Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 21 பிப்ரவரி, 2015

மோக பாவம்

மோக பாவம்



அவரவர் சிறு வயது முதல் இதுவரை செய்த பாவ்களை எல்லாம் கண்முன் வைத்துப் பார்த்த போது, அத்தனை பாவ்களுக்குள்ளே ஒரு வகைப்பாவம் மகா விஷமுள்ள நாகப் பாம்பைப்போல் தன் பொடிய நஞ்சை எங்கும் கக்கி, உடலையும் உயிரையும் கெடுத்து, மனதில் கலக்கமும், சலிப்பும் உண்டாகி ஓயாத கவலையும் மனக்குத்தும் கொடுத்துவருகிறதாக அநேகம் பேர்கள் துக்கத்தோடு அறிந்திருப்பார்கள்.  அந்த விஷமுள்ள பாவம் இன்னதென்றறிந்து அதைத் தன் மனதிலிருந்து நீக்கும்படி  துவக்கத்திலே முயற்சி செய்வது வெகு பிரயோசனமாயிருக்கும்.
மகா ஞானியான சாலமோன் என்றவரைப் போல புத்தியிலும் விவேகத்திலும், அறிவின் விசாலத்திலும் கீர்த்திப் பிரபலம் பெற்றவர் மனிதருக்குள் இருந்ததில்லை.  சர்வேசுரனே இவருக்குத் தரிசனமாகி தந்தை தன் மகனோடு பேசுவது போல் இவருடன் முகங்கொடுத்துப் பேசினார். ஆகிலும் இவர் தன் வயோதிப காலத்திலன் தன் சர்வேசுரனை மறந்து தன்னையும் மறந்து, பசாசின் சிலைக்கு தூபங்காட்டி அதை ஆராதித்துப் பாவம் செய்து வந்ததாக வேத புத்தகம் சொல்லுகிறது. (1 அரசர். 11: 1-10)
வான மண்டலத்தின் உச்சியில் பிரகாசம் நிறைந்த நட்சத்திரம் போல் மின்னித் துலங்கினவன்.  கடைசியில் ஒளி மங்கி நிலைபெயர்ந்து, கீழே விழுந்து விழுந்தவன் தப்பிவர வகையின்றி மாட்டிக் கொண்டான்.  கடும் விஷம் அவனைத் தீண்டினது.  அவன் புத்தியும் அறிவும் மங்கிப் போனது.  hனி சாலமோன் அஞ்ஞானியானான்.   சர்வேசுரன் மனிதனை மகமையிலுயர்த்தி வைத்திருக்கையில் அவன் அதை மறந்து போனதால் புத்தியற்ற மிருக்களுக்குச் சமமானான் என்ற வேதவாக்கியத்துக்குச் சாலமோன் உதாரணமானான்.  முன் ஞான அறிவபால் எவ்வளவு உயர்ந்திருந்தானோ அவ்வளவு பின் மோக பாவத்தால் தாழ்ந்து போனான்.
சர்வேசுரன் பாவத்தை எவ்வளவு பகைக்கிறாரென்றும், பாவத்தோடு சாகிறவர்களை எவ்வளவு கொடுமையாய் நரகத்தில் தண்டிக்கிறாரென்றும் யோசி. யாரிடத்தில் இந்த பாவம் குடிபுகுந்ததோ அவன் ஆத்துமத்தில் நரகத்தின் சாயலும் முத்திரையும் இருக்கிறதென்று சொல்லலாம்.  அவனுடைய அறிவும் புத்தியும், மங்கிப் போகும்.  நரகத்தின் இருள் அவன் மனதில் மூடத் துவக்கும்.
இந்தப் பாவத்ததால் மனிதர்கள் திரளாய் நரகத்தில் வழுகிறார்கள்.  கிறீஸ்துவர்களுக்குள் பாவத்தால் கெட்டுப் போகிறவர்கள் அநேகமாய் இந்தப் பாவத்தால் தான் கெட்டவர்கள்.  ஆனதால் இந்த பாவத்தை, மற்ற எந்தப் பாவத்தைப் பார்க்கிலும் பகைத்து வெறுக்கும்படி, இதற்குள்ள விஷமும் பொல்லாப்பும் இவ்வளவென்று சொல்லுவது அவசியம்.
வேத அறிஞர்கள் சொல்வதுபோல் மனிதன் பாவங்களைச் செய்யும் போது. அந்தந்தப் பாவத்தின் தோஷத்தை காட்ட அதற்குரிய ஓர் முத்திரை அவன் ஆத்துமத்தில் பதிகின்றது.  அசுத்தப் பாவமாகிற மோக பாவத்தைச் செய்கிறவன் இருதயத்தில் பதியும் முத்திரை விசேஷமாய் நரகத்தின் முத்திரை.  ஆனதால் நரகத்தைக் காட்டும் சாயல் உலகத்தில் எங்கே உண்டு என்று அறிய வேண்டுமானால், மோக பாவியின் இருதயத்தில் பார்க்கலாம்.  நரகத்தின் முக்கிய அறிகுறி என்ன?  வேதவாக்கியமே இன்னதென்று குறித்துக் காட்டுகிறது.  நரகம் இருள் அடர்ந்து நிறைந்த இடம்.  ஆத்துமத்திலும் சரீரத்திலும் மனிதன் நினைவுக்கு மேற்பட்ட துன்ப வேதனைகளால் நரகத்திலுள்ள நிர்ப்பாக்கியர் வருத்தப்படுகிறார்கள்.
மோக பாவியின் மனதில் நரக இருள் அடர்ந்தது போல் அவன் புத்தி மங்கிப் போகின்றது.  அறிவாகிற கண் பெட்டுப் போகின்றது.

அறிவில்லாததால் மிருகத்தைப்போல் தன் சரீர சுக இன்பத்தை மாத்திரம் தேடுகிறான்.  இந்த பாவியை குறித்து தேவ வாக்கியம்:
மிருகமாகிய மனிதன் சர்வேசுரனை சார்ந்த விஷயங்களை அறியான் என்று சொல்லுகிறது.  மற்;ற பாவங்களை செய்யும் போது புத்தியுள்ள மனிதனைப் போல செய்கிறவன், அசுத்தப் பாவத்தைச் செய்கையில், மனிதனைப் போல் அல்ல ஒரு மிருகத்தைப் போல செய்கிறான். புத்தியில்லாத மிருகம் எப்படி தன்னிடம் எழும் கெட்ட ஆசையைத் தேடி நிறைவேற்ற திரிகின்றதோ, அப்படியே மோக பாவியும் சுய அறிவை இழந்து தன் ஆசையைத் தேடி அலைகிறான்.
அறிவு மங்குவதால் அவன் தன்னை மறந்துபோகிறான்.  தான் செய்யும் பாவத்தின் கனத்தையும் அறிகிறதில்லை.  தன்னைச் சிருஷ்டித்த சர்வேரனையும் மறந்து போகிறான்.  தான் இருக்கும் நிலைமையும் தன்னைச் சுற்றி இருக்கும் உறவினர்கள் சுற்றம் சிநேகிதர் எவரையும் எண்ண மாட்டான்.  தனக்கிருக்கும் கொளரவம், புகழ், பெயர், ஒன்றும் மதியான்.  தன் தேக சௌக்கியத்தை முதலாய் மதியான்.  இழிவான நடைத்தையால், தனக்கும் தன்னால் மற்றவர்களுக்கும் வரும் பழிச்சொல், நிந்தை, வெட்கம், அவமானம் யாதொன்றும் கவனியான்.  தான் பார்த்துவரும் வேலைக்கு தன் வாழ்வுக்கும் உண்டாகும் கஷ்ட நஷ்டங்களை யோசியான்.
இப்படி மதிக்கெட்டுப் பேரிழந்து நாலு தெருவும் திரிபவர்கள் எல்லாரும் தாங்கள் செய்வது இன்னதென்று சற்றாவது கவனித்து யோசித்தால்? இவ்வித நடத்தையிலுள்ள அயோக்கியமும் அவலட்சணமும் அறிவார்கள்.  ஆனால் இவர்கள் அப்படி யோசியாதபடி அவர்கள் புத்தியாகிற கண் பாவத்தின் நஞ்சால் மறைப்பட்டு ஒளி மங்கிப்போய் விட்டது.  அதுவே நரக இருளின் சாயல்.

கிறிஸ்தவர்களுக்குள்ளே எந்த ஊரிலும் தெய்வமேது, குருவேது, நரகமேது, மோடசமேது, யார் கண்டது, யார் பார்த்தது என்று இவ்விதமாய் பிதற்றி பாவசங்கீர்த்தனமின்றி திரிபவர்கள் உண்டல்லவா?  இவர்கள் சாதாரணமாய் எவ்வழி நடப்பவர்களென்று தெரியுமா?  இவர்கள் மோக பாவத்தின் கஷ்டத்தில் விழுந்தவர்கள்.  புத்தியாகிய கண்ணை இழந்து விசுவாசத்தின் தேவப் பிரகாசமின்றிப் போனதால் இப்படி அபத்தத்தைப் பிதற்றுகிறார்கள்.
 

Open Letter to Confused Catholics






வியாழன், 19 பிப்ரவரி, 2015

நரகம் (Hell)

நரகம் (Hell)

சர்வ வல்லப சர்வேசுரன் தமது கட்டளைகளை மீறி பாவம் செய்த துரோகிகளை தண்டிக்கும் படியாக ஏற்படுத்திய தண்டனை இடம் தான் நரகம்.  அக்கினி கடல்.  பேய்கள் வாழும் சுடுகாடு.

நரகத்தில் தண்டனைகளிளெல்லாம் மகா பயங்கர தண்டனையான நித்திய சாபமும், பாவத்தின் தன்மைக்கும் அனைத்துக்கும் தக்க ஐம்புலன்களுக்குரிய தண்டனைகளும் உண்டென்பது விசுவாச சத்தியம். நரகத்தில் பாவிகள் படும் ஐம்புலன்களின் தண்டனைகள் இவ்வுலகில் நாம் நினைக்கவும் கருதவும் கூடிய வகை வேதனைகளிளெல்லாம் அதி உக்கிர அதி பயங்கரம் என்பது நிச்சயம்.
மனிதனுக்கு இயல்பாயுள்ள சுய அறிவே நரகம் உண்டென்று சொல்லுகிறது.  சர்வேசுரன் தாம் படிபித்த வேதத்தில் தெளிவாய் பல இடங்களில் சொல்லி இருக்கிறார்.  சத்திய திருச்சபையும் தன் தவறா வாக்கோடு நரகம் உண்டென்று படிப்பிக்கின்றது. நமது மனமே நமக்கு சாட்சியாயிருந்து பாவம் செய்தால் சர்வேசுரன் நரகத்தில் நம்மைத் தண்டிப்பாரென்று சொல்லுகின்றது.  ஆகையால் நரகம் உண்டென்பது சத்தியம்.

பாவி நரகத்தில் விழுந்தால் அவனுக்கு துணையாய் இருப்பவர் யார்?  பசாசுகள் முதல் துணை.  சர்வேசுரனை பகைக்கும் இந்த நீச அரூபிகள் சர்வேசுரன் பேரில் தங்களுடைய கோபமும் பகையும் செல்லாதென்று கண்டு, சர்வேசுரன் சாயலாயிருக்கும் மனிதன் பேரில் தங்கள் பகையை காட்டும்.  அவலட்சண கோலத்தோடு தோன்றி மனிதரை உபாதிக்கும். உலகம் உண்டான நாள் முதல் உலகத்தின் கடைசி நாள் மட்டும் இருக்கும் சகல வகை பாவிகளும்? துன்மார்க்கரும், அநீதரும், அக்கிரமிகளும், கொலைபாதகரும், திருடரும், குடியரும், காமவெரியரும் ஆகிய இவர்கள் எல்லோரும் அங்கே கூடியிருப்பார்கள். இப்படிப்பட்ட தீயோர் மத்தியில் பாவியும் ஒருவனாயிருப்பான்.


இவர்கள் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் சண்டை செய்து கொடிய மிருகங்களைப் போல் ஒருவரொருவரை கடித்து, உதைத்து, கர்சித்து கதறி அலறிப் புலம்புவார்கள்.  நரக தண்டனை இவ்வளவோடு முடிந்ததென்று நிணைக்க வேண்டாம்.  நீங்கள் பாவம் செய்யும் போது ஆத்துமம் சரிரமும் கூடிப் பாவம் செய்வதால், இவ்விரண்டும் நரகத்தில் உபாதிக்கப்படும்.  ஆனதால் சரீரத்தின் ஒவ்வொரு புலனும் தனக்கு உரிய வகையில் தான் பாவத்தை கட்டிக்கொண்ட சந்தோஷத்தின் அளவுக்கு தக்கதாய் துன்பப்படும்.  ஆத்துமத்தில் ஒவ்வொரு தத்துவமும், புத்தி, மனம், ஞபாகம், இவைகள் தங்கள் தொழிலுக்கு இசைந்த வண்ணம் வேதனைப்படும்.
உலகத்தில் இருக்கும் காலத்தில் செல்வனாயிருந்து, நன்றாக உண்டு வளர்ந்து பாவத்தில் தன் காலத்தைப் போக்கினவன், நரகத்திலே பசியாலும் தாகத்தாலும் வருந்துவான்.  இப்போது மகிமையைத் தேடி அகங்காரம் பொங்கி, தான்தான் பெரியவன் என்று பெருமை பேசி, பிறரை இகழ்ந்து பேசி, நிந்தித்து நடப்பவன் நரகத்தில் தாழ்த்தப்பட்டு பசாசின் காலில் மிதியுண்டு, அவமானம் அடைவான்.  இங்கே தன் சர்pரத்தை பேணி, மினுக்கி, வளர்த்து வருகிறவர்கள், நரகத்தில் வாயால் சொல்ல முடியாத அவஸ்தைப் பட்டு பன்றிகளைப் போல் துர்நாற்ற அசுத்தத்தில் உருண்டு புரண்டு அகோர வேதனை அனுபவிப்பார்கள்.

பாவிகள், பொதுத்தீர்வை நாளுக்குப்பின் ஆத்தும சரீரத்தோடு நரக அக்கினியின் சமுத்திரத்தில் வெந்து எரிவார்கள்.  அந்த அக்கினியோ, சர்வேசுரனுடைய சத்ருக்களை மாத்திரம் தண்டிக்கும்படி உருவாக்கப் பட்டதால், அதற்கும் இந்த பூமியில் இருக்கும் நெருப்பிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.  தேவ கோபத்தினால் மூட்டப்பட்ட அந்த அக்கினி நரக பாதாளத்தின் அடிமுதல் உச்சிவரை தணலாய் எழும்பி சரீரத்தை எப்பக்கத்திலும் துன்பப்படுத்தும்.  நெருப்பில் போடப்பட்ட இரும்பு ஏகமும் நெருப்பாய் மாறுவது போல பாவியும் நரக நெருப்பிலே சர்வாங்கமும், உள்ளும் வெளியும் அக்கினி மயமாய் மாறி,  வேதனை அனுபவித்து உணர்ச்சி மாறாமல் வெந்து துடிப்பான்.
பாவியும் நரகத்தில் எந்தப் பக்கம் போனாலும், என்ன செய்தாலும் அக்கினி மத்தியில் தான் அமிழ்ந்திருப்பான்.
நரக தீயின் உக்கிரம் இவ்வளவு கொடிதானாலும், இதிலும் கொடிதான தண்டனை நரகத்தில் ஒன்று உண்டு.  அது ஏதென்றால் சர்வேசுரனை இழந்துபோய் அவரை விட்டு பிரிந்திருப்பது.  இது தான் துன்பங்களில் பெரிய துன்பம்.  சர்வ நன்மை நிறைந்த சமபூரண பாக்கியமாகிய சர்வேசுரனை இழந்த ஆத்துமம் அக்கினிக்குள் எத்தனை நாள் தான் இருக்கும்? அந்த பாதாள லோகத்தில் நாள் கணக்கு இல்லை.  நித்திய காலம் என்றென்றும் ஊழியுள்ள காலமும், சதாகாலமும் சர்வேசுரனை காணாமல் நரக நெருப்பில் வேக வேண்டும்.
பூமியில் இருக்கும் போது நீ உன் மனப்பூர்வமாய் சர்வேசுரனாகிர உன் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய உனக்கு பிரியமில்லையோ,  மறு உலகில் உனக்கு மனமிருந்தாலும் இல்லாவிட்டாலும், சர்வேசுரனுடைய கோணாத நீதிக்கு தொண்டு செய்வாய்.  சேசுநாதருடைய பரிசுத்த நாமத்தை கேட்கும் போது பரலோக பூலோக பாதாள உலகத்தில் உள்ள சகலரும் முழங்கால் ஊன்றி நமஸ்காரம் செய்வார்களாக (பிலி. 2 :10) என்பது தேவ வாக்கியம்.


Download Catholic Tamil Books for Free------------------> Click Here...
Download Catholic Tamil Songs for Free------------------> Click Here....
Download Life History of St. Antony of Padua-----------> Click Here.... Part 1

புதன், 18 பிப்ரவரி, 2015

திருச்சபையின் ஆறாம் கட்டளை (Sixth Commandment of Church)


நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்கிறது


Priest giving Communion to faithfuls
பழைய ஏற்பாட்டில் தேவாலய குருக்களின் ஆதரவுக்காகவும், வேதத்தை பேணுவதற்காகவும், கடவுள் ஏற்படுத்திய ஒரு விசேஷ சட்டம் இருந்தது.  புதிய ஏற்பாட்டில் நம் ஆண்டவர் தம் ஊழியர்கள் யாருக்காக உழைக்கிறார்களோ அவர்களால் ஆதரிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார்.  கோவில் பணிவிடைக்காரர் கோவிலுக்குரியவைகளில் பங்கடைகிறார்கள்.  பீடத்தின் பரிசாரகர்கள் பீடத்துக்கு உரியவைகளில் பங்கடைகிறார்கள் என்றும் அறியீர்களோ?  அவ்வாறே சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறவர்களும் சுவிசேஷத்தினாலே பிழைக்கும்படி ஆண்டவர் ஏற்பாடு செய்திருக்கிறார். என்று சின்னப்பர் கூறுகிறார்.  எனவே தேவ கட்டளைப்படி தங்களால் இயன்ற அளவில் விசுவாசிகள் தங்கள் மேய்ப்பர்களுக்குத் தேவையானவைகளைத் தர கடமைப்பட்டிருக்கிறோம்.
Fr. Giving Baptism to a Old Lady

இக்கடமையை நிறைவேற்றுவதற்கான முறை அந்தந்த காலத்திற்கேற்ப மாறி வந்திருக்கிறது.  ஆதி திருச்சபையில் இருந்தது போலவே இன்றைய நாட்களிலும் மக்களின் காணிக்ககை தான் ஏறத்தாழ திருச்சபையின் ஒரே நிதி ஆதாரமாக இருக்கின்றது.  மேலும் குருக்கள் கடவுளுக்கு உரியவையும், ஆத்துமாக்களின் பராமரிப்புக்கு உரியவையான காரியங்களுக்காக அபிஷேகம் செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் தங்கள் பிழைப்புக்காக உலகத் தன்மையான வேலைகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது.
Fr. blessing a House
 எனவே, திருச்சபை தனது ஆறாம் கட்டளையில், தனது தெய்வீக ஸ்தாபகரால் விசுவாசிகள் மேல் சுமத்தப்பட்ட கடமையை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறது.

நீதியின்படி குருநிலையினர் தங்கள் மக்களால் ஆதரிக்கப்பட உரிமையுள்ளவர்களாக இருக்கிறார்கள்.  ஏனென்றால் சட்டபூர்வமான அதிகாரத்தால் ஒரு பங்கின் ஆன்ம நலன்களுக்குப் பொறுப்பாளராகளாக பங்கின் ஆன்ம நலன்களுக்குப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிற குருக்கள் விசுவாசிகளின் எல்லாத் தேவைகளிலும் அவர்களுக்கு உதவுகிறார்கள்.

Fr. preparing young boys and girls for confession
திருச்சபையின் இக்கட்டளை மிகக் கண்டிப்பான ஒன்று.  ஆனாலும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இந்த கட்டளை அனுசரிக்கத் தவறுவதால் சாவான பாவம் கட்டிக்கொள்ளப்படுகிறதா என்பது கடினம்.  அத்தகைய சூழலில் ஒரு பங்கு குருவானவர் எந்த அளவு தேவையில் இருக்கிறார், அவருக்கு உதவி செய்ய தவறுகிற விசுவாசியின் நிதி நிலைமையை என்ன, ஆகியவற்றை பொறுத்து பெருமளவு சார்ந்திருக்கிறது.  ஆயினும் பல வருடங்களாக தங்கள் வேதக் கடமைகளை அசட்டை செய்து வரும் அக்கறையற்ற கத்தோலிக்கர்கள் தங்கள் அயலாருக்கு துர்மாதிரிகையாக இருப்பதுமின்றி, அவர்கள் திருச்சபையின் ஆறாம் கட்டளைக்கு எதிராக, கடமையில் தவறுவதாகிய ஒரு சாவான பாவத்தையும் கட்டிக் கொள்கிறார்கள்.

திருச்சபையின் மேய்ப்பர்கள் நன்கு பராமரிக்கப்பட வேண்டும்.  தேவாலயங்களும் பள்ளிகளும் கட்டப்பட வேண்டும்.  தேவ வழிபாட்டோ
giving blessing to the Sick people
டு தொடர்புடைய அனைத்தும் தகுதியுள்ள முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது மட்டும் இந்த திருச்சபையின் கட்டளையின் நோக்கமல்ல.  மாறாக இந்தப் பூலோகத்தில் கிறிஸ்து அரசரின் இராச்சியம் ஆத்துமங்களின் இரட்சிப்புக்காக எங்கும் பரவவேண்டும் என்பதும் அதன் முக்கிய நோக்கமாக இருக்கிறது.  குரு நிலையினரையும், விசுவாசிகளையும் 
பிறர் சிநேகத்தின் கட்டுகளாக ஒன்றிப்பது இந்த கட்டளையின் நோக்கமாக இருக்கிறது.  ஏனென்றால் இந்த பரஸ்பர நேசம் பலமுள்ளதாக இருக்கும் இடங்களில் எல்லாம் கத்தோலிக்க திருச்சபை விசுவாசம் செழித்து வளர்ந்து வருகிறது.
Bishop Visiting people



குருக்கள் தங்கள் பங்கு மக்களின் ஆதரவுகளுக்கு பிரதிபலனாக அவர்களுக்கு போதுமானதை திருப்பி செலுத்தவில்லையா?  ஏனெனில் அவர்கள் தங்கள் பங்கு மக்களின் ஆன்ம
 தேவைகள் அனைத்திலும் உதவும்படி தங்கள் வாழ்வையே அர்ப்பணித்திருக்கிறார்கள் அல்லவா?  விசுவாசிகள் திருச்சபைக்கு செய்யும் சகல உலக ரீதியான உபகாரங்களும், அவற்றைப் பெற்றுக் கொள்வோராகிய ஞான மேய்ப்பர்களுக்கு மட்டுமல்லாமல், அவற்றை தருபவர்களாகிய விசுவாசிகளுக்கும் நன்மை பயப்பவையாக இருக்கின்றன.  ஏனென்றால் திருச்சபையும், அது கொண்டுள்ள சகலமும், மக்களின் நன்மைக்காகவே உலகில் நிலைத்திருக்கின்றன.





திருச்சபையின் ஐந்தாம் கட்டளை (Fifth commandment of Church)

விலக்கப்பட்ட காலத்திலும் குறைந்த வயதிலும் விக்கினமுள்ள உறவுமுறையாரோடு  கலியாணம் செய்யாதிருப்பது 


திருமணம் என்பது ஓர் ஆணும், பெண்ணும் கணவன் மனைவியாக வாழ்வதாக தங்களுக்குள்ளே செய்து கொள்ளும் ஒப்பந்தம்.  மரணம் மட்டும் ஒன்று சேர்ந்து வாழும் கடமையை இந்த ஒப்பந்தம் அவர்கள் மீது சுமத்துகிறது. சர்வேசுரன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்ற வார்த்தையை கொண்டு சேசுநாதர் இதை தெளிவு படுத்தினார்.

சேசுநாதர் திருமணத்தை ஒரு தேவதிரவிய அனுமானமாக உயர்த்தினார். அர்ச். சின்னப்பர் இந்த மெய்விவாகத்தை ஒரு மாபெரும்  தேவதிரவிய அனுமானம் என்கிறார்.  மெய்விவாகம் வாழ்வோரின் தேவதிரவிய அனுமானமாக இருப்பதால், அது தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தில் பெறப்பட வேண்டும்.  அதாவது திருமணம் செய்யும் ஆணும் பெண்ணும் சாவான பாவமின்றி இருக்க வேண்டும்.  மெய்விவாகம் என்னும் தேவதிரவிய அனுமானம் கணவனுக்கும் மனைவிக்கும் தங்கள் கடமைகளை நிறைவேற்ற தேவையான வரப்பிரசாதத்தை தருகிறது; தங்கள் பிள்ளைகளை தேவசிநேகத்திலும் தேவ பயத்திலும் வளர்க்க அவர்களுக்கு உதவுகிறது.

சட்டபூர்வமான வழிமுறைகள் பின்பற்றப்படாமல் செய்யப்பட்ட ஓர் ஒப்பந்ததை ரத்து செய்ய ஓர் அரசாங்கத்திற்கு அதிகாரம் இருப்பது போலவே மெய் விவாகம் என்னும் தேவதிரவிய அனுமானத்தை பெறுவதற்கான நிபந்தனைகளுக்குச் கட்டுப்படாமல் ஒரு கத்தோலிக்க ஆணும், பெண்ணும் செய்து கொண்ட திருமணம் செல்லாது என அறிவிக்கிற அதிகாரம் திருச்சபைக்கு இருக்கிறது.

ஒரு திருமணம் செல்லத்தக்க கத்தோலிக்க திருமணமாக இருப்பதற்கு இரு சாட்சிகள் முன்னிலையில் பங்கு குருவுக்கு முன்பாக அல்லது  அவரால் ,முறைப்படி அனுமதிக்கப்படுகிற ஒரு குருவுக்கு முன்பாக தங்கள் சம்மதத்தை தெரிவிப்பது அவசியம்.ஆனால் ஓர் அரசு அதிகாரி முன்போ அல்லது கத்தோலிக்கரல்லாத ஓர் ஊழியர் முன்போ நிகழ்கிற ஒரு கதோலிக்கனின்  திருமணம் சர்வேசுரனுடைய பார்வையில் திருமணமே அல்ல. ஏனெனில் மெய்விவாக அனுமானத்திற்கென ஏற்படுத்திஇருக்கிற நிபந்தனைகளுக்கு அவர்கள் கட்டுப் படுவதில்லை.  

அடுத்ததாக ஒரு திருமணம் செல்லுபடியாக ஆணும் பெண்ணும் சுதந்திரம் உள்ளவர்களாகவும் சுதந்திரமான விதத்தில் தங்கள் சம்மதத்தை தெரிவிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.  விவாகரத்து செய்து கொண்ட அல்லது திருமண பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஓர் ஆளுக்கு மீண்டும் திருமணம் செய்யும் உரிமை இல்லை.   

ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயது முடியுமுன் செய்து கொள்வதை கத்தோலிக்க திருச்சபை விலக்குகிறது. 

இறுதியாக திருமணத்தை செல்லாததாக ஆக்கக்கூடிய விக்கினங்கள் எதுவும் இருக்க கூடாது.  இரண்டு விதமான விக்கினங்கள் இருக்கினறன.  அவை தடை செய்கிற விக்கனம், மற்றும் செல்லாததாக்குகிற விக்கினம் ஆகும்.

தடை செய்யும் விக்கினம் என்பது விசேஸ சலுகைபெறப்படாத நிலையில் திருமண ஒப்பந்தத்தை சட்டத்திற்கு எதிரானதாக ஆக்குகிறது.  திருமணம் செய்த இருவரில் ஒருவர் கன்னிமை வார்த்தைப்பாடு அல்லது உபதியோக்கன், தியோக்கன் மற்றும் குருத்துவம் பட்டம் பெற்றிருத்தல், அல்லது துறவற அந்தஸ்தில் சேரும் வார்த்தைப்பாடு கொடுத்தவராக இருந்தால் அவர் திருமணம் செய்து கொள்வது சட்டத்திற்கு விரோதமானது.

கலப்புத் திருமணம் மற்றொரு தடை செய்கிற விக்கினம் ஆகும்.  கத்தோலிக்ககர் ஒருவரும், எதாவது ஒரு பதித பிரிவினை சபையில் ஞானஸ்தானம் பெற்ற உறுப்பினராக இருக்கும் மற்றொருவரும் திருமணம் செய்து கொள்வதை திருச்சபை மிகக் கடுமையான முறையில் தடை செய்கிறது.  இத்தகைய திருமணங்கள் வேத அலட்சிய போக்கிற்கும் விசுவாச இழப்பிற்கும், குழந்தைகளின் ஞான உபதேசத்தில் அசட்டைத்தனத்திற்கும் வழிவகுத்து விடும் என்பதால் திருச்சபை கலப்பு திருமணத்தை தடை செய்கிறது.  சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் பேரில் மட்டும் இந்த விக்கினத்திற்கு திருச்சபை விலக்கு அளிக்கிறது.  கலப்பு திருமணம் செய்வதற்கு ஒரு நியாமானதும், தீவிரமுள்ளதுமான காரணம் இருக்க வேண்டும்.  திருமணம் செய்து கொள்ள போகும் இருவரில் கத்தோலிக்கராக இருக்கும் மற்றவருக்கு கத்தோலிக்க விசுவாசத்தை அனுசரிப்பதில் எந்த தடையும் விதிப்பதில்லை என்ற உத்திரவாதம் தர வேண்டும்.  மேலும் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் கத்தோலிக்க ஞானஸ்தானமும், கத்தோலிக்க கல்வியும் மட்டுமே பெறுவார்கள் என்று திருமணம் செய்து கொள்ள போகும் இருவரும் வார்த்தைப்பாடு தர வேண்டும்.

செல்லாதாக்குகிற விக்கினம் ஒரு திருமண ஒப்பந்தத்தை ரத்துச் செய்கிறது.  திருமணத்தை செல்லாதக்குகிற விக்கினங்கள் குறைந்த வயது, ஏற்கனவே உள்ள திருமண உறவு. இதர மதத்தினரோடு திருமணம், ஆள் கடத்தி திருமணம். உபதியோக்கன், தியோக்கன் மற்றும் குருத்துவம் பட்டம் பெற்றிருத்தல் ஞானத்தாய் அல்லது ஞானத்தகப்பன் அல்லது ஞானப்பிள்ளை உறவு, இரத்த உறவு நெருங்கின உறவு என்னும் உறவுகள் திருமணத்தை செல்லாததாக்குகிற விக்கினங்கள் ஆகும்.  திருமணத்திற்கு முந்தைய மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் பங்கு குருவானவர் திருமண அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதால் தங்கள் திருமணத்திற்கு சர்வேசுரனுடைய ஆசிர்வாதம் வேண்டும் என விரும்புவோர் தங்கள் திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பாக தங்கள் பங்கு குருவுக்கு அறிவிக்க வேண்டும்.  


கத்தோலிக்கர் ஆண்டின் எந்தக் காலத்திலும் திருமணம் செய்து கொள்ளலாம்.  ஆனாலும் ஆகமணக் காலம், தபசுகாலம் ஆகிய தவ, ஒறுத்தல் முயற்சிகளின் காலங்களிலும், அதாவது, ஆகமன காலத்தின் முதல் ஞாயிறு முதல் கிறிஸ்மஸ் திருநாள் முடியவும், சாம்பல் புதன் தொடங்கி உயிர்ப்பு ஞாயிறு முடியவும் திருமணங்கள் அர்ச்சிக்கப்படுவதைத் திருச்சபை தடை செய்கிறது. 


மரியாயே வாழ்க 
Ave Maria  

திங்கள், 16 பிப்ரவரி, 2015

Comedy of Protestants.... Don't believe them.....



கள்ள போதகர்கள்  குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.  அவர்கள் தங்களுடன் சேர்த்து பிறரையும் நரகத்துக்கு கூட்டி செல்கிறார்கள்.  ஆண்டவரே ஆண்டவரே என்று கூப்பிடுகிறவர்கள் எல்லாம் இரட்சிக்கப் படபோவதில்லை...
அவர்கள் பல விதங்களில் மக்களை ஏமாற்றுகிறார்கள்.  ஜெபக்கூட்டம் என்றும்,  ஊழியம் என்றும், நற்செய்தி பெருவிழா  என்றும்,  குணமளிக்கும் விழா என்று பல்வேறு விதங்களில் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
 அவர்கள் செய்யும் ஏமாற்று வேலைகளை டிவி போன்றவற்றில் பார்த்து தாங்கள் அங்கு சென்றால் இரட்சிக்க படுவோம்  என்று எண்ணி அங்கும் இங்கும் செல்கின்றனர்.
தங்கள் வீட்டின் அருகிலே ஆலயம் இருக்க அவர்கள்  அங்கு ஒருநாள் கூட செல்லாமல் எங்கோ நடக்கிற கூட்டங்களுக்கு செல்கின்றனர்.

ஆலயங்களில் நடக்கிற பணிகளுக்கு பொருள் உதவியோ அல்லது பண உதவியோ செய்ய முன் வராதவர்கள்,  ஊழியம் என்று  பணம் கேட்பவர்களுக்கு வாரி இறைக்கிறார்கள்.

20 வருடங்களுக்கு முன்பு இவர்கள் எல்லாம் எங்கு இருந்தார்கள்.  CSI Pentocost போன்ற சபைகள் எல்லாம் எங்கோ ஒரு சில ஊர்களில் மட்டுமே இருந்தன.  காரணம் அப்போது நம்மிடம் மரியாவின் மீது பக்தி இருந்தது.  ஜெபமாலை சொல்லும் பழக்கம் இருந்தது. நமக்கு ஒரு கஷ்டம் வரும் போது கோவில் சென்று நமது கஷ்டங்களை தாய் மரியிடம் சொல்லி அழுதோம்.
ஆனால் இன்று ஏன் மாதாவிடம் செல்ல வேண்டும்.  அவர்களை என் நாம் நினைக்க வேண்டும்.  அவள் ஒரு சாதாரண பெண் என்று ஏளனம் செய்கின்றனர்.
தேவ தாய் இந்த உலகில் செய்த புதுமைகள் எல்லாம் அறிவியல் ரீதியில் சோதனை செய்து அதன் பின் தான் அது புதுமைகள் எல்லாம் உண்மையிலே புதுமைகள் என்று திருச்சபையால் அறிவிக்கப்பட்டது.  உதரணமாக : தேவ தாய் லூர்து நகரிலே காட்சி அளித்தது...லூர்து நகர் அதிசய குளத்தில் குளித்து குனமானவர்களை பல்வேறு மருத்துவர்கள்(Christian, non- Christian, scientist) நன்கு சோதித்து பின் தான் அதை அவர்கள் புதுமை என்று அறிவித்தனர்.

அனால் இன்று டிவி யில் வரும் கள்ள போதகர்களால் செய்யப்படுகிற பித்தலாட்டங்களை நம்புகின்றனர்.




இந்த போக்கை நம் கத்தோலிக்க முறையிலும் கொண்டு வருகின்றனர்.  இது நாம் தேவ அன்னை மரியாவின் மீது பக்தி குறைவதினால் ஏற்படுகிறது....