Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 25 மார்ச், 2022

விவாகரத்து பற்றி தெரியாத கத்தோலிக்கர்கள்

மார்ச் 23, 2022

ஆதாரம்: FSSPX.NEWS



30,000 பேர் வசிக்கும் போஸ்னியா-ஹெர்ஸகோவினாவில் 13,000 கத்தோலிக்கர் உள்ளனர். சிரோகி பிரிஜெக் நகரில், கத்தோலிக்கர்களிடத்தில் விவாகரத்து இல்லை. இந்த குறிப்பிடத்தக்க உண்மையின் விளக்கம் என்னவாக இருக்க முடியும்?

பல நூற்றாண்டுகளாக, துருக்கிய மற்றும் பிற்கால கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ், குரோஷியர்கள் கொடூரமாக பாதிக்கப்பட்டனர் மற்றும் அவர்களின் கத்தோலிக்க நம்பிக்கைக்காக கடுமையாக போராட வேண்டியிருந்தது. ஆகையால், இரட்சிப்பு கிறிஸ்துவின் சிலுவையிலிருந்து வருகிறது என்பதை அவர்கள் அனுபவத்தில் அறிந்திருக்கிறார்கள். இது நிராயுதபாணி திட்டங்கள், மனிதாபிமான உதவி அல்லது சமாதான ஒப்பந்தங்கள் ஆகியவற்றிலிருந்து வரவில்லை எனபதையும் அறிந்திருக்கிறார்கள். இருப்பினும் இது சில நன்மைகளைத் தருகிறது.

குரோஷிய திருமண பாரம்பரியம்

இளைஞர்கள் திருமணத்திற்குத் தயாராகும்போது, ​​"நீங்கள் சரியான பொருத்தத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்கள்" அல்லது "சிறந்த பொருத்தம்" போன்ற கருத்துகளால் அவர்களின் காதுகள் இனிமையாக இருக்காது. பாதிரியார் அவர்களிடம் உண்மையாகச் சொல்கிறார்: "உங்கள் சிலுவையை நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள். அது நீங்கள் நேசிக்க வேண்டிய சிலுவை, நீங்கள் சுமக்க வேண்டிய சிலுவை, நிராகரிக்கப்படாமல் பொக்கிஷமாக இருக்க வேண்டிய சிலுவை."

திருமண நாளில், மணமகனும், மணமகளும் தங்களுடன் சிலுவையைச் சுமந்துகொண்டு தேவாலயத்திற்குச் செல்கிறார்கள். கத்தோலிக்க குருவானவரால்  ஆசீர்வதிக்கப்படுகிறார், மேலும் அவர் திருமண சடங்கில்  ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறார். மணமகள் முதலில் தன் வலது கையை சிலுவையில் வைக்கிறாள்; இதையொட்டி, மணமகன் தனது கையை மணமகளின் மீது வைக்கிறார், மேலும் இரண்டு கைகளும் சிலுவையில் இணைக்கப்பட்டுள்ளன.

பாதிரியார் தனது கழுத்துப் பட்டை(Stole) நிச்சயிக்கப்பட்டவரின் கைகளில் வைக்கிறார், அவர்கள் தங்கள் சம்மதத்தை உச்சரித்து ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருப்பதாக வாக்களிக்கிறார்கள். இதற்குப் பிறகு, மணமகனும், மணமகளும் முத்தமிடுவதில்லை, ஆனால் தாங்கள் ஒப்பந்தம் செய்த திருமணத்தின் புனிதத்தின் அடித்தளமான சிலுவையை முத்தமிடுகிறார்கள்.

பொருள் மிகவும் அழகாக இருக்கிறது: கணவன் மனைவியை விட்டு பிரிந்தால் அல்லது பெண் தன் கணவனை விட்டு பிரிந்தால், அது அவர்கள் விட்டுச்செல்லும் சிலுவையாகும். இருப்பினும், சிலுவையைக் கைவிடுவது எல்லாவற்றையும் இழப்பதாகும், ஏனென்றால் சிலுவையில் கிறிஸ்து நமக்கு எல்லாமாக இருக்கிறார்.

திருமண சடங்கு முடிந்ததும், வாழ்க்கைத் துணைவர்கள் சிலுவையை வீட்டிற்கு எடுத்துச் சென்று தங்கள் வீட்டில் மரியாதைக்குரிய இடத்தைக் கொடுப்பார்கள். இது குடும்ப பிரார்த்தனையின் மையமாக மாறும், ஏனென்றால் குடும்பம் இந்த சிலுவையிலிருந்து பிறந்தது என்று எல்லோரும் நம்புகிறார்கள்.

ஒரு பிரச்சனை எழுந்தால், ஒரு மோதல் வெடித்தால், இந்த சிலுவைக்கு முன்னால் வாழ்க்கைத் துணைவர்கள் உதவிக்காகத் திரும்புகிறார்கள். அவர்கள் ஒரு வழக்கறிஞரிடம் செல்ல மாட்டார்கள், அவர்கள் ஒரு ஜோதிடரை அணுக மாட்டார்கள், அவர்கள் தங்கள் விவகாரங்களைத் தீர்க்க ஒரு உளவியலாளரை நம்ப மாட்டார்கள்.

அவர்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் முன் தோன்றுவார்கள். அவர்கள் மண்டியிடுவார்கள், அவர்கள் கண்ணீர் சிந்துவார்கள், தங்கள் துன்பங்களை வெளிப்படுத்துவார்கள், எங்கள் தந்தையை நினைத்து ஒருவருக்கொருவர் மன்னிப்பார்கள்: "எங்கள் கடனாளிகளை நாங்கள் மன்னிப்பது போல் எங்கள் கடன்களையும் மன்னியுங்கள்".

சிரோகி பிரிஜேக்கில் விவாகரத்துகள் இல்லாததற்கு இதுவே ஆழமான காரணம்.


ஆதாரம்: theotokos.fr – FSSPX.Actualités

வியாழன், 10 மார்ச், 2022

Devotion to St. Antony Day 24 in Tamil

 இருபத்து நான்காம் நாள்



அர்ச். அந்தோனியாரும் எஸ்ஸெலினோ (Ezzelino) என்னும் கொடுங்கோலனும்



பதுவா பட்டணத்தார் அர்ச். அந்தோனியாருக்கு வெகு மரியாதையும் வணக்கமும் செய்தார்கள். ஆனால் தாழ்ச்சி நிறைந்த அந்தோனியார் அவர்கள் அப்படித் தம்மை மேன்மைப்படுத்துவதால் மனவருத்தப்படுவார். அந்த நகரத்து மேற்றிராணியாரும் உயர்ந்த குருப்பிரசாதிகளுமே அவருக்கு மரியாதை செய்வதிலும், அவருடைய பிரசங்கங்களைக் கவனத்தோடு கேட்பதிலும் மற்றச் சனங்களுக்கு மாதிரியாயிருந்தார்கள். சனங்கள் அவரை வாழ்த்திப் புகழுவார்கள். அச்சமயங்களில் எங்கேயாவது போய் ஒளிந்துகொள்ளத் தேடுவார். அப்படி ஒரு நாள் இவர் ஒளிந்துகொள்ளும்படியாய் சன சந்தடியில்லாத வழியாய்ப் போகும்போது, ஒரு பெண்பிள்ளை கடின வியாதியாயிருந்த தன் குழந்தையைக் கரங்களில் ஏந்திக் கொண்டு அவருக்கு எதிரிலோடித் தன் குழந்தையைச் சௌக்கியப்படுத்த வேண்டுமென்று அழுது மன்றாடினாள். தாழ்ச்சியினால் அர்ச்சியசிஷ்டவர் அவள் மன்றாட்டை செய்யாமலிருந்ததால், """""பாரிசவாய்வுள்ள தன் குழந்தையின்மேல் சிலுவை அடையாளமாவது அவருடைய கையால் வரையவேண்டுமென்று அவள் வெகு அழுகைப் பிரலாபத்தோடு கெஞ்சினாள், அந்தோனியார் தாழ்ச்சியினால் நடுங்கி வியாதிக்காரக் குழைந்தையின்மேல் சிலுவை அடையாளம் போடவே குழந்தை முழு சௌக்கிய மானதைக் கண்ட தாய் சர்வேசுரனுக்கும் அந்தோனியாருக்கும் நன்றியறிந்த தோத்திரங்கள் செலுத்தினாள்.


அவ்விடத்தில்தான் அநேகர் கேட்டுக் கொண்டதின் பேரில் 'ஞாயிற்றுக்கிழமைப் பிரசங்கங்கள்" என்று பெயர் கொண்ட பிரசங்கப் புத்தகமொன்று எழுதினார். அந்நகர் வாசிகளுடைய விசுவாசப் பற்றுதலையும் அவர்களுடைய நல்ல மனதையுங் கண்டு அவர்கள் மட்டில் அன்பு வைத்து அவர்களைத் தம்மாலான மட்டும் பாதுகாத்து வந்தார். 2-ம் பிரேதெரிக் (Frederic II) என்பவனுடைய மருமகன் எஸ்ஸெலினோ என்பவன் வெறோனா (Verona) பட்டணத்தையும் அடுத்த நகரங்களையுந் தன் கொடுங்கோன்மைக்கு உள்ளாக்கி, எங்கே பார்த்தாலும் கொள்ளையடித்து, ஆண் என்றும் பெண் என்றும், பிள்ளையென்றும் பாராமல் எல்லோரையும் பிடித்துச் சித்திரவதை செய்து சொல்லிடங்காத அநியாய அக்கிரமங்களை நடத்தி வந்தான். பதுவா நகர்வாசிகள் அந்தக் கொடிய வேதனைகளில் தாங்கள் அகப்படாதபடித் தங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று அந்தோனியாரை மன்றாட, அர்ச்சியசிஷ்டவர், தனியே, செபங்களும் தபசுமே அவருக்குத் துணையாயிருக்க, வேறு ஆயுதமொன்று மன்னியில் வெறொனா பட்டனஞ்சென்று கொடுங்கோலனைப் பார்க்கவேண்டுமென்று கேட்டார் அவனுக்கு முன்பாகக் கொண்டுபோய் விடப்பட்டபோது, தைரியமாய் அவனை நோக்கி 'கொடிய நிஷ்டூரனே, கடவுளின் சத்துராதியே, வெறிகொண்ட நாயே, கிறிஸ்துவர்களுடைய மாசற்ற இரத்தத்தை எத்தனை காலம் சிந்தப்போகிறாய் கடவுள் உனக்கு நியமித்திருக்கும் ஆக்கினைகளுக்கு நீ தப்பித்துக் கொள்ளப் போவதில்லையென்று நீ நிச்சயமாய் அறிந்திரு. உன் அக்கிரமங்களுக்குத் தகுந்த ஆக்கினையாகத் தான் இருக்கும்" என்று சொன்னார்.


 உடனே அவனைச் சுற்றிலுமிருந்த அவனுடைய சேவகர் அர்ச்சியசிஷ்டவரைத் துண்டு துண்டாய் வெட்ட அவன் தங்களுக்குக் கட்டளையிடுவான் என்று எண்ணி கத்திகளைத் தங்கள் கையிலேந்தித் தயாராய் நின்றார்கள். கொடுங்கோலன் பயந்து நடுங்கி அர்ச்சியசிஷ்டவர் பாதத்தில் விழுந்து தன் அக்கிரமங்களை ஏற்றுக்கொண்டு இனிமேல் அப்படிச் செய்வதில்லையென்று வார்த்தைப்பாடு கொடுத்தான் அந்தோனியார் பதுவா நகரத்திற்குத் திரும்பிப் போனார். எஸ்ஸெலினோ என்பவனோ தன்னைச் சுற்றிலுமிருந்தவர்கள் தன்னை இழிவாய் எண்ணுவதை அறிந்து அவர்களைப் பார்த்து: "நீங்கள் ஆச்சரியப்பட்டு என்பேரில் கோபங்கொண்டு என்னை நிந்திக்கவேண்டாம். ஏனெனில் அந்தோனியார் பேசினபோது அவருடைய முகத்தினின்று புறப்பட்ட பிரகாசம் என்னிடத்தில் எவ்வளவு பயங்கரம் உண்டாக்கினதென்றால் அப்போதே நரக பாதாளத்தில் தள்ளப்படுவதாக நினைத்தேன்' என்றான். பிறகு கொடுங்கோலன் சில வெகுமதிகளைத் தன் தூதர் மூலம் கொடுத்தனுப்பிச் சொன்னதாவது: அந்தோனியார். அவைகளை ஏற்றுக் கொண்டால், உடனே அவரைக் கொன்று விடுங்கள், ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவருக்குத் தீங்கு செய்யாமல் திரும்பி வந்துவிடுங்கள் என்று சொல்லி அனுப்பினான் அந்தோனியார் அவர்களைக் கண்ட மத்திரத்தில் அவர்களைக் கடித்து அனுப்பிவிட்டார். நடத்த சங்கதியை அறித்த கொடுங்கோலன் பெருமூச்செறிந்து *அந்தோனியார் சர்வேசுரனுடைய மனிதர் அவர் என்ளைப் பற்றி என்ன சொல்லுகிறதானாலும் சொல்லட்டும் என்றான். இக்காலத்திலும் வேத விரோதிகள் அநேகர்,  இத்தேசத்தில் நம்முடைய வேதத்தைப் பழித்து, இகழ்ந்து நம்மை நித்திக்கிறவர்கள் அநேகர் ஆயினும் நமது வேதத்தில் நாம் உறுதியாயிருந்து நமக்கு வரப்பட்ட நிந்தை அவமான நஷ்டங்களைத் தைரியய்ச் சகிக்கக்கடவோம்.



செபம்


மகா மகிமை பொருந்திய அர்ச் அந்தோனியாரே, உமது செயத்தினாலும் போதனையினாலும், அநேக ஆயிரம் பிரிவினைக்காரரை மனந்திருப்பினீரே, நாங்கள் முழுதும் மனம் திரும்பி சர்வேசுரனுக்கு எங்களை என்றென்றைக்கும் கையளிக்கும்படிக்குக் கிருயை செய்தருளும் ஆமென்.


நற்கிரியை  - பதிதருக்காக வேண்டிக்கொள்ளுகிறது.

மனவல்லயச் செயம்: பதிதருடைய சம்மட்டியான அர்ச். அந்தோனியாரே. எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Devotion to St. Antony (day 23) in Tamil

 இருபத்துமூன்றாம் நாள்


பதுவா பட்டணத்தில் நடந்த நிகழ்ச்சிகள் 


சர்வேசுரன் அந்தோனியாருக்கு அளித்தருளின தேவ வரப்பிரசாதமும், ஆத்துமங்களை மனந்திருப்புகிற வல்லமையும் பதுவா பட்டணத்தில்தான் விசேஷமான விதமாய் விளங்கிற்று.


அப்பட்டணத்தில் 1228-ம் வருஷம் பெப்ரவரி மாதம் 9-ந் தேதி விபூதித் திருநாளன்று தபசுகாலப் பிரசங்கங்களை அந்தோனியார் ஆரம்பித்தார். பிரிவினைக்காரர் நிறைந்திருந்த அவ்விடத்தில் அவர்களை இரக்ஷிப்பதற்காக அந்தோனியார் வெகு ஆவலுடன் தேடித் தம்மாலான பிரயாசப்பட்டு அவர்களெல்லோரையும் நல்வழியிற் சேர்க்கவேண்டுமென்கிற கவலைகொண்டு பிரசங்கிக்கவே, முதற் பிரசங்கத்தைக் கேட்டபோதே அநேகர் அவர் போதனைகளையும் நாவன்மையையும் கண்டு அதிசயித்துத் திரள் திரளாய் அவருடைய பிரசங்கத்தைக் கேட்க வரத் தொடங்கினார்கள்.


அவர் பிரசங்கம் பண்ணும்போதோ அவ்வளவுபெரிய சனக்கும்பலில் யாதொரு முறைப்பாடோ, பரிகாசமான வார்த்தையோ, சிரிப்போ, அல்லது வேறெவ்விதமான சத்தமோ கேட்கப்படாமல் எல்லோரும் வெகு அமரிக்கையாயிருந்தார்கள். புத்தியில்லாத சிறு குழந்தைகள் முதலாய் அழுதாவது சந்தடி செய்தாவது அமரிக்கையை கெடுக்காமல் பெரியவர்களைப் போலவே இருந்தார்கள்.


ஆனதால் அநேகானேக ஆச்சரியமான பிரயோசன முண்டாகித் திரளான பேர் மனந்திரும்பினார்கள். பகையினால் நெடுங்காலம் பிரிந்திருந்தவர்கள் சமாதானத்தில் ஒன்றித்தார்கள். அறியாய வட்டி வாங்கினவர்கள் தாங்கள் அக்கிரமமாய்ச் சம்பாதித்த பொருட்களை உத்தரித்தார்கள். கடன் பட்டிருந்தவர்கள் தாங்கள் வாங்கின கடன்களைத் திரும்பக் கொடுத்துவிட்டார்கள். சிறையிலிருந்தவர்கள் அநேகர் விடுதலை செய்யப்பட்டார்கள். சகல வழக்குகளிலும் அந்தோனியாரை மத்தியஸ்தராகத் தெரிந்துகொண்டார்கள்..


அவருடைய பெயர் எவ்வளவு தூரம் பிரபல்வியமான தென்றால், அடுத்த விடங்களில் வழிப்பறிசெய்து கொள்ளையடித்து வந்த திருடர் முதலாய் அவருடைய பிரசங்கத்தை கேட்டுத் தங்களுடைய திருட்டுத் தொழிலை விட்டார்கள். ஒரு நாள் பன்னிரண்டு திருடர், சேர்ந்து கொள்ளையடித்தவர்கள், அர்ச்சியசிஷ்டவருடைய பிரசங்கத்தைக் கேட்க வந்தார்கள். அவர்களில் ஒருவன் வெகு காலத்துக்குப் பிறகு 1292-ம் ஆண்டில் தன்னுடைய முதிய வயதில் பிரான்சீஸ்கு சபைச் சந்நியாசியார் ஒருவரிடத்தில் சொன்னதாவது: *காட்டில் நாங்கள் பன்னிரண்டு பேர் வழிப்போக்கரைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தோம். ஆனால் அர்ச். அந்தோனியார் செய்துவந்த நன்மைகளையும் அற்புதங்களையும் பற்றிக் கேள்விப்பட்டு, ஒருநாள் வேஷமாற்றிக்கொண்டு அவர் செய்த பிரசங்கத்தைக் கேட்கப் போனோம். அவர் செய்த உருக்கமான பிரசங்கத்தைக் கேட்டு எங்களுடைய மனதில் திகிலும் வெட்கமுமுண்டாகி அவருடைய பிரசங்கம் முடிந்தபோதே எங்களுடைய அக்கிரமச் செயல்களுக்காக நாங்கள் மிகவும் மனஸ்தாபப் பட்டழுது ஒருவனுக்குப்பின் னொருவனாய் அவரிடத்தில் பாவசங்கீர்த்தனம் பண்ணினோம். திரும்பவும் நாங்கள்21ஆம் நான்


கொள்ளையடிக்காதபடிக்கும் எங்கள் அனியாயனை விட்டுவிடும் படிக்கும் அந்தோனியார் கட்டளையிட்டு அவர் கட்டலையிட்ட பிரகாரஞ் செய்கிறவர்கள் இரசூலினியம் அடைவார்களென்றும் கட்டளையிழி நடத்தவர்களோ நித்திய தரகாக்கினைக்கு உள்ளாவார்களென்றும் அறிவித்தார். சிவர் இட்டாக்கியமாய் அவருடைய கட்டளையை மீறி அவலான மரண மடைந்தார்கள். வேறுசிலர் சமாதானத்தில் மரித்தார்கள். எங்களுடைய பாவங்களுக்கு அபராதமாகப் பன்விரண்டுவிசை அப்போஸ்தலர்களுடைய கல்லறையைச் சந்திக்க வேண்டுமென்று அர்ச்சியகிஷ்டவர் கட்டளை பிட்டிருந்தார். இதோ இன்றையத்தினம் நான் பன்னிரண்டாம் முறை கல்லறையைச் சந்திக்கிறேன் என்று திரளான கண்ணீர் சொரிந்து சொன்னான்,


ஒருநாள் பிரசங்கம் கேட்டிருந்தவர்களில் ஒருவன் அந்தோனியாரிடம் வந்து அழுது புலம்பித் தேம்பித் தேம்பித் தன்பாவங்களைச் சொல்லும் போது, அவன் தன் பாவங்களையெல்லாம் ஒரு கடுதாசியில் எழுதச் சொல்லி, அதை அவர் வாசிக்க வாசிக்க, கடுதாசி வெற்றுக் கடுதாசி யானதைக் கண்டு அதிசயித்துத் தன் பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டனவென்று உறுதியாய் எண்ணினான்.


பாவசங்கீர்த்தனத்தை நாம் சரியாய்ச் செய்வதினால நமக்குண்டாகும் நன்மையை நாம் நன்றாய் யோசித்துக் கண்டுணாரக்கடவோம். ஐயோ. நமக்குள்ளாக எத்தனையோ பேர், தம்முடைய ஆத்துமத்தைச் சரியாய்ச் சோதிக்காமலும். மனஸ்தாபமில்லாமலும், பிரதிக்கினையில்லாமலும் சரியாய் வெளிப்படுத்தாமலும், கள்ளப் பாவசங்கீர்த்தனம் பண்ணித் தேவத் துரோகம் கட்டிக்கொள்ளுகிறோம். அதற்கு விரோதமாய் நல்ல பாவசங்கீர்த்தனத்தால் நமது ஆத்துமங்களைக் கழுவி சேசுநாதருடைய திரு இரத்தப் பலன்களை அடையப் பிரயாசைப்படக்கடவோம்


செபம்


எஸ்பாஞா தேசத்தின் ஆச்சரியத்துக்குரிய ஜெயவீரரே, அவிசுவாசிகளின் பயங்கரமே, இத்தாலியாவின் தீபமே, பதுவா பட்டணத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷமே, சர்வேசுரன் எங்களுக்குக் கொடுத்திருக்கும் சீவியகாலத்தை நாங்கள் உத்தம விதமாய்ப் பிரயோகித்துத் தபசின் நல்ல கனிகளை நாங்கள் பெறுவிக்கும் வரம் எங்களுக்கு அடைந்தருள தயை செய்யும். ஆமென்.


நற்கிரியை: நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது. 

மனவல்லயச் செபம்: பாவிகளுக்கு அடைக்கலமான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Devotion to St. Antony (Day 22)

 இருபத்திரண்டாம் நாள்


ரிமீனி (Rimini) பட்டணத்தில் நடந்த நிகழ்ச்சிகள்


சேசு கிறிஸ்துநாதர் தமது மிகவும் பிரமாணிக்கமுள்ள ஊழியரான அந்தோனியாருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைப் புத்தியில்லாத அற்ப சிருஷ்டிகளைக்கொண்டு மற்ற மனிதருக்கு முன்பாக வெளிப்படுத்தி அவர்களுக்குப் புத்தி படிப்பித்து மனந்திரும்பும் படி செய்யச் சித்தமானார். எப்படியென்றால், பிரிவினைக்காரர் பெருமளவு இருந்த ரிமினி பட்டணத்துக்கு அர்ச். அந்தோனியார் சென்று அவர்களை மனந்திருப்புவதற்கு வேண்டிய பிரயத்தனமெல்லாம் செய்தும் அவர்கள் கல்நெஞ்சராய்த் தமது பிரசங்கங்களை முதலாய்க் கேட்க மனமில்லாமல் வராதிருக்கிறதைக் கண்டு, அர்ச்சியசிஷ்டவர் சர்வேசுரனை நோக்கி மன்றாடி. அபரிமிதமான கண்ணீர் சொரிந்து, இஸ்பிரீத்துசாந்துவினால் ஏவப்பட்டு, சுற்றி நின்றவர்களை நோக்கிப் புத்தியுள்ள மனிதருக்குத் தேவ வாக்கியங்களைக் கேட்க 

மனமில்லாதிருந்ததால் புத்திரில்லாத அற்பப் பிராணிகளுக்குச் சர்வேசுரனுடைய மகத்துவத்தை வெளிப்படுத்தப் போகிறதாகச் சொல்லி கடலோரம் சென்றார். அவர் அவ்விடத்தில் செய்யப்போவதென்னவென்று அறிய ஆசையினால் அநேகர் அவரைத் தூரத்திற் பின் சென்றார்கள். அவர் கடலோரம் சேர்ந்தபோது மீன்களெல்லாவற்றையுந் தமது பிரசங்கம் கேட்க வரவழைத்தார். உடனே மீன்களெல்லாம் சிறிதும் பெரிதுமாய் கரையோரம் வந்து சின்ன மீன்கள் வரிசை வரிசையாய் மணலோரத்திலும், அவைகளுக்குப் பின்னால் நடுத்தரமான மீன்களும், கடைசியில் பெரிய மீன்களும் வரிசைக் கிரமமாயிருந்து தலையெடுத்து அவர் பக்கமாய் வெகு கவனத்தோடு பார்த்துக்கொண்டிருந்தன. அப்போது அந்தோனியார் அவைகளுக்குப் பிரசங்கம் பண்ணினார். இந்த ஆச்சரியத்தைக் கண்ட பிரிவினைக்காரர் அர்ச்சியசிஷ்ட வருடைய பாதத்தில் விழுந்து மன்றாடவே அவர் அவர்களுக்கு வெகு உருக்கமாய்ப் பிரசங்கம் பண்ணி அவர்கள் தப்பறைகளையும் துர்நடத்தையையும் எடுத்துக்காட்ட அவர்களில் அநேகர் மனந்திரும்பினார்கள். பிறகு அவர் மீன்களை ஆசீர்வதித்து அனுப்பிவிட்டு ரிமினி பட்டணத்தில் சில நாள் தங்கி எல்லோரையும் வேத சத்தியங்களில் உறுதிப்படுத்தினார்.


ஆனாலும் மனந்திரும்பாத சில கொடிய பாவிகள் அவைரப் பழிவாங்கி அவரைக் கொல்ல நினைத்து அன்பு காண்பிப்பவர்களைப் போல அவரை விருந்துக்கு அழைத்து விஷங்கலந்த பதார்த்தங்களை அவருக்கு முன்பாக வைத்து அவைகளைச் சாப்படும்படி அவரைக் கேட்டார்கள். ஞான திருஷ்டியால் அவர்களுடைய மோசக் கருத்தை அறிந்த அவர் அவர்கள் மோசக் கருத்தை வெளிப்படுத்தி, அவர்கள் செய்தது அக்கிரமமென்று அவர்களுக்குச் சொன்னபோது "விஷத்தையுண்ட போதிலும், அதனால் அவர்களுக்கு யாதொரு தீங்கும் நேராது" என்று சேசுநாதர் தமது அப்போஸ்தலருக்கு சொன்னதில்லையோ? அதன் உண்மையைப் பரிட்சை பார்க்கிறதற்காகத்தான் இப்படிச் செய்தோமென்று சொன்னார்கள். உடனே நமது அர்ச்சியசிஷ்டவர் ஆண்டவரை நோக்கி வேண்டிக்கொண்டு, அவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: 'நீங்கள் கேட்கிற பிரகாரம் நான் செய்யப் போகிறேன். சுவாமியைச் சோதிப்பதற்காக அல்ல, ஆனால் உங்களுடைய இரக்ஷணியத்தையும், திருச்சபையின் மகிமையையும் நான் எவ்வளவு ஆசிக்கிறேன் என்றால் அதற்காக எதுவும் செய்யத் துணிந்திருக்கிறேன் என்று காண்பிக்கிறதற்காகவே நீங்கள் கேட்ட பிரகாரஞ் செய்யப் போகிறேன் என்று சொல்லி, விஷங்கலந்த பதார்த்தத்தைக் கையிலெடுத்து சிலுவை அடையாளம் வரைந்து அவரைக் கொல்ல நினைத்தவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருக்க அதைச் சாப்பிட்டார். ஆனால் அவருக்குக் கெடுதியொன்றும் உண்டானதில்லை. அதற்கு விரோதமாய் வர அவரைக் கொல்லத் தேடினவர்களெல்லோரும் மனந் பது திரும்பினார்கள். இந்தப் பிரகாரமே வேறநேக சமயங்களிலும் அவரைக் கொல்லத் தேடினவர்கள் முயற்சி வியர்த்தமாய்ப் போய் நன்மையே விளைந்தது.


நமது சீவியக்காலத்தில் உண்டாகும் இக்கட்டுகளால் நமக்கு அதைரியம் உண்டாகும் போது அர்ச் அந்தோனியாரை நினைத்து அவருடைய பொறுமை சாந்தகுணத்தைக் கண்டு ஆறுதலடையக்கடவோம்.


செபம்


புத்தியுள்ள மனிதர் உமது அருமையான பிரசங்கங்களைக் கேட்க மனமிராதிருந்தபோது, சர்வேசுரனுடைய ஏவுதலாற் கடலின் மச்சங்களுக்குப் பிரசங்கம் பண்ணின அர்ச் அந்தோனியாரே! எங்கள் புத்தி, மனது, நினைவு இவைகளைச் சர்வேசுரனுடைய சித்தத்துக்கு எப்போதும் கீழ்ப்படுத்தி நடந்து நித்திய மோட்சம் இராச்சியஞ் சேரக் கிருபை அடைந்தருளும். ஆமென்.


நற்கிரியை: உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்காகப் பூசை செய்து வைக்கிறது.


மனவல்வயச் செபம்: புதுமைகளால் பிறந்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.