Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 25 நவம்பர், 2013

அதிமேற்றிராணியார் மிக.வந்.மார்செல் லெஃபவர் ஆண்டகையின் வாழ்க்கைச் சுருக்கம


1905 etk;gu; 29: khu;nry; ny/gtu; gpuhd;]; ehl;bd; yPy; (Lille) vd;w Cupy; gf;jpAs;s fj;Njhypf;ff; FLk;gj;jpy; gpwe;jhh;.
1929- cNuhikapYs;s gpnuQ;r; FUklj;jpy; FUj;Jtf;fy;tp gapd;W FUg;gl;lk; ngw;whu;.
1932-1946 jpt;tpa ,];gpuPj;Jrhe;J FUf;fs; rigapy; Nru;e;J Mg;gpupf;fh ehl;bd; fhNghd; khepyj;jpw;F Ntj Nghjff; FUthf mDg;gg;gl;lhu;.
1947-1962 ,jw;fpilapy; Nkw;wpuhzpahuhf mgpN\fk; ngw;W nrdpf;fy; ehl;L lhf;fhH (Dakar Senegal) gFjpapd; mg;Ngh];jypf;f gjpyhshfTk; (Vicar) > gpd;du; Mg;gpupf;fhtpy; ghg;gurupd; mg;Ngh];jypf;f ];jhdhjpgjpahfTk; gzpahw;wpdhu;. ,Wjpapy; lhf;fhu; Nkw;wpuhrdj;jpd; KjyhtJ Nkw;wpuhzpahuhfTk; Vw;gLj;jg;gl;lhu;. mq;Nf mNef fj;Njhypf;f ];jhgdq;fis Vw;gLj;jpatu;> jq;fs; nrhe;j Nkw;wpuhrdq;fspd; FUf;fshf;Ftjw;f Mg;gpupf;f ehl;L ,isQu;fisj; jahupj;jhu;.
1962 gpuhd;]; ehl;by; j;J}y; (Tulle)  Nkw;wpuhrdj;jpd; Nkw;wpuhzpahuhf ghg;guruhy; epakpf;fg;gl;lhu;. 6 khjq;fSf;Fg; gpwF jpt;tpa ,];gpuPj;Jrhe;J FUf;fs; rigapd; mjprpNu\;luhf Nju;T nra;ag;gl;lhu;.
1962-1965 y; 2-k; tj;jpf;fhd; rq;fk; :1960-y; $l;;lg;gltpUf;Fk; 2-k;  tj;jpf;fhd; rq;fj;jpw;fhd jahupg;G FOtpy; mku;j;jg;gl;lhu;. rq;fj;jpd; Kjy; mku;tpNyNa etPdu;fs; rq;f eilKiwfisAk;> nray;ghLfisAk; ifg;gw;wp> rq;fj;jpd; epfo;r;rp epuy;fis (Schemas) jahupf;fj; njhlq;fpdu;. rq;fj;jpy; etPdj;ij vjpu;j;Jg; Nghuhl fj;.ghuk;gupaj;ij tpUk;Gk; rq;fj; je;ijau;fisf; nfhz;l coetus Internationalis Patrum  vd;w rpW FOit cUthf;fpdhu;.
1968-1969 jhk; rhu;e;jpUe;j FUf;fs; rigapd; Jwtpau;fs; etPdf; nfhs;iffis tpUk;gpajhy; jkJ mjprpNu\;lu; gjtpapypUe;J uh[Pdhkh nra;jhu;. vQ;rpa tho;it Xa;tpYk;> n[gj;jpYk; nrytpl tpUk;gp cNuhikapy; jq;fapUe;jtiu> ghuk;gupa FUklg; Nghjidfis tpUk;gpa> etPdj;jhy; ghjpf;fg;gl;l FUkhztu;fs; rpyu; re;jpj;J jq;fsJ> ghuk;gupa FUj;Jt gapw;rpf;F cjTkhW Nfl;Lf; nfhz;ldu;. mJNt Njt rpj;jk; vd;gij czu;e;j ny/gtu; Mz;lif mjw;fhd xU ,y;yj;ijj; jpwe;jhu;.
1969 Rtpl;ru;yhe;J ehl;by; <f;Nfhdpy; ghuk;gupa FUklj;ij epWtp> mjw;fhf mu;r;.gj;jhk; gj;jpehju; FUf;fs; rigia jpUr;rigapd; Kiwahd mq;fPfhuj;Jld; ];jhgpj;jhu;. mjd; KjyhtJ mjprpNu\;luhf 1982-k; Mz;L tiu nray;gl;lhu;.
1970-1988 cyf ehLfnsq;fpYk; gazk; nra;J fj;Njhypf;f kf;fis jq;fsJ ghuk;gupa fj;.tpRthrj;jpy; cWjpaahapUf;f Cf;fg;gLj;jpAk;> cWjpG+Rjy; Njt jputpa mDkhdq;fis epiwNtw;wpAk;> mu;r;.gj;jhk; gj;jpehju; rig FUklj;jpy; gapd;w Gjpa FUf;fSf;F FUg;gl;lKk; nfhLj;J te;jhu;.
1976 [_iy khjj;jpy;  etPd mjpfhupfs; Divine   vd;w FUj;Jtg;gzpapypUe;J r];ngz;l; nra;ag;gl;lhu;. Mdhy; mJ jpUr;rigapd; rl;lg;gbahdjhf ,y;yhjjhfTk;> ve;j tpjkhd tprhuizapd;wp> tpNr\j; jPu;g;Gf; fbjk; (Forma specifica letter)  $l ntspaplg;glhky; jz;lid tpjpf;fg;gl;lhu;.
1988 - [{d; 30 y; jpUr;rigapy; fj;.ghuk;gupaKk; FUj;JtKk; fhg;ghw;wg;gLtjw;fhf mu;r;. 10-k; gj;jpehju; rigapd; 4 FUf;fis Nkw;wpuhzpkhu;fshf mgpN\fk; nra;jhu;. ,r;nray; jpUr;rigr; rl;lj;jpw;F tpNuhjkhdJ vd;W jPu;g;gplg;gl;L> mtUk; mtuhy; mgpN\fk; nra;ag;gl;l 4 Nkw;wpuhzpkhu;fSk; RakhfNt jpUr;rig tpyf;fk; ngw;Wf; nfhz;lhu;fs; vd;W mwptpf;fg;gl;lhu;fs;.

1991 khu;r; 25: ehd; vijg; ngw;Wf; nfhz;NlNdh> mjid toq;fpapUf;fpNwd; Tadidi quod et accepi   vd;w cj;jk fj;Njhypf;f Nkw;wpuhzpahupd; flikia nrt;tNd epiwNtw;wpa mjpNkw;wpuhzpahu; kpf.te;.khu;nry; ny/gtu; Mz;lif mtu;fs; ghf;fpakhd kuzkile;jhu;fs;.

செவ்வாய், 5 நவம்பர், 2013

அநுதின காலை ஜெபங்கள் (Daily Catholic Prayers in Tamil)

அநுதின காலை ஜெபங்கள் 


mjpfhiy n[gk;
tpbaw;fz; tpopf;fpwNghJ nrhy;Yjy;
      NrR kupahNa #irNa! cq;fs; milf;fyj;jpNy! ehd; fz;tpopj;J! ,d;W ahnjhU nghy;yhg;igf; fhzhkYk;! epidahkYk; nra;ahkYk; ,Uf;ff; flNtdhf!
      NrR khpahNa #irNa! vd; ,Ujaj;ijAk; Mj;Jkj;ijAk; cq;fSf;F xg;Gf;nfhLf;fpNwd;.

vOe;jpUf;fpw NghJ
      NrRehjUila jpUehkj;jpdhNy vOe;jpUf;fpNwd;. gLf;ifapy; epd;W vOe;jJ NghNy ghtj;ij tpl;nlOe;J> kWgbAk; ehd; ghtj;jpy; tpohjgbf;F vd;idj; jw;fhj;jUSk; Rthkp.

cLf;fpw nghOJ
      Mz;ltNu ,e;j rhPuj;ij %l t];jpuk; nfhLj;jJ NghNy Mj;Jkj;ij myq;fupf;f ckJ fUizg; gpurhjj;ijf; nfhLj;jUStPuhf

RUf;fkhd fhiy n[gk;
      (NfhtpYf;F te;jJk; - jPh;j;jj;jhy; new;wpapy; rpYit tiue;J nfhs;sTk; jpt;a ew;fUizapy; ,Uf;Fk; NrRit xw;iw Koq;fhypy; ,Ue;J Muhjpj;Jtpl;L cd;Dila ,lj;jpw;Fg; Ngha; Koq;fhypy; ,Uf;fTk;)
mh;r;rp\;l rpYit ke;jpuk;
      mh;r;rp~;l rpYit milahsj;jpdhny vq;fs; rj;JUf;fsplj;jpNy epd;W vq;fis ,ul;rpj;Jf; nfhs;Sk;. vq;fs; ru;NtRuh! gpjh> Rjd;> ghpRj;j Mtpapd; ngauhNy> Mnkd;
            (Nfhtpypy; ew;fUiz ];jhgfk; ,Ue;jhy;)
      epj;jpa ];Jjpf;Fhpa ghpRj;j guk jpt;tpa ew;fUizf;Fr; rjhfhyKk; MuhjidAk; ];JjpAk; Njhj;jpuKk; ek];fhuKk; cz;lhff; fltJ.

,];gphPj;J rhe;Jtpd; ke;jpuk;

      ,];gphPj;J rhe;JNt NjthPh; vOe;jUsp thUk;. guNyhfj;jpNy epd;W! ck;Kila jpt;tpa gpufhrj;jpd; fjpu;fis tutpLk;. jupj;jpuUila gpjhNt ! nfhilfisf; nfhLf;fpwNu ,Ujaq;fspd; gpufhrNk vOe;jUsp thUk;! Cj;jk; MWjyhdtNu Mj;Jkq;fSf;F kJukhd tpUe;jhbNa>! Ngupd;g ,urKs;s ,isg;ghw;wpNa> gpuahrj;jpw;F RfNk>! nta;apypw; Fspu;r;rpNa! mOifapy; Njw;wuNt vOe;jUsp thUk;.! ntF Mde;jj;NjhNl $bapUf;fpw gpufhrNk>! ckJ tpRthrpfSila ,Ujaq;fspd; cw;gdq;fis epug;Gk;.! ck;Kila nja;tPfkpd;wpNa ! kdpjhplj;jpy; Fw;wkpy;yhjJ xd;Wkpy;iy! mRj;jkhapUf;fpwij Rj;jk; gz;Zk;>! cyu;e;jij eidAk;> NehthapUf;fpwij Fzkhf;Fk;> tzq;fhjij tzq;fr; nra;Ak; ! FspNuhbUf;fpwijf; Fspu;g;Nghf;Fk;! Jtwpdijr; nrt;Nt elj;Jk;.! ck;ik ek;gpd ck;Kila tpRthrpfSf;F ck;Kila jpUf;nfhilfs; ViHAk; nfhLj;jUSk;! Gz;zpaj;jpd; NgWfisAk;! ey;y kuzj;ijAk; ! epj;jpa Nkhl;rhde;jj;ijAk; vq;fSf;Fj; je;jUSk; - Mnkd;

jpupfhy n[gk;
      (,e;j n[gj;ij Koq;fhypypUe;J Ntz;bf;nfhs;s Ntz;Lk;. Mdhy; rdpf;fpoik rha;jpuKk;> Qhapw;Wf;fpoikapYk; ,ij epd;W nfhz;L nrhy;y Ntz;baJ)
      Mz;ltUila rk;kdrhdJ khpahapAlNd tpNr\Q; nrhy;ypw;W
      mtUk; ,];gpuPj;J rhe;JtpdhNy fu;g;gpzpahdhh;. (mUs;)
      ,Njh Mz;ltUila mbikahdts;
      ck;Kila thu;j;ijapd;gbNa vdf;F Mff;fltJ (mUs;)
      thu;j;ijahdJ khk;rkhfp> vq;fSlNd $l thrkhapUe;jJ (mUs;)
      NrRf; fpwp];JehjUila jpU thf;Fj;jj;jq;fSf;F ehq;fs; ghj;jpukhapUf;fj;jf;fjhf Ntz;bf;nfhs;Sk;.
n[gpg;Nghkhf
      ru;NtRuh Rthkp! Rk;kdR nrhd;djpdhNy ckf;F Fkhudhfpa NrRf;fpwp];J kD\dhdij mwpe;jpUf;fpw ehq;fs;> mtUila ghLfspdhNyAk;> rpYitapdhNyAk; cj;jhdj;jpd; kfpikia milaj;jf;fjhf vq;fSf;F mEf;fpufk; nra;jUs Ntz;Lnkd;W NjthPiu Ntz;bf; nfhs;fpNwhk;. ,e;j kd;whl;Lf;fis vy;yhk; vq;fs; Mz;ltuhfpa NrRfpwp];J ehjUila jpUKfj;ijg; ghu;j;J vq;fSf;Fj; je;jUSk; - Mnkd;.
gh];Ff; fhyj;jpd; jpupfhy n[gk;
      (,J ngupa rdp khiy Kjy; mu;r;. jkjpupj;Jtj;jpd; jpUehs; tiuf;Fk; epd;W nfhz;L nrhy;yj;jf;fJ)
      guNyhfj;Jf;F ,uhf;fpdpNa! Kdq; fsp$Wk; - my;NyY}a;ah
      mNjnjdpy; ghf;fpatjpahd ckJ jpU cjuj;jpy; mtjupj;jtu; - my;NyY}a;ah
      jpUTsk;gw;wpd thf;fpd;gbNa capu;j;njOe;jUspshh; - my;NyY}a;ah
      vq;fSf;fhf rh;NtRuid kd;whLk; - my;NyY}a;ah
      vg;NghJk; fd;dpifahd kupahNa mfkfpo;e;J G+hpf;ffltPh; - my;NyY}a;ah
      mNjnjdpy; Mz;ltu; nka;ahfNt cj;jhdkhapdhh; - my;NyY}a;ah
n[gpg;Nghkhf
      rh;NtRuh! Rthkp ck;Kila jpUf;FkhuDkha;> vq;fs; Mz;ltUkhapUf;fpw NrRf;fpwp];Jtpd; cj;jhdj;jpdhNy cyfq;fspf;fr; rpj;jkhdPNu. fd;dpkhpahap Mfpa mtUila jpUj;jhahuhNy epj;jpa [Ptpakhd guNyhf tho;it ehq;fs; milAk;gbf;F mDf;fpufk; nra;jUSk;. ,e;j kd;whl;Lf;fis vy;yhk; vq;fs; Mz;ltuhd NrRehjUila jpUKfj;ijg; ghh;j;J vq;fSf;Fj; je;jUSk; - Mnkd;.
jkjpupj;Jt Muhjid
(if $g;gp> jiy Fdpe;J)
      gpjhTf;Fk;> RjDf;Fk; gupRj;j Mtpf;Fk; kfpik cz;lhtjhf> Mjpapy; ,Ue;jJNghy; ,g;nghOJk; vg;nghOJk; vd;nwd;Wk; ,Ug;gjhf Mnkd;. (%d;W Kiw)
fhty; rk;kdRf;Fj; jd;id xg;Gf;nfhLf;Fk; n[gk;
Kjy;: vdf;Ff; fhtyhapUf;fpw
vy;:   ru;NtRuDila rk;kdrhdtNu! Nja;tPf fpUigahy;! ck;kplj;jpy; xg;Gtpf;fg;gl;l vdf;F! Qhd ntspr;rk; nfhLj;J! vd;idf; fhj;J elj;jp! Mz;lUSk; - Mnkd;.
NrRtpd; jpU ,Ujaj;jpw;F jd;id xg;Gf; nfhLf;Fk; n[gk;
(n[g mg;Ngh];jy rigahh; fhzpf;if nrgk;)
Kjy;: NrRtpd; jpU ,UjaNk!
vy;:   ehq;fs; fl;bf;nfhs;Sk;! JNuhfq;fSf;Fg; ghpfhukhfTk;! NjthPh; jpUg; gPlj;jpy;! Xahky; ck;ikj;jhNd! Gypahf xg;Gf;nfhLf;Fk;! Rfy fUj;Jf;fSf;fhfTk;! mbNad; ,d;W nra;Ak;! n[gq;fisAk; fpupiafisAk;! gLe;Jd;g tUj;jq;fisAk; mu;r;. fd;dpkupahapd;! Khrpy;yhj jpU ,Ujaj;jpd; topahf! ckf;F xg;Gf; nfhLf;fpNwd;.
      ,e;j khjj;Jf;Fk;! ,e;j ehSf;Fk;! rigahUf;Fk; Fwpf;fg;gl;l! rfy fUj;Jf;fSf;fhfTk;! tpNr~kha;>
nghJf; fUj;J …………………………f;fhfTk;
kp~d; fUj;J ………………………….f;fhfTk;> mitfis xg;Gf;nfhLf;fpNwd;. Mnkd;.
Kjy;: mUs; epiwe;j khpahNa tho;f! ……………
vy;:   mu;r;. kupahNa ……………………
Kjy;: mu;r;. gpuhd;rp]; rNtupahNu!
vy;:   vq;fSf;fhf Ntz;bf;nfhs;Sk;
Kjy;: mu;r;. Foe;ij njurk;khNs!
vy;:   vq;fSf;fhf Ntz;bf;nfhs;Sk;
kupahapd; khrw;w ,Ujaj;jpw;F jd;id mu;g;gzpf;Fk; n[gk;.
(ePy mzp mu;g;gz n[gk;)
      vq;fs; md;Gj; jhAk; murpAkhd khpahNa! u~;ahit kde;jpUg;gp cyfj;jpw;F rkhjhdk; jUNtd; vd;W ghj;jpkhtpy; thf;fspj;jPu;fNs! vq;fSilaTk; cyfj;jpDilaTk; ghtq;fshy; cq;fs; khrw;w ,Ujaj;Jf;F Vw;gl;l epe;ijfSf;Fg; gupfhukhf> vq;fs; flikiar; nra;tjpy; vq;fSf;F Vw;gLk; rfy Jd;gq;fisAk; ghpj;jpahfkhf Vw;Wf;nfhs;SfpNwhk;. 53 kzp n[gkhiyia jpahdpj;Jr; nrhy;Nthk;. vq;fis cq;fs; khrw;w ,Ujaj;jplk; xg;gilf;fpNwhk;. ,jd; milahskhd fhh;nky;  cj;jupak; mzpe;jpUf;fpNwhk;.
(,q;F cj;jupaj;ij Kf;jp nra;aTk;) ,e;j xg;Gf; nfhLj;jiy mbf;fb> tpNr~khf Nrhjid Neuj;jpy; GJg;gpg;Nghk; jhNa Mnkd;.

அநுதின காலை ஜெபங்கள் 


அர்ச். பிரான்சிஸ் அசிசியார் (Part -II)

குரல் கேட்டல்



பிரான்சிசின் வரலாற்றில் வருகின்ற பிச்சைக்காரனின் கதையில் இருந்து உலகப்பற்றை அவர் வெறுத்தது குறித்து அறியலாம். இதன்படி, தந்தைக்குப் பதிலாக இவர் சந்தையில் ஒருநாள் துணி விற்றுக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு பிச்சைக்காரன் இவரிடம் பிச்சை கேட்டான். இவர் அப்போது வாடிக்கையாளருடன் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். அது முடிந்ததுமே, தனது பொருட்களை அப்படியே விட்டுவிட்டு பிச்சைக்காரனைத் தேடி ஓடினார். அவனைக் கண்டதும், தன்னிடம் இருந்த எல்லாவற்றையுமே அவனிடம் கொடுத்துவிட்டார். இச்செயலை முன்னிட்டு இவரது நண்பர்கள் பிரான்சிசைக் குறைகூறினர். வீட்டுக்குச் சென்றதும் பிரான்சிசின் தந்தை மிகவும் கோபம் கொண்டு அவரைக் கண்டித்தார்.
1204 இல் பிரான்சிசு நோய் வாய்ப்பட்டதைத் தொடர்ந்து, தம் வாழ்க்கையின் பொருள் பற்றி ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினார். 1205 இல் பூலியா (Puglia) என்னும் இடம் நோக்கிப் பயணமான அவர் அங்கே வால்ட்டர் என்னும் பெயர் கொண்ட பிரியேன் கவுண்ட்டின் (Count of Brienne) படையில் சேரத் துணிந்தார். வழியில் அவர் அதிசயமானதொரு காட்சி காணும் பேறு பெற்றார். அதில் ஒரு பெரிய மண்டபத்தில் பல வகையான போர்க்கருவிகள் இருந்தன. அவற்றின் மீது சிலுவைச் சின்னம் வரையப்பட்டிருந்தது. அப்போது ஒரு குரல் "இந்த ஆயுதங்கள் உனக்கும் உன் போர் வீரர்களுக்கும் உள்ளன" என்று கூறியது. உடனே பிரான்சிசு மிகுந்த உற்சாகத்துடன், "அப்படி என்றால் நான் புகழ்மிக்க இளவரசன் ஆவேன்" என்றார்.
ஆனால் வழியில் அவர் நோய்வாய்ப்பட்டார். மேலும் ஒரு காட்சியில் ஒரு குரல் அவரை மீண்டும் அசிசி நகருக்குத் திரும்பிப் போகக் கூறியது. "நீ தலைவருக்கு (கடவுளுக்கு) வேலை செய்யவேண்டுமே ஒழிய, பணியாளருக்கு (உலக அதிகாரிகள்) அல்ல" என்று கூறிய அக்குரலைக் கேட்ட பிரான்சிசு அசிசி நகருக்குத் திரும்பிச் சென்றார். 1205ஆம் ஆண்டில் பிரான்சிசுக்கு இந்த ஆன்மிக அனுபவம் ஏற்பட்டது என்று அவரது வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்

அர்ச். தமியானோ கோவிலில் பிரான்சிசு 



1206ஆம் ஆண்டில் ஒருநாள் பிரான்சிசு அசிசி நகர்ப் பள்ளத்தாக்கில் அமைந்திருந்த அர்ச் தமியானோ கோவிலுக்குள் நுழைந்து சர்வேசுரனிடம் ஜெபம்  செய்யச் சென்றார். அக்கோவில் பெரிதும் பழுதுபட்டு, பாழடைந்த நிலையில் இருந்தது. கோவிலின் உள்ளே சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் திருவுருவம் சித்தரிக்கப்பட்ட ஒரு திருவோவியம் இருந்தது. அது பிசான்சிய-இத்தாலியக் கலைப் பாணியில் 12ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஓவியம்.
கோவிலின் உள்ளே நுழைந்த பிரான்சிசு இயேசுவின் திருச்சிலுவைத் திருவோவியத்தின் முன் மண்டியிட்டு உருக்கமாக வேண்டிக்கொண்டிருந்தார். அவர் ஏறிட்டு இயேசுவின் திருமுகத்தைப் பார்த்தபோது ஓர் அதிசயம் நிகழ்ந்ததைக் கண்டார். இயேசுவின் உதடுகள் அசைவதுபோலத் தெரிந்தது. இயேசுவின் குரல் தெளிவாக பிரான்சிசின் காதுகளிலும் உள்ளத்திலும் ஒலித்தது:
பிரான்சிசு, என் வீடு பாழடைந்து கிடப்பதைப் பார்க்கிறாய் அல்லவா, எழுந்து சென்று அதைச் செப்பனிடு!
இச்சொற்களைக் கேட்ட பிரான்சிசுக்கு ஒரே அதிர்ச்சி. அக்குரல் எங்கிருந்து வந்தது என்று அறிவதற்காக கோவிலில் சுற்றுமுற்றும் பார்த்தார்.. இயேசுவே தம்மிடம் பேசுகிறார் என்பதை உணர்ந்ததும் பிரான்சிசு, "அப்படியே செய்கிறேன், ஆண்டவரே" என்று உற்சாகத்தோடு பதிலிறுத்தார்.
அர்ச்  தமியானோ கோவிலில் பிரான்சிசுக்கு ஏற்பட்ட அனுபவம் அவரது இறையனுபவத்தின் ஓர் உச்சக்கட்டமாக வரலாற்றாசிரியர்களால் கருதப்படுகிறது. பிரான்சிசு தம் வாழ்க்கை முழுவதையும் கடவுளுக்குப் பணிபுரிவதிலேயே செலவழிக்கப் போவதாக உறுதிபூண்டார். முதலில் அர்ச்  தமியானோ கோவிலைச் செப்பனிடுவது பற்றித்தான் சிலுவையில் தொங்கிய இயேசு தம்மிடம் கேட்டதாக பிரான்சிசு நினைத்தார். ஆனால் நாள் போகப் போக, தம்மிடம் இயேசு செய்யக் கேட்ட பணி விரிவான ஒன்று என்பதை அவர் உணர்ந்தார். இயேசுவின் பெயரால் கூடுகின்ற சமூகமாகிய திருச்சபையைச் சீரமைக்கவே இயேசு தம்மிடம் கேட்டார் என்பதைப் புரிந்துகொண்ட பிரான்சிசு ஒரு புதிய வாழ்க்கை முறையைத் தழுவலானார்.
முதலில் அவர் தம் வீட்டுக்கு விரைந்து சென்று, தம் தந்தையின் துணிக்கடையில் இருந்த விலையுயர்ந்த துணிகள் பலவற்றை எடுத்து மூட்டையாகக் கட்டி தம் குதிரை மீது ஏற்றினார். அசிசி நகருக்கு அருகே இருந்த ஃபொலீனோ (Foligno) என்னும் நகரச் சந்தைக்குச் சென்று துணிகளையும் அவற்றோடு குதிரையையும் விலைபேசி விற்றுவிட்டு, கிடைத்த பணத்தை வாங்கிக்கொண்டு அர்ச் தமியானோ கோவிலுக்குத் திரும்பிச் சென்றார்.
கோவில் குருவிடம் பணத்தைக் கொடுத்து, அக்கோவிலைச் செப்பனிடுமாறு கேட்டார். ஆனால் பணம் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்ததும் குரு அதை வாங்க மறுத்துவிட்டார். பிரான்சிசு பணத்தை அங்கேயே போட்டுவிட்டு, தம் தந்தைக்கு அஞ்சி ஓரிடத்தில் போய் ஒளிந்து கொண்டார்.
இதற்கிடையில், தம் மகன் துணிகளையும் குதிரையையும் விற்றதையும் அப்பணத்தைக் கோவில் குருவிடம் கொடுக்க முயன்றதையும் கேள்வியுற்ற பியேட்ரோ விரைந்து அர்ச் தமியானோ கோவிலுக்கு வந்தார். அங்கு பிரான்சிசைத் தேடிப்பார்த்தும் காணாததால் ஏமாற்றத்தோடு வீடு திரும்பினார்.
ஒரு மாதத்திற்குப் பிறகு ஒளிவிடத்திலிருந்து வெளியே வந்த பிரான்சிசு வீடு திரும்பினார். பசியால் வாடி மெலிந்துபோயிருந்த அவர் கந்தைத் துணிகளோடு தெருவில் நடந்து போனதைக் கண்ட சிறுவர்கள் சிலர் அவரைப் பைத்தியம் என்று எள்ளி நகையாடியதோடு அவர்மீது கல்லெறிந்தனர். அவருடைய தந்தை பியேட்ரோ பெர்னார்டோனே பிரான்சிசை வீட்டுக்கு இழுத்துக்கொண்டுபோய், நையப்புடைத்து, அவரது கால்களில் சங்கிலியைக் கட்டி, அவரை ஓர் அறையில் அடைத்துப் போட்டார். பியேட்ரோ வீட்டில் இல்லாத நேரம் பார்த்து பிரான்சிசின் தாய் மகன் மீது இரக்கம் கொண்டு அவரை விடுவித்தார். பிரான்சிசு மீண்டும் அர்ச்  தமியான் கோவிலுக்குச் சென்று, தம் நாட்களை சர்வேசுரனிடம் ஜெபம் செய்வதில்  கழித்தார்.

துறவற சபைகளை நிறுவுதல்


பின்னர் பிரான்சிசு உரோமை நகருக்குத் திருப்பயணமாகச் சென்றார். அங்கு அர்ச்  இராயப்பர்  பேராலயத்தின் அருகே பிச்சையெடுத்துக் கொண்டு இருந்தவர்களோடு தாமும் போய் அமர்ந்துகொண்டு, ஒரு பிச்சைக்காரராக மாறினார். இந்த அனுபவம் அவருக்கு ஏழ்மையின் பொருளை ஆழ்ந்த விதத்தில் உணர்த்திற்று. வாழ்நாள் முழுவதும் ஏழ்மையிலேயே கழிக்க வேண்டும் என்று பிரான்சிசு உறுதி பூண்டார்.
பிரான்சிசு வீடு திரும்பியதும், அசிசி நகரின் தெருக்களில் இறங்கி நடந்து சென்று, இயேசுவைப் பற்றிப் போதிக்கலானார். அவர் கூறியதைக் கேட்டு ஒரு சிலர் அவருக்குச் சீடர்களாக மாறினர்.1209 ஆம் ஆண்டு 12 இளையோருடன், "சிறு சகோதரர்கள்" என்ற சபையை ஆரம்பித்தார். பிரான்சிசு திருத்தந்தை மூன்றாம் இன்னசண்டை அணுகித் தம் குழுவை ஒரு துறவற சபையாக அங்கீகரித்து ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திருத்தந்தை 1210இல் பிரான்சிஸ்கன் சபைக்கு அதிகாரப்பூர்வமான இசைவு வழங்கினார்.
பின்னர், பிரான்சிசு 1212 இல் கிளாரா என்ற பெண்மணியோடு சேர்ந்து பெண்களுக்கான ஒரு துறவற சபையையும், 1221இல் மேலும் தவ முயற்சிகளை மேற்கொள்ளும் பொதுநிலை சகோதர சகோதரிகளுக்கென்று "மூன்றாம் சபை" என்று அழைக்கப்பட்ட ஒரு அமைப்பையும் ஆரம்பித்தார்

சிலுவைப் போரில் பங்காற்றுதல்


திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட் விடுத்த அழைப்பை ஏற்று, பிரான்சிசு 1219 இல் சிலுவைப் போர் வீரர்களோடு சேர்ந்து எகிப்து செல்லப் பயணமானார். அங்கு இயேசு பிறந்து வளர்ந்து இறந்த திருநாட்டை மீட்க போரிடும்போது இறக்க நேர்ந்தால் தம் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு வேதசாட்சியாக உயிர்துறக்கலாம் என்னும் எதிர்பார்ப்பு அவரிடம் இருந்தது. மேலும், கிறித்தவர்களும் இசுலாமியர்களும் நட்புடன் வாழ்வதற்குப் போர் தவிர வேறு வழிகள் உண்டு என்பதிலும் அவருக்கு நம்பிக்கை இருந்தது.
இதற்கிடையில் பிரான்சிஸ்கு சபை மிகப் பெரியதாக வளர்ந்தது. எனவே சபையை ஒழுங்கமைப்பதற்காக பிரான்சிசு முயற்சிகள் மேற்கொண்டார். சபையின் ஒழுங்குகள் திருத்தந்தையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், பிரான்சிசு நிர்வாகப் பொறுப்பில் அதிகம் ஈடுபடவில்லை.
.

பிரான்சிசு ஒரு தொழுநோயாளரை அரவணைத்த நிகழ்ச்சி



உலகப் போக்கை விடுத்து, ஆன்மிக வாழ்வை மேற்கொள்ளத் துணிந்த பிரான்சிசுவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பல வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிடுகின்றனர். அது பிரான்சிசு ஏழைகளிடமும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டோர்களிடமும் காட்டிய அன்பை எடுத்துரைக்கிறது.
ஒருநாள் பிரான்சிசு அசிசி பள்ளத்தாக்கில் குதிரை மீது பயணமாகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது உடலெல்லாம் புண் நிறைந்த ஒரு தொழுநோயாளியைத் தொலையில் கண்டார். செல்வத்தில் பிறந்து வீர சாகசங்கள் புரிவதில் ஆர்வம் கொண்டு வளர்ந்த பிரான்சிசுக்கு தொழுநோய் என்றாலே வெறுப்பு. அருவருக்கத்தக்க அந்த நோய் யாரைத் தொற்றியதோ அவர்களை அணுகவே அவருக்குப் பிடிக்காமல் இருந்தது. தமக்கு இயல்பாக இருந்த உணர்வுகளை அடக்கிக் கொண்டு, பிரான்சிசு குதிரையிலிருந்து வேகமாக இறங்கினார். ஓடிச் சென்று அந்தத் தொழுநோயாளியைக் கட்டிப் பிடித்து அரவணைத்து முத்தமிட்டார்.
அருவருக்கத்தக்க நோயால் பீடிக்கப்பட்டாலும் மனிதர்கள் எல்லாரும் கடவுளின் சாயலாக உருவாக்கப்பட்டவர்களே என்னும் ஆழ்ந்த உண்மையை பிரான்சிசு உணர்ந்தார். அதன் பின், அசிசி நகரின் எல்லைக்கு வெளியே அமைந்திருந்த தொழுநோயாளர் இல்லத்திற்குச் சென்று, அவர்களுக்குப் பணிபுரிவதில் அவர் மகிழ்ச்சி கண்டார். சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட மக்களில் துன்புற்ற இயேசுவின் சாயலை அவர் கண்டார்.
உரோமை நகருக்குத் திருப்பயணமாகச் சென்றபோது, அங்கு கோவில் படிகளில் அமர்ந்து ஏழைகளுக்காகப் பிச்சைகேட்டார். ஏழைகளோடு ஏழையாகத் தம்மையே இணைத்துக்கொண்டார்.


அசிசியின் ஏழை மனிதர் பிரான்சிசு

கடவுள் பணிக்குத் தம்மை அர்ப்பணித்து, இயேசுவை முழுமையாகப் பின்பற்றத் துணிந்துவிட்ட பிரான்சிசு தம் நகராகிய அசிசியின் மலைப்பகுதிகளில் நடந்து, இறைவனின் புகழைப் பாடிச் சென்றார். ஒருநாள் வழிப்பறித் திருடர்கள் சிலர் அவரை நிறுத்தி, "நீ யார்?" என்று கேட்டதற்கு பிரான்சிசு பதில்மொழியாக, "நான் மாபெரும் அரசரின் தூதுவன்" என்றுரைத்தார். அவர்கள் அவரை இகழ்ச்சியோடு நோக்கி, அவரிடமிருந்ததைப் பிடுங்கிக்கொண்டு, அவரை அருகிலிருந்த குழியில் தள்ளிவிட்டுச் சென்றனர். அரைநிர்வாணமாகக் குளிரில் வாடிய பிரான்சிசு அண்மையிலிருந்த ஒரு துறவியர் இல்லத்தை அடைந்து, அங்கு கொஞ்சநாள் அடுக்களை வேலை செய்தார். அங்கிருந்து கூபியோ (Gubbio) என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய நண்பர்கள் சிலர் அவர்மீது இரங்கி, அவருக்கு ஒரு மேலாடை, கச்சை, ஊன்றுகோல் ஆகியவற்றைக் கொடுத்தனர்.
பின்னர் பிரான்சிசு அசிசி நகருக்குத் திரும்பினார். தெருவெல்லாம் நடந்துசென்று, மக்களிடம் புனித தமியானோ கோவிலைச் செப்பனிடுவதற்குக் கற்கள் தருமாறு வேண்டினார். கிடைத்த கற்களைச் சுமந்து, கோவிலுக்குக் கொண்டுபோய், தம் கைகளாலேயே அதைச் செப்பனிட்டார். அதுபோலவே, கைவிடப்பட்ட நிலையில் கிடந்த வேறு இரண்டு கோவில்களையும் அவர் செப்பனிட்டார். அவை புனித பேதுரு கோவிலும், வானதூதர்களின் அன்னை மரியா (Saint Mary of the Angels) கோவிலும் ஆகும். மரியா கோவிலுக்குப் "போர்சியுங்குலா" (Portiuncula = "சிறுநிலம்") என்னும் பெயரும் உண்டு.
அக்காலத்தில் பிரான்சிசு பிறரன்புப் பணியிலும், குறிப்பாகத் தொழுநோயாளருக்குப் பணிபுரிவதிலும் ஈடுபட்டார். வானதூதர்களின் அன்னை மரியா கோவிலின் அருகே ஒரு சிறு குடிசை அமைத்து அதில் தங்கினார்


திங்கள், 4 நவம்பர், 2013

அர்ச். பிரான்சிஸ் அசிசியார்

அர்ச். பிரான்சிஸ் அசிசியார் (Francis of Assisi, 1181/1182 – அக்டோபர் 31226


       அர்ச் . பிரான்சிஸ் அசிசியார் பிரான்சிஸ்கு சபை என்னும் கிறிஸ்தவ துறவற அமைப்பை நிறுவியவர் ஆவார். அவர் பிறந்த ஆண்டு கி.பி.1181 அல்லது கி.பி.1182 என்று கூறுவர். அவர் இறந்த ஆண்டும் நாளும் உறுதியாகத் தெரிவதால் அதிலிருந்து பின்னோக்கிக் கணித்து அவரது பிறந்த ஆண்டை வரலாற்றாசிரியர்கள் நிர்ணயிக்கின்றனர். பிரான்சிசு திருத்தொண்டராகப் பட்டம் பெற்ற பின் 'குருப்பட்டம்' பெற தாம் தகுதியற்றவர் என்று தாழ்ச்சி உணர்வுடையவராக, அப்பட்டத்தைப் பெற முன்வரவில்லை.

வரலாற்று ஆதாரங்கள்[தொகு]

  அர்ச் . பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. 12-13ஆம் நூற்றாண்டுகளில் அவர் வாழ்ந்திருந்த போதிலும் அவர் உரைத்த சொற்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் நிறுவிய சபைக்கு அவர் வழங்கிய ஒழுங்குகள் உள்ளன. அவர் எழுதிய இறுதி சாசனம் உள்ளது. அவர் எழுதிய கடிதங்கள், கவிதைகள், வழிபாடு பற்றிய எழுத்துப்படையல்கள் போன்றவையும் உள்ளன.
பிரான்சிசு இறந்த இருபது ஆண்டுகளுக்குள்ளாக அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று ஏடுகள் தோன்றலாயின. அவரைப் பின்பற்றிய அவர்தம் சீடர்கள் பலர் அவரது வரலாற்றை எழுதினர். அவர்களுள் சகோதரர்கள் செலானோ தோமா, லியோ, ஆஞ்செலொ, ருஃபீனோ ஆகியோரைக் குறிப்பிடலாம். மேலும் பல பிரான்சிஸ்கன் துறவியர் பிரான்சிசோடு தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், அவரது போதனை, வாழ்க்கை நிகழ்வுகளையும் சேர்த்தனர்.
இத்தகைய வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் அர்ச். பிரான்சிஸ் அசிசியார் பற்றிய பல விவரங்கள் உறுதியாகத் தெரிகின்றன. பிரான்சிசு வாழ்ந்த 12-13ஆம் நூற்றாண்டுகளிலும் அதற்குப் பின்னும் இன்று வரை எண்ணிறந்த மனிதர்கள் இந்த "அசிசியின் ஏழை மனிதரின்" (Poor Man of Assisi) எளிய வாழ்க்கையையும், இயற்கை அன்பையும், கடவுள் பக்தியையும் போற்றி வந்துள்ளனர்.

பிரான்சிசு என்னும் பெயர் எழுந்த வரலாறு

பிரான்சிசு, இவரது பெற்றோருக்குப் பிறந்த ஏழு பிள்ளைகளுள் ஒருவர். இவரது தந்தையார் பியேட்ரோ டி பெர்னார்டோனே (Pietro di Bernardone) ஒரு செல்வந்தரான துணி வணிகர் ஆவார். இவரது தாயார் பிக்கா பூர்லமோ (Pica Bourlemont) குறித்து அதிகம் தெரிய வராவிட்டாலும், அவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிகின்றது
பிரான்சிசு பிறந்தபோது அவர்தம் தந்தை பியேட்ரோ வணிக அலுவலுக்காக பிரான்சு சென்றிருந்தார். பிரான்சிசின் தாயார் அவருக்கு, "ஸ்நாபக அருளப்பர்  " என்னும் கிறித்தவப் புனிதரின் பெயரைத் தழுவி, ஜொவானி டி பேர்னார்டோனே என்னும் பெயரில் ஞனஸ்தானம்  வழங்க ஏற்பாடு செய்தார். பிரான்சிசு வளர்ந்து ஒரு சமயப் பெரியார் ஆக வேண்டும் என்னும் எண்ணத்திலேயே அவர் அவ்வாறு செய்தார்.
பிரான்சிசின் தந்தை அசிசிக்குத் திரும்பியதும் இதையிட்டுக் கோபம் அடைந்தார். அவருக்குத் தனது மகன் ஒரு சமயத் தலைவராக இருப்பதில் விருப்பமில்லை. இதனால் அவர் தன் மகனை பிரான்செஸ்கோ என்று பெயரிட்டு அழைத்தார். அப்பெயருக்கு "பிரான்சு நாட்டோடு தொடர்புடைய" என்பது பொருள். அதுவே ஆங்கிலத்தில் "பிரான்சிசு" (Francis) என்றானது. பிரான்சு தொடர்பிலான தமது வணிக வெற்றியை நினைவுகூரவும், பிரான்சு தொடர்பான எல்லாவற்றிலும் அவருக்கிருந்த பற்றினாலுமே இப்பெயரை அவர் விரும்பினார். அப்பெயரே வரலாற்றில் நிலைத்துவிட்டது. ஆனால் பிரான்சிசு தம் தந்தையின் கனவைப் பொய்யாக்கித் துறவறம் பூண்டார்.

இளமைப் பருவம்

இளைஞராக இருந்தபோது பிரான்சிசுக்கு பிரெஞ்சு மொழியில் கவிஞராக வேண்டும் என்ற ஆசை இருந்ததாகச் சிலர் கூறுகின்றனர். அசிசியில் புனித ஜோர்ஜ் பங்குக்கோவிலில் அவர் சிறிது கல்வி பயின்றார். ஆனால் அவர் படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டவில்லை, தம் தந்தையின் தொழிலாகிய வாணிகத்தில் மனதார ஈடுபடவுமில்லை. இவரது வரலாற்றை எழுதியவர்கள் இவரது பகட்டான உடைகள், பணக்கார நண்பர்கள், தெருச் சண்டைகள், உலகப் போக்கை விரும்பும் இயல்பு ஆகியவை பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றனர். மேல்தட்டு இளைஞர்களோடு சுற்றித் திரிவதிலும், வீர சாகசம் புரிவதிலும் ஆர்வம் காட்டினார். நடுத்தர வர்க்கமாகிய வணிகர் பிரிவைச் சார்ந்த பிரான்சிசு உயர்குடி மக்களைப் போல ஆடம்பர வாழ்க்கை நடத்த விருப்பமுடையவராய் இருந்தார்.பிரான்சிசு இளவயதில் வீரனாக வாழ்ந்து தளபதி பட்டம் பெற அதிகம் ஆவல் கொண்டார். அண்டை நகராகிய பெரூஜியா (Perugia) நகருக்கும் அசிசி நகருக்கும் இடையே நீண்டகாலப் பகைமை இருந்துவந்தது. அந்த இரு நகரங்களுக்கும் இடையே போர் நிகழ்ந்தபோது, இருபது வயதே நிறைந்த பிரான்சிசும் படையில் சேர்ந்தார். எதிரிகளால் சிறைப்படுத்தப்பட்டு, ஓராண்டு சிறை வாசம் அனுபவித்தார். சிறையிலிருந்தபோது பல துன்பங்களுக்கு ஆளானார். ஆயுதம் தாங்கிப் போர் செய்வது முறையாகுமா என்ற கேள்வியும் அவர் உள்ளத்தில் அப்போது எழுந்தது. சிறையிலிருந்து வீடு திரும்பியபின், புனித தமியானோ கோவிலில் சிலுவையிலிருந்து ஒலித்த இயேசுவின் குரலைக் கேட்ட இவர் தம் வாழ்வுப் பாதையையே மாற்றியமைத்தார். ஆனால் அதே நேரத்தில் இளம் வயதிலேயே இவருக்கு உலகியல் வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டதோடு ஏழைகள் மட்டில் பரிவும் தோன்றியது. பெரூஜியாவில் ஓராண்டு சிறையில் இருந்தபோது, அவரோடு கூட இருந்த ஒரு கைதியைப் பிற கைதிகள் கொடுமைப்படுத்தியபோது, பிரான்சிசு அவருக்கு ஆதரவாகப் பேசினார்.

பிரான்சிசு மனமாற்றம் அடைந்த வரலாறு

1201ஆம் ஆண்டில் பெரூஜியா நகருக்கு எதிராகப் போரிடும்படி பிரான்சிசு படையில் சேர்ந்தார். காலெஸ்ட்ராடாவில் நடந்த போரில் எதிரிகளிடம் பிடிபட்ட இவர் ஓராண்டு கைதியாக இருக்க நேரிட்டது. இந்த அனுபவத்தில் இருந்தே படிப்படியாக பிரான்சிசுக்குத் ஆன்மிக மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.. எனினும், 1203ஆம் ஆண்டில் அசிசிக்குத் திரும்பிய பிரான்சிசு மீண்டும் தனது பழைய வாழ்க்கைமுறைக்கே திரும்பினார். 1205ஆம் ஆண்டிலும் அவருக்கு ஓர் ஆன்மிக அனுபவம் கிடைத்ததாகத் தெரிகிறது.அதன்பின், பிரான்சிசு தம் பழைய வாழ்க்கை முறையை மாற்றத் தொடங்கினார். விளையாட்டுகளும் விழாக்களும் அவருக்கு வெறுப்பையே ஊட்டின. அவருடைய முன்னாள் நண்பர்களை அவர் தவிர்க்கத் தொடங்கினார். அவர்கள், வேடிக்கையாக அவரைப் பார்த்து, "திருமணம் செய்துகொள்ளப் போகிறீரோ?" என்று கேட்டனர். அதற்கு பிரான்சிசு, "ஆம், நீங்கள் பார்த்திராத அழகுமிக்க ஒரு பெண்ணை நான் மணம் செய்துகொள்ளப் போகிறேன்" என்று பதிலிறுத்தாராம். அவர் குறிப்பிட்ட பெண் "ஏழ்மை" என்னும் இலட்சியமே. இயேசுவைப் பின்பற்றி, பிரான்சிசும் ஓர் ஏழை மனிதராக வாழ விரும்பினார். பிரான்சிசு தனிமையை நாடிச் சென்று நீண்ட நேரம் செலவிட்டார். கடவுளை நோக்கி வேண்டல் செய்து, தம் உள்ளத்தில் இறை ஒளியைப் பாய்ச்ச வேண்டும் என்று மன்றாடினார்.




புதன், 30 அக்டோபர், 2013

தெய்வபயமே ஞானத்தின் தொடக்கம்

தெய்வபயமே ஞானத்தின் தொடக்கம்

பயத்தின் தோற்றம்:

சர்வேசுரனுக்குப் பயப்படாத மக்களாய் நாம் இருக்கும்போது உலகு சார்ந்த பயம் நம்மை சூழ்கிறது. இதை ஆதாம், ஏவாளின் வாழ்க்கையில் நாம் அறிவோம். பாவம் செய்த அவர்கள் அச்சத்தால் ஆட்கொள்ளப் படுகிறார்கள். அவர்களிடம் தேவையற்ற நாணம் ஏற்படுகிறது (ஆதி ஆகமம் 3:10). ஏனெனில் ஒரு வருகை நாணம் பாவத்திற்கு இட்டுச் செல்லும் (சீராக் 4:21).

சாராவின் நம்பிக்கைக்குறைவு:


எனவே நமது பாவங்கள்தான் நமது பாவஉணர்வுக்கு காரணமாக உள்ளது. சாராவுக்கு சர்வேசுரன் ஒரு மகனைத் தருவேன் என்று வாக்களித்த போது அவரது நம்பிக்கைக் குறைவு அவரை நகைக்க வைத்து அதன்பின் அச்சம் அவரை ஆட்கொள்கிறது. (தொ.நூ 18:15)

சினத்தைத் தூண்டும் பயம்:

காயின் செய்த பாவம், ஆண்டவர் அவனிடம் பேசிய போது சினத்துடன் பதில் பேசத் தூண்டியது. அதற்குக் காரணம் அவனது பயம். ஆபேலைக் கொலை செய்ததை ஆண்டவர் அறிந்துக் கொண்டார் என்று அறிந்து பயந்து, தனது பயத்தை மறைக்க சினத்தை வெளிப்படுத்தினான். சினம் பயத்தின் வெளிப்பாடுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல் நிறைவேறத் தடையாயுள்ளது. (யாக் 1:20)

ஆண்டவர் மீது அச்சமின்மை :

ஆண்டவரைப் பற்றிய அச்சமின்மை தீயோராயிருந்தும் தம்மைத் தேடி அழைத்த அரசரை, திருமண உடையணியாமல் அவமதிக்கக் காரணமாய் இருக்கிறது என்பதை திருமண விருந்து உவமையில் பார்க்கிறோம். (மத் 22:10)crucifiction நல்ல மற்றும் கெட்ட கள்ளன் உவமைகளைப் பார்ப்போம். ஆண்டவரைப் பற்றிய அச்சம் உலக மீட்பரை மரணத்தருவாயில் சந்திக்க வைக்கிறது. உணர வைக்கிறது. அவன் விண்ணகத்தை தாயகமாகக் கொள்கிறான். ஆனால் ஆண்டவரைப் பற்றிய அச்சமின்மை, அதன் விளைவான பாவஉணர்வற்ற தன்மை உலக மீட்பரை அவமதிக்கத் தூண்டுகிறது. அதுவே அவன் பாதாளத்தில் விழக் காரணமாகிறது.

குற்ற உணர்வு:

உலக நாட்டமுடையோருக்கு ஏற்படும் பய உணர்வு ஞானத்தை தராது. ஏனென்றால் அந்த பயஉணர்வு குற்றஉணர்வையே தூண்டும். கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவைத் துண்டித்து விடும். இதுதான் ஆசிப்பெற்றோர் வாழ்வில் பாவம் நுழைந்தபோது நிகழ்ந்தது. செய்தபாவம் குற்ற உணர்வைத் தூண்டியது. ஆண்டவரை நேருக்கு நேர் சந்திக்கும் நிலையைத் தடுத்தது.

தெய்வபயமே ஞானத்தின் தொடக்கம்:

அன்னை மரியாவின் தெய்வபயம் கன்னிமரியாவை உலகத்தினர் அனைவரின் தாயாக உயர்த்தியது. Virgin Maryதன் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுக்கும் கடவுளிடமும், மனிதரிடமும் போராடாமல் மனதில் இருத்தித் தியானித்தார். தெய்வபயம் நிறைந்த அவரிடம் உலகு சார்ந்த பயங்கள் ஏதும் இல்லை. தெய்வ பயம் சர்வேசுரன் விருப்பத்தை உணர்ந்து, புரிந்து, இறைவழி நடக்க இவருக்கு உதவியது. உள்ளத்தை ஊடுருவிப் பார்ப்பவர் நம் கடவுள். மறைவாய் உள்ளதை கூரைமேல் அறிவிப்பவர் நம் கடவுள். எனவே உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவைப் பார்க்கிறவர்க்கே நமது துதிகள் இருக்க வேண்டும். எனவே, போலியான வெளிவேட முகமூடியைக் களைந்து விட்டு சர்வேசுரனை ஆவியிலும் உண்மையிலும் தொழுவோம். தேவையற்ற உலக அச்சங்களை விலக்குவோம். இறை அச்சத்தால் நிரம்பப்பெற்று சர்வேசுரனின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்.


Download Latin songs- Click here

Download Tamil Catholic Songs - Click here

சனி, 26 அக்டோபர், 2013

Download Latin Song Kyrie 9

Download Latin Song Kyrie 9

Kyrie 9 is a Our Lady song ...This song will be sing during the feast Our Lady...

You can download latin song Kyrie 9


Kyrie

Gloria

Sanctus

Agnus Dei

Ite  missa est

வெள்ளி, 25 அக்டோபர், 2013

இலத்தின் பாடல் Kyrie 8

நீங்கள் லத்தின் பாடலான Kyrie 8 இங்கு பதிவிரக்கம் செய்யலாம்.

இந்த பாடல் தான் அனேக கோவில்களில் பாடப்படும் பாடல்


Right  click and Save link as


Asperges me


Kyrie


Gloria


Credo

Sanctus


Agnus Dei


Ite Missa est


Vidi Aquam (Paschal time)


You can download Kyrie 8 of Latin songs...
This song is used widely in India in Lain Mass..

செவ்வாய், 8 அக்டோபர், 2013

புனித தோமையார் மலை (St. Thomas Mount)

செயின்ட் தாமஸ் மவுண்ட் அதாவது புனித தோமையார் மலை (St. Thomas Mount) என்பது, பரங்கிமலை என்னும் பெயராலும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு சிறு மலையான புனித தோமையார் மலை, சென்னையிலுள்ள புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாகும். இம்மலை சென்னை நகரின் கிண்டி பகுதியில், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெகு அருகில் அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் இந்திய இராணுவப் பயிற்சி மையம் ஒன்றும் உள்ளது. இம்மலை கடல்மட்டத்தில் இருந்து ஏறக்குறைய 300 அடி உயரம் கொண்டது.  இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான புனித தோமையார் மறைசாட்சியாக இம்மலையில்தான் கொல்லப்பட்டார். இவர், இந்தியாவுக்கு முதன் முதலில் கிறிஸ்தவத்தைக் கொண்டுவந்தவர்.

இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னர், இந்தியாவின் Gondophare அரசரின் வணிகர் Habban என்பவருடன் தோமையாருக்குக் தொடர்பு ஏற்பட்டது. இந்த வணிகருடன் கி.பி.52ம் ஆண்டில் தற்போதைய கேரளாவின் மலபார் கடற்கரையில், கிரங்கனூரில்(Cranganore)வந்திறங்கினார். இக்கடற்கரைப் பகுதியில் பல ஆலயங்களைக் கட்டிய பின்னர், இந்தியாவின் கோரமண்டல் கிழக்குக் கடற்கரைப் பகுதிக்கும், பின்னர் தெற்குப் பகுதிக் கும் வந்தார் அப்புனிதர். அங்கு நற்செய்தி அறிவித்தபோது, எதிரிகளுக்குப் பயந்து முதலில் லிட்டில் மவுண்ட் சென்றார். பின்னர் தற்போதைய தோமையார் மலையாகிய பரங்கிமலை சென்றார். அம்மலையில் அவர் செபத்தில் ஆழ்ந்திருந்தபோது கி.பி.72ம் ஆண்டில் பகைவர்களால் கொலைசெய்யப்பட்டார். புனித தோமையார் உயிரிழந்த இடத்திலுள்ள ஆலயத்தில் அவர் வழிபட்ட சிலுவை இன்றும் வைத்து போற்றி பாதுகாக் கப்பட்டு வருகிறது. இங்குள்ள ஓவியங்கள் இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும். புனித லூக்காவினால் வரையப்பட்ட அன்னை மரியாளின் ஓவியம்,  இயேசு, அவரின் 12 திருத்தூதர்கள் என ஏராளமான பழமை மாறாத ஓவியங்கள் இன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவை ஏறக்குறைய 300 ஆண்டுகள் பழமையானவை. இந்த ஆலயம் 2011ம் ஆண்டு தேசியத் திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. புனித தோமையாரின் மலையில் ஏறுவதற்கு வசதியாக படிக்கட்டுகள் உள்ளன. சென்னையின் முழு அளவையும் இந்த மலையின் மீதிருந்து கண்டு இரசிக்கலாம்.

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

Download old Catholic Latin songs


In this blog you can download the old catholic latin songs for free.

Once the latin mass was said throughout the world.  After a second Vatican Council it has been changed.  still in many countries there is latin mass is available.

In India more than 10 places the latin mass is there.

For More. Info.. CLICK HERE FOR MASS CENTERS IN INDIA


Songs During the Mass (For download right click and Save link as)

Kyrie 

Gloria in Excelsis

Credo

Sanctus

Agnus Dei


Our Lady Latin Songs

Ave Maria

Ave Maris Stella

Regina Caeli

Salve Regina

Alma Redemptoris Mater


Before Blessed Scrament

Lauda Sion

Alleluia-Caro-Mea.mp3

Oculi-Omnium-Gr..mp3

Cibavit-Eos-Intr..mp3




For More pls Click Here

For Tamil songs pls Click here




சனி, 7 செப்டம்பர், 2013

அர்ச் ஜான் மரியவியான்னி

புனிதர் என்ற புகழ் சிலருக்கத்தான் பொருத்தமாக அமையும். அந்த சிறப்பு புனிதரான ஜான் மரிய வியன்னியின் வாழ்வில் பொருந்தி நிற்கிறது. புனித ஜான் மரிய வயான்னிக்கு உலகம் சார்ந்த அறிவு குறைவு என்று அறியப்பட்டாலும், மற்ற குருக்களால் தனிமைப்படுத்தப்பட்டாலும் கடவுளோடு மட்டும் தனித்திருப்பது புனிதம், இறைவனோடு இணைந்திருப்பது ஞானம் என்று உலகிற்கு உறுதியாய் அவரின் வாழ்வு வெளிப்படுத்தியது.

பிரான்சு நாட்டில் லைனஸ் என்ற நகருக்கு அருகில் உள்ள டார்டில்லி என்ற பண்ணைக் கிராமத்தில் 1786 இல் வியான்னி பிறந்தார். பிரான்சு புரட்சி ஏற்ப்பட்ட நேரத்தில் கிறிஸ்து கொள்ளைகளை வெளிப்படையாக வாழ இயலாத சூழ்நிலை.இந்த சமயத்தில் புனிதரின் பெற்றோர்கள் கிறிஸ்துவத்தை மறைமுகமாக பின்பற்றிவந்தார்கள். அனுபவத்தில் அறிந்த கிறிஸ்துவத்தின் பெருமையை உணர்ந்தவராய் புனித வியான்னி குருவாக வாழ வேண்டும் என புறப்பட்டவருக்கு ஏராளமான தடங்கல்கள்.

குருவாக வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்த அவரது பெற்றோர்கள் வியான்னியை பண்ணை வேலையிலிருந்து விடுவிக்க தயங்கினர். மேலும் பெற்றோர்கள் இதற்கு சம்மதித்து அனுமதித்தவுடன்  இராணுவ சேவை என்ற அரசு சட்டம் தடையாக அமைந்தது. அதனைக் கடந்து குருமடத்தில் சேர்ந்த புனிதருக்கு படிப்பின் வடிவில் அதிகமாக சவால்கள். ஜான் மரிய வியான்னி இறையியல் மறைஉண்மைகளை புரிந்து கொள்வதும், இலத்தீன் மொழியை கற்றுக் கொள்வதும் மிகப் பெரிய போராட்டமாக மாறியது. இதனால் குருவாக வேண்டிய நேரத்திலும் குருப்பட்டம் தள்ளி வைக்கப்பட்டது. சவாலை சாதனையாக தன் பக்தியிலும், நம்பிக்கையிலும் வெளிப்பட்டதால் குருவாக உயர்த்தப்பட்டார்.

இவரது திறமை குறைவாக மதிப்பிடப்பட்டதனால் ஒதுக்குப்புறமான சிறிய பங்காகிய அர்ஸ் கிராமத்திற்கு வியான்னி அனுப்பட்டார். வெறும் அடையாள கிறிஸ்துவ மக்களாக எந்த தெய்வ நம்பிக்கையும் இல்லாத கிறிஸ்துவமக்கள் மத்தியில் பணியாற்ற தொடங்கினார். தனது செபவாழ்வாலும், தவமுயற்சிகளினாலும் மக்களின் மத்தியில் நம்பிக்கையை வென்றெடுத்தார். உணர்வுபூர்வமான தோற்றம், நடுங்கும் வர்த்தைகள் எல்லாம் எல்லாரின் உள்ளத்தைத் தொட்டன. மனமாற்றத்தினால வாழ்வு பெறமுடியும் என்ற நம்பிக்கையை மக்களின் உள்ளங்களில் பதித்தார். இதன் மூலமாக பல்வேறு மக்கள் ஒப்பரவு சாதனத்திற்காக அர்ஸ் நகரை நோக்கிப் படையெடுத்தனர். படிப்படியாக உண்மையான மனமாற்றத்தின் தந்தையாக மக்கள் மத்தியில் உயர்ந்து நின்றார். இதனால் ஒவ்வொரு நாளும் 16 மணி நேரம் பாவசங்கீர்த்தனம் ழங்கும் குருவாக வாழ்ந்து காட்டினார்.

 பாவசங்கீர்த்தனம்  மதிக்கப்டாத இக்கால சூழ்நிலையில், இந்த புனிதரின் வாழ்வு உண்மையான மனமாற்றத்தை மக்கள் மத்தியில் அளித்து அருட்சாதனத்தால் விளையும் அருளுக்கு வழிவகுக்கட்டும். புனிதரின் வாழ்வு குருக்களுக்கு சிறந்த ஞானமாகவும் பாடமாகவும் அமையட்டும்.


Source from: http://www.anbinmadal.org/vainney.html

நற்கருணைக்குரிய மரியாதை!

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின் எந்த சாத்தானின் வேலையோ, திவ்ய நற்கருணைக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகச் செலுத்தப்பட்டு வந்த வணக்கமும், மரியாதையும் திடீரென்று குறைந்து விட்டது. சில இடங்களில் போயே விட்டது. திவ்ய நற்கருணை ஒழிந்தால் திருச்சபையும் ஒழியும் என்பதை நன்கு உணர்ந்த சாத்தானின் வேலையே இது என்பதில் ஐயமில்லை.

1. நற்கருணை பேழை இருக்க வேண்டிய இடம் வத்திக்கான் சங்கத்துக்குப் பின் உரோமையிலிருந்து வந்த அதிகாரப்பூர்வமான அறிக்கைகளுள் ஒன்று நற்கருணை பேழை எப்போதும் ஒரு பீடத்தின் மீதுதான் இருக்க வேண்டும் என்பது. அதற்குத் தக்க காரணம் இல்லாமல் இல்லை. பூசையில் பலியான இயேசு, பூசை முடிந்த பின்பும் பலியானவராகவே இருக்கிறார். வேறெப்படி இருக்க முடியும்? பலியானது பலியானதுதான். ஆகவே, கிறிஸ்து நற்கருணைப் பேழையில் இருக்கும் போதும் பலியான நிலையில்தான் இருக்கிறார். அதனால்தான் பூசைக்கு வெளியே நற்கருணை உட்கொண்டாலும் உண்மையான பலியான ஆண்டவரை உட்கொள்கிறோம் என்பதில் ஐயமேயில்லை. ஆகவே, பலியான நிலையில் உள்ளவரை பலி நிகழும் பீடத்தின்மீது வைத்திருப்பதே பொருத்தம் என்று திருச்சபை எப்போதும் போதித்து வந்துள்ளது. ஆனால், வத்திக்கான் சங்கத்திற்குப் பின் சுவருக்குள்ளே (பணப்பெட்டி போல) புதைத்து வைப்பது, தூண்மேல் வைப்பது, கோவிலில் எங்காவது ஒரு மூலையில் வைப்பது இவை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சிலர் சிறியதொரு மேசை மேல் வைத்து ஆண்டவருக்கு மிக அருகே அமர்ந்து ஆராதனை செய்கிறார்களாம். கிறிஸ்துவை விசுவாசத்தால் நெருங்கலாமே தவிர அருகாமையில் அல்ல. திருச்சபை ஒழுங்கை மீறி செய்யப்படும் எதுவும் நிச்சயமாக சர்வேசுரனுக்கு ஏற்காது என்பதில் ஐயமில்லை.

2. நற்கருணை பேழை கூடாரம் போல் காட்சியளிக்க வேண்டும் பேழை என்று தமிழில் வழங்கும் சொல் ஆங்கிலத்தில் TABERNACLE எனப்படுகிறது (இது இலத்தீன் மொழியிலிருந்து பிறந்த சொல்). இச்சொல்லுக்கு கூடாரம் என்று பொருள். பழைய ஏற்பாட்டுக் கூடாரத்தை நினைவுறுத்துவதோடு, புதிய ஏற்பாட்டில் 'வார்த்தை மனு உருவானார். நம்மிடையே குடிகொண்டார்' (அரு. 1:14) என்னும் அருள்வாக்கை நினைவுறுத்துகிறது. குடிகொண்டார் என்ற சொல்லுக்குக் கிரேக்க மூலத்தில் கூடாரம் அடித்தார் என்ற பொருளே உண்டு என்பது மறைநூல் அறிஞர் விளக்கம். அவரும் (மனு உருவானவரும்) மனு உருவில் நம்மிடையே வாசம் செய்வது நித்தியத்துக்கல்ல. உலகம் இருக்கும் வரையில்தான் என்ற பொருளோடு, நாமும் இவ்வுலகில் கூடாரத்தில் வாழ்பவர் போல் ஒழுக வேண்டும். இது நமது நித்தியமான இல்லம் அல்ல (எபி 13:14) என்ற பொருளையும் குறிக்கவேயாம். நற்கருணைப் பேழையை வைக்க வேண்டிய முறையில் வைக்காவிட்டால் மேற்சொன்ன பொருளுக்கு இடமேயில்லையே!

3. நற்கருணையுள்ள பேழைக்கருகில் விளக்கு ஒன்று இரவும் பகலும் தொடர்ந்து எரிய வேண்டும் பழைய ஏற்பாட்டில் ஆசாரக் கூடாரம் எனப்பட்ட கூடாரத்தில் சந்நிதித் திரைக்கு வெளியே, தூய்மையான ஒலிவ எண்ணெய் விளக்கு எப்போதும் எரிந்து கொண்டிருக்க வேண்டும் என இறைவன் கட்டளையிட்டிருந்தார் (விப 27:20-21). இதன் நினைவில்தான் புதிய ஏற்பாட்டில் நற்கருணைக் கூடாரத்துக்கு முன் விளக்கு ஒன்று எரிய வேண்டும் என்ற ஒழுங்கு திருச்சபையில் ஏற்பட்டிருக்க வேண்டும். ஒலிவ எண்ணெய்யும் குறிப்பிடப்பட்டுள்ளது கவனித்தே. நம் நாட்டில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற தாவர வகை எண்ணெய் - VEGETABLE OIL. பயன்படுத்தப்பட்டு வந்தது. வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு எப்படியோ மண்ணெண்ணெய் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. சில இடங்களில் அதுவுமில்லை. மின்சார மின்மினி விளக்குகள் உள்ளன. மின்சாரம் இல்லையென்றால் விளக்கு இல்லை. இதுதான் இன்று பல இடங்களில் நற்கருணை நாதருக்குக் காட்டப்படும் மரியாதை. மற்ற எண்ணெய் விலைகள் அதிகம் என்று சாக்குப்போக்குக் கூறுபவர்கள் இருக்கலாம். வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு எத்தனையோ தேவையில்லாச் செலவுகளுக்குப் பணமிருக்க இந்த ஒன்றுக்கு மட்டும் பணமில்லாமல் போய்விட்டதா? ஆதியில் இறைவன் விளக்கு பற்றி சொன்னபோது தூய்மையான ஒலிவ எண்ணெய்யைக் கொண்டு வருமாறு இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடுவாய் (விப 27:20) என்றார். நம் பங்கு மக்களிடம் கேட்டுக் கொண்டால் கூட தேவைக்கு மேலாகவே கொண்டு வருவார்களே. பங்கு குருக்களுக்கு இந்த ஆர்வம் இருந்தால் தானே. மிகச்சில பங்குகளில் மட்டுமே மக்கள் எண்ணெய் கொண்டுவருவது காண்கிறோம். எண்ணெய் விளக்கு ஒருவிதத்தில் உயிருள்ள விளக்கென்னலாம். நம் முயற்சியில் சம்பாதிப்பதும் ஆகும். நம்மிடம் உயிருள்ள விசுவாசம் இருந்தால், இந்த உயிருள்ள விளக்குகளுக்குப் பஞ்சம் இராது. இந்த விளக்கு பகல் நேரத்திலாவது அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டேயிருக்குமாறு கவனத்துடன் பார்த்துக் கொள்வது நற்கருணைக்குச் செலுத்தப்படும் தனி வணக்கமாகும்.

4. திவ்ய நற்கருணைக்கு முன் மரியாதை பேழைக்குள் - இருந்தால் ஒரு முழங்கால் மண்டியிடுவது. ஸ்தாபகம் செய்திருந்தால் இரு முழங்கால்களும் மண்டி இடுவது என்று பல நூற்றாண்டுகளாகவே ஒழுங்கு இருந்தது. இன்று முழந்தாளிடுவது இந்தியப் பண்பல்ல என்ற கருத்தை சில அறிஞர்கள் பரப்பி வருகிறார்கள். இயேசுவின் பெயருக்கு (அதாவது இயேசுவுக்கு) விண்ணவர், மண்ணவர், கீழுலகோர், அனைவரும் மண்டியிட (பிலிப் 2:10) என்ற திருவசனம் இந்தியாவைப் பொறுத்தமட்டில் செல்லாதோ. முழங்காலிடுவது இந்தியப் பண்பாடல்ல என்கிறார்கள். சாஷ்டாங்கசமாக விழுவது இந்தியப் பண்பாடுதானே. இப்படி சாஷ்டாங்கசமாக விழுவதில் முழந்தாளிடுவது அடங்கியுள்ளதே. முழங்காலிடாமல் சாஷ்டாங்கசமாக விழுந்து பாருங்கள் தெரியும். ஒரு முழந்தாளிடுவது ஒரு விதமாக இருக்கிறதென்றார் ஒருவர். சரி, இரு முழந்தாளிடுங்களேன். மேலும் மரியாதையாயிருக்கும். இன்று நம் நாட்டில் அஞ்சலி HASTHA என்ற ஒரு கருத்து உலவுகிறது. இது நம் நாட்டுக்கு ஏற்றதென்பர். சரி, இதையாவது சரியாகச் செய்யக் கூடாதா? அஞ்சலி HASTHA என்றால் தலைமேல் கரங்குவித்து வணங்குவது அப்படியென்றால் அதை ஒழுங்காகச் செய்யுங்களேன். 'தலைவா, உனை வணங்க தலைமேல் கரம் குவித்தேன்" - என்று பாடுகிறார்கள். கரங்களைக் கட்டிக்கொண்டு. என்ன பொருத்தம். பிள்ளையார் முதலான தெய்வங்கள் சந்நிதியில் வணக்கம் செய்வோர் எப்படி வணங்குகிறார்கள் என்று சற்று கவனியுங்கள். நடுத்தெருவில் கூட தலைமேல் கரம் குவித்து வணங்குகிறார்கள். பிள்ளையாருக்குக் கிடைக்கிற மரியாதை கூட தம்மை வெறுமையாக்கிக் கொண்ட உண்மைக் கடவுள் நம் ஆண்டவருக்கு இப்போது கிடைப்பதில்லை. அந்தோ, கத்தோலிக்கமே, கழுத்துக்கு எங்கே சுளுக்கு வரப்போகிறதோ என்று பயந்து திவ்ய நற்கருணை முன் தலைமிகச் சிறிது வணங்கி பெரிய ஆராதனை செய்து விட்டதாக நினைத்துக் கொள்பவர் ஏராளம். இதற்கு முன் மாதிரி பெரும்பாலும் குருக்களும், துறவியருந்தான். சாதாரண மக்கள் இவர்கள் செய்வதைப் பார்த்து அப்படியே செய்கிறார்கள். மறைந்துள்ள தெய்வ மகத்துவத்துக்கு நாம் செய்யும் மரியாதை இதுதானா? எவ்வளவுக்கெவ்வளவு மறைந்துள்ளாரோ அவ்வளவுக்கவ்வளவு அதிக மரியாதை செலுத்துவதே முறை.

5. திருப்பலிக்குத் திருஉடைகள் திருப்பலி நிறைவேற்றும் நேரத்தில் குறிப்பிட்ட திரு உடைகளை அணிய வேண்டுமென்று திருச்சபை விதிகளைத் தந்துள்ளது. இந்த விசயத்திலும் குருக்கள் பலர் தவறுவது மிகவும் வருந்தத்தக்கது. ஏற்ற அதாவது திருச்சபை குறிப்பிட்டுள்ள உடைகளை முறையாக உடுத்துவது நற்கருணைக்கு நாம் காட்டும் மரியாதைக்கு அடையாளம். அங்கனம் செய்யாவிடில் இவ்வுன்னத அருட்சாதனத்தை அவமதிப்பதற்குச் சமமாகும்.

6. நன்மை வாங்கிய பின் நன்றியறிதல் அப்ப குணங்களில் ஆண்டவர் ஒரு பத்து - பதினைந்து நிமிடமாவது (அதாவது அப்பத்தின் குணங்கள் ஜீரணம் ஆகும் வரையில்) பிரசன்னம் நம் உடலில் உள்ளது. அந்த நேரத்தைச் சரியான முறையில் செலவழிக்காவிடில் நம் உள்ளத்தில் வரத்திருவுளமான இறைமகனுக்கு என்ன மரியாதை. நன்மை வாங்கிப் பயன் என்ன?

7. அப்பத்துண்டு துணுக்குகள் இவை பற்றி இன்று குருக்கள் அதிக அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. தட்டு எதுவும் பயன்படுத்தாமல் நன்மை கொடுப்பது. சாதாரணமாகி விட்டது. தட்டில் துணுக்குகள் காணப்பட்டால் அவற்றை மரியாதையோடு விரலால் சேகரித்து இரசத்தோடு அல்லது தண்ணீரோடு சேர்த்து உட்கொள்ள வேண்டும். குருக்கள் சிலர் இத்துணுக்குகளைச் சேகரிப்பதைப் பார்க்கும்போது அச்சிறு துண்டுகளிலும் ஆண்டவருடைய திருஉடல் உண்டு என்று நம்புகிறார்களா என்று கேட்கத் தோன்றும். அப்பங்களை ஆண்டவர் பருகச் செய்த புதுமையின்போது, மிகுந்திருந்த துண்டுகளைச் சேகரிக்கச் சொன்னது. உணவு வீணாகக் கூடா என்ற காரணத்துக்காக மட்டுமா? தாம் ஏற்படுத்தப் போகும் நற்கருணை அருட்சாதனத்தை முன் குறித்தது இப்புதுமை என்பது பொதுவான கருத்து. அப்படியானால் நற்கருணை - அப்பத்துண்டுகளும் சேகரிக்கப்பட வேண்டும் - மரியாதையோடு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் ஆண்டவருடைய மனதில் இருந்திருக்கக் கூடாதா? அப்படி ஒன்றுமில்லை என்றாலும், ஒவ்வொரு சிறு துண்டிலும் இயேசுவின் உடல் இருக்கிறது என்பதே திருச்சபையின் கருத்து. அப்பத் துண்டுகளைப் பாத்திரத் துணியால் துடைத்துச் சேகரிக்கும் குருக்கள் உளர். அப்படிச் செய்யும்போது துணியில் அப்பத் துண்டுகளை ஒட்டிக் கொள்ளக்கூடாதா? அவற்றின் கதிஎன்ன?

8. கோயிலில் பேசுதல் பூசை முடிந்த பின் ஆண்டவர் கோவிலை விட்டுப் போவதில்லை என்பதையும் உணராமல் அவர் எதிரிலேயே பலவிதமான பேச்சுகள் நடத்துபவர் இல்லாமல் இல்லை. ஒரு கவர்னர், முதலமைச்சர் போன்ற பெரிய மனிதர்கள் சந்நிதியில் செய்யத்துணியாததை மன்னாதி மன்னர் முன்னிலையில் செய்வது மரியாதையா? பூசை நேரத்தில் செபங்களைக் குருக்களும் சரி, மக்களும் சரி, சரியான கவனம் செலுத்தாமல் மடமடவென்று சொல்வதும் மரியாதைக்குறையேயன்றி வேறென்ன? இதுபோன்ற வேறு அவமரியாதைச் செயல்களும் உள்ளன. இவை எல்லாம் நற்கருணையில் உள்ள விசுவாசக் குறைவைத்தான் காட்டுகின்றன. இவையெல்லாம் நற்கருணையின் பெரிய விரோதியாகிய சாத்தான் செயலால் அன்றி வேறு எங்னம் நடக்க முடியும். இவற்றிற்கெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டிய கடமை நற்கருணையில் ஆழ்ந்த விசுவாசம் கொண்டுள்ளவர்கள் கடமை என உணர்வோமா?

Source from:http://www.anbinmadal.org

ஜெபமாலை வரலாறு



ஆதிகால திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே அப்போஸ்தலர்களும் , இதர விசுவாசிகளும் கர்த்தர் கற்பித்த செபத்தையும் அருள்நிறைந்த மரியாயே  என்ற வானதூதரின் வாழ்த்துச் செபத்தையும் உருக்கமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஆனால் இன்று செபிக்கும் கன்னிமரியின் செபமாலையை, கி.பி. 1214ல் தான் அர்ச்  தோமினிக் வழியாக அன்னை மரியாள் திருச்சபைக்கு வழங்கினார்கள். அக்காலத்தில் ஆல் பிஜென்சியன்ஸ் என்ற முரண்பாட்டுக் கொள்கையினர் மனம் மாறி திருச்சபைக்குத் திரும்பி வரவேண்டுமென்று அர்ச்  தோமினிக் செபித்து வந்தார். பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு காட்டுக்குள் சென்று பாவிகள் மனந்திரும்ப வேண்டி செபித்தார். மூன்றாம் நாள் செபத்தின் தவத்தின் விளைவால் உணர்வற்ற நிலையில் இருந்தார். அப்பொழுது அன்னை மரியாள் அர்ச்  தோமனிக்குக் காட்சி தந்து எதிரிகளை முரண்பாட்டுக் கொள்கையினர்களை, பாவிகளை முறியடிக்கும் ஒரே கருவி செபமாலை என்று கற்றுக் கொடுத்தார்கள்.

அந்த நாளிலிருந்து தனது வாழ்நாள் முழுவதும் அர்ச் தோமனிக் செபமாலையின் புகழையையும் பெருமையையும் தனது போதனைகளின் வழியாகப் போதித்து அறிக்கையிட்டு வந்தார்.

படிப்பறியாத பாமரமக்கள் தாவீது எழுதிய 150 திருப்பாக்களையும் செபிக்க முடியாத வேளையில், கன்னிமரியாள் கொடுத்த செபமாலை பேருதவியாக இருந்தது.செபமாலையில் நாம் செபிக்கும் 150 அருள் நிறைந்த மரியாயே செபம் 150 திருப்பாக்களை ஒத்ததாக அமைந்திருப்பதை நாம் கருத்தில் கொள்வது நல்லது.


செபமாலையின் மகிமையைப் பற்றி அன்னை மரியாள் பலருக்குத் தோன்றி விளக்கியுள்ளார்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் அருள் நிறைந்த மரியாயே என்ற செபத்ததை சொல்லும்பொழுது எனக்கு ஒரு ரோசாப்பூவை அன்பளிப்பாக அளிக்கின்றீர்கள். என்கிறார்கள். செபமாலையை முழுமையாக எல்லா மறையுண்மைகளையும் தியானித்து செபிக்கும் பொமுது எனக்கும் இயேசுவுக்கும் ரோசாக்களைக் கோர்த்த கிரீடமாக நீங்கள் கொடுக்கிறீர்கள் என்றும் கூறியுள்ளார்கள். ரோசாமலர் பூக்களின் அரசி. ஆகவே செபமாலை என்பது முக்கியமான பக்தி முயற்சிகளின் ரோசாமலர் என்பது தெளிவாகப் புலனாகும்.


Source from:http://www.anbinmadal.org

அர்ச் அருளானந்தர்

போர்த்துகலில் செல்வந்தரான அரசகுலப் பெற்றோரின் மகனாக மார்ச்1, 1647ல் ஜான் டி பிரிட்டோ பிறந்தார். சிறு வயதிலிருந்தே ஜானின் உடல் சீராக இருக்கவில்லை. 11 வயதில் தீவிர நோய்த்தாக்கத்தில் பிழைப்பதரிது என்ற நிலையில் அவரது தாய், அர்ச் ஃபிரான்சிஸ் சவேரியாரிடம் உருக்கமாக மன்றாடினார். சிறுவன் பிழைத்தெழுந்தான். இயேசு சபையினரின் உடை போன்று ஓராண்டளவும் தம் மகனை உடுத்தச் செய்தார் தாய். அதிலிருந்து அர்ச் சவேரியாரைப் போல தாமும் இயேசுவின் ஒளியை இந்திய மண்ணில் பரவச் செய்ய வேண்டும் என்ற பேராவல் அவரது இதயத்தில் பற்றியெரிய ஆரம்பித்தது. அவர் விரும்பியவாறே 15 வயதில் இயேசு சபையில் அனுமதிக்கப்பட்டார்.

குருபட்டம் பெற்றபோது கற்றலில் சிறந்த அவரது ஆற்றல் கண்டு, ஜானைப் போர்த்துக்கல்லில் இருத்திக் கொள்ள விரும்பினார். ஜானுக்கு இந்தியாவே இலக்காயிருந்தது. பாப்புவின் பிரதிநிதிவரை சென்று தம் மகனின் இந்தியப் பயணத்தைத் தடுக்க முயற்சித்தார் தாய். 'துறவற வாழ்வுக்கு என்னை அழைத்த ஆண்டவர் இப்போது இந்தியாவுக்கு அழைக்கிறார்" எனக் கூறி அன்னையை ஆறுதல்படுத்தினார். கி.பி.1673ல், 16 சககுருக்களுடன் கோவாவில் கால்பதித்தார் ஜான். இறையியல் முதலான மேற்படிப்புக்களை முடித்தார். மதுரை மறைபரப்புத் தளத்தின் தலைமைப் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. பணி தொடங்கு முன் 30 நாள் ஞான ஒடுக்கம் செய்தார். தமிழில் பேசக் கற்றார். தமிழில் போதிக்கும் திறம் வளர்த்தார்.

இந்தியத் துறவி போல் காவி உடை அணிந்தார். மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்று அருளானந்த சுவாமியானார். தமக்குப் பழக்கமில்லாத தமிழக வெப்பத்தைப் பொருட்படுத்தாது, சென்னை, வேலூர், தஞ்சை, முகவை எனப் பல மாவட்டங்களிலும் நடந்தே சென்று போதித்தார். இவரது தவமிகு வாழ்வு, மிகுதியான ஆர்வம், மறைப்பணியில் தீவிரம் இவற்றின் விளைவாய் ஆயிரக்கணக்கானோர் கிறிஸ்தவ மதத்தை  தழுவினர். தஞ்சைத் தளத்தில் அறுவடை மிகுதியானது. மறவர் நாட்டில் இவருக்கு எதிர்ப்புக் கிளம்பியது. புதிய வேதத்தின் போதனையைத் தடுக்கப் புனிதரைக் கைது செய்தான் முகவை முதன் மந்திரி. விசாரணை இன்றியே துன்புறுத்திக் கொள்ள முயன்ற போது, முகவை மன்னன் தலையிட்டுப் புனிதரை விடுவித்து நாடு கடத்தினான்.

தந்தை ஜானைப் போர்த்துகல் வரவேற்றது. இயேசு சபை மாநிலத் தலைவர் பதவி அளிக்க முன் வந்தது. ஆயர் பதவி காத்திருந்தது. வறண்ட மறவர் நாட்டின் மீது தணியாகத் தாகம் கொண்டிருந்த அருளானந்தர் எதையும் ஏற்க மறுத்துத் தமிழகம் திரும்பினார். இராமநாதபுரத்தில் அரச குடும்பத்தைச் சார்ந்த சிலர் திருமுழுக்குப் பெற்றனர். குணமளிக்கும் வரம் பெற்றிருந்தார் புனிதர். அவரது மன்றாட்டால் மக்கள் உடல் நலம் பெற்றதைக் கண்டு அந்தணர்கள் அழுக்காறுற்றனர். இது பேய் வேலை என்றனர். நோயால் துன்புற்று மரணத்தை எதிர் நோக்கியிருந்த மறவ இளவரச தடியத் தேவர் புனிதர் தம்மிடம் வரப்பிரார்த்தித்தார். ஜான் தாம் செல்லாது தம்வேதியருள் சிறந்த ஒருவரை அனுப்பி இறைவேண்டல் செய்ய, தடியத் தேவர் நலம் பெற்றார். மறையறிவு பெற்று கிறித்தவரானார். அவருக்கு 5 மனைவியர். கிறித்தவரானதும், தம் முதல் மனைவியைத் தவிர மற்றவர்களை அனுப்பிவிட்டார்.
புனித அருளானந்தர்- ஜான்- டி- பிரிட்டோ- St.John De Britoஅவ்வாறு அனுப்பப்பட்டவர்களுள் ஒருவர் கடலாயி முகவைச் சேதுபதியின் நெருங்கிய உறவினர். மன்னனிடம் முறையிட்டாள். ஓரியூரிலிருந்த தன் தம்பி உடையத்தேவர் மூலம் அருளானந்தரைக் கொல்ல வழிதேடினாள். திருமுழுக்கு யோவானைப் போலவே ஒரு பெண்ணின் சினத்துக்குப் பலியானார் புனிதர். முகவையிலிருந்து ஓரிய10ருக்கு நடத்திச் செல்லப்பட்டார். 'மரணத்தை எதிர்நோக்கியுள்ளேன். இதுவே என் வேண்டுதலின் இலக்காக இருந்தது. எனது உழைப்பிற்கும் வேதனைகளுக்கும் விலை மதிப்பற்ற பரிசாக இந்த நாள் அமைகிறது" என மரணத்திற்குமுன் தம் தலைமைக் குருவுக்கு எழுதினார். தம் இறுதித் தண்டனைக்குக் குறிக்கப்பட்ட இடமான மணல்மேட்டிற்கு விரைந்து சென்றனர். வெட்டப்பட ஏதுவாய் தலைதாழ்த்தினார். தலையைக் கொய்த முரடர்கள் புனிதரது கைகளையும், பாதங்களையும் வெட்டினர். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவாகட்டும் என்ற எண்ணத்துடன் இரு கம்பங்களை நட்டு, உடல் சிதைவுகளைத் தொங்கவிட்டனர். அது மழைக் காலமில்லையெனினும் 8 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. மழைக்குப் பின்னர் புனிதரின் சில எலும்புத் துண்டுகளே மீந்துகிடந்தன.

மறைசாட்சியின் இரத்தத்தால் மணல்மேடு சிவந்தது. சிவந்த மணலை இன்றும் காணலாம். மக்கள் திரளாக திருயாத்திரையாக ஓரியூருக்கு வர ஆரம்பித்தார்கள். 1947ல் அருளானந்தருக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. மறவநாட்டுத் திருத்தூதர், மதுரை மறைத்தளத்தின் பாதுகாவலர் 
அர்ச் அருளானந்தரின் நினைவைத் திருச்சபை பெப்ரவரி 4ல் போற்றுகிறது.