அர்ச். அந்தோனியாருடைய சிநேகிதர்
அர்ச். அந்தோனியார் வெர்சேயில் பட்டணத்தில் தபசு காலத்தின்போது பிரசங்கம் செய்து வருகையில் அவ்விடம் வேத சாஸ்திரத்தில் தேர்ந்தவரும் புண்ணியத்தில் சிறந்தவருமான மடாதிபதி ஒருவர் இருந்தார். அவர் சாஸ்திரியான தோமாஸ் கால்லோ என்று அனேகர் என்னுகிறார்கள். அர்ச். அந்தோனியார் வேத காரியங்களையும் தேவ சிநேகத்தையும் பற்றி அந்த மடாதிபதியுடன் வெகுநேரம் சம்பாவித்து வருவார். இருவரும் சுவாமியைப் பற்றி ஒருவரொருவரை நேசித்து வந்தார்கள், அந்த மடாதிபதி அர்ச். அந்தோனியாருடைய கல்வித் திறமையையும், அவருடைய புண்ணியங்களையும் மெத்தவும் புகழ்ந்து பேசி அவர் உள்ளத்தில் தேவ சிநேகாக்கினியினால் பற்றி எரிந்து வெளியில் அந்தத் தேவ சிநேகாக்கிளனியின் கதிர்களை வீசினாரென்று எழுதி வைத்திருக்கிறார்.
இருவரும் பரலோகத்திலிருக்கும் ஒன்பது விலாச சபை சம்மனசு களைக் குறித்துப் பேசுவதில் பிரியங்கொள்ளுவார்கள், அந்தோனியார் அச்சமயத்தில் அவர்களைத் தம்முடைய கண்களால் பார்ப்பதுபோல ஒவ்வொரு சபை சம்மனசுகளுடைய அழகையும், திறமையையும்,
மற்றக் குணங்களையும் குறித்துப் பேசினதாக மடாதிபதி
சொல்லியிருக்கிறார்.
அர்ச். அந்தோனியார் பலவிடங்கள் சென்று வேதத்தைப் பிரசங்கித்த பிறகு மரிக்கிறதுக்குக் கொஞ்ச காலத்துக்கு முந்தி திரும்பவும் வெர்சேயில் பட்டணம் வந்து தம்முடைய சிநேகிதரான மடாதிபதியைச் சந்தித்து அவரிடம் ' மறுவுலகத்தில் இருவரும் சந்திப்பதாகச் சொல்லி விடை பெற்றுப்போனார். ஆனால் அர்ச். அந்தோனியார் மரித்த சமயத்தில், தொண்டை நோயால் மிகவும் உபாதைப்பட்டுக் கொண்டிருந்த வெர்சேயில் மடத்து மடாதிபதி அர்ச். அந்தோனியார் மலர்ந்த முகத்தோடு தம்முடைய அறைக்குள்எாக வந்ததைக் கண்டார். மேலும் அந்தோனியார் அவரை நோக்கி: என்னுடைய கழுதையைப் பதுவா பட்டணத்தில் விட்டு விட்டேன். இப்போது என்னுடைய சொந்தத் தேசம் போகிறேன்' என்று சொல்லி, பிறகு நுனிவிரலால் மடாதிபதியினுடைய தொண்டையைத் தொட்டு அவரைச் செளக்கியப்படுத்தி மறைந்து போனார். மடாதிபதி அந்தோனியாரை மற்றவர்கள் யாராவது பார்த்தார்களோவென்று விசாரிக்க, இல்லையென்றறிந்து, அவர் தமக்குக் காட்சிதந்த தேதியும், நேரமுங் குறித்து வைத்து, கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அதே தேதியிலும் நேரத்திலும் அந்தோனியார் பதுவா பட்டணத்தில் மரித்ததாகச் கேள்விப்பட்டார்,
நமது திவ்விய இரட்சகரான சேசுநாதசுவாமிக்குப் பிரிய சீடர் ஒருவர் இருந்தது போல், அர்ச். அந்தோனியாருக்கும் சந்நியாசிகளில் பிரிய சீடர் ஒருவர் இருந்தார், அவர், வேதம் போதிக்க எங்கும் போனபோது அவரோடு எப்போதும் சென்ற லுக் பெல்லூதி (Luc Beliudi) என்னும் சகோதரர்தான், இந்தச் சகோதரர் கடைசி காலம் வரைக்கும் அர்ச். அந்தோனியாரோடு இருந்து அவர் செய்து வந்த தபசு, புண்ணியங்கள், புதுமைகள் இவைகளுக்கெல்லாம் சாட்சி யாயிருந்ததுமல்லாமல் அர்ச். அந்தோனியார் சாகுந் தருவாயிலும் அவருடன் இருந்து அவர் அடக்கம் பண்ணப் பட்ட கல்லறையைக் காத்து வந்தார். அவ்விடத்தில் நடந்த ஆச்சரியமான புதுமைகளைக் கண்டு மகிழ்ந்தார். பதுவா பட்டணம் நிஷ்டூரனான எஸ்லினோ (Ezzelino) துரையினுடைய கையிலகப்பட்டு அக்கொடியன் அந்தப் பட்டணவாசிகளைப் பிடித்து அநேக உபாதைகள் படுத்திக் கொலை செய்து வந்ததைக் கண்ட சகோதரர் 1256-ம் வருஷம் ஒரு நாள் இராத்திரி பதுவா பட்டணத்தின் மட்டில் இரக்கம் வைத்துக் காப்பாற்ற வேண்டுமென்று அர்ச், அந்தோனியாரை மன்றாடினபோது, அவருடன் மடத்துச் சிரேஷ்டரான பார்த்தேலேமி கார்ராதினோ (Barthelemy carradino) என்பவரும் இருக்க, அவர்களிருவருக்கும் தெளிவாய்க் கேட்கப்பட்டதென்னவெனில் "சகோதரனே, துன்பத்துக்கு உன்னைத்தானே கையளிக்காதே, ஏனெனில் என்னுடைய திருநாளின்போது பதுவா பட்டணம் சத்துராதிகளின் கொடுமையினின்று மீட்கப்பட்டு, செழிப்பும் கீர்த்தியும் மகிமையும் அடையும்' என்று கேட்கப்பட்டது. லுக் பெவ்லூதி சகோதரர் மரித்து தனது உத்தம் சிநேகிதருடைய பக்கத்தில் அடக்கம் பண்ணப்பட்டிருக்கிறார். சர்வேசுரனைப்பற்றி அவரிடமாய், நாம் புறத்தியாரை நேசிக்கும் போது சர்வேசுரன் நம்முடைய நேசத்தை ஆசீர்வதித்து நமக்கும் நம்மால் நேசிக்கப்பட்டவர் களுக்கும் அநேகவித ஒத்தாசை செய்தருளுகிறார்.
செபம்
மகா நேசத்துக்குரிய அர்ச், அந்தோனியாரே, சர்வேசுரனைப்பற்றிப் புறத்தியாரை நேசித்து அவர்களிருதயத் திலும் உமதிருதயத்தில் பற்றி எரிந்த தேவ. சிநேகம் விளங்கும்படி செய்தருளினீரே, நாங்களும் சர்வேசுரனைப் பற்றி மாத்திரம் எங்கள் புறத்தியாரையும் நேசிக்கும்படி கிருபை செய்தருளும். -ஆமென்.
நற்கிரியை - சர்வேசுரனைப் பற்றிப் பிறரை நேசிக்கிறது.
மளவல்லயச் செபம் - பிறர் சிநேகம் நிறைந்த அர்ச், அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.