இந்த சம்பவதிருக்கு பிறகு அவர் தன் தந்தை வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். அனால் அவர் தந்தை அவரை வீட்டில் சேர்த்து கொள்ள வில்லை.அவரும் அவரது மகனும் Cortona என்ற இடத்தில இருந்த துறவிகள் மடத்தில் தங்க அனுமதி அளித்தனர்.அவருக்கு பல வேளைகளில் கெட்ட சிந்தனைகளால் அவதிப்பட்டார். ஒரு சமயம் அவர் அந்த பாவத்தை செய்வதற்கு முடிவு செய்து ஒரு வாலிபனை அணுக சென்றார், ஆனால் அவரை ஒரு துறவி அவரை தடுத்து நிறுத்தினார்.
1286 மார்கரெட் தன்னை போல் உதவி செய்பவர்களை சேர்த்து ஒரு சபையை உருவாக்கினார். பின்னர் அந்த சபையை ஒரு தனி சபையாக அங்கிகரித்து அதனை Poverelle (Poor Ones ) என்று அழைக்க பட்டனர். அவர்களுடைய உதவியால் ஒரு மருத்துவனையை கோர்டன என்ற இடத்தில கட்டினார். அவர் திவ்விய நற்கருணை பேரில் மிகுந்த நம்பிக்கை பக்தி வைத்து இருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக