ஆகஸ்டு
2ம் தேதி
திவ்ய இரட்சகர் சபையின் ஸ்தாபகரும்,ஸ்துதியரும், மேற்றிராணியாரும், வேதபாரகருமான அர்ச். மரிய அல்ஃபோன்ஸ் லிகோரியார் திருநாள்
அர்ச்.
அல்ஃபோன்ஸ், இத்தாலியிலுள்ள நேப்பிள்ஸில் பிறந்தார். நேப்பிள்ஸ் நாட்டின் கப்பற்படையின் தலைவருடைய எட்டுப் பிள்ளைகளில் மூத்த மகனாக, 1696ம் வருடம், இவர்
பிறந்தார். இவர் குழந்தையாக இருந்தபோது, சேசுசபையைச் சேர்ந்த அர்ச். பிரான்சிஸ் ஜிரோலாமா, இவரை ஆசிர்வதித்தார்; இவர்
90 வயது வரை உயிர் வாழ்ந்து,
ஒரு மேற்றிராணியார் ஆவார் என்றும், திருச்சபைக்கு அதிக நன்மை செய்வார்
என்றும் தீர்க்கதரிசனமாகக் கூறினார். இவர் மிகவும் பலவீனராயிருந்ததால், இராணுவத்தில் இவரால் சேரக் கூடாமல் போனது. ஆகவே, இவரை ஒரு சட்டவல்லுனராக்க
வேண்டும் என்று, இவருடைய தந்தை, இவரை சட்டக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.
இவர் தனது அபூர்வமான அறிவுத்திறனால்,
நேப்பிள்ஸ் பல்கலைக் கழகத்தில், 16 வயதிலேயே சமூக சட்டக்கல்வியிலும்,
வேதஇயல் கல்வியிலும் நிபுணத்துவம் பெற்று (டாக்டா் ) முனைவர் பட்டம் பெற்றார்.
27வது வயதில், நேப்பிள்ஸ் நாட்டிலேயே, இவர் மிகச் சிறந்த வழக்கறிஞரானார். தினமும், தவறாமல் திவ்ய பலிபூசை கண்ட பிறகே, இவர்
தனது அன்றாட அலுவலை துவக்குவார்; ஒவ்வொரு முறை, இவர் நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன்பாக, தவறாமல், முதலில், திவ்ய பலிபூசையை பக்திபற்றுதலுடன் காண்பார்; அதன் பிறகே நீதிமன்றத்திற்குச் செல்வார். ஒருநாள், இவர், தன் நண்பருக்கு பின்வருமாறு
ஒரு கடிதம் எழுதினார்: “என்
நண்பரே! நம்முடைய வக்கீல் தொழில், அதிக கஷ்டங்களாலும், ஆபத்துக்களாலும்
நிறைந்தி ருக்கிறது; நாம் நிர்ப்பாக்கியமான ஜீவியம், ஜீவிக்கிறோம்; நித்தியத்திற்குமாக நிர்ப்பாக்கியமாக இறந்துபோகக்கூடிய ஆபத்தும் நமக்கு இருக்கிறது!” ஒருசமயம்,
இவர் வெற்றியடைந்த ஒரு நீதிமன்ற வழக்கில்
, இவருக்குத் தெரியாமல், இவர் ஒரு பொய் சொல்ல
நேர்ந்ததைக் குறித்து, பெரிதும்
வருந்தினார்; இதன்பின், நேப்பிள்ஸில் மிகப்பெரிய சட்ட வல்லுனராக இருந்த
அர்ச். அல்ஃபோன்ஸ் , தன்
27வது வயதில், தன்னை வஞ்சித்த இந்த வக்கீல் தொழிலையும்,
உலகத்தையும் துறந்து விட்டார்; 1723ம் வருடம், இவர்
அர்ச். பிலிப் நேரியாரின் ஜெபக்கூட துறவற சபையில் சேர்ந்தார்; 1726ம் வருடம், டிசம்பர்
21ம் தேதியன்று தனது 30வது வயதில், குருப்பட்டம்
பெற்றார். வீடு இல்லாத ஏழைகளிடையே,
இளைஞர்களிடையே, வியாதியஸ்தர்களிடையே, அவர்களுடைய ஆத்தும சரீர நன்மைகளுக்காக, உழைத்தார்;
இவர், நிகழ்த்திய எளிய தெளிவான பிரசங்கங்கள்
மூலமாகவும், கனிவுமிக்க
இரக்கத்துடனும், ஞானத்துடனும் பாவசங்கீர்த்தனம் கேட்பதன் மூலமாகவும், நேப்பிள்ஸ் நாட்டின் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார். பாவத்தின் மட்டிலான மிக அற்பக்காரியங்கள் பேரிலும், இவர்
குற்ற உணர்வுடன் வருத்தமுற்றிருந்தார்; அர்ச். அல்ஃபோன்ஸ், மன
உறுத்தல்களால் அவதியுற்றார். ஆனால், இவர் எழுதிய நூல்களில், “மன உறுத்தல்கள்”, மனந்திரும்புகிறவர்களின் துவக்க காலத்தில் மிக பயனுள்ளவையாக இருக்கின்றன!
என்றும், அவை ஆத்துமத்தைத் தூய்மைப்படுத்துகின்றன!
என்றும், அதே சமயம், அவை,
ஆத்துமத்தை மிகவும் கவனமுள்ளதாகவும், விழிப்புள்ளகாகவும், மாற்றிவிடுகின்றன! என்றும் எழுதியுள்ளார். 1732ம் வருடம், மகா
பரிசுத்த திவ்ய இரட்சகர் சபை என்கிற ஒரு
துறவற சபையை, அர்ச்.அல்ஃபோன்ஸ் மரிய
லிகோரியார் ஸ்தாபித்தார். அட்ட தரித்திரத்திலும், கடின தபசிலும்
இத்துறவியர் ஜீவிக்கலாயினர்; 1752ம் வருடம் முதல்,
ஞான நூல்களை எழுதுவதில் தன்னையே அர்ப்பணித்தார்; எவ்வளவுக்கு அதிக தேவசிநேகத்துடனும், ஜெப தப
ஒறுத்தல்களுடனும், இந்த உன்னதமான ஞான
நூல்களை எழுதினார் என்றால், அதை வாசிக்கிறவர்களின் இருதயத்தில் புதுமையாக
தேவசிநேக அக்கினி தூண்டப்படுவதை, எல்லா காலங்களிலும் விசுவாசிகள் கண்டுணர்கின்றனர்! அதனால் ஏராளமான ஞான நன்மைகளை அடைகின்றனர்!
மேற்கூரை இல்லாத மடங்களில் அர்ச். அல்ஃபோன்ஸ் இப்புத்தகங்களை
எழுதும்போது, பனிப்பொழிவு, இவர்மேல் நேரடியாக விழுந்ததால், தாங்கமுடியாக குளிரினால், இவருடைய விரல்கள் மரத்துப்போகும்! அச்சமயத்தில், உஷ்ணப்படுத்து வதற்காக அறையில் வைத்திருந்த அடுப்பில் கையை அடிக்கடி வைத்தபடி,
எழுதுவதில் தொடர்ந்து ஈடுபட்டார்; அதனாலேயே தான், இவருடைய எல்லா புத்தகங்களும், இக்காலத்தில் நாம் வாசிக்கும்போதுகூட, நம் இருதயத்தில் தேவசிநேக
நெருப்பு மூட்டப்படுகிறதை, உணர்கிறோம்!
அர்ச். அல்ஃபோன்ஸ் மரிய
லிகோரியார், தன் ஜீவிய காலத்தில்
111 புத்தகங்களும், பல பிரபந்த நூல்களும்
எழுதியுள்ளார்; இவை 60 மொழிகளில், 4000 பதிப்புகளாக பிரசுரமாயிருக்கின்றன, என்பது, குறிப்பிடத்தக்கது! மகா பரிசுத்த தேவநற்கருணையைப்
பற்றியும், மகா பரிசுத்த தேவமாதாவின்
மகிமைகள் பற்றியும், ஆண்டவரின் பரிசுத்தப் பாடுகள் பற்றியும், ஆண்டவருடைய ஜீவிய சரித்திரத்தைப் பற்றியும், நன்மரண ஆயத்தம் பற்றியும், இன்னும் அதிக புத்தகங்களை எழுதியுள்ளார்;
இக்காலத்தில் இணையதளத்தில், இலவசமாகக் கிடைக்கிற பாரம்பரிய கத்தோலிக்க புத்தகங்களில், இவரின் எல்லா புத்தகங்களும் ஏறக்குறைய நமக்குக் கிடைக்கும்படியாக இருப்பதே, இக்காலத்திலும் எக்காலத்திலும் நமக்கு அருளப்படுகிற தேவபரா மரிப்பின் அரிய அடையாளமாக இருக்கிறது!
இவர் 1762ம் வருடம், அர்ச்.
ஆகத்தா
மேற்றிராசனத்தின் மேற்றிராணியாராக அபிஷேகம் செய்யப் பட்டார். இம்மேற்றிராசனத்தில் 13 வருட காலம், ஆன்ம
ஈடேற்ற அலுவலில், அயராமல் உழைத்தார்; குருமடங்களையும், துறவற மடங்களையும் சீரமைத்தார்; கேட்பவர் இருதயங்களில் தேவ சிநேகத்தை மூட்டிய இவரின் ஞானதியானப் பிரசங்கங்களால், அநேக வெதுவெதுப்பு கிறீஸ்துவர்கள்,
உத்தம கிறீஸ்துவர்களாக மாறினர்; விசுவாசத்தை மறுதலித்திருந்தவர்கள், மனந்திரும்பி, மறுபடியும் சத்திய திருச்சபையில் சேர்ந்தனர்; அர்ச்.அல்ஃபோன்ஸ், தனது
91வது வயதில், 1787ம் வருடம், ஆகஸ்டு
1ம் தேதியன்று, மத்தியானம் 12 மணிக்கு திரிகால ஜெபத்திற்காக தேவாலய மணி அடிக்கத் துவக்கிய
போது, பாக்கியமாய் மரித்தார். 1839ம் வருடம், இவருக்கு
அர்ச்சிஷ்டப்பட்டம் அளிக்கப்பட்டது; 1871ம் வருடம் இவருக்கு
வேதபாரகர் பட்டம் அளிக்கப்பட்டது. 1950ம் வருடம், பாவசங்கீர்த்தனம்
கேட்கிற ஆன்ம குருக்களுக்கும், நல்லொழுக்க வேத
இயல் அறிஞர்களுக்கும் , பாதுகாவலர் என்று அறிவிக்கப்பட்டார். ✝
“கனியை
விரும்புகிற எவனும் கட்டாயமாக அதனுடைய மரத்தினிடம் செல்ல வேண்டும்; நமதாண்டவரான திவ்ய சேசு கிறீஸ்து நாதரை
ஆசிக்கிற எவனும் கட்டாயமாக அவருடைய மகா பரிசுத்த மாதாவிடம்
செல்ல வேண்டும்! மகா பரிசுத்த தேவ மாதாவை யாரெல்லாம் கண்டடைகின்றனரோ, அவர்களெல்லாம், மிகவும் நிச்சயமாக, நமதாண்டவரான திவ்ய சேசுநாதர் சுவாமியைக் கண்டடைந்து கொள்வார்கள்!”
அர்ச்.அல்ஃபோன்ஸ் மரிய
லிகோரியார்.
அர்ச்.அல்ஃபோன்ஸ் மரிய
லிகோரியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
Books by St. ALphonsus
Visits to Jesus and Mary : excerpted from visits to - Link
the most blessed Sacrament and the Blessed Virgin Mary
The Glorious of Mary -
Link
The practice of the love of Jesus Christ - Link