Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 25 மார்ச், 2015

மங்கள வார்த்தை திருநாள் (மார்ச் 25)

"இதோ ஆண்டவருடைய அடிமையானவள், உம்முடைய வார்த்தையின் படியே ஆகக்கடவது "


அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்திலே கபிரியேல் தூதர் மாமரிக்கு மங்கள வார்த்தை சொன்னதை விரிவாக நமக்கு சொல்லுகிறார். அர்ச். லூக்காஸ் அதிகாரம் 1 வசனம் 26 – 38.  கபிரியேல் என்னும் தேவதூதன் கலிலேயா நாட்டிலுள்ள நசரேத்தூருக்கு சர்வேசுரனால் அனுப்பப்பட்டு தாவீதின் கோத்திரத்தாராகிய சூசையப்பர்; எனப்பட்ட ஓர் மனிதனுக்க விவாகப் பந்தனமான ஓர் கன்னிகையிடத்தில் வந்தார்.  அந்த கன்னிகையின் பெயர் மரியம்மாள்.  தேவதூதன் அவள் இருந்த இடத்தில் பிரவேசித்து பிரியதத்தத்தினாலே பூரணமானவளே வாழ்க! கர்த்தர் உம்முடனே. ஸ்திரீகளுக்குள்ளே ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே என்றார்.  இதை அவள் கேட்ட மாத்திரத்தில் இந்த வார்த்தையினால் கலங்கி இந்த மங்களம் எத்தன்மையானதோ என்று யோசனையாயிருக்கையில், தேவதூதன் அவளை நோக்கி: மரியே! நீர் அஞ்ச வேண்டாம், எனெனில் சர்வேசுரனுடைய கிருயை பெற்றிருக்கிறீர்.  இதோ, உமது உதரத்தில் கெற்பந் தரித்து, ஓர் குமாரனைப் பெறுவீர்.  அவருக்கு யேசு என்னும் நாமம் சூட்டுவீர்.  அவர் பெரியவராயிருப்பார்.  உன்னதமானவருடைய சுதன் எனப்படுவார்.  ஆண்டவராகிய சர்வேசுரன் அவர் தந்தையாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்கு கொடுப்பார்.  அதலால் அவர் யாக்கோபின் கோத்திரத்தில் என்றென்றைக்கும் அரசாளுவார்.  அவருடைய அரசாட்சிக்கு முடிவு இராது.  என்றார்.
அப்போது மரியம்மாள் தேவதூதனை நோக்கி “இது எப்படியாகும்?  நான் புருஷனை அறியனே” என்று சொல்ல, தேவதூதன் அவளுக்கு மாறுத்தாரமாக: இஸ்பிரித்து சாந்து உமது மேல் எழுந்தருளுவார்.  உன்னதருடைய வல்லபமானது உமக்கு நிழலிடும்: ஆகையால் உம்மிடத்தில் பிறக்கும் பரிசுத்தர் தேவசுதன் எனப்படுவார்.  இதோ உமது பந்துவாகிய எலிசெபத்தும் தம் முதிர் வயதிலே ஓர் புத்திரனைக் கெர்ப்பந்தரிக்கிறாள்.  மலடி எனப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.  ஏனெனில் சர்வேசுரனால் கூடாத வாக்கு ஒன்றுமில்லை என்றார். அதற்கு மரியம்மாள் “இதோ ஆண்டவருடைய அடிமையாளவள், உம்முடைய வார்த்தையின் படியே ஆகக்கடவது”..

வியாழன், 5 மார்ச், 2015

Download Lives of Saints in Tamil

You can download life history of Daily saints in Tamil. Its in a very simple text.  These books are not a full life history of Saints in Tamil.  Its a brief History of Saints in Tamil.

There are Twelve books are here.  Twelve month Twelve books.

You can download and please share with others.

Thank You..



January  -  Click Here


February  -  Click Here


March  -  Click Here

April  -  Click Here

May -  Click Here

June  -  Click Here

July  -  Click Here

August -  Click Here

September -  Click Here

October  -  Click Here

November  -  Click Here

December -  Click Here


To Download more Catholic Tamil Books Pls Click Here

+
AVE MARIA

சனி, 21 பிப்ரவரி, 2015

மோக பாவம்

மோக பாவம்



அவரவர் சிறு வயது முதல் இதுவரை செய்த பாவ்களை எல்லாம் கண்முன் வைத்துப் பார்த்த போது, அத்தனை பாவ்களுக்குள்ளே ஒரு வகைப்பாவம் மகா விஷமுள்ள நாகப் பாம்பைப்போல் தன் பொடிய நஞ்சை எங்கும் கக்கி, உடலையும் உயிரையும் கெடுத்து, மனதில் கலக்கமும், சலிப்பும் உண்டாகி ஓயாத கவலையும் மனக்குத்தும் கொடுத்துவருகிறதாக அநேகம் பேர்கள் துக்கத்தோடு அறிந்திருப்பார்கள்.  அந்த விஷமுள்ள பாவம் இன்னதென்றறிந்து அதைத் தன் மனதிலிருந்து நீக்கும்படி  துவக்கத்திலே முயற்சி செய்வது வெகு பிரயோசனமாயிருக்கும்.
மகா ஞானியான சாலமோன் என்றவரைப் போல புத்தியிலும் விவேகத்திலும், அறிவின் விசாலத்திலும் கீர்த்திப் பிரபலம் பெற்றவர் மனிதருக்குள் இருந்ததில்லை.  சர்வேசுரனே இவருக்குத் தரிசனமாகி தந்தை தன் மகனோடு பேசுவது போல் இவருடன் முகங்கொடுத்துப் பேசினார். ஆகிலும் இவர் தன் வயோதிப காலத்திலன் தன் சர்வேசுரனை மறந்து தன்னையும் மறந்து, பசாசின் சிலைக்கு தூபங்காட்டி அதை ஆராதித்துப் பாவம் செய்து வந்ததாக வேத புத்தகம் சொல்லுகிறது. (1 அரசர். 11: 1-10)
வான மண்டலத்தின் உச்சியில் பிரகாசம் நிறைந்த நட்சத்திரம் போல் மின்னித் துலங்கினவன்.  கடைசியில் ஒளி மங்கி நிலைபெயர்ந்து, கீழே விழுந்து விழுந்தவன் தப்பிவர வகையின்றி மாட்டிக் கொண்டான்.  கடும் விஷம் அவனைத் தீண்டினது.  அவன் புத்தியும் அறிவும் மங்கிப் போனது.  hனி சாலமோன் அஞ்ஞானியானான்.   சர்வேசுரன் மனிதனை மகமையிலுயர்த்தி வைத்திருக்கையில் அவன் அதை மறந்து போனதால் புத்தியற்ற மிருக்களுக்குச் சமமானான் என்ற வேதவாக்கியத்துக்குச் சாலமோன் உதாரணமானான்.  முன் ஞான அறிவபால் எவ்வளவு உயர்ந்திருந்தானோ அவ்வளவு பின் மோக பாவத்தால் தாழ்ந்து போனான்.
சர்வேசுரன் பாவத்தை எவ்வளவு பகைக்கிறாரென்றும், பாவத்தோடு சாகிறவர்களை எவ்வளவு கொடுமையாய் நரகத்தில் தண்டிக்கிறாரென்றும் யோசி. யாரிடத்தில் இந்த பாவம் குடிபுகுந்ததோ அவன் ஆத்துமத்தில் நரகத்தின் சாயலும் முத்திரையும் இருக்கிறதென்று சொல்லலாம்.  அவனுடைய அறிவும் புத்தியும், மங்கிப் போகும்.  நரகத்தின் இருள் அவன் மனதில் மூடத் துவக்கும்.
இந்தப் பாவத்ததால் மனிதர்கள் திரளாய் நரகத்தில் வழுகிறார்கள்.  கிறீஸ்துவர்களுக்குள் பாவத்தால் கெட்டுப் போகிறவர்கள் அநேகமாய் இந்தப் பாவத்தால் தான் கெட்டவர்கள்.  ஆனதால் இந்த பாவத்தை, மற்ற எந்தப் பாவத்தைப் பார்க்கிலும் பகைத்து வெறுக்கும்படி, இதற்குள்ள விஷமும் பொல்லாப்பும் இவ்வளவென்று சொல்லுவது அவசியம்.
வேத அறிஞர்கள் சொல்வதுபோல் மனிதன் பாவங்களைச் செய்யும் போது. அந்தந்தப் பாவத்தின் தோஷத்தை காட்ட அதற்குரிய ஓர் முத்திரை அவன் ஆத்துமத்தில் பதிகின்றது.  அசுத்தப் பாவமாகிற மோக பாவத்தைச் செய்கிறவன் இருதயத்தில் பதியும் முத்திரை விசேஷமாய் நரகத்தின் முத்திரை.  ஆனதால் நரகத்தைக் காட்டும் சாயல் உலகத்தில் எங்கே உண்டு என்று அறிய வேண்டுமானால், மோக பாவியின் இருதயத்தில் பார்க்கலாம்.  நரகத்தின் முக்கிய அறிகுறி என்ன?  வேதவாக்கியமே இன்னதென்று குறித்துக் காட்டுகிறது.  நரகம் இருள் அடர்ந்து நிறைந்த இடம்.  ஆத்துமத்திலும் சரீரத்திலும் மனிதன் நினைவுக்கு மேற்பட்ட துன்ப வேதனைகளால் நரகத்திலுள்ள நிர்ப்பாக்கியர் வருத்தப்படுகிறார்கள்.
மோக பாவியின் மனதில் நரக இருள் அடர்ந்தது போல் அவன் புத்தி மங்கிப் போகின்றது.  அறிவாகிற கண் பெட்டுப் போகின்றது.

அறிவில்லாததால் மிருகத்தைப்போல் தன் சரீர சுக இன்பத்தை மாத்திரம் தேடுகிறான்.  இந்த பாவியை குறித்து தேவ வாக்கியம்:
மிருகமாகிய மனிதன் சர்வேசுரனை சார்ந்த விஷயங்களை அறியான் என்று சொல்லுகிறது.  மற்;ற பாவங்களை செய்யும் போது புத்தியுள்ள மனிதனைப் போல செய்கிறவன், அசுத்தப் பாவத்தைச் செய்கையில், மனிதனைப் போல் அல்ல ஒரு மிருகத்தைப் போல செய்கிறான். புத்தியில்லாத மிருகம் எப்படி தன்னிடம் எழும் கெட்ட ஆசையைத் தேடி நிறைவேற்ற திரிகின்றதோ, அப்படியே மோக பாவியும் சுய அறிவை இழந்து தன் ஆசையைத் தேடி அலைகிறான்.
அறிவு மங்குவதால் அவன் தன்னை மறந்துபோகிறான்.  தான் செய்யும் பாவத்தின் கனத்தையும் அறிகிறதில்லை.  தன்னைச் சிருஷ்டித்த சர்வேரனையும் மறந்து போகிறான்.  தான் இருக்கும் நிலைமையும் தன்னைச் சுற்றி இருக்கும் உறவினர்கள் சுற்றம் சிநேகிதர் எவரையும் எண்ண மாட்டான்.  தனக்கிருக்கும் கொளரவம், புகழ், பெயர், ஒன்றும் மதியான்.  தன் தேக சௌக்கியத்தை முதலாய் மதியான்.  இழிவான நடைத்தையால், தனக்கும் தன்னால் மற்றவர்களுக்கும் வரும் பழிச்சொல், நிந்தை, வெட்கம், அவமானம் யாதொன்றும் கவனியான்.  தான் பார்த்துவரும் வேலைக்கு தன் வாழ்வுக்கும் உண்டாகும் கஷ்ட நஷ்டங்களை யோசியான்.
இப்படி மதிக்கெட்டுப் பேரிழந்து நாலு தெருவும் திரிபவர்கள் எல்லாரும் தாங்கள் செய்வது இன்னதென்று சற்றாவது கவனித்து யோசித்தால்? இவ்வித நடத்தையிலுள்ள அயோக்கியமும் அவலட்சணமும் அறிவார்கள்.  ஆனால் இவர்கள் அப்படி யோசியாதபடி அவர்கள் புத்தியாகிற கண் பாவத்தின் நஞ்சால் மறைப்பட்டு ஒளி மங்கிப்போய் விட்டது.  அதுவே நரக இருளின் சாயல்.

கிறிஸ்தவர்களுக்குள்ளே எந்த ஊரிலும் தெய்வமேது, குருவேது, நரகமேது, மோடசமேது, யார் கண்டது, யார் பார்த்தது என்று இவ்விதமாய் பிதற்றி பாவசங்கீர்த்தனமின்றி திரிபவர்கள் உண்டல்லவா?  இவர்கள் சாதாரணமாய் எவ்வழி நடப்பவர்களென்று தெரியுமா?  இவர்கள் மோக பாவத்தின் கஷ்டத்தில் விழுந்தவர்கள்.  புத்தியாகிய கண்ணை இழந்து விசுவாசத்தின் தேவப் பிரகாசமின்றிப் போனதால் இப்படி அபத்தத்தைப் பிதற்றுகிறார்கள்.
 

Open Letter to Confused Catholics






வியாழன், 19 பிப்ரவரி, 2015

நரகம் (Hell)

நரகம் (Hell)

சர்வ வல்லப சர்வேசுரன் தமது கட்டளைகளை மீறி பாவம் செய்த துரோகிகளை தண்டிக்கும் படியாக ஏற்படுத்திய தண்டனை இடம் தான் நரகம்.  அக்கினி கடல்.  பேய்கள் வாழும் சுடுகாடு.

நரகத்தில் தண்டனைகளிளெல்லாம் மகா பயங்கர தண்டனையான நித்திய சாபமும், பாவத்தின் தன்மைக்கும் அனைத்துக்கும் தக்க ஐம்புலன்களுக்குரிய தண்டனைகளும் உண்டென்பது விசுவாச சத்தியம். நரகத்தில் பாவிகள் படும் ஐம்புலன்களின் தண்டனைகள் இவ்வுலகில் நாம் நினைக்கவும் கருதவும் கூடிய வகை வேதனைகளிளெல்லாம் அதி உக்கிர அதி பயங்கரம் என்பது நிச்சயம்.
மனிதனுக்கு இயல்பாயுள்ள சுய அறிவே நரகம் உண்டென்று சொல்லுகிறது.  சர்வேசுரன் தாம் படிபித்த வேதத்தில் தெளிவாய் பல இடங்களில் சொல்லி இருக்கிறார்.  சத்திய திருச்சபையும் தன் தவறா வாக்கோடு நரகம் உண்டென்று படிப்பிக்கின்றது. நமது மனமே நமக்கு சாட்சியாயிருந்து பாவம் செய்தால் சர்வேசுரன் நரகத்தில் நம்மைத் தண்டிப்பாரென்று சொல்லுகின்றது.  ஆகையால் நரகம் உண்டென்பது சத்தியம்.

பாவி நரகத்தில் விழுந்தால் அவனுக்கு துணையாய் இருப்பவர் யார்?  பசாசுகள் முதல் துணை.  சர்வேசுரனை பகைக்கும் இந்த நீச அரூபிகள் சர்வேசுரன் பேரில் தங்களுடைய கோபமும் பகையும் செல்லாதென்று கண்டு, சர்வேசுரன் சாயலாயிருக்கும் மனிதன் பேரில் தங்கள் பகையை காட்டும்.  அவலட்சண கோலத்தோடு தோன்றி மனிதரை உபாதிக்கும். உலகம் உண்டான நாள் முதல் உலகத்தின் கடைசி நாள் மட்டும் இருக்கும் சகல வகை பாவிகளும்? துன்மார்க்கரும், அநீதரும், அக்கிரமிகளும், கொலைபாதகரும், திருடரும், குடியரும், காமவெரியரும் ஆகிய இவர்கள் எல்லோரும் அங்கே கூடியிருப்பார்கள். இப்படிப்பட்ட தீயோர் மத்தியில் பாவியும் ஒருவனாயிருப்பான்.


இவர்கள் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் சண்டை செய்து கொடிய மிருகங்களைப் போல் ஒருவரொருவரை கடித்து, உதைத்து, கர்சித்து கதறி அலறிப் புலம்புவார்கள்.  நரக தண்டனை இவ்வளவோடு முடிந்ததென்று நிணைக்க வேண்டாம்.  நீங்கள் பாவம் செய்யும் போது ஆத்துமம் சரிரமும் கூடிப் பாவம் செய்வதால், இவ்விரண்டும் நரகத்தில் உபாதிக்கப்படும்.  ஆனதால் சரீரத்தின் ஒவ்வொரு புலனும் தனக்கு உரிய வகையில் தான் பாவத்தை கட்டிக்கொண்ட சந்தோஷத்தின் அளவுக்கு தக்கதாய் துன்பப்படும்.  ஆத்துமத்தில் ஒவ்வொரு தத்துவமும், புத்தி, மனம், ஞபாகம், இவைகள் தங்கள் தொழிலுக்கு இசைந்த வண்ணம் வேதனைப்படும்.
உலகத்தில் இருக்கும் காலத்தில் செல்வனாயிருந்து, நன்றாக உண்டு வளர்ந்து பாவத்தில் தன் காலத்தைப் போக்கினவன், நரகத்திலே பசியாலும் தாகத்தாலும் வருந்துவான்.  இப்போது மகிமையைத் தேடி அகங்காரம் பொங்கி, தான்தான் பெரியவன் என்று பெருமை பேசி, பிறரை இகழ்ந்து பேசி, நிந்தித்து நடப்பவன் நரகத்தில் தாழ்த்தப்பட்டு பசாசின் காலில் மிதியுண்டு, அவமானம் அடைவான்.  இங்கே தன் சர்pரத்தை பேணி, மினுக்கி, வளர்த்து வருகிறவர்கள், நரகத்தில் வாயால் சொல்ல முடியாத அவஸ்தைப் பட்டு பன்றிகளைப் போல் துர்நாற்ற அசுத்தத்தில் உருண்டு புரண்டு அகோர வேதனை அனுபவிப்பார்கள்.

பாவிகள், பொதுத்தீர்வை நாளுக்குப்பின் ஆத்தும சரீரத்தோடு நரக அக்கினியின் சமுத்திரத்தில் வெந்து எரிவார்கள்.  அந்த அக்கினியோ, சர்வேசுரனுடைய சத்ருக்களை மாத்திரம் தண்டிக்கும்படி உருவாக்கப் பட்டதால், அதற்கும் இந்த பூமியில் இருக்கும் நெருப்பிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.  தேவ கோபத்தினால் மூட்டப்பட்ட அந்த அக்கினி நரக பாதாளத்தின் அடிமுதல் உச்சிவரை தணலாய் எழும்பி சரீரத்தை எப்பக்கத்திலும் துன்பப்படுத்தும்.  நெருப்பில் போடப்பட்ட இரும்பு ஏகமும் நெருப்பாய் மாறுவது போல பாவியும் நரக நெருப்பிலே சர்வாங்கமும், உள்ளும் வெளியும் அக்கினி மயமாய் மாறி,  வேதனை அனுபவித்து உணர்ச்சி மாறாமல் வெந்து துடிப்பான்.
பாவியும் நரகத்தில் எந்தப் பக்கம் போனாலும், என்ன செய்தாலும் அக்கினி மத்தியில் தான் அமிழ்ந்திருப்பான்.
நரக தீயின் உக்கிரம் இவ்வளவு கொடிதானாலும், இதிலும் கொடிதான தண்டனை நரகத்தில் ஒன்று உண்டு.  அது ஏதென்றால் சர்வேசுரனை இழந்துபோய் அவரை விட்டு பிரிந்திருப்பது.  இது தான் துன்பங்களில் பெரிய துன்பம்.  சர்வ நன்மை நிறைந்த சமபூரண பாக்கியமாகிய சர்வேசுரனை இழந்த ஆத்துமம் அக்கினிக்குள் எத்தனை நாள் தான் இருக்கும்? அந்த பாதாள லோகத்தில் நாள் கணக்கு இல்லை.  நித்திய காலம் என்றென்றும் ஊழியுள்ள காலமும், சதாகாலமும் சர்வேசுரனை காணாமல் நரக நெருப்பில் வேக வேண்டும்.
பூமியில் இருக்கும் போது நீ உன் மனப்பூர்வமாய் சர்வேசுரனாகிர உன் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய உனக்கு பிரியமில்லையோ,  மறு உலகில் உனக்கு மனமிருந்தாலும் இல்லாவிட்டாலும், சர்வேசுரனுடைய கோணாத நீதிக்கு தொண்டு செய்வாய்.  சேசுநாதருடைய பரிசுத்த நாமத்தை கேட்கும் போது பரலோக பூலோக பாதாள உலகத்தில் உள்ள சகலரும் முழங்கால் ஊன்றி நமஸ்காரம் செய்வார்களாக (பிலி. 2 :10) என்பது தேவ வாக்கியம்.


Download Catholic Tamil Books for Free------------------> Click Here...
Download Catholic Tamil Songs for Free------------------> Click Here....
Download Life History of St. Antony of Padua-----------> Click Here.... Part 1

புதன், 18 பிப்ரவரி, 2015

திருச்சபையின் ஆறாம் கட்டளை (Sixth Commandment of Church)


நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்கிறது


Priest giving Communion to faithfuls
பழைய ஏற்பாட்டில் தேவாலய குருக்களின் ஆதரவுக்காகவும், வேதத்தை பேணுவதற்காகவும், கடவுள் ஏற்படுத்திய ஒரு விசேஷ சட்டம் இருந்தது.  புதிய ஏற்பாட்டில் நம் ஆண்டவர் தம் ஊழியர்கள் யாருக்காக உழைக்கிறார்களோ அவர்களால் ஆதரிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார்.  கோவில் பணிவிடைக்காரர் கோவிலுக்குரியவைகளில் பங்கடைகிறார்கள்.  பீடத்தின் பரிசாரகர்கள் பீடத்துக்கு உரியவைகளில் பங்கடைகிறார்கள் என்றும் அறியீர்களோ?  அவ்வாறே சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறவர்களும் சுவிசேஷத்தினாலே பிழைக்கும்படி ஆண்டவர் ஏற்பாடு செய்திருக்கிறார். என்று சின்னப்பர் கூறுகிறார்.  எனவே தேவ கட்டளைப்படி தங்களால் இயன்ற அளவில் விசுவாசிகள் தங்கள் மேய்ப்பர்களுக்குத் தேவையானவைகளைத் தர கடமைப்பட்டிருக்கிறோம்.
Fr. Giving Baptism to a Old Lady

இக்கடமையை நிறைவேற்றுவதற்கான முறை அந்தந்த காலத்திற்கேற்ப மாறி வந்திருக்கிறது.  ஆதி திருச்சபையில் இருந்தது போலவே இன்றைய நாட்களிலும் மக்களின் காணிக்ககை தான் ஏறத்தாழ திருச்சபையின் ஒரே நிதி ஆதாரமாக இருக்கின்றது.  மேலும் குருக்கள் கடவுளுக்கு உரியவையும், ஆத்துமாக்களின் பராமரிப்புக்கு உரியவையான காரியங்களுக்காக அபிஷேகம் செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் தங்கள் பிழைப்புக்காக உலகத் தன்மையான வேலைகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது.
Fr. blessing a House
 எனவே, திருச்சபை தனது ஆறாம் கட்டளையில், தனது தெய்வீக ஸ்தாபகரால் விசுவாசிகள் மேல் சுமத்தப்பட்ட கடமையை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறது.

நீதியின்படி குருநிலையினர் தங்கள் மக்களால் ஆதரிக்கப்பட உரிமையுள்ளவர்களாக இருக்கிறார்கள்.  ஏனென்றால் சட்டபூர்வமான அதிகாரத்தால் ஒரு பங்கின் ஆன்ம நலன்களுக்குப் பொறுப்பாளராகளாக பங்கின் ஆன்ம நலன்களுக்குப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிற குருக்கள் விசுவாசிகளின் எல்லாத் தேவைகளிலும் அவர்களுக்கு உதவுகிறார்கள்.

Fr. preparing young boys and girls for confession
திருச்சபையின் இக்கட்டளை மிகக் கண்டிப்பான ஒன்று.  ஆனாலும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இந்த கட்டளை அனுசரிக்கத் தவறுவதால் சாவான பாவம் கட்டிக்கொள்ளப்படுகிறதா என்பது கடினம்.  அத்தகைய சூழலில் ஒரு பங்கு குருவானவர் எந்த அளவு தேவையில் இருக்கிறார், அவருக்கு உதவி செய்ய தவறுகிற விசுவாசியின் நிதி நிலைமையை என்ன, ஆகியவற்றை பொறுத்து பெருமளவு சார்ந்திருக்கிறது.  ஆயினும் பல வருடங்களாக தங்கள் வேதக் கடமைகளை அசட்டை செய்து வரும் அக்கறையற்ற கத்தோலிக்கர்கள் தங்கள் அயலாருக்கு துர்மாதிரிகையாக இருப்பதுமின்றி, அவர்கள் திருச்சபையின் ஆறாம் கட்டளைக்கு எதிராக, கடமையில் தவறுவதாகிய ஒரு சாவான பாவத்தையும் கட்டிக் கொள்கிறார்கள்.

திருச்சபையின் மேய்ப்பர்கள் நன்கு பராமரிக்கப்பட வேண்டும்.  தேவாலயங்களும் பள்ளிகளும் கட்டப்பட வேண்டும்.  தேவ வழிபாட்டோ
giving blessing to the Sick people
டு தொடர்புடைய அனைத்தும் தகுதியுள்ள முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது மட்டும் இந்த திருச்சபையின் கட்டளையின் நோக்கமல்ல.  மாறாக இந்தப் பூலோகத்தில் கிறிஸ்து அரசரின் இராச்சியம் ஆத்துமங்களின் இரட்சிப்புக்காக எங்கும் பரவவேண்டும் என்பதும் அதன் முக்கிய நோக்கமாக இருக்கிறது.  குரு நிலையினரையும், விசுவாசிகளையும் 
பிறர் சிநேகத்தின் கட்டுகளாக ஒன்றிப்பது இந்த கட்டளையின் நோக்கமாக இருக்கிறது.  ஏனென்றால் இந்த பரஸ்பர நேசம் பலமுள்ளதாக இருக்கும் இடங்களில் எல்லாம் கத்தோலிக்க திருச்சபை விசுவாசம் செழித்து வளர்ந்து வருகிறது.
Bishop Visiting people



குருக்கள் தங்கள் பங்கு மக்களின் ஆதரவுகளுக்கு பிரதிபலனாக அவர்களுக்கு போதுமானதை திருப்பி செலுத்தவில்லையா?  ஏனெனில் அவர்கள் தங்கள் பங்கு மக்களின் ஆன்ம
 தேவைகள் அனைத்திலும் உதவும்படி தங்கள் வாழ்வையே அர்ப்பணித்திருக்கிறார்கள் அல்லவா?  விசுவாசிகள் திருச்சபைக்கு செய்யும் சகல உலக ரீதியான உபகாரங்களும், அவற்றைப் பெற்றுக் கொள்வோராகிய ஞான மேய்ப்பர்களுக்கு மட்டுமல்லாமல், அவற்றை தருபவர்களாகிய விசுவாசிகளுக்கும் நன்மை பயப்பவையாக இருக்கின்றன.  ஏனென்றால் திருச்சபையும், அது கொண்டுள்ள சகலமும், மக்களின் நன்மைக்காகவே உலகில் நிலைத்திருக்கின்றன.





திருச்சபையின் ஐந்தாம் கட்டளை (Fifth commandment of Church)

விலக்கப்பட்ட காலத்திலும் குறைந்த வயதிலும் விக்கினமுள்ள உறவுமுறையாரோடு  கலியாணம் செய்யாதிருப்பது 


திருமணம் என்பது ஓர் ஆணும், பெண்ணும் கணவன் மனைவியாக வாழ்வதாக தங்களுக்குள்ளே செய்து கொள்ளும் ஒப்பந்தம்.  மரணம் மட்டும் ஒன்று சேர்ந்து வாழும் கடமையை இந்த ஒப்பந்தம் அவர்கள் மீது சுமத்துகிறது. சர்வேசுரன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்ற வார்த்தையை கொண்டு சேசுநாதர் இதை தெளிவு படுத்தினார்.

சேசுநாதர் திருமணத்தை ஒரு தேவதிரவிய அனுமானமாக உயர்த்தினார். அர்ச். சின்னப்பர் இந்த மெய்விவாகத்தை ஒரு மாபெரும்  தேவதிரவிய அனுமானம் என்கிறார்.  மெய்விவாகம் வாழ்வோரின் தேவதிரவிய அனுமானமாக இருப்பதால், அது தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் பெறப்பட வேண்டும்.  அதாவது திருமணம் செய்யும் ஆணும் பெண்ணும் சாவான பாவமின்றி இருக்க வேண்டும்.  மெய்விவாகம் என்னும் தேவதிரவிய அனுமானம் கணவனுக்கும் மனைவிக்கும் தங்கள் கடமைகளை நிறைவேற்ற தேவையான வரப்பிரசாதத்தை தருகிறது; தங்கள் பிள்ளைகளை தேவசிநேகத்திலும் தேவ பயத்திலும் வளர்க்க அவர்களுக்கு உதவுகிறது.

சட்டபூர்வமான வழிமுறைகள் பின்பற்றப்படாமல் செய்யப்பட்ட ஓர் ஒப்பந்ததை ரத்து செய்ய ஓர் அரசாங்கத்திற்கு அதிகாரம் இருப்பது போலவே மெய் விவாகம் என்னும் தேவதிரவிய அனுமானத்தை பெறுவதற்கான நிபந்தனைகளுக்குச் கட்டுப்படாமல் ஒரு கத்தோலிக்க ஆணும், பெண்ணும் செய்து கொண்ட திருமணம் செல்லாது என அறிவிக்கிற அதிகாரம் திருச்சபைக்கு இருக்கிறது.

ஒரு திருமணம் செல்லத்தக்க கத்தோலிக்க திருமணமாக இருப்பதற்கு இரு சாட்சிகள் முன்னிலையில் பங்கு குருவுக்கு முன்பாக அல்லது  அவரால் ,முறைப்படி அனுமதிக்கப்படுகிற ஒரு குருவுக்கு முன்பாக தங்கள் சம்மதத்தை தெரிவிப்பது அவசியம்.ஆனால் ஓர் அரசு அதிகாரி முன்போ அல்லது கத்தோலிக்கரல்லாத ஓர் ஊழியர் முன்போ நிகழ்கிற ஒரு கதோலிக்கனின்  திருமணம் சர்வேசுரனுடைய பார்வையில் திருமணமே அல்ல. ஏனெனில் மெய்விவாக அனுமானத்திற்கென ஏற்படுத்திஇருக்கிற நிபந்தனைகளுக்கு அவர்கள் கட்டுப் படுவதில்லை.  

அடுத்ததாக ஒரு திருமணம் செல்லுபடியாக ஆணும் பெண்ணும் சுதந்திரம் உள்ளவர்களாகவும் சுதந்திரமான விதத்தில் தங்கள் சம்மதத்தை தெரிவிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.  விவாகரத்து செய்து கொண்ட அல்லது திருமண பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஓர் ஆளுக்கு மீண்டும் திருமணம் செய்யும் உரிமை இல்லை.   

ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயது முடியுமுன் செய்து கொள்வதை கத்தோலிக்க திருச்சபை விலக்குகிறது. 

இறுதியாக திருமணத்தை செல்லாததாக ஆக்கக்கூடிய விக்கினங்கள் எதுவும் இருக்க கூடாது.  இரண்டு விதமான விக்கினங்கள் இருக்கினறன.  அவை தடை செய்கிற விக்கனம், மற்றும் செல்லாததாக்குகிற விக்கினம் ஆகும்.

தடை செய்யும் விக்கினம் என்பது விசேஸ சலுகைபெறப்படாத நிலையில் திருமண ஒப்பந்தத்தை சட்டத்திற்கு எதிரானதாக ஆக்குகிறது.  திருமணம் செய்த இருவரில் ஒருவர் கன்னிமை வார்த்தைப்பாடு அல்லது உபதியோக்கன், தியோக்கன் மற்றும் குருத்துவம் பட்டம் பெற்றிருத்தல், அல்லது துறவற அந்தஸ்தில் சேரும் வார்த்தைப்பாடு கொடுத்தவராக இருந்தால் அவர் திருமணம் செய்து கொள்வது சட்டத்திற்கு விரோதமானது.

கலப்புத் திருமணம் மற்றொரு தடை செய்கிற விக்கினம் ஆகும்.  கத்தோலிக்ககர் ஒருவரும், எதாவது ஒரு பதித பிரிவினை சபையில் ஞானஸ்தானம் பெற்ற உறுப்பினராக இருக்கும் மற்றொருவரும் திருமணம் செய்து கொள்வதை திருச்சபை மிகக் கடுமையான முறையில் தடை செய்கிறது.  இத்தகைய திருமணங்கள் வேத அலட்சிய போக்கிற்கும் விசுவாச இழப்பிற்கும், குழந்தைகளின் ஞான உபதேசத்தில் அசட்டைத்தனத்திற்கும் வழிவகுத்து விடும் என்பதால் திருச்சபை கலப்பு திருமணத்தை தடை செய்கிறது.  சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் பேரில் மட்டும் இந்த விக்கினத்திற்கு திருச்சபை விலக்கு அளிக்கிறது.  கலப்பு திருமணம் செய்வதற்கு ஒரு நியாமானதும், தீவிரமுள்ளதுமான காரணம் இருக்க வேண்டும்.  திருமணம் செய்து கொள்ள போகும் இருவரில் கத்தோலிக்கராக இருக்கும் மற்றவருக்கு கத்தோலிக்க விசுவாசத்தை அனுசரிப்பதில் எந்த தடையும் விதிப்பதில்லை என்ற உத்திரவாதம் தர வேண்டும்.  மேலும் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் கத்தோலிக்க ஞானஸ்தானமும், கத்தோலிக்க கல்வியும் மட்டுமே பெறுவார்கள் என்று திருமணம் செய்து கொள்ள போகும் இருவரும் வார்த்தைப்பாடு தர வேண்டும்.

செல்லாதாக்குகிற விக்கினம் ஒரு திருமண ஒப்பந்தத்தை ரத்துச் செய்கிறது.  திருமணத்தை செல்லாதக்குகிற விக்கினங்கள் குறைந்த வயது, ஏற்கனவே உள்ள திருமண உறவு. இதர மதத்தினரோடு திருமணம், ஆள் கடத்தி திருமணம். உபதியோக்கன், தியோக்கன் மற்றும் குருத்துவம் பட்டம் பெற்றிருத்தல் ஞானத்தாய் அல்லது ஞானத்தகப்பன் அல்லது ஞானப்பிள்ளை உறவு, இரத்த உறவு நெருங்கின உறவு என்னும் உறவுகள் திருமணத்தை செல்லாததாக்குகிற விக்கினங்கள் ஆகும்.  திருமணத்திற்கு முந்தைய மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் பங்கு குருவானவர் திருமண அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதால் தங்கள் திருமணத்திற்கு சர்வேசுரனுடைய ஆசிர்வாதம் வேண்டும் என விரும்புவோர் தங்கள் திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பாக தங்கள் பங்கு குருவுக்கு அறிவிக்க வேண்டும்.  


கத்தோலிக்கர் ஆண்டின் எந்தக் காலத்திலும் திருமணம் செய்து கொள்ளலாம்.  ஆனாலும் ஆகமணக் காலம், தபசுகாலம் ஆகிய தவ, ஒறுத்தல் முயற்சிகளின் காலங்களிலும், அதாவது, ஆகமன காலத்தின் முதல் ஞாயிறு முதல் கிறிஸ்மஸ் திருநாள் முடியவும், சாம்பல் புதன் தொடங்கி உயிர்ப்பு ஞாயிறு முடியவும் திருமணங்கள் அர்ச்சிக்கப்படுவதைத் திருச்சபை தடை செய்கிறது. 


மரியாயே வாழ்க 
Ave Maria  

திங்கள், 16 பிப்ரவரி, 2015

Comedy of Protestants.... Don't believe them.....



கள்ள போதகர்கள்  குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.  அவர்கள் தங்களுடன் சேர்த்து பிறரையும் நரகத்துக்கு கூட்டி செல்கிறார்கள்.  ஆண்டவரே ஆண்டவரே என்று கூப்பிடுகிறவர்கள் எல்லாம் இரட்சிக்கப் படபோவதில்லை...
அவர்கள் பல விதங்களில் மக்களை ஏமாற்றுகிறார்கள்.  ஜெபக்கூட்டம் என்றும்,  ஊழியம் என்றும், நற்செய்தி பெருவிழா  என்றும்,  குணமளிக்கும் விழா என்று பல்வேறு விதங்களில் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
 அவர்கள் செய்யும் ஏமாற்று வேலைகளை டிவி போன்றவற்றில் பார்த்து தாங்கள் அங்கு சென்றால் இரட்சிக்க படுவோம்  என்று எண்ணி அங்கும் இங்கும் செல்கின்றனர்.
தங்கள் வீட்டின் அருகிலே ஆலயம் இருக்க அவர்கள்  அங்கு ஒருநாள் கூட செல்லாமல் எங்கோ நடக்கிற கூட்டங்களுக்கு செல்கின்றனர்.

ஆலயங்களில் நடக்கிற பணிகளுக்கு பொருள் உதவியோ அல்லது பண உதவியோ செய்ய முன் வராதவர்கள்,  ஊழியம் என்று  பணம் கேட்பவர்களுக்கு வாரி இறைக்கிறார்கள்.

20 வருடங்களுக்கு முன்பு இவர்கள் எல்லாம் எங்கு இருந்தார்கள்.  CSI Pentocost போன்ற சபைகள் எல்லாம் எங்கோ ஒரு சில ஊர்களில் மட்டுமே இருந்தன.  காரணம் அப்போது நம்மிடம் மரியாவின் மீது பக்தி இருந்தது.  ஜெபமாலை சொல்லும் பழக்கம் இருந்தது. நமக்கு ஒரு கஷ்டம் வரும் போது கோவில் சென்று நமது கஷ்டங்களை தாய் மரியிடம் சொல்லி அழுதோம்.
ஆனால் இன்று ஏன் மாதாவிடம் செல்ல வேண்டும்.  அவர்களை என் நாம் நினைக்க வேண்டும்.  அவள் ஒரு சாதாரண பெண் என்று ஏளனம் செய்கின்றனர்.
தேவ தாய் இந்த உலகில் செய்த புதுமைகள் எல்லாம் அறிவியல் ரீதியில் சோதனை செய்து அதன் பின் தான் அது புதுமைகள் எல்லாம் உண்மையிலே புதுமைகள் என்று திருச்சபையால் அறிவிக்கப்பட்டது.  உதரணமாக : தேவ தாய் லூர்து நகரிலே காட்சி அளித்தது...லூர்து நகர் அதிசய குளத்தில் குளித்து குனமானவர்களை பல்வேறு மருத்துவர்கள்(Christian, non- Christian, scientist) நன்கு சோதித்து பின் தான் அதை அவர்கள் புதுமை என்று அறிவித்தனர்.

அனால் இன்று டிவி யில் வரும் கள்ள போதகர்களால் செய்யப்படுகிற பித்தலாட்டங்களை நம்புகின்றனர்.




இந்த போக்கை நம் கத்தோலிக்க முறையிலும் கொண்டு வருகின்றனர்.  இது நாம் தேவ அன்னை மரியாவின் மீது பக்தி குறைவதினால் ஏற்படுகிறது....




வியாழன், 20 நவம்பர், 2014

லூர்துமாதா திருநாள் (பெப்ருவரி 11)(Our Lady of Lourdes History in Tamil)


லூர்துமாதா திருநாள் (பெப்ருவரி 11)


- சங். நிக்கோலாஸ் சுவாமி (தூத்துக்குடி மேற்றிராசனம்)

பெர்நதெத் சூபிரு என்பவள் ஏழை பெற்றோரிடம் பிறந்தவள். அவளுக்கு வயது பதினான்கு. நேர்மையானவள். கீழப்படிந்து நடப்பவள், தன் வாழ்நாளில் மனது பொருந்தி அற்பப் பாவமே செய்யாதவள். அவளுக்கு ஜெபம் என்றால் அதிக பிரியம். வயல் வெளிகளில் அடிக்கடி ஜெபமாலை ஜெபிப்பாள்.


1858-ம் ஆண்டு பெப்ருவரி 11-ம் நாளன்று பெர்நதெத், அவளுடைய சகோதரி அந்துவானெற், ஜோன் அபதி என்னும் சிநேகிதி, இம்மூவரும் ஒரு குறுகிய ஓடைப்பக்கம் நடந்து கொண்டிருந்தனர். ஓடையின் அகலம் முப்பது அல்லது நாற்பது அடி இருக்கும். அன்று வெகு குளிராயிருந்து. அவர்கள் மூவரும் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தனர். ஓடையின் இடதுபக்கமாக அவர்கள் நடந்து சென்று மஸபியேல் கெபிக்கு எதிராக வந்தார்கள். காலணிகளையும், கால் உறைகளையும் கழற்றிவிட்டு தண்ணீரில் நடந்து ஓடையின் மறுபக்கத்தை அடைந்து விறகு பொறுக்குவோம் என பெண்களில் ஒருத்தி கூறினாள். குளிந்த நீரில் நடந்தால் தனக்கு இளைப்பு வியாதி வரும் என பெர்நதெத் அஞ்சி, ஜோனை நோக்கி, ‘என்னை உன் தோளில் வைத்து தூக்கிச் கொண்டு போ” என்றாள். ‘உனக்கு வரப்பிரியமில்லையானால் இங்கேயே இருந்துகொள்” என அவள் சொல்லி விட்டாள். பெர்நதெத்தைத் தனியே விட்டுவிட்டு இருவரும் மறுப்பக்கம் சென்றனர்

பெர்நதெத் தன் காலுறையைக் கழற்ற ஆரம்பிக்கையில், புயல் வீசுவதுபோல் பெரும் சத்தம் கேட்டது. பெர்நதெத் அங்குமிங்கும் பார்த்தாள். ஒன்றையும் காணோம். சிறிது நேரம் கழித்து முன்போல் அதே சத்தம் கேட்டது. பெர்நதெத் பயந்து நிமிர்ந்து நின்று மஸபியேல் கெபிப்பக்கம் திரும்பினாள். குகையினுள்ளிருந்து தங்க நிறமான மேகம் ஒன்று வெளிவந்தது. அதற்குப்பின் ஒரு பெண் காணப்பட்டாள். வாலிபப் பெண் மிக அழகுடனிருந்தாள். ‘ அவள் என்னைத் தாயன்புடன் நோக்கி புன்சிரிப்புக் காண்பித்து, வரும்படி எனக்கு சயிக்கினை காட்டினாள். பயம் என்னை விட்டகன்றது. கண்களைக் கசக்கி மூடித் திறந்தேன். அந்தப் பெண் அதே இடத்தில் இன்னும் புன்முறுவலுடன் நின்றாள். என்னையறியாமலே ஜெபமாலையைக் கையில் எடுத்து முழந்தாளிட்டேன். இது தனக்குப் பிரியம் எனத் தெரிவிக்குமாப்போல் அந்தப் பெண் தலையை அசைத்து, தன் வலது கையில் தொங்கிய ஜெபமாலையை எடுத்தாள். ஜெபமாலை தொடங்குமுன் சிலுவை அடையாளம் வரைய வேண்டும். வலது கரத்தால் நெற்றியைத் தொட முயன்றேன். கையை உயர்த்த முடியவில்லை. திமிர்வாதம் போல் இருந்தது. அந்தப் பெண் சிலுவை அடையாளம் வரைந்த பின்னரே, நான் என் கையை உயர்த்தக் கூடியவளானேன். நான் தனியே ஜெபமாலை செய்தேன். அவள் மணிகளை உருட்டிக் கொண்டிருந்தாள், ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. பத்துமணி ஜெபத்துக்குப்பின் என்னுடன் சேர்ந்து, ‘பிதாவுக்கும் சுதனுக்கும்” என்ற திரித்துவ ஆராதனையைச் சொன்னாள். ஜெபமாலை முடிந்ததும், அவள் குகையினுள் திரும்பினாள். அவளுடன் பொன் நிற மேகமும் மறைந்தது. அவளுக்கு வயது பதினாறு அல்லது பதினேழு இருக்கும்.”

பெர்நதெத் ஜெபித்துக் கொண்டிருப்பதை அந்துவானெற்றும் ஜோனும் பார்த்தனர். ‘ அங்கு ஜெபித்துக் கொண்டிருக்கும் அவளுக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். கோவிலில் அநேக ஜெபங்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. அது பற்றாதா? ஜெபிப்பதைத் தவிர வேறு எதற்கும் அவள் உதவ மாட்டாள்” என ஜோன் கூறினாள்.

விறகு பொறுக்கிவிட்டு பெண்கள் இருவரும் கெபிப் பக்கமாய்த் திரும்பினர். பெர்நதெத் இன்னும் ஜெபித்துக் கொண்டிருந்தாள். மும்முறை அவளை அழைத்தார்கள், அவள் பதிலளிக்கவில்லை. கல் எறிந்தார்கள். ஒரு அவள் தோள் மேல் அடித்தது. அதற்கும் அவள் அசையவில்லை. அவள் செத்துப்போனாளோ என அந்துவானெற் அஞ்சினாள். ‘செத்துப்போனால் கீழே விழுந்திருப்பாளே” என ஜோன் சொல்லி அவளுடைய பயத்தை அகற்றினாள். அவர்கள் இவ்விதம் பேசிக் கொண்டிருக்கையில் பெர்நதெத் சிறிதுநேரத்தில் பரவசத்தைவிட்டு விழித்தாள்.

வீட்டுக்குப் போகும் வழியில், தான் ஒரு பெண்ணைப் பார்த்ததாகவும், அவள் வெள்ளையும் நீலமும் கலந்த நிறத்தில் உடை தரித்திருந்தாளென்றும், ஒவ்வொரு பாதத்தின் கீழும் ஒரு மஞ்சல் ரோஜா மலர் இருந்ததென்றும், பெர்நதெத் அறிவித்தாள். யாருமே இதை நம்பவில்லை.

இன்னொரு நாள் பெர்நதெத் தன் சிநேகிதிகளுடனும் இன்னும் இருபது சிறுவர்களுடனும் மஸபியேல் கெபியருகே நிற்கையில் அந்தப் பெண் தோன்றினாள். பெர்நதெத் கெபியில் தீர்த்தத்தைத் தெளித்தாள். உடனே அந்தப் பெண் புன்முறுவல் பூத்தாள்.

அந்தப் பெண் யாராயிருக்கலாமென பலர் பலவிதமாய் பேசினார்கள். உதவி கேட்டு உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து வந்த ஆத்துமம் என சிலர் நினைத்தார்கள். இவ்விதம் நினைத்தவர்களில் ஒருவர், பெர்நதெத்தைப் பார்த்து ‘ அடுத்த முறை அந்தப் பெண் வந்ததும் அவளுக்கு பேனா, மை, காகிதம் இவற்றைக் கொடுத்து, அவளுடைய விருப்பத்தை எழுதும்படி கேள். தான் வருவதன் நோக்கத்தையாவது எழுதட்டும்” என்றார். பெர்நதெத் அவ்விதமே செய்தாள்.

அந்தப் பெண் சிரித்துக் கொண்டு ‘ நான் சொல்ல இருக்கும் செய்தியை எழுத அவசியமில்லை. இங்கு தொடர்ந்து பதினைந்து நாட்களாக ஒவ்வொரு நாளும் வருவாயா? என்றனள். பெர்நதெத் சரி என்றதும், அந்தப் பெண் ‘இந்த உலகத்திலல்ல, ஆனால் மறு உலகத்தில் உன்னை நான் பாக்கியவதியாக்குவதாக வாக்களிக்கிறேன்” என்றாள்.

1858-ம் ஆண்டு தபசு காலத்தில் முதல் ஞாயிறன்று மாதா ஆறாவது முறையாகக் காட்சியளித்தாள். பெர்நதெத்திடமிருந்து தன் பார்வையை அவள் அகற்றி கூட்டத்திலிருந்த ஒவ்வொருவருடைய முகத்தையும் நோக்கினாள். உடனே மாதாவின் முகத்தில் துயர் பரவியது. திரும்பவும் பெர்நதெத்தை நோக்கி ‘பாவிகளுக்காக ஜெபி” என முறையிடுகிறாற் போல் மொழிந்தாள்.

பெப்ருவரி 25-ம் நாள் வியாழக்கிழமை ஒப்தாவது காட்சி. போய் ஊற்று நீரில் கழுவி அதைப் பருகும்படி தேவதாய் பெர்நதெத்திடம் சொன்னாள். அங்கு ஊற்று ஒன்றும் கிடையாது. ஊற்று அகப்படுமா எனத் தேடிப் பார்த்தாள், ஒன்றும் அகப்படவில்லை.

ஆதலின் அவள் கெபிப் பக்கமாய்த் திரும்பி அன்னை மொழிந்த வார்த்தைகளின் அர்த்தத்தைக் கேட்டாள். அந்தப் பெண் பதிலளிக்கவில்லை. பெர்நதெத் கெபியின் பின்பக்கமாய் ஏறி முழந்தாளிட்டு மணல் கிடந்த ஓர் இடத்தில் தன் கைகளால் ஒரு பள்ளத்தைத் தோண்டினாள். அதுவரை அங்கு ஊற்று கிடையாது. பெர்நதெத் தோண்டியதும் சிறிது தண்ணீர் வந்தது.

கழுவ வேண்டும், குடிக்க வேண்டும் என மாதா சொல்லி இருந்ததால், மண் கலந்திருக்கிற அந்த நீரை எடுத்து பெர்நதெத் தன் முகத்தில் பூசி, ஊற்றிலிருந்து வந்த நீரை மண்ணோடு குடிந்தாள். இன்னொரு விசுவாச முயற்சியையும், தாழ்ச்சியையும் தேவதாய் கேட்டாள். அருகிலிருந்த சில இலைகளைச் சாப்பிடும்படி தேவதாய் சொன்னதும் பெர்நதெத் அவ்விதமே செய்தாள்.

இந்த நிலையில் அவள் தன் பழைய இடத்திற்கு வருவதைக் கண்ட மக்களில், விசுவாசிகள் விசனித்தார்கள். அவிசுவாசிகள் சத்தமாய்க் கேலி செய்தார்கள். பின் பெர்நதெத் தன் முகத்தைக் கழுவிகொண்டு மாதாவை நோக்கலானாள்.

அந்த அற்புத ஊற்று சீக்கிரம் உலகப் பிரசித்தியடைந்தது. மறுநாளே அந்த ஊற்று நீர் பெருக்கெடுத்து கேவ் நதியில் போய் விழத் தொடங்கியது. லூயி பூரியெட் என்னும் கல்வெட்டும் குருடன் அந்த ஊற்று நீரில் தன் கண்களைக் கழுவினாள். உடனே கண் பார்வை பெற்றான். இதுவே லூர்து நாயகியின் முதற்புதுமை. வைத்தியர்களால் பிழைக்காது என்று கைவிடப்பட்ட ஒரு குழந்தையை அதன் தாய், ஊற்று நீரில் குளிப்பாட்டினாள். குழந்தை உடனே முழுச் சுகமும் பலமும் பெற்றது. மக்களின் அவிசுவாசம் அகன்றது.

‘பாவிகளுக்காக” இன்னொரு தாழ்ச்சி முயற்சியும் தபசு முயற்சியும் செய்யும்படி தேவதாய் பெப்ருவரி 26-ம் நாளன்று, அதாவது பத்தாவது காட்சியில் அறிவித்து, ‘தவம்! தவம்! தவம்!” என்றாள். ‘பாவிகளுக்காகத் தரையை முத்தி செய்” என அன்னை கூறியதும், பெர்நதெத் அவ்விதமே செய்தாள். ஆற்றை நோக்கி வந்த சரிவில் கெபியின் முன் முழந்தாளிட்டு அப்படியே நகர்ந்து தரையை முத்தமிட்டுக் கொண்டே உயர ஏறினாள். மக்களும் அவளைப் பின்பற்றி தரையை முத்தி செய்தார்கள். அவள் சயிக்கினை காட்டியதும் அநேகர் முழந்தாளிட்டு பாவிகளுக்காக தரையை முத்தி செய்துகொண்டே உயர ஏறினார்கள். இவ்விதம் பலமுறை நடந்தது.

பதினோராவது முறையாக காட்சியளிக்கையில் அந்தப் பெண் ‘குருக்களிடம் போய், இங்கு எனக்கு ஒரு கோவில் கட்டச் சொல்” என்றாள்.

பெர்நதெத் போன சமயத்தில், பங்குக் குருவான பெரமால் சுவாமியார் தோட்டத்தில் கட்டளை ஜெபங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். தோட்ட வாசலைத் திறந்த சத்தம் கேட்டதும் ஏறெடுத்துப் பார்த்து, ‘யார்? என்ன வேண்டும்?” என்றார்.

‘நான் பெர்நதெத் சூபிரு” என அவள் கூறியதும், அவர் உச்சிமுதல் பாதம்வரை நோக்கிவிட்டு, ‘ஓ நீயா அந்த சிறுமி? உன்னைப் பற்றி பல அப10ர்வக் கதைகளைக் கேட்டு இருக்கிறேன். உள்ளே வா” என்றார்.

தான் வந்த நோக்கத்தை பெர்நதெத் அறிவித்தாள். அவளிடம் அவர் பல கேள்விகள் கேட்க, யாவற்றிற்கும் அவள் தக்க பதிலளித்தாள். விசாரணை முடிந்ததும் அவர் எழுந்து அறையில் அங்குமிங்கும் உலாவியபின் பெர்நதெத்தின் முன் நின்று, ‘உன்னை அனுப்பிய அந்த அழகிய பெண்ணிடம் பின்வருமாறு சொல்: ‘தான் அறியாதவர்களுடன் ஒன்றும் வைத்துக் கொள்ள பங்கு சுவாமி விரும்புவதில்லை; எல்லாவற்றிற்கும் முன் அவள் தன் பெயரைச் சொல்ல வேண்டும்; கோவில் கட்ட தனக்கு உரிமை உண்டென அவள் எண்பிக்க வேண்டும்; கோவில் கட்டப்பட அவளுக்கு உரிமை உண்டானால், நான் சொல்வதன் பொருள் அவளுக்கு விளங்கும். அவளுக்கு விளங்காவிட்டால் பங்குக்குருவுக்கு இனிமேலாக செய்தி சொல்லி அனுப்பலாகாது” என அவளிடம் சொல்” என்றார்.

மார்ச் 2-ம் நாள் பதினான்காம் முறையாக அந்தப் பெண் தோன்றினாள். கோவில் கட்டப்பட வேண்டும் என்றதுடன் சுற்றுப்பிரகாரங்கள் அங்கு வர தான் விரும்புவதாக அவள் தெரிவித்தாள்.

இன்னொரு முறை பெர்நதெத் பங்குக் குருவை அணுகினாள். இம்முறை அவர் கோபித்தார். ‘நீ பொய் சொல்கிறாய். அவளுக்காக எப்படி நாம் சுற்றுப்பிரகாரங்களை நடத்துவது? உன்னைப் போன்றவர்களை லூர்து நகரில் வைத்திருப்பதே துன்பம். பட்டணத்தையே நீ குழப்பிவிடுகிறாய். மக்கள் உன் பின் ஓடும்படி செய்கிறாய். உனக்கு ஒரு மெழுகுதிரி தருகிறேன். நீயே சுற்றுப்பிரகாரமாயிரு. அவர்கள் உன்னைப் பின்செல்வார்கள். குருக்கள் தேவையில்லை” என்றார்.

‘நான் எவரையும் என் பின்வரும்படிச் சொல்லவில்லை. அவர்கள் தாமாக வருகிறார்கள். சுற்றுப்பிரகாரங்களைப் பற்றி அந்தப் பெண் கேட்டதை நான் எவரிடமும் சொல்லவில்லை. உங்களிடம் மாத்திரமே சொல்லியிருக்கிறேன்” என பெர்நதெத் மொழிந்ததும், அவர் பெர்நதெத் பக்கமாய்த் திரும்பி, ‘நீ ஒன்றையும் பார்க்கவில்லையா? குகையிலிருந்து ஒரு பெண் வர முடியாது. அப்படியானால் அங்கு ஒன்றும் இருக்க முடியாது” என்றார்.

பெர்நதெத் பயந்து, சுண்டெலியைப் போல் தன்னை அடக்கிக் கொண்டாள். சுவாமியாருக்கு முரட்டுச் சத்தம். அங்குமிங்கும் நடந்து கொண்டு ‘யாராவது இப்பேர்ப்பட்ட கதையைக் கேட்டது உண்டா? ஒரு பெண்ணாம்! அவளுக்குச் சுற்றுப் பிரகாரம் வேண்டுமாம்!” எனக் கத்தினார். பின் அவர், ‘ கெபியில் ஒரு காட்டு ரோஜாச் செடி மேல் அவள் காட்சியளிப்பதாகச் சொல்கிறாய். அந்தச் செடி பூக்கும்படி அவள் செய்யட்டும். அப்படியானால் நீ சொல்வதை நான் நம்புகிறேன். உன்னுடன் நானும் மஸபியேல் கெபிக்கு வருவதாக வாக்களிக்கிறேன்” என்றார்.

நடந்ததைக் கேள்விப்பட்டு இருபதாயிரம் ஜனங்கள் கெபியருகே கூடிவிட்டார்கள். இராணுவ வீரர்களை அங்கு கொண்டுவர வேண்டியிருந்தது. உருவிய வாளை ஏந்திய ஒருவன் துணையாக நின்று பெர்நதெத்தைப் பத்திரமாய் அழைத்துச் சென்றான்.

அந்தப் பெண் தோன்றியதும், பங்கு சுவாமியாருடைய விருப்பத்தை பெர்நதெத் தெரிவித்தாள். பெண் சிரித்தாளேயொழிய தான் இன்னார் என்று சொல்லவில்லை.

மார்ச் 24-ம் நாளன்று பெர்நதெத் கெபிக்குச் சென்றாள். எற்கனவே அந்தப் பெண் அங்கு நின்றாள். அவளைக் காத்திருக்கப் பண்ணியதற்காக பெர்நதெத் மன்னிப்புக் கேட்டாள். மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை என அந்தப் பெண் கூறியதும், பெர்நதெத் தன் உள்ளத்தில் இருந்ததையெல்லாம் எடுத்துக்கூறி, ஜெபமாலையை எடுத்தாள். ஜெபிக்கையில் ஒரு யோசனை வந்தது. அவள் யார் எனக் கேட்க ஆசை உண்டாயிற்று. ‘தான் யாரெனச் சொல்லும்படி அவளைக் கெஞ்சிக் கேட்டேன். அந்தப் பெண்ணோ இதற்குமுன் செய்தது போலவே செய்தாள்; தலை குனிந்து புன்சிரிப்புப் பூத்தாள்; பதில் அளிக்கவில்லை. எனக்கு இன்னும் சற்று துணிவு வந்தது. தயவு செய்து உங்கள் பெயரைத் தெரிவியுங்கள் என்றேன். முன்போலவே அவள் தலைகுனிந்து புன்னகை பூத்தாளேயொழிய பதிலொன்றும் சொல்லவில்லை. மௌனமாயிருந்தாள். நான் அவளுடைய பெயரை அறியப் பாத்திரவதியல்ல என அங்கீகரித்து மூன்றாம் முறையாகக் கேட்டேன்.

‘அந்தப் பெண் ரோஜாச் செடிமேலோ நின்று கொண்டிருந்தாள். புதுமைச் சுரூபத்தின் மாதா நிற்கிறாப் போல் நின்றாள். நான் மூன்றாம் முறையாக என் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்ததும், அவளுடைய முகம் மாறியது. தாழ்ச்சியுடன் தலை குனிந்தாள். கரங்களைக் குவித்து அவற்றை மார்பு வரை உயர்த்தினாள். பரலோகத்தை அண்ணார்ந்து பார்த்து, மெதுவாகக் கரங்களை விரித்து, என் பக்கமாய்ச் சிறிது சாய்ந்து “நாமே அமல உற்பவம்” என்று சொல்லி உடனே மறைந்தாள்.”

அந்த வார்த்தைகளை மறந்து விடாதபடி பெர்நதெத் வீட்டுக்கு வரும் வழியில் அவற்றைச் சொல்லிக் கொண்டே வந்தாள். நேரே பங்கு சுவாமியாரிடம் போய்த் தெரிவித்தாள். கோவில் கட்ட பணம் இருக்கிறதா என அவர் கேட்க, பெர்நதெத் இல்லை என்றாள்.

அந்தப் பெண் கேட்ட கோவில் அவளுக்குக் கிடைத்தது. பெரமால் சுவாமியே அதைக் கட்டினார். இன்று அது தற்கால உலகிலேயே மிக்க அழகு வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாய்த் திகழ்கிறது.

அந்த அழகிய பெண்ணை பெர்நதெத் கடைசி முறையாகப் பார்த்தது 1858-ம் ஆண்டு ஜுலை 16-ம் நாள் கார்மேல் மாதா திருநாளன்று. அன்றைய காட்சி பதினைந்து நிமிடம் நீடித்தது.

அமலோற்பவ மரியாயே வாழ்க!

வெள்ளி, 7 நவம்பர், 2014

அர்ச். பார்பராள் (St. Barbara)



அர்ச்.  பார்பராள் 


பிறப்பு :     3ம் நூற்றாண்டு

இறப்பு :     4ம் நூற்றாண்டு

திருவிழா :  Dec. 6

வேதசாட்சி.,


         அர்ச்.  பார்பரா ஒரு அஞ்ஞான பெற்றோருக்கு மகளாக பிறந்தார்.  அவருடைய தந்தை அவரை வீட்டில் ஒரு அறையில் அடைத்து வைத்து வளர்த்து வந்தார்.  வெளியே சென்றால் மனம் திரும்பி விடலாம் என்று கருதி இந்த ஏற்பாடு.
இருப்பினும் தன் தந்தைக்கு தெரியாமல் அவள் ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவ மதத்திற்கு திரும்பினாள்.  ஒரு சமயம் அவளது தந்தை அவளை ஒரு அஞ்ஞானிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தான்.  ஆனால் அவள் அதற்கு சம்மதிக்கவில்லை.
 
ஒரு சமயம் தன் தந்தை வீட்டில் இல்லாத போது,  தன் அறையில் அர்ச்.  தமத்திருத்துவத்துக்கு தோத்திரமாக மூன்று ஐன்னல்கள் வைத்து இருந்தாள்.

அவளுடைய தந்தைக்கு தனது மகள் கிறஸ்தவ மதத்திற்கு மாறின  விஷயம் தெரியவே மிகுந்த கோபம் கொண்டான்.  தனது மகளை தானே நீதிமன்றத்தில் நிறுத்தினான்.  அவள் மிகுந்த உபத்திரங்களைப் பட்டாள்.  பின் வேதசாட்சி மரணம் அடைந் தாள்.  அவளது தந்தையே தன் மகளின் தலையை இரக்கமின்றி கொடூரமாக வெட்டினான்.
ஆனால் அவனை ஆண்டவர் உடனே தண்டித்தார். அவளது ஆன்மாவை சம்மனசு ஆண்டவரிடம் கொண்டு செல்லும் போது ஒரு பெரிய மின்னல் தாக்கி அவளது தந்தை அந்த நீதிமன்றத்திலே இறந்தான்.

வியாழன், 6 நவம்பர், 2014

அர்ச். பிலோமினம்மாள் (St. Philomena, Life history in Tamil)


அர்ச்.  பிலோமினம்மாள்


பிறப்பு                 :  10 Jan 291

இறப்பு                 :  10 Aug 304

புனிதர் பட்டம் :  1837 by Pope Gregory XVI

பாதுகாவலி      :  Children, Youth, Babies, Priests, Lost                                            causes, Infants, Sterility Children of Mary
                                   The Universal Living Rosary Association

திருவிழா           : 11 Aug


அர்ச்.  பிலோமினம்மாள் 13 வயதில் வேதசாட்சி மரணம் அடைந்தார்.


இவரைப் பற்றிய முழு தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

                     இவர் ஒரு கிரேக்க இளவரசி .  தன் சிறுவயதிலே  அவள் கற்பு என்னும் புண்ணியத்தை ஆடையாக தரிப்பதாக ஆண்டவருக்கு தன்னை ஒப்புக் கொடுத்தாள் .   அவளுடைய  13ம் வயதில் அவளை திருமணம் செய்து கொள்ள ஒரு ரோமை அரசன் விருப்பம் தெரிவித்தான்.   ஆனால் அவள் அதை ஏற்க மறுத்தாள்.   அவன் அவளை தன் விருப்பத்துக்கு சம்மதிக்க அவளை மிரட்டினான்.  ஆனால் அவள் எதற்கும் அஞ்சவில்லை.  காரணம் அவள் தன்னை முழுதும் ஆண்டவருக்கு அர்ப்பணித்து இருந்தாள்.

                       பல முறை முயற்சி செய்தும் அந்த அரசனால் அவளை தன் ஆசைக்கு இணங்க வைக்க முடியவில்லை.இதனால் கோபம் கொண்ட அரசன் அவளை சாவுக்கு தீர்ப்பளித்தான்.  அர்ச்.  பிலோமினம்மாள் 13 வயதில் வேதசாட்சி மரணம் அடைந்தார்.


                   அவளுடைய அழியா உடல் 1802ம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது.  அவள் கல்லறையில்  மூன்று பெரிய கற்கள் இருந்தன.  அந்த கற்களில்  நான்கு அடையாளங்கள் பொறிக்கப்பட்டு இருந்தன.

அவை:

           2 நங்கூரம்

           3 அம்பு

           1 தென்னை ஓலை

           1 லில்லிப் பூ


சிறப்பு
   
         ஒரு புனிதருடைய முழு விவரங்கள் தெரியாமல் அவருடைய புதுமைகளைக் கொண்டு புனிதர் பட்டம் வழங்கப்பட்ட ஒரே புனிதர் அர்ச்.  பிலோமினம்மாள்


Popes About St. Philomena

Pius VII (1800-1823). He accomplished the greatest act, donating to Mugnano the body of St. Philomena. 

Leo XII (1823-1829). On the 7th of December 1827, he exclaimed: �She is a great Saint!�

Gregory XVI (1831-1846). The Pope himself donated to the Sanctuary of St. Philomena a precious medallion with his effigy, a big silver lamp with golden decorations and a golden chalice. 

Pius IX (1846-1878). He was cured from his epilepsy by the intercession of our Saint. When he was Bishop of Imola even his secretary, Don Joseph Stella, was cured in 1834 by intercession of St. Philomena. 
 
Leo XIII (1878-1903). He came in pilgrimage to the Sanctuary of Mugnano when he was still Archbishop of Benevento. On December 15, 1883, Leo XIII approved the use of a red and white cord in honor of the Saint. Furthermore, on September 24, 1889 he granted the title of Archconfraternity (solely to France) to the Work of St. Philomena, and in 1902 he wanted to celebrate in Rome, in Priscilla�s Catacombs, the first centenary for the finding of the Saint martyr�s body. Furthermore, he sent two gifts to the Sanctuary in Mugnano: in 1888 a nice pastoral and on the May 25, 1902, on the centenary of the finding of the relics, a wonderful missal. 
 
St Pius X (1903-1914). He is the Pope that in 1905 proclaimed the Curate of Ars Blessed on the first centenary of the translation of St. Philomena�s Body from Rome to Mugnano. Pius X loved St. Philomena very much and he was truly saddened by the Philomenian question about the originality of the stones found in front of her tomb. St. Pius X, on the May 21, 1912, extended to the whole Church the Archconfraternity of St. Philomena: the highest tribute from a pope who became Saint to a great Saint.






இவரைப் பற்றி பிற புனிதர்கள்


St. John Marie Vianney, Cur� of Ars (1876-1859). It was Pauline Jaricot who talked to him about the Saint of Mugnano and introduced her to him. It was she that gifted him with one of her relics. There is not a biography of the Curate of Ars where our Saint is not mentioned. In France he was the greatest promoter of the devotion towards the Saint of Mugnano. He had a statue of St. Philomena placed in his parish church, and then built a Basilica in her honor in Ars. This Basilica, built in the same style of the one in Fourvi�re, which dominates over Lyon, was terminated after the death of Saint John Marie Vianney. The Saint Curate attributed to the intercession of our Saint, all the numerous miracles performed in Ars.
St. Peter Louis Marie Chanel (1803-1841). He was missionary and first martyr (April 28, 1841) of the mysterious and wild Oceania. His mutual devotion for St. Philomena came from the Curate of Ars. When he embarked in 1836 for the Archipelago of Tonga, he had in his breviary three pictures: Our Lady, St. Joseph and St. Philomena. To the young St. of Mugnano he would turn in the difficult moments of his apostolate amongst the mistrustful and hostile indigenous. Although not expert in constructions, he started building, trustful in �a Saint for whom he harbors a great devotion�. In honor of the Saint he recited a novena every year in the period of her feast. To one of the first baptized he gave the name Marie Philomeno.
St. Peter Julian Marie Eymard (1811- 1868). His greatest merit was the foundation in 1856 of the Congregation of the Most Blessed Sacrament. He was a very close friend of the Curate of Ars whom he visited regularly. He had a great devotion towards St. Philomena. He loved to kneel down in front of the Saint�s reliquary. In 1854 he was cured by the martyr, after a novena recited in her honor.
St. Madeleine Sophie Barat (1779-1865). She founded in 1802 the Society of the Sacred Heart. In the difficult times of her life and her religious order, Mother Barat invoked with faith the Saint of Mugnano. In her biography she states that on the 11th of September 1846 Barat placed her hands on a surgery patient who was instantly healed. She attributed her healing to St. Philomena, whom she had invoked.
St. John Nepomucene Neumann (1811-1860). In 1840 he joined the Congregation of the Most Holy Redeemer, founded by St. Alfonso Maria de Liguori. He dedicated himself to the missionary activity in the States of New York, Pennsylvania and New Jersey, and in Christian education for youth, founding many parish catholic schools. In 1846, trustful of the help of the Martyr, �to whom God denies nothing for whomever invokes her� and without worrying about the money, he completed the building of the new Church of St. Philomena. 
 
St. Frances Xavier Cabrini (1850-1917). On her numerous journeys, especially the ones from New York to Buenos Aires and through the Andes, she always carried with her a small statue of St. Philomena. We can say that Cabrini, and the Bishop of Philadelphia Mons. Neumann, had the merit of promoting the devotion of the Saint in America more than anyone else. Pius XII declared her Universal Patroness of the Emigrants.
St. Pio of Pietrelcina (1887-1968). For her St. Philomena was the �Princess of Heaven�. After the liturgical reform of 1961, Father Pio used to imperatively reply to whoever dared to doubt the existence of the Saint: �for the love of God! It might well be that her name is not Philomena, but this Saint has performed many miracles and it is not the name that did them.� This is the wisest reply: who wants to understand, will understand! 

St. Maddalena Gabriella of Canossa (1774-1835). She founded the Order of the Canossians (Work of the Charity daughters), an institution of great religious and human advancement. Mother Madeleine continuously urged her religious sisters towards the love of Christ and the Virgin of Sorrows, and she entrusted them to the patronage of St. Philomena. 

St. Hannibal Marie Di Francia (1851-1927). Referring to St. Philomena he used to say: �St. Philomena has become famous for the great miracles that the Lord has worked through her.�
St. Damien de Veuster (1840 � 1889). Father Damien, Belgian missionary of the Congregation of the Sacred Hearts, spent his life spiritually assisting and curing the lepers relegated to the isle of Molokai in the Hawaiian archipelago. A great devotee of St. Philomena, he dedicated to her the first chapel he built in the leper colony.








Download St. Antony Life History in Tamil (MP3)

Download Tamil Catholic Songs (MP3)

Download Tamil Catholic Books (PDF)

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

சின்ன குறிப்பிடம் ஆறாம் பிரிவு ( Tamil Catechism VI)


ஆறாம் பிரிவு
கற்பனைகளும், பாவமும், புண்ணியமும்

62.  மோட்சத்தை அடைவதற்கு வேத சத்தியங்களை விசுவசிகிரதல்லாமல் இன்னும் செய்யவேண்டியதென்ன?

                     சர்வேசுரனுடைய கற்பனைகளையும் திருச்சபையின் கட்டளைகளையும் அனுசரித்து பாவத்தை தள்ளி புண்ணியத்தை செய்ய வேண்டியது.

63.   சர்வேசுரனுடைய கற்பனைகள் எத்தனை?
                   
                        பத்து

64.   பத்தும் சொல்லு?
                   
                     சர்வேசுரன் நமக்கு அருளிய வேத கற்பனைகள் ......மற்றும்

65.   திருச்சபையின் பிரதான கட்டளைகள் எத்தனை?
                     
                        ஆறு

66.   ஆறும் சொல்லு?

                        இங்கே கிளிக் செய்யவும் .

67.   பாவம் ஆகிறதென்ன?

                         தேவ கட்டளைகளை மீறுகிறதே பாவம்

68.   எத்தனை வகை பாவம் உண்டு?

                            ஜென்ம பாவம்
                             கர்ம பாவம்

69 .ஜென்ம பாவம் ஆவதென்ன?
       
            ஆதித்தாய் ஆதித் தகப்பனாலே உண்டாகி நம்மோடு கூடப் பிறக்கிற பாவம்.

70. கர்ம பாவம் ஆவதென்ன?

           அவரவர் புத்தி விவரம் அறிந்த பிற்பாடு மனது பொருந்தி செய்கிற பாவம்.

71. கர்ம பாவம் எத்தனை வகையுண்டு?

          சாவான பாவம், அற்ப பாவம் ஆகிய இரண்டு வகையுண்டு.

72. சாவான பாவம் ஆவதென்ன?

          தேவ இஷ்டப் பிரசாதத்தை போக்கடித்து நம்மை நரகத்துக்கு பாத்திரவான்களாக்குகிற பாவம்.

73. அற்ப பாவம் ஆவதென்ன?

         நம்மிடத்தி;ல் தேவசிநேகத்தை குறைத்து சாவான பாவத்துக்கு வழியுமாக்கி நம்மை உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு பாத்திரவான்களாக்குகிற பாவம்.

74. தலையான பாவங்கள் எத்தனை?
       
            ஏழு

75. ஏழும் சொல்லு?

1.

76. மூன்று தேவ சம்பந்தமான புண்ணியங்கள் எவை?

            விசுவாசம்
            நம்பிக்கை
            தேவசிநேகம் ஆகிய இவைகளாம்.

77. தலையான பாவங்களுக்க எதிரான புண்ணியங்கள் எத்தனை?

      ஏழு

78. ஏழும் சொல்லு?

1.

வியாழன், 25 செப்டம்பர், 2014

சின்ன குறிப்பிடம் - ஐந்தாம் பிரிவு (Tamil Catchism - part V)

ஐந்தாம் பிரிவு 


மனிதனுடைய முடிவுகள் 



49.  பாவத்தின் நிமித்தம் சகல மனிதர்களுக்கும் வருகிற ஆக்கினை என்ன?

          சாவு 

50.  சாவுக்குப் பின் சம்பவிப்பதென்ன?
    
         தனித் தீர்வை 

51.  தனித் தீர்வைக்குப் பிறகு சாவான பாவமுள்ள ஆன்மாக்கள் எங்கே போகிறார்கள்?

         நரகம் 

52.  பரிசுத்த ஆத்துமாக்கள் எங்கே போகிறார்கள்?

         மோட்சம் 

53.    தங்கள் பாவங்களுக்கு முழுதும் உத்தரியாத ஆன்மாக்கள் எங்கே போகிறார்கள்?

           உத்தரிக்கிற ஸ்தலம் 


54.  உத்தரிக்கிற ஸ்தலதில் என்னவாக இருக்கிறார்கள்?
  
          தங்கள் பாவங்களுக்கு தக்க வேதனைப் பட்டு உத்தரிக்கிரார்கள்.  முழுதும் உத்தரித்த பிறகு மோட்சத்தை அடைவார்கள்.

55.   தனித் தீர்வை அல்லாமல் வேறே தீர்வை உண்டோ?

         பொதுத் தீர்வை உண்டு.

56.  பொது தீர்வை எப்போது நடக்கும்?
  
         உலகம் முடிவிலே நடக்கும்.

57.   உலகம் எப்படி முடியும்?

          உலகமெல்லாம் நெருப்பிலே வேக மனிதர்கள் எல்லோரும் செத்துப்போவார்கள்.

58.   பின்னும் என்ன சம்பவிக்கும்?
   
          சேசுநாதர் சுவாமி மனிதர் எல்லோரையும் ஆத்தும சரீரத்தோடு எழுப்பி மிகுந்த வல்லபத்தோடு  நடுத் தீர்க்க வருவார்.

59.   எப்படி நடுத் தீர்ப்பார்?

         அவனவன் செய்த பாவ புண்ணியங்களை எல்லாம் சகலருக்கும் முன்பாக அறிய பண்ணி பாவிகளை சபித்து நரகத்திலே தள்ளி நல்லவர்களை ஆசிர்வதித்து மோட்சத்திற்கு கூட்டி கொண்டு போவார்.

60.   பாவிகள் நரகத்திலே படுகிற ஆக்கினை என்ன?

         சர்வேசுரனை ஒருகாலும் காணாமலும் ஊழியுள்ள காலம் பசாசுகளோடு நெருப்பிலே வெந்து சகல ஆக்கினைகளையும் அனுபவிப்பார்கள்.

61.  நல்லவர்கள் மோட்சத்தில் அனுபவிக்கிற பாக்கியம் என்ன?

        சர்வேசுரனை முகமுகமாய் தரிசித்து எப்போதும் சகல பேரின்ப பாக்கியங்களையும் அனுபவிப்பார்கள். 








ஆறாம் பிரிவு 










புதன், 24 செப்டம்பர், 2014

சின்ன குறிப்பிடம் - நான்காம் பிரிவு (Tamil Catchism - part IV)

நான்காம் பிரிவு 

இஸ்பிரித்து சாந்துவின் வருகையும் திருச்சபையும் 



40. சேசுநாதர் சுவாமி பரலோகத்திற்கு எழுந்தருளின பத்தாம் நாள் என்ன
செய்தார்?
      
       தம்முடைய அப்போஸ்தலருக்கு திடனாக இஸ்பிரித்து சாந்துவை அனுப்பினார்.

41. இஸ்பிரித்து சாந்துவை அடைந்தபின் அப்போஸ்தலர்கள் என்ன செய்தார்கள்?

     உலகின் எத்திசையிலும் பிரசங்கித்து திருச்சபையை பரவ செய்தார்கள்.

42. திருச்சபைக்கு தலைவராக இருப்பவர் யார்?

     சேசுநாதர் சுவாமி தான்.

43. அவர் தமக்கு பதிலாக காணக்கூடிய தலைவராக யாரை நியமித்தார்?

      அர்ச்.  இராயப்பரை நியமித்தார்.

44. அர்ச். இராயப்பருக்கு பதிலாக திருச்சபைக்கு தலைவராக இருப்பவர் யார்?

      அர்ச்.  பாப்பானவர்.

45. மற்ற அப்போஸ்தலருக்கு பதிலாக இருப்பவர்கள் யார்?

      மேற்றிராணிமார்கள் 

46. சேசுநாதர் எத்தனை திருச்சபையை ஸ்தாபித்தார்?

      கத்தோலிக்கென்கிற ஒரே திருச்சபையை ஸ்தாபித்தார்.

47. திருச்சபை சொல்படி கேளாதவர்களுக்கு மோட்சம் உண்டா?

    இல்லை.

48. இல்லையென்கிறதற்கு அத்தாட்சி என்ன?

     திருச்சபையின் சொற்படி கேளாதவன் அக்கினியைப் போல் உனக்கு ஆக கடவான் என்று கர்த்தர் திருவுளம் பற்றினார்.










ஐந்தாம்  பிரிவு 



Download Catholic Tamil books


You can download  for free and in pdf format.

i have collected some Catholic Books and Documents in Tamil.  Which will be very useful for you.
If you find any good catholic books pls give the link in the comment.  so that others too can download.







To download books (right Click & Save link us)


Documents about Family 

குடும்பம்