad páuperem. Non timébit dómui suæ a frigóribus nivis: omnes enim doméstici ejus vestíti sunt duplícibus. Stragulátam vestem fecit sibi: byssus et púrpura induméntum ejus. Nóbilis in portis vir ejus, quando séderit cum senatóribus terræ. Síndonem fecit et véndidit, et cíngulum tradidit Chananaeo. Fortitúdo et decor induméntum ejus, et ridébit in die novíssimo. Os suum apéruit sapiéntiæ, et lex cleméntiæ in lingua ejus. Considerávit sémitas domus suæ, et panem otiósa non comédit. Surrexérunt fílii ejus, et beatíssimam prædicavérunt: vir ejus, et laudávit eam. Multæ fíliæ congregavérunt divítias, tu supergréssa es univérsas. Fallax grátia, et vana est pulchritúdo: mulier timens Dóminum, ipsa laudábitur. Date ei de fructu mánuum suárum, et laudent eam in portis ópera ejus.

ஞானாகமத்திலிருந்து வாசகம்

பழ. 31. 10-31 வல்லமையுள்ள ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவனார்? தூரமாய்க் கடைகோடிகளினின்றாம் அவளுடைய விலைமதிப்பு. அவன் கணவனின் இருதயம் அவளில் நம்பிக்கை கொள்ளுகின்றது; கொள்ளைப் பொருள்களும் அவனுக்குக் குறைவுபடாது. அவள் அவனுக்குத் தன் சீவிய நாட்களனைத்தும் தின்மையை அல்ல நன்மையையே மாறாக அளிப்பாள். ஆட்டு ரோமத்தையும் சணல் நூலையுந் தெரிந்தெடுத்துத் தன் கரங்களின் சாமர்த்தியத்தால் வேலை செய்தான். தூரத்தினின்று தன் அப்பத்தைக் கொண்டுவருகின்ற வர்த்தகர்களின் கப்பல்போலானாள். இராவிலேயே எழுந்து தன் ஊழியருக்கு அருமையான பொருளையும் தன் ஊழியக்காரிகளுக்கு ஆகார வர்க்கங்களையுந் தந்தாள். வயல் நிலத்தையும் ஆராய்ந்து பார்த்து அதை வாங்கினாள்; தன் கைகளின் பலனால் முந்திரிகை தோட்டத்தையும் நட்டாள். திடத்தால் தன் இடைகளை வரிந்துகட்டித் தன் புஜத்தையும் பலப்படுத்தினாள். அவள் சுவைபார்த்துத் தன் வியாபாரம் நலமானதென்று கண்டாள். அவளுடைய விளக்கு இரவில் அணைக்கப்படாது. வன்மையான காரியங்களுக்குத் தன் கரங்களை இட்டாள்; அவளுடைய விரல்கள் சிம்புக் கதிரைப் பிடித்தன. வகை இல்லாதவனுக்குத் தன் கரங்களைத் திறந்தாள்; தன் உள்ளங் கைகளை ஏழைக்கு நீட்டினாள். பனியின் குளிர் நிமித்தம் தன் வீட்டாரைப்பற்றிப் பயப்பட மாட்டாள்; ஏனெனில் அவளுடைய ஊழியர் அனைவருமே இரட்டை (ஆடை)யால் உடுத்தப்பட்டிருக்கிறார்கள். கம்பளி ஆடையைத் தனக்குச் செய்திருக்கிறாள்; மெல்லிய சணலும் தூமிர வஸ்திரமும் அவளுடைய போர்வையாம். அவள் கணவன் பூமியின் ஆலோசனைச் சங்கத்தாருடன் உட்கார்ந்திருக்கையில் நியாய வாசலில் மகிமை பெறுவான். மூடுதாரையும் செய்து விற்றாள்; கனானேயனுக்கு அரைக்கச்சையையுங் கொடுத்துவிட்டாள். வல்லமையும் செளந்தரியமும் அவளுக்கு உடை(யாம்;) கடைசி நாளிலும் அவள் நகைப்பாள். ஞானத்துக்குத் தன் வாயைத் திறந்தாள்; அவளுடைய நாவில் சாந்தத்தின் நீதிமுறையாம். தன் இல்லத்தின் வழிகளை உற்றுப்பார்த்தாள்; சோம்பலாய்த் தன் அப்பத்தைப் புசிப்பாள். அவளுடைய புத்திரர் எழுந்து அவளை மகா பாக்கியவதியென்று பிரசங்கித்தார்கள்; அவளுடைய பத்தாவும் அவனைப் புகழ்ந்தான். பல புத்திரிகள் திரவியங்களைச் சேகரித்தார்கள்; நீ(யோ) சகலரையும் மேற்கடந்தாய். அந்தமும் பொய்யும் செளந்தரியமும் வியர்த்தமாம்; ஆண்டவ ருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள். அவளுடைய கரங்களின் பலனி னின்று அவளுக்குத் தாருங்கள்; அவளுடைய கிரிகைகளே (நடுவரின்) சங்கங்களில் அவளைப் புகழக்கடவன.

GRADUAL Psalms 44: 3, 5

Diffúsa est grátia in lábiis tuis: proptérea benedíxit te Deus in ætérnum. Própter veritátem et mansuetúdinem, et justítiam: et dedúcet te mirabíliter déxtera tua. Allelúja, allelúja. Spécie tua, et pulchritúdine tua inténde, próspere procéde, et regna. Allelúja.

தியானப் பாடல்: சங்.44:3,5.

உம்முடைய சொற்களில் அருள் விளங்குகின்றது; ஆகையால், சர்வேசுரன் என்றென்றைக்கும் உமக்கு ஆசியளித்தார். V. உண்மை, சாந்தம், நீதியின் பொருட்டு, உமது வலக்கரம் வியத்தகு முறையில் உம்மை வழி நடத்தும்.

அல்லேலூயா, V. (சங்.44:5) உமது அல்லேலூயா. எழில்மிகு தோற்றத்துடன் எழுந்தருளி, வெற்றியுடன் முன்னேறி, ஆட்சிபுரியும் அல்லேலூயா.

(முன்தவக் காலத் துவக்கத்திலிருந்து அல்லேலூயாவுக்குப் பதிலாக)

நெடும் பாடல்:

கிறிஸ்துவின் மணமகளே வாரும், ஆண்டவர் உமக்கென ஆயத்தம் செய்துள்ள நித்திய முடியைப் பெற்றுக்கொள்ளும். V. (சங். 44: 8,5.) நீதியை விரும்பினீர்; அநீதியை வெறுத்தீர். எனவே ஆண்டவர், உம் ஆண்டவர், உம்முடைய தோழரினும் மேலாக மகிழ்ச்சி தரும் தைலத்தால் உம்மை அபிஷேகஞ் செய்தார். V. உம் எழில்மிகு தோற்றத்துடன் எழுந்தருளி, வெற்றியுடன் முன்னேறி, ஆட்சிபுரியும்.

(பாஸ்கா காலத்தில்)

அல்லேலூயா, அல்லேலூயா. V. (சங். 44:5) உமது எழில்மிகு தோற்றத்துடன் எழுந்தருளி, வெற்றியுடன் முன்னேறி, ஆட்சிபுரியும்.

அல்லேலூயா. V. உண்மை, சாந்தம், நீதியின்பொருட்டு, உமது வலக்கரம் வியத்தகு முறையில் உம்மை வழி நடத்தும். அல்லேலூயா.

GOSPEL Matthew 13: 44-52

In illo témpore: Dixit Jesus, discípulis suis parábolam hanc: Símile est regnum coelórum thesáuro abscóndito in agro: quem qui invénit homo, abscóndit, et præ gáudio illíus vadit, et vendit univérsa quæ habet, et emit agrum illum. Íterum símile est regnum coelórum hómini negotiatóri, quærénti bonas margaritas. Invénta autem una pretiósa margaríta, abiit, et véndidit ómnia quæ hábuit, et emit eam. Íterum símile est regnum coelórum sagénæ missæ in mare, et ex omni génere píscium congregánti. Quam, cum impléta esset, educéntes, et secus littus sedéntes, elegérunt bonos in vasa, malos autem foras misérunt. Sic erit in consummatióne sæculi: exíbunt Ángeli, et separábunt malos de médio justórum, et mittent eos in camínum ignis: ibi erit fletus, et stridor déntium. Intellexístis hæc omnia? Dicunt ei: Étiam. Ait illis: Ideo omnis scriba doctus in regno coelórum, similis est hómini patrifamílias, qui profert de thesáuro suo nova et vétera.

அர்ச். மத்தேயு எழுதிய சுவிசேஷத்தின் தொடர்ச்சி

மத். 13. 44-52

அக்காலத்தில் சேசுநாதர் திருவுளம் பற்றினதாவது: பரலோக இராச்சியமானது ஓர் நிலத்தில் புதைந்திருக்கிற புதையலுக்கு ஒப்பாயிருக்கின்றது. அதைக் கண்ட மனிதன் அதை மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினால் போய், தனக்குள்ள யாவையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்ளுகிறான். மீளவும் பரலோக இராச்சியமானது நல்ல முத்துக்களைத் தேடுகிற வர்த்தகனுக்கு ஒப்பாயிருக்கின்றது. அவன் விலையேறப்பெற்ற ஓர் முத்தைக் கண்ட மாத்திரத்தில், போய், தனக்குண்டான யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்ளுகிறான். அல்லாமலும் பரலோக இராச்சியமானது கடலில் வீசப்பட்டு எவ்வகை மச்சங்களையுஞ் சேர்த்து வாரிக்கொள் ளும் வலைக்கு ஒப்பாயிருக்கின்றது. அது நிறைந்த பின், வெளியில் இழுத்துக் கரையில் உட்கார்ந்து நல்லவைகளைத் தெரிந்தெடுத்து, பாத்திரங்களில் வைத்துக்கொண்டு, ஆகாதவைகளைப் புறம்பே எறிந்துவிட்டார்கள். இவ்வண்ணமே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர் புறப்பட்டுப்போய் நீதிமான்கள் நடுவிலிருந்து தீயோரைப் பிரித்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார். பின்னும் அவர்: நீங்கள் இவையெல்லாம் கண்டுபிடித்தீர்களோ? என்றார். அதற்கு அவர்கள்: ஆம் என்றார்கள். அப்போது அவர்களை நோக்கி அவர் சொன்னதாவது : ஆகையால் பரலோக இராச்சியத்துக்கடுத்தவைகளிலே தேர்ந்த வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் வெளியில் எடுத்துக் காட்டுகிற வீட்டெஜமா னுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார்.

OFFERTORY Psalms 44: 3

Diffúsa est grátia in lábiis tuis: proptérea benedíxit te Deus in ætérnum. et in sǽculum sǽculi.

காணிக்கைப் பாடல்:சங். 44 : 3,

உம்முடைய சொற்களில் அருள் விளங்குகின்றது. ஆகையால், சர்வேசுரன் என்றென்றைக்கும் உமக்கு ஆசியளித்தார். (T. P. அல்லேலூயா).

SECRET

Accépta tibi sit, Dómine, sacrátæ plebis oblátio pro tuórum se méritis, de tribulatióne percepísse cognóscit auxílium. Per Dóminum nostrum Jesum Christum, Fílium tuum, qui tecum vivit et regnat in unitáte Spíritus Sancti, Deus, per ómnia sǽcula sæculórum.

காணிக்கை மன்றட்டு

ஆண்டவரே, எங்கள் துன்ப வேளையில் உம்முடைய புனிதர்களின் பேறு பலன்கள் எங்களுக்குத் துணைபுரிந்ததை உணர்கின்றோம்: எனவே, அவர்களைச் சிறப்பிக்க உம் திருச்சபை உமக்களிக்கும் இக்காணிக்கை உமக்கு ஏற்றதாய் இருப்பதாக. உம்மோடு...

COMMUNION Psalms 44: 8

Dilexísti justítiam, et odísti iniquitátem: proptérea unxit te Deus, Deus tuus, óleo lætítiæ præ consórtibus tuis.

உட்கொள்ளுதல்: சங். 44:8.

நீதியை விரும்பினீர், அநீதியை வெறுத்தீர்: எனவே ஆண்டவர், உம் ஆண்டவர், உம்முடைய தோழரினும் மேலாக மகிழ்ச்சி தரும் தைலத்தால் உம்மை அபிஷேகஞ் செய்தார். (T. P. அல்லேலூயா).

POSTCOMMUNION

Satiásti, Dómine, famíliam tuam munéribus sacris: ejus, quǽsumus, semper interventióne nos refóve, cujus solémnia celebrámus. Per Dóminum nostrum Jesum Christum, Fílium tuum, qui tecum vivit et regnat in unitáte Spíritus Sancti, Deus, per ómnia sǽcula sæculórum.

நன்றி மன்றாட்டு:

செபிப்போமாக: ஆண்டவரே, உமது குடும்பத்தைத் திருக்கொடைகளால் நிறைவூட்டினீர் ; நாங்கள் விழாக் கொண்டாடும் இந்தப் புனிதையின் வேண்டுதலினால் எங்களை என்றும் தேற்றுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

This is for a personal use only.

It contains my own translation.

thanks for your understanding.
Deo Gratias!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக