மகா பரிசுத்த தேவ நற்கருணைத்திருநாளன்று மனந்திரும்பிய
அஞ்ஞானியாக இருந்த விஞ்ஞானி
பல
வருடங்களுக்கு முன், லண்டனில், ரிச்சர்டு என்ற 30 வயதுடைய
ஒரு இளம் விஞ்ஞானி வாழ்ந்து வந்தான். அவன், கத்தோலிக்க
வேதத்தை முற்றிலுமாக வெறுத்து வந்தான்; சத்திய
கத்தோ லிக்க வேதத்திற்கும், திருச்சபைக்கும்
எதிராக அநேக புத்தகங்கள் எழுதியும், பேசியும்
வந்தான். கத் தோலிக்க வேதத்தை அனுசரித்து வந்த அயர்லாந்து நாட்டைப் பற்றியும், அந்நாட்டின் கத்தோலிக்க
குருக்கள் பற்றியும், அங்கு வாழ்ந்த பாமரர்களான
கத்தோலிக்கர்கள் பற்றியும், அவதூறாகவும், ஏளன மாகவும் எழுதி வந்தான்.
கடவுள் என்று ஒருவர் இல்லை, என்று அவன்
கூறி வந்தான். ஒரு நாள், திடீ
ரென்று, அவனுக்கு
மூச்சு விடுவதற்கு மிகக் கஷ்ட மாயிருந்தது. உடனே, மருத்துவரிடம் சென்றான். அவனுடைய
இருதயத்தையும், நுரையீரலையும்
மருத் துவர் பரிசோதித்தார்.
பரிசோதனைக்குப்
பிறகு, உன் இடது சுவாசப்பை
யில்
கோளாறு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு நீ நன்கு ஓய்வெடுக்க வேண்டும்.
ஓய்வெடுக்காவிட்டால், இரு
மாதங்களுக்குள்,
இறந்து போய் விடுவாய்!
எச்சரிக்கையாயிரு ,
என்று கூறினார். அதைக் கேட்டதும், திடுக்கிட்ட ரிச்சர்டு, டாக்டர், நான் நீங்கள் சொன்னபடி, ஓய்வெடுத்தால், எவ்வளவு காலம் உயிருடனிருப்பேன்? என்று
கேட்டான். ஒன்று,
அல்லது இரண்டு வருடங்கள் உயிருடன்
வாழலாம், என்று, மருத்துவர்
பதிலளித்தார். இதைக் கேட் டதும் , ரிச்சர்டின்
முகம் வெளுத்துப்போனது. அவன், மருத்துவரிடம், டாக்டர், என்னால், இதை நம்ப முடியவில்லை! எனக்கு இன்னும் 30 வயது கூட ஆகவில்லையே! பயனற்ற மனிதர்கள் பலர் உயிருடன்
இருக்கின்றனரே! நான், ஏன் இந்த
வயதில் சாக வேண்டும்? என்று
கேட்டான். அதற்கு,
மருத்துவர், அவனிடம் , ரிச்சர்டு!
இந்தத் துயரச் செய்தியை அறிவிப்பது எனக்கே மிகக் கஷ்டமாக இருக்கிறது! உனக்கு, ஒரு ஆலோசனையை நான் கூறுவேன். அயர்லாந்திற்குச் செல். அங்கு
நல்ல சுத்தமான காற்று கிடைக்கும். அமைதியும், இளைப்பாற்றியும்
கிடைக்கும், என்று கூறினார்.
ரிச்சர்டு , விதி எனக்கு இரக்கமின்றி துரோகம் செய்திருக்கிறது, என்று கூறிக்கொண்டு, தன்
வீட்டிற்குத் திரும்பினான். சமீப காலத்தில், அவன் உடல்
நலமில்லாமலிருந்தான்; கடின
உழைப்புடன் கூடிய விஞ்ஞான ஆராய்ச்சியில், ஓய்வில்லாமல், தொடர்ந்து அதிக நாட்கள் ஈடுபட்டிருந்தான். தன் ஆராய்ச்சியில்
உயர்ந்த பட்டங்கள் பெற்றிருந்தான்; பலரிடமிருந்தும், பாராட்டுக்கள் கிடைத்தன! ஆனால், மருத்துவப்
பரிசோதனைக்குப் பிறகு, தன்னை
விஞ்ஞானத்தில் வளர்த்த இந்த லண்டன் நகரமே , தன்னை
எங்கேயோவது ஓடி ஒளிந்துகொள்! என்று கூறுவது போல் , ரிச்சர்டுக்குத்
தோன்றியது! தான் இறந்த பிறகு, தான்
விஞ்ஞானத்தில் பெற்ற பட்டங்கள், சாதித்த
சாதனைகள் எல்லாம் எங்கே போகும்? என்று
ஆழ்ந்து சிந்தித்தான்; தன்
நண்பர்களும், தன்னைப் பாராட்டிய கல்வியாளர்களும், பகுத்தறிவாளர்களும், சகல
மனிதர்களும், தனது இறப்பிற்குப் பிறகு, தன்னை மறந்து விடுவார்களே, என்று
சிந்தித்தபோது, அவனுடைய உள்ளத்தில், ஒரு திட்டம் உதித்தது. தன்னுடைய வீழ்ச்சியை, உலகம் அறிந்துகொள்ளக்கூடாது. அதற்கேற்ற ஒதுக்குப்புறமான
இடத்திற்குச் செல்ல வேண்டும் என்கிற திட்டம் தான், அது.
அப்போது, அயர்லாந்து நாட்டிற்குச் செல்ல வேண்டும், என்று கூறிய மருத்துவரின் ஆலோசனை, அவனுடைய மனதில் உதித்தது.
புராட்டஸ்டன்டு
பதித் தப்பறையைப் பின்பற்றுகிற நாடாகிய இங்கிலாந்தினுடைய தலை நகர் லண்டனில் இயங்கி
வந்த ஒரு பதித பத்திரிகையில், வேத
விசுவாசமில்லாத அஞ்ஞானியாக இருந்த இளம் விஞ்ஞானி ரிச்சர்டு , அயர்லாந்து நாட்டைப் பற்றிக் கடுமையாகத் தாக்கி எழுதியிருந்
தான். அயர்லாந்து நாடு, கத்தோலிக்கக்
குருக்கள் மலிந்த நாடு. விஞ்ஞானத்தில் வளர்ச்சியடையாத பின்தங்கிய நாடு தான்
அயர்லாந்து, என்று எழுதியிருந்தான். ஆனால், இப்போது, அந்த
நாட்டிற்கே செல்லும்படியாயிற்றே, என்று
முதலில் சிறிது தயங்கினான். விஞ்ஞானத்தில் பிரபலமாயிருந்த சகல நாடுகளிலிருந்தும்
ஒதுக்குப்புறமாயிருந்த அயர்லாந்து நாட்டிற்குச் செல்வதன் மூலம், அகில உலக விஞ்ஞானிகளிடமிருந்து, தனது
வீழ்ச்சியை, அதாவது, தனது
இறப்பை மறைத்துக் கொள்ளலாம், என்பதால், அயர்லாந்திற்கே செல்ல தீர்மானித்தான்.
இறுதியில்
அயர்லாந்திலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று வசித்து வந்தான். அந்த கிராமம் மிக
அழகாகக் காட்சியளித்தது. அன்று வியாழக்கிழமை. அந்த கிராமம் இன்னும் கூடுதல் அழகு
டன் காட்சியளித்தது. நகரின் முக்கியமான பாதையை நோக்கி அவன் நடந்து கொண்டிருந்தான்.
இருபுறமும், வயல்வெளிகளும், ரோஜா மலர்களும் கண்குளிரக்காட்சியளித்தன. முக்கியமான பாதை யின்
அருகில் சென்றபோது,
மக்கள் கூட்டம், கூட்டமாக எங்கோ விரைந்து செல்வதைக் கண்டான். அவர்கள் சிறந்த
ஆடை அணிந்திருந்தனர். சிறுமிகளும், பெண்களும்
முக்காடு அணிந்திருந்தனர்; சிறுமிகள், மலர்களைக் கரங்களில் ஏந்திச் சென்றனர். ஒரு முதியவர், நொண்டியபடியே, அந்த
பக்கம்
வந்தார்.
அவரிடம், ரிச்சர்டு, இன்றைக்கு , இந்த ஊரில்
என்ன விசேஷம்? என்று, கேட்டான்.
அவர், அவனிடம், நீ என்ன
இந்த ஊருக்குப் புதிதா? இன்று, என்ன திருநாள் என்று, இந்த ஊரிலிருக்கும்
சிறு குழந்தைகள் கூட சொல்லுமே! இன்று, தேவ நற்
கருணைத் திருநாள் ! கத்தோலிக்கத்திருச்சபை கொண் டாடும் திருநாட்களிலெல்லாம் மிகப்
பெரிய திரு நாள் ,
இது தான்! இந்நகரின் முக்கியமான
தெரு வழி யாக, தேவ நற்கருணை சுற்றுப்பிரகாரம் நிகழும், என்று பதிலளித்தார். சுற்றுப்பிரகாரமா, அப்படியென் றால் என்ன? என்று
ரிச்சர்டு கேட்டான். அதற்கு அம் முதியவர், அவனிடம், திவ்ய நற்கருணையில் திரு ஆத்துமத்துடனும், திருச்சரீரத்துடனும், தேவ
சுபாவத்துடனும்,
மனித சுபாவத்துடனும்
எழுந்தருளியுள்ள சேசுகிறீஸ்துநாதருக்குத் தோத்திரமாக சுற்றுப்பிர கார பவனி
நடக்கும். அப்ப வடிவில் ஆண்டவர் எழுந்தருளியிருக்கும் திவ்ய நற்கருணையை, ஒரு பொற்கதிர்பாத்திரத்தினுள் வைத்து ஸ்தாபிப்பார்கள்; குருவானவர், அல்லது
மேற்றிராணியார்,
அக் கதிர்பாத்திரத்தை மிகுந்த
சங்கை மேரையாக எடுத்து, தேவாலயத்திலிருந்து
கிளம்பி, நகரத் தெருக்க ளில் பீடப்பரிசாரகர் புடை
சூழ, நடந்து வருவார்; விசுவாசிகள் ஜெபமாலை ஜெபித்தபடி, அல்லது தேவ
தோத்திரப் பாடல்கள் பாடியபடி, பக்தி
பற்றுதலுடன் பின்தொடர்ந்து வருவார்கள். வழியில் வருபவர்கள் எல்லோரும், சுற்றுப்பிரகாரமாக வரும் தங்களுடைய திவ்ய கர்த்தரை, அந்தந்த இடங்க ளிலேயே முழங்காலிலிருந்து, பணிந்து ஆராதிப்பார்கள். இறுதியில், சுற்றுப்பிரகாரப் பவனி, தேவா
லயத்தில் வந்து முடிவடையும், அதன் பின், தேவாலயத்தில் பிரசங்கமும், தேவநற்கருணை
ஆசீர்வா தமும் நடைபெறும். அங்கே தான் நான் போகிறேன். நீயும், வரலாம்,
முதியவர் பேசியதை
அவ்வளவு நேரமும்,
அலட்சியமாகக் கேட்டுக்
கொண்டிருந்த ரிச்சர்டு, அவரிடம், உங்கள் முதிர்வயதில், நொண்டியபடி, கஷ்டப்பட்டுக்கொண்டு, இப்படி
கட்டாயமாகப் போக வேண்டுமா? வீட்டில்
இருக்கக் கூடாதா?
என்று கேட்டான். அதற்கு அந்த நல்ல
முதியவர், அவனிடம், நம்
எல்லோரையும் சிருஷ்டித்த சர்வேசுரன், ஆடம்பரமாக
சுற்றுப்பிரகார பவனி வரும் போது, நான்
எப்படி வீட்டில் தங்கியிருக்க முடியும்? நானும்
சென்று, நம்மைச் சந்திக்க வரும் திவ்ய
கர்த்தரைத் தோத்தரித்து வணங்கி ஆராதிக்க வேண்டுமல்லவா? பாலஸ்தீனத்தில், ஆண்டவர்
நடந்து சென்றபோது,
ஜெருசலேம் நகர மக்கள், ஆர்ப்பரித்து அவரை ஸ்துதித்தார்களல்லவா? இப்போது, அதே போல், நம் ஊரின் தெருக்களிலும், அதே கடவுள்
நம்மைச் சந்திக்க வருகின்றார்; நானும், அவரை ஆராதிப்பதற்குச் செல்கிறேன், என்று பதிலளித்தார். அதற்கு, ரிச்சர்டு , அவரிடம், அந்த சிறு
அப்பத்தில், கடவுள் உண்மையாக இருக்கிறார் என்று , நீங்கள் நம்புகிறீர்களா? என்று
கேட்டான். இதைக் கேட்டதும், முதியவர், அதிர்ச்சியடைந்தார்; பிறகு, அவனிடம், நீ , ஒரு புராட்டஸ்டன்டு பதித மதத்தைச் சேர்ந்தவனா? என்று கேட்டார். அதற்கு, அவன், கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை, என்று கூறினான். அதற்கு, அவர், கடவுளிடம் உனக்கு நம்பிக்கை இல்லையா? அப்படியென்றால், உனக்கு என்
ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.
அதற்கு, அவன், நான் ஒரு
விஞ்ஞானி. கடவுள் இருக்கிறார், என்பதைப்பற்றி
உங்களுக்கு சந்தேகமே கிடையாதா? என்று
கேட்டான். முதியவர், அவனிடம், என்ன? நீ , ஒரு விஞ்ஞானியா? உண்மையில், ஒரு விஞ்ஞானி, கடவுளை
அறியாத அஞ்ஞானியாக இருக்க முடியாது. அப்படியென்றால், உண்மையில், நீ ஒரு விஞ்ஞானியாக இருக்க முடியாது. இந்த உலகைப் பார்க்கும்
ஒரு சாமானிய பாமர மனிதனாலேயே இப்பரந்த பிரபஞ்சத்திற்கு அதன் காரண கர்த்தவாகிய
சர்வேசுரன் ஒருவர் இருக்கிறார், என்பதை மிக
எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடுமாயிருக்கும் போது, அறிவியலில்
ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஒரு விஞ்ஞானியால், இந்த
உண்மையை எப்படிப் புரிந்து கொள்ள முடியாமல் போனது? அப்படியென்றால், அஞ் ஞானிகளால், கடவுள்
இருப்பதை நம்ப முடியாததற்குக் காரணம், அவர்களுடைய
ஆங்காரம் தான்; அது தான், அவர்களுடைய
அறிவை இருட்டடிப்புச்செய்து, சர்வேசுரனிடமிருந்து, அவர்களைப் பிரித்து விடுகிறது, என்று, சிறு ஞான உபதேசத்தைக் கற்பித்தார்.
ரிச்சர்டு , அவரிடம், அந்த சிறு
அப்பத்தில், கடவுள் இருக்கிறார், என்று நம்புகிறீர்களா? என்று
மறுபடியும், கேட்டான். அதற்கு, நான் இந்த அழகிய உலகத்தை நோக்கிப் பார்க்கிறேன். கடவுளைத் தவிர, வேறு யார் இதை உண்டாக்கியிருக்க முடியும்? கடவுள் எல்லாம் வல்லவர். அந்த சிறு அப்பத்தினுள் தம்மை மறைத்து
வைப்பது, அவருக்குக் கடினமல்ல, என்று கூறினார். அயர்லாந்து, பாமர
மக்கள் நிறைந்த நாடு என்று மிக ஏளனமாக, முற்காலத்தில், லண்டன் நகரப் பத்திரிகையில் தான் எழுதியிருந்ததை ரிச்சர்டு, நினைவு கூர்ந்தான். ஆனால், அது
எவ்வளவு தவறு! உண்மையில், இந்நாட்டு
மக்கள், ஞானமுள்ளவர்களாக இருக்கின்றனர், என்பதை, அவன்
உணரத்துவக்கினான். அச்சமயம், ஒரு
மேட்டிலிருந்து ரிச்சர்டு, மக்கள்
கூட்டத்தைப் பார்த்தான்; செல்வந்தர்களும், ஏழைகளும், இளைஞர்களும், முதியவர்களும் அடக்க ஒடுக்கமாக நடந்து செல்வதைக் கண்டான்; பக்தியுடன் நடந்து சென்ற அவர்களின் பார்வையில், வேத விசுவா சத்தைக்கண்டான்; அவர்கள்
இருதயம், பரலோகசந்தோஷத்தினால், நிறைந்திருந்தது! ஆண்டவர் சுற்றுப் பிரகாரமாக வரும்பாதையில், சிறுவர்களும், சிறுமியர்களும், ரோஜா மலர்களைத் தூவிக் கொண்டே சென்றனர். இனிய பாடல்கள்
பாடியபடி சென்றனர். நான்கு பேர் தூக்கிச் சென்ற ஒரு குடையின் நிழலில், குருவானவர், பொற்கதிர்பாத்திரத்தை
பக்தி பற்றுதலுடன் ஏந்தியபடி, நடந்து
சென்றார்.
ரிச்சர்டு
நின்று கொண்டிருந்த மேட்டுப் பகுதியை சுற்றுப்பிரகார பவனி , அணுகிக் கொண்டிருந்தது. அருகில் வர வர, குருவானவர் கரத்திலிருந்த பொற்பாத்திரத்தினுள்ளிருந்த திவ்ய
அப்பத்தை ரிச்சர்டு , நோக்கிப்
பார்த்தான். குருட்டாட்டம், விக்கிரக
ஆராதனை என்று கத்தோலிக்கர்களின் பக்தி முயற்சிகள் பற்றி லண்டன் பத்திரிகைகளில்
அவன் எழுதிய கட்டுரைகள், ரிச்சர்டுக்கு
ஞாபகத்திற்கு வந்தன. விஞ்ஞானமே கடவுள், என்று
அதில் அவன் எழுதியிருந்தான்; எவ்வளவு
பெரிய தப்பறையை எழுதிவிட்டேன்! அதுவும் கடவுளுக்கு எதிராக எழுதிவிட்டேன், என்று சிந்திக்கலானான். ஏனெனில், இப்போது, சாவு, அவன்
கண்முன் நின்றது. உலகப்புகழ் பெற்ற , மிகச்
சிறந்த விஞ்ஞானியான லூயி பாஸ்டர் எழுதிய வாக்கியங்கள் பற்றி சிந்தித்தான்; அவை உண்மையிலேயே, இந்த
அயர்லாந்து நாட்டின் முதியவர், இவ்வளவு
நேரம் தனக்குக் கூறிய ஞான உபதேசத்தைப் போலவே இருப்பதைப் பற்றி ஆழ்ந்து
சிந்தித்தான் : பிரிட்டனி நாட்டு , ஏழைக்
குடியானவன் சர்வேசுரனிடம் கொண்டிருக்கும் விசுவாசம் என்னிடமும் இன்னும் உறுதியாக இருக்கிறது
என்பது பற்றி நான் மகிழ்கிறேன். விஞ் ஞானத்தில் நான் வளர்ச்சி அடைய அடைய , என் விசுவாசமும் இன்னும் கூடுதல் உறுதி பெறும் என்று
நம்புகிறேன். பிரிட்டனி நாட்டு ஏழைக்குடியானவனின் மனைவியின் விசுவாசத்தைப் போல், என் விசுவாசமும் உறுதி பெறும் என்பது நிச்சயம், என்று லூயி பாஸ்டர் எழுதியிருந்தார். இவ்வளவு காலமாக, உலகில் தன்னைச் சுற்றியிருந்த சகல பொருட்களும், சர்வேசுரன் இருக்கிறார், என்று
உணர்த்திய மாபெரும் சத்தியத்தை ஏற்காமல், அஞ்ஞானியாக
வாழ்ந்ததைப் பற்றி,
ரிச்சர்டு வெட்கப்பட்டான்;
கடவுள்
இல்லை என்று கூறியதுடன், சர்வேசுரனை
முழுமையாக அறிந்து,
சிநேகித்து, சேவித்து, பரலோக
சமாதானத்துடன் அமைதியாக வாழ்ந்து வரும் கத்தோலிக்கர்களுடைய அயர்லாந்து நாட்டைப்
பற்றி ஏளனமாகப் பேசினேன். ஆனால், என் மேல்
அளவில்லாத சிநேகமுள்ள திவ்ய கர்த்தர், தயாளம்
நிறைந்த தமது பராமரிப்பினால், வேத
விசுவாசம் என்கிற உன்னத கொடையை நான் பெற்றுக்கொள்ளும்படி, என்னை, அதே
அயர்லாந்து நாட்டிற்கு வரும்படிச் செய்திருக்கிறார்; இந்த
உண்மையான விஞ்ஞானியான லூயி பாஸ்டரிடம் இருந்த வேத விசுவாசம், எனக்கும் வேண்டும், என்று
முதன் முதலாக சிந்திக்க ஆரம்பித்தான். தேவ வரப்பிரசாத ஏவுதலுக்குச்
செவிசாய்த்தான்.
அயர்லாந்து
நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில், மக்கள்
அனுபவித்து வந்த அமைதியையும், பரலோக
சந்தோஷத்தையும்,
ரிச்சர்டு நேரடியாகப் பார்த்தான்.
உண்மையி லேயே சர்வேசுரனை விசுவசிப்பவர்களுக்கு, சர்வேசுரன்
தாமே அளிக்கும் பரலோகக் கொடைகள் என்பதையும், மேலும் தம்
பரலோகக் கொடைகளை தம்மைச் சந்திக்க வருபவர்க்கெல்லாம் வழங்குவதற்காகவும், அதே சர்வே சுரன், அங்கே
வந்து கொண்டிருக்கிறார், என்பதையும், ரிச்சர்டு கண்டுணர்ந்தான். இப்பொழுது, குரு அவனுக்கு சமீபத்தில் வந்தார். மோட்சமே, தனக்காகக் கீழே பூலோ கத்திற்கு இறங்கிவந்தது போல், அவனுக்குத் தோன்றியது. பரலோகவாசிகளே, தங்கள் சர்வேசுரனை, ஆடம்பரமா
கவும், மிகுந்த பக்தி பற்றுதலுடனும், சுற்றுப்பிரகாரமாகக் கொண்டு வருவதுபோல், அவ்வளவு ஒழுங்குக் கிரம் மும், பரலோக
சந்தோஷத்தின் நறுமணமும், அந்த
கிராமம் முழுவதும் எங்கும் வியாபித்துப் பரவியிருந்ததை ரிச்சர்டு உணர்ந்தான்; உடனே, பொற்கதிர்பாத்திரத்தினுள்ளிருந்த
மகா பரிசுத்த தேவநற்கருணையை உற்று நோக்கியபடி, ரிச்சர்டு, என் தேவனே! நான் உம்மை விசுவசிக்கிறேன்! என்று உரக்கக்
கூறினான்; அந்த இடத் திலேயே முழங்காலிலிருந்து, தாழ்ந்து பணிந்து, தன் மேல்
அளவில்லாத சிநேகத்துடன், தன்னை
பூலோக மோட்ச மாகத் திகழும் இந்த அயர்லாந்தின் கிராமத்திற்கு வர வழைத்த, திவ்யகர்த்தரை ஆராதித்தான். பிறகு, ஆண்டவருக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துவதற்காக, சுற்றுப்பிரகாரத்துடன் சேர்ந்து, தேவாலயத்திற்குச்
சென்றான்; தேவநற்கருணை ஆசீர்வாதத்திற்குப் பிறகு,
நீண்ட நேரம், ஆங்காரத்தினால், இவ்வளவு காலம் ஆண்டவரை விட்டுப்
பிரிந்து நீசப்பாவியாக வாழ்ந்ததற்காக, மனஸ்தாபப்பட்டான்; அஞ்ஞானிகளைப் போலவே, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய
நாடுகளில் வாழ்ந்துவரும் புராட்டஸ்டன்டு , லூத்தரன் பதித சபையினரும், உண்மையான சர்வேசுரனை அறியாமல், ஆங்காரத்தினால், மனிதர்கள் உருவாக்கிய பதித
சபைகளில் சேர்ந்து, முழுமையும் தப்பறையான மதத்தில் வாழ்கின்றனர், என்பதையும் , ரிச்சர்டு உணர்ந்தான் பதித
மார்க்கத்திலிருந்து, தன்னைத் தப்புவித்து, சர்வேசுரன் தாமே ஸ்தாபித்த
சத்திய திருச்சபையில் தம்மை சேர்த்துக்கொண்ட ஆண்டவருடன், சல்லாபித்த படி, தேவசிநேக முயற்சிகள் செய்து
கொண்டு, தேவாலயத்திலேயே
தங்கியிருந்தான். Deo Gratias! |