Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 16 மார்ச், 2021

ஆண்டவரின் ஐந்து திருக்காயங்களின் பேரில் - Tamil Catholic Songs

 

ஆணி கொண்ட உம் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன்

பாவத்தால் உம்மைக் கொன்றேனே - 2 ஆயனே என்னை மன்னியும் - 2


வலது கரத்தின் காயமே - 2 அழகு நிறைந்த ரத்தினமே அன்புடன் முத்தி செய்கின்றேன்


இடது கரத்தின் காயமே - 2 கடவுளின் திரு அன்புருவே அன்புடன் முத்தி செய்கின்றேன்


வலது பாதக் காயமே - 2 பலன் மிகத் தரும் நற்கனியே அன்புடன் முத்தி செய்கின்றேன்


இடது பாதக் காயமே - 2 இதம் மிகத் தரும் பொக்கிஷமே அன்புடன் முத்தி செய்கின்றேன்


திருவிலாவின் காயமே - 2 அருள் சொரிந்திடும் ஆலயமே அன்புடன் முத்தி செய்கின்றேன்





1 கருத்து: