Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

வெள்ளி, 1 டிசம்பர், 2017

St.Eligius, B. December 1


அர்ச்.எலிஜியுஸ்>  மேற்றிராணியார்

                             (கி.பி.659)

       எலிஜியுஸ் சிறுவயதில் தன் பெற்றோரால் புண்ணிய வழியில் வளர்க்கப்பட்டு> புண்ணியவாளனும் சிறந்த வேலைக்காரனுமான ஒரு நகைத் தொழிலாளியிடம் வேலை கற்கும்படி விடப்பட்டார்.  இவர் இந்த வேலை செய்யும்போது தன் ஆத்தும வேலையை மறவாமல் ஜெபத்தியானங்கள் செய்து> திவ்விய பூசை கண்டு ஞானப் பிரசங்கங்களைக்  கவனமாய் கேட்டு> புண்ணிய வழியில் நடந்தார்.  இவர் நகைத் தொழிலை எவ்வளவு சாதுரிய சாமர்த்தியத்துடன் செய்தாரெனில்> இவருடைய கீர்த்தி வெகு தூரம் பரவி> பிரான்ஸ் தேசத்தின் இராஜா இவரைத் தம்மிடம் வரவழைத்து> ஒரு சிம்மாசனம் செய்யச் சொல்லி> அதற்கு வேண்டிய பொன்> இரத்தினம் முதலிய விலையேறப்பெற்ற கற்களை அவருக்குக் கொடுத்தார்.  எலிஜியுஸ் இரண்டு சிம்மாசனங்களையும் மிகவும்  விசித்திர விநோத வேலைப்பாடாய் அமைத்ததைக் கண்ட அரசன் அவருடைய வேலைப்பாட்டையும்> விசேஷமாக அவருடைய தர்ம நடத்தையையும் மெச்சிப் புகழ்ந்து> தன் அரண்மனையில் அவரை பெரிய உத்தியோகத்தில் வைத்துக்கொண்டார்.  இவர் அரண்மனையில் வேலை செய்யும்போது> முன்னிலும் அதிக புண்ணியங்களைப் புரிந்து> ஏழைகளுக்குத் தர்மங் கொடுத்து திரளான அடிமைகளை மீட்டு> துறவற மடங்களைக் கட்டுவித்து> அர்ச்சியசிஷ்டவராய் நடந்து வந்ததினால் மேற்றிராணியாராக நியமிக்கப்பட்டார்.  இந்த உந்நதப் பட்டத்தில் உயர்த்தப்பட்ட பின் மகா கவனத்துடன் கிறீஸ்துவர்களைக் கவனித்து> அஞ்ஞானிகளை மனந்திருப்;பி> கெட்ட வழக்கங்களை ஒழித்து> விசேஷமாக நல்லொழுக்கத்திற்கு விரோதமான ஆடல்> பாடல்> நாடகம் முதலியவைகளை ஒழிக்கச் செய்து அநேக அற்புதங்களாலும் சிறந்த புண்ணியங்களாலும் பிரகாசித்து மோட்சத்தைச் சுதந்தரித்துக்கொண்டார். 



யோசனை
       நமது பிழைப்புக்கான தொழில்> வியாபாரம் முதலியவைகளில் சு10து வாது> வஞ்சகம் முதலியவைகளை நீக்கி> எதார்த்தமுள்ளவர்களாய் நடப்போமாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக