அர்ச். ஜோசபாத்
போலந்து நாட்டில் விலாடிமீர் என்னும் இடத்தில அர்ச். ஜோசபாத் 1580 ல் பிறந்தார்.சிறுவயதில் வியாபாரம் செய்து வந்த அவர் அர்ச். பேசில் என்பவரின் சபையினரால் நடத்தப்பட்டு வந்த வில்லான் என்னும் இடத்தில உள்ள சபையில் சேர்ந்து ஜோசபாத் என்னும் பெயர் பெற்றார். குருபட்டம் பெற்ற அவர் 1617ல் போலாய் நகர அதிமேற்றானியரராக அபிஷேகம் செய்பட்டார்.
ஜோசபாத் தமது வாழ் நாட்களை அவர் நாட்டில் நிலவி வந்த பிரிவினை சபையினரை மனம் திருபுவதிலே செலவிட்டு வந்தார். 1623ம் ஆண்டு விரோதிகளால் கொல்லப்பட்டு அருகில் இருந்த நதியில் தூக்கி வீசப்பட்டார்.
ஐந்து நாட்களுக்கு பிறகு எந்தவிதமான அழிவுமில்லாத அவரது சரிரம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு எட்டாம் உர் பாண் பாப்பரசரால் புனித பட்ட சடங்குகள் தொடங்கப்பட்டன. அதன் முதல் கட்டமாக அவரது கல்லறை திறக்கப்பட்டது.
புனிதர் வேத சாட்சியம் அடைந்த ஐந்தாவது வருடத்தில் கல்லறை திறக்கப்பட்டது. சரிரம் எந்தவிதமான அழிவுமின்றி முழுமையாக பாதுகாக்கப்பட்டு இருந்தது. சரிரத்தில் அணிவிக்க பட்டுருந்த உடுப்புக்கள் மக்கி போய் இருந்தன. அச்சமயத்தில் சரீரத்தின் முகத்தில் வியர்வை துளிகள் இருப்பதை மக்கள் கண்டனர்.
1637ல் மீண்டும் சரீரம் பரிசோதனைக்கு திறக்கப்பட்டது. சரீரம் வெளிறி காணப்பட்டது. வேத சாட்சியத்தின் போது ஏற்பட்ட பல்வேறு காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1650ல் அர்ச். சோபியா தேவாலயத்தில் அவருடைய சரீரம் ஸ்தாபிக்கப்பட்டது. அச்சமயம் சரீரத்தின் வெட்டு காயத்திலிருந்து புதிய சிவப்பு இரத்தம் வழிந்தது.
பின்னர் பல அரசியல் காரணங்களால் பல இடங்களில் அவரது சரீரம் மாற்ற பட்டு பாதுகாக்கப்பட்டது. பின்பு 1767ல் மீண்டும் அவரது சரீரம் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்டது. பின் ரோமாபுரியில் உள்ள இராயப்பர் தேவாலயத்தில் சரீரம் வைக்கப்பட்டுள்ளது. 1867ம் வருடம் 13ம் சிங்கராயர் பாப்பரசர் அர்ச். ஜோசபாத்திருக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.
அர்ச்சிஷ்டவர்களின் வரலாறு