Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 24 நவம்பர், 2017

St. James., November 27 ம் தேதி


27-ம் தேதி
                             

அர்ச்.ஜேம்ஸ், வேதசாட்சி

                                                       (கி.பி.421)

                யாகப்பர் என்று அழைக்கப்படும் ஜேம்ஸ் என்பவர் பெர்சியா தேசத்தில் மிகவும் கீர்த்தியும் வெகுமானமும் மகிமையும் பெற்ற ஓர் பிரபுஇவருடைய சிறந்த பிறப்பைப் பற்றியும் அவரடைந்த வெகுமானங்களைப் குறித்தும் இராயனுடைய அரண்மனையில் மேலான உத்தியோகம் பெற்றிருந்தார்இராயனும் இவரை நேசித்து சிறந்த விருதுகளையும் இவருக்கு அளித்திருந்தான்அத் தேசத்தில் கிறீஸ்துவர்களுக்கு விரோதமாய் வேதகலகம் உண்டானபோது ஜேம்ஸ் என்பவர் இராயனுடைய உறவை முறிக்க மாட்டாதவராய் சத்திய வேதத்தை மறுதலித்தார்இதையறிந்த அவருடைய தாயாரும் மனைவியும் வெகு துக்கங் கொண்டு அவர் மனந்திரும்பும்படி சர்வேசுவரனைப் பார்த்து பிரார்தித்து வந்தார்கள்சில காலத்திற்குப் பின் இராயன் இறந்து புது இராயன் சிம்மாசனம் ஏறினான்அப்போது அவ்விரு ஸ்திரீகளும் ஒரு கடிதம் எழுதி ஜேம்ஸ{க்கு அனுப்பினார்கள்அது யாதெனில்: இராயனுக்குப் பிரியப்படும்படி உன் தேவனை மறுதலித்தாய்அந்த இராயன் இப்போது எங்கே இருக்கிறான்மண்ணிலிருக்கிறான்இவனுடைய வெகுமானத்தை விரும்பி நித்திய கேட்டுக்கு உள்ளான உனக்கும் எங்களுக்கும் இனி யாதொரு சம்பந்தமுமிராது என்று எழுதினார்கள்அவர் இதை வாசித்த பின் சொல்லி முடியாத துக்கப்பட்டு, அக்கணமே அஞ்ஞான வேதத்தை விட்டு சத்திய வேதத்தை அனுசரிக்கத் துவங்கினார்இதையறிந்த புது இராயன் சினங்கொண்டு ஜேம்ஸை நிஷ்டூரமாய் அடித்துக் கொல்லும்படி கட்டளையிட்டான்அவர் கட்டளைப்படியே சேவகர் வேதசாட்சியை உபாதித்து அவருடைய கை, கால்களை கணுக்கணுவாய் நறுக்கினதினால், வேதசாட்சி சொல்லிமுடியாத வேதனை அனுபவித்து தன் ஆத்துமத்தைத் தன் சிருஷ்டிகர் கையில் ஒப்படைத்து நித்திய சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்



யோசனை
                யாதொருவன் வேதத்திற்கு விரோதமாய் நடப்பதை அவனுடைய பெற்றோர், உறவினர்கள் அல்லது சிநேகிதர் பார்க்கும்போது அந்தப் புண்ணிய ஸ்திரீகளைக் கண்டுபாவிக்க வேண்டும்

St. Silvester., November 26-ம் தேதி




அர்ச்.சில்வெஸ்தர், மடாதிபதி

                                                       (கி.பி.1267) 

                சில்வெஸ்தர் லொரேத்தோ நகருக்கு அருகாமையிலுள்ள ஊரில் உயர்ந்த குலத்தாரான தாய் தந்தையரிடத்தினின்று பிறந்தார்இவர் பெயர்போன கல்விச்சாலைக்குச் சென்று நீதி சாஸ்திரத்தையும் தேவசாஸ்திரத்தையும் முழுமையாக கற்றறிந்து குருப்பட்டம் பெற்று பாவிகளுக்குப் புத்தி சொல்லி பிறருடைய ஆத்தும இரட்சணியத்திற்காக ஊக்கத்துடன் உழைத்து வந்தார்இதனால் சில பாவிகள் இவரை விரோதித்து துன்பப்படுத்தி வந்தார்கள்உலகில் கீர்த்தி பெற்றவனும் தனவந்தனும் அழகனுமான ஒரு துரையின் சாவுச் சடங்குக்கு சில்வெஸ்தர் போயிருந்தபோது, அவனுடைய முகம் மாறி அவலட்சணமாயிருப்பதைக் கண்டு சற்று நேரம் சாவைப் பற்றி தியானித்து, அன்று இரவே தூரமான வனாந்தரத்திற்குச் சென்று கடினமான தபஞ் செய்து வந்தார்இவருடைய புண்ணியங்களையும் அர்ச்சியசிஷ்டதனத்தையும் பற்றிக் கேள்விப்பட்ட அநேகர் அவருக்குச் சீஷர்களானார்கள்சில்வெஸ்தர் தம்மிடம் வந்த திரளான துறவிகளுக்கு ஒரு மடம் கட்டி, அவர்களுக்கு புண்ணிய மார்க்கத்தைப் போதித்து வந்தார்சில காலத்திற்குள் திரளான பேர் அவருக்கு சீஷரானதால், சில்வெஸ்தர் 25 மடங்களைக் கட்டி வைத்தார்இவர்களுடைய புண்ணியங்களையும் தவக்கிருத்தியங்களையும் கண்ட துர்மனப்பசாசு   பலவிதமாய் அவர்களை துன்பப்படுத்தி அவர்களை அவ்விடத்தினின்று அப்புறப்படுத்தும்படி பிரயாசைப்பட்டதுஆனால் அர்ச்சியசிஷ்டவர் ஜெபத்தாலும் ஒருசந்தியாலும் தேவதாயார் மீது வைத்த மிகுந்த பக்தியினாலும் அதை ஜெயித்தார்.  90 வயது மட்டும் சில்வெஸ்தர் தாழ்ச்சி, கீழ்ப்படிதல் முதலிய புண்ணியங்களையும் அநேக புதுமைகளையும் செய்து அர்ச்சியசிஷ்டவராய்க் காலஞ் சென்று மோட்ச சம்பாவனையைச் சுதந்தரித்துக்கொண்டார்



யோசனை

                நமது சத்துருவாகிய சரீரத்தில் ஆசாபாசம் கிளம்பி நம்மைக் கெடுக்கப்பார்க்கும்போது, அழுகி, நாறி, புழுவுக்கு இரையாகும் அதன் இஷ்டத்திற்குச் சம்மதியாமல் அச் சோதனைகளை ஜெபிப்போமாக.  


வெள்ளி, 17 நவம்பர், 2017

St. Catherine., Virgin, Martyr. November 25-ம் தேதி


அர்ச்.கத்தரீனம்மாள்,
கன்னிகை, வேதசாட்சி (கி.பி.311)

                கத்தரீனம்மாள் அலெக்சாந்திரியா நகரில் செல்வந்தரும் உயர்குலத்தாருமான தாய் தகப்பனிடத்தினின்று பிறந்து, மகா திறமையுடன் கல்வி சாஸ்திரங்களைக் கற்று வந்தாள்.  இவளுக்கு அதிசயத்திற்குரிய ஞானமும் புத்தியுமிருந்தமையால் கலைகளையும் தத்துவ சாஸ்திரங்களையும் கற்றறிந்து அந்நகரில் பெயர்பெற்று விளங்கினாள்.  சத்திய வேதத்தின் உண்மையை அறிந்து ஞானஸ்நானம் பெற்று புண்ணிய வழியில் நடந்து வந்தாள்.  அக்காலத்தில் உண்டான வேதகலகத்தில் கத்தரீனம்மாள் பிடிபட்டு, இராயன் முன்னிலையில் நிறுத்தப்பட்டபோது அவளுடைய புத்தி ஞானத்தை இராயனறிந்து அதிசயித்து அவளுடன் வேததர்க்கம் செய்யும்படி சாஸ்திரிகளான 50 பேரை கத்தரீனம்மாளுக்கு முன் நிறுத்தினான்.  அர்ச்சியசிஷ்டவள் கூறிய வேத நியாயங்களை அந்த சாஸ்திரிகள் கேட்டு அதிசயித்து கிறீஸ்துவ வேதமே சத்திய வேதமென்று நன்றாயறிந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.  அப்போது இராயன் அந்த 50 சாஸ்திரிகளையும் கொலை செய்து விட்டு, கத்தரீனம்மாளுக்கு அதிக பட்சத்தைக் காட்டி, அவளைத் தனக்கு வாழ்க்கைப்படும்படி கேட்டான்.  சேசுநாதரான தன் ஞானப் பத்தாவுக்குத் தன் கன்னிமையை ஒப்புக்கொடுத்ததாக அறிவித்து, கலியாணத்திற்கு சம்மதிக்கவில்லை.  இதைக் கேட்ட இராயன் அவளைச் சிறையிலடைக்கக் கட்டளையிட்டான்.  இரவு வேளையில் இராயனுடைய மனைவியும் தளபதியும் சிறைச்சாலைக்குச் சென்று வேதசாட்சியுடன் பேசியபோது, அவள் கூறிய புத்திமதியால் இருவரும் கிறீஸ்துவர்களானார்கள்.  அவ்விருவரையும் வேதத்திற்காக இராயன் கொல்லக் கட்டளையிட்டு கத்தரீனாளை சக்கர இயந்திரத்தில் கட்டி உபாதிக்கும்படிக் கட்டளையிட்டான்.  அவள் அந்த இயந்திரத்தின் அருகில் போய்  ஜெபித்த மாத்திரத்தில் அது துண்டு துண்டாய் உடைந்து போயிற்று.  இராயன் சினங்கொண்டு அவள் தலையை வெட்டும்படி கட்டளையிட்டான்.



யோசனை

                நாம் இதர மதத்தாருடன் வேததர்க்கம் செய்யாத போதிலும் அவர்கள் மனந்திரும்பும்படிக்காவது வேண்டிக்கொள்வோமாக.