செப்டம்பர் மாதம் 3-ம் தேதி
St. Simeon Stylites the Younger
அர்ச்.சின்னசிமியோன் (கி.பி.592)
இவருடைய புண்ணியத்தால் சர்வேசுரன் இவருக்குப் புதுமை வரம் கட்டளையிட்டபடியால், கணக்கற்ற ஜனங்கள் இவருடைய தூண்களைச் சுற்றி நிற்பார்கள். தம்மைச் சூழ்ந்திருக்கும் திரளான ஜனக்கூட்டத்திற்கு தேவையான நல்ல புத்திமதிகளைச் சொல்லி, அவர்கள் கூட்டிக்கொண்டு வந்திருக்கும் சகல வியாதியஸ்தரையும் சுகப்படுத்துவார். இவர் தீர்க்கதரிசன வரம் பெற்றதுடன் மனிதருடைய மனதிலுள்ள எண்ணங்களையும் வெளிப் படுத்துவார். இதனால் அத்தேசமெங்கும் அவருடைய கீர்த்தி பிரசித்தமானதால் அரசரும் பிரபுக்களும் பிரஜைகளும் அவரைக் கனப்படுத்தி மரியாதை செலுத்தினார்கள். திருச்சுரூபங்களை உடைக்கும்படி துஷ்டர் முயற்சி செய்கை யில் சிமியோன் சுரூப வணக்கத்தாலுண்டாகும் பிரயோஜனத்தைப்பற்றி ஒரு நிருபம் எழுதி இராயனுக்கு அனுப்பினார். இவ்வாறு கடுந் தவஞ் செய்து சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்து, தமது 80-ம் வயதில் சிமியோன் மண்ணுலகை விட்டு விண்ணுலகில் பிரவேசித்தார்.
யோசனை
நாம் சிமியோனைப் போல கடுந் தவம் செய்யாவிடினும், ஐம்புலன் களையும் அடக்கி ஒறுத்தலை அனுசரிப்போமாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக