Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

சனி, 28 ஜூன், 2014

தனிமையில் வேதனை

வேதனையைக் கண்டு நம் சுபாவம் நடுங்குகிறது.  தனிமையில் வேதனைப்படுவது  இன்னும் அதிக பயங்கரமானது.  வேதனை நேரத்தில் நண்பர்கள் கிடைப்பது வரமாகும்.  துயரம் என் உள்ளதை வாட்டும் போது அல்லது உடல் நோவுடன் படுக்கையில் புரள நேரிடும் போது உள்ள துயரத்தை அன்பு என்னும் தைலத்தால் அகற்ற முயலும் நண்பன் கிடைப்பானாகில், அல்லது உடல் நோவை நான் தைரியத்துடன் சகிக்க தன் பிரசன்னத்தால் துணை புரியும் சிநேகிதி கிடைப்பாளாகில், இத்தால் கிடைக்கும் ஆறுதல் வர்ணிக்க முடியாது.
tamil catholic prayers

வேதனை நேரத்தில் தோழர் கிடைப்பது பெரும் பேறாகும். தனிமையில் உள்ளத் துயரத்தால் நான் அவதிபடும் போது உற்ற நண்பனும் அதில் பங்குபெற முடியாமல் போனால், வேதனைப் படுக்கையில் அந்நியர்கள் என்னைக் கடந்து போனால் அனுதாபமின்றி என்னை நோக்குவார்களானால்,இது எத்துனை பரிதாபத்துக்குரியது?  கிறிஸ்தவ மேறையாக நான் வேதனையை நான் சகிக்க வேண்டுமானால், நினைவால் நான் ஒலிவமரத் தோப்புக்கு  நான் செல்ல வேண்டும்.  தனியாக உபாதைப்பட்ட சேசுவின் அருகில் நான் முழந்தாளிட வேண்டும்.  ஐத்செமணியில் நடுசாம அவஸ்தையை உள்ளத்தை அழுத்திய கொடிய துயரத்தையும் உடலை நசுக்கிய வேதனையையும் தனிமையில் சகித்தவரே, தனிமையில் நான் படும் வேதனையை கண்டுப்பிடிப்பார்.  தமது அன்பு நிறை  ஆறுதலால் என்னைத் தேற்றுவார்.


வாழ்வில் வேதனை இருக்கும்.  யேசுவுடன் சேர்ந்து யேசு பருகியது போல, தனிமையில், ஐத்செமணியின் கசப்பு நிறை பாத்திரத்திலிருந்து பருகியதுபோல நான் பருகுவேனானால் கசப்பான பாத்திரத்தில் இனிமையையும் காண்பேன்.


ஓ மிகவும் இனிய சேசுவே, உம்மை நான் அதிகமதிகமாக நேசிக்கும் வரத்தை அருள உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன்.

வியாழன், 12 ஜூன், 2014

பத்துக் கட்டளை விளக்கம்

  

    சர்வேசுரனுடைய கற்பனைகளையும், திருச்சபைக் கட்டளைகளையும் அநுசரித்து பாவத்தைப் புறம்தள்ளி புண்ணியத்தைச் செய்யவேண்டியது.

இரட்சண்யம் அடைவதற்கு தேவ கற்பனைகளை அநுசரிக்க வேண்டியது அவசியமோ?
   
    புத்தி விவரமடைந்த சகல மனிதர்களும் இரட்சணியமடைவதற்கு தேவ கற்பனைகளை அநுசரிப்பது அத்தியாவசியமாகும்.  "சீவியத்திற் விரவேசிக்க உனக்கு மனதனால் கற்பனைகளை அநுசரி".( மத். 19:17)

புத்தி விவரமடைந்த கிறீஸ்தவர்கள் இரட்சணியமடைவதற்கு ஞானஸ்தானமும் விசுவாசமும் போதாதா?

    போதாது.  ஏனெனில் கிரியைகள் இல்லாத விசுவாசம் உயிரற்றது. (யாக. 2: 20).  தேவனில் விசுவாசங்கொண்டிருப்பது நல்லதுதான்.  ஆனால் அந்த விசுவாசத்திற்கு தக்கவாறு நமது நடத்தையை சீர்படுத்தி பாவத்தை வட்டு ஒழுக வேண்டும்.  இதுதான் கற்பனைகளை அநுசரிக்கும் விதமாகும்.  ஆதலால் விசுவாசத்தோடு கற்பனைகளையும் அநுசரித்தால் தான் புத்தி விவரமடைந்த மனிதர் இரட்சணியமடையலாம்.

பத்து கற்பனைகளும் விசுவாசத்திற்கு அத்தியாவசியமோ?

    அவசியந்தான்.  விசுவாச மந்திரத்தில் நாம் விசுவசிக்க வேண்டிய சத்தியங்கள் எவ்வாறு சுருக்கமாய் கூறப்பட்டுள்ளதோ, அப்படியே நாம் அநுசரிக்க வேண்டிய நல்லொழுக்க சட்டங்கள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன.  மேலும் இந்தப் பத்துகற்பனைகளே, சத்திய கடவுளை நம்பி அவரது படிப்பினைகளை விசுவசிக்கவும், அவரது கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கவும் போதிக்கின்றன.  நித்திய நன்மைசுசூரூபியான சர்வேசுரன் நமக்கு இக்கட்டளைகளை அருளிச்செய்து நாம் இவ்வுலகிலே சந்தோஷத்தையும், நன்மையையும் அடையும்பொருட்டே.  ||நீதியானது சாதியை உயர்த்துகிறது.  பாவமோவெனில் பிரசைகளை நிற்பாக்கியராக்குகிறது. (பழ. 14:34).


சர்வேசுரன் நமக்கு அருளிச்செய்த கற்பனைகள் பத்து.

    1.  உனக்கு கர்த்தாவான சர்வேசுரன் நாமே.  நம்மை தவிர வேறு சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக.    
மோட்சத்தை அடைகிறததற்கு வேத சத்தியங்களை விசுவசிக்கிறதல்லாமல் இன்னுஞ் செய்யவேண்டியதென்ன?
    2.  சர்வேசுரனுடைய திருநாமத்தை வீணாக சொல்லாதிருப்பாயாக.
    3.  சர்வேசுரனுடைய திருநாள்களை பரிசுத்தமாய் அநுசரிக்க மறாவாதிருப்பாயாக.
    4.  பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக.
    5.  கொலை செய்யாதிருப்பாயாக.
    6.  மோக பாவம் செய்யாதிருப்பாயாக.
    7.  களவு செய்யாதிருப்பாயாக.
    8.   மோக பாவம் செய்யாதிருப்பாயாக.
    9.   பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக.
    10.  பிறர் உடமையை விரும்பாதிருப்பாயாக.

இந்த பத்து கற்பனைகளும் இரண்டு கட்டளைக்குள் அடங்கும். 
   
    1. எல்லாத்தையும் பார்க்க சர்வேசுரனைச் சிநேகிக்கிறது.

    2. தன்னைத் தான் சிநேகிக்கிறது போல் பிறரையும் சிநேகிக்கிறது.


    இந்தப் பத்துக் கற்பனைகளும் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.  முதல் மூன்று கற்பனைகளும் தேவ ஆராதனைகளும், தேவ வழிப்பாட்டிற்கும் உரித்தானவை: மற்றவை நாம் நம் மீதும் புறத்தியார் மீதும் செலுத்தவேண்டிய கடமைகளைப் போதிக்கின்றன.

திங்கள், 9 ஜூன், 2014

அர்ச். ஜான் பாப்டிஸ்ட் மரிய வியான்னி (Saint John Baptist Mary Vianney




அர்ச். ஜான் பாப்டிஸ்ட் மரிய வியான்னி (Saint John Baptist Mary Vianney, மே 8 1786 - ஆகஸ்ட் 4 1859) பிரான்சு நாட்டில் உள்ள ஆர்ஸ் எனும் சிற்றூரின் பங்கு குருவாய் இருந்தவர். பிரெஞ்சுப் புரட்சியின் காரணமாக விசுவாசமும் இறை நம்பிக்கையும் குறைந்து போய் இருந்தது  அப்பங்கு, இவரின் கடின செபத்தினாலும், உழைப்பாலும்  மனம் மாறியது . மரியன்னை மீதும் தேவ நற்கருணை மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்த இவர்,  மக்களிடம் பாவசங்கீர்த்தனம் கேட்பதில் மிகுந்த நேரத்தை செலவிட்டார். இவர் கத்தோலிக்க குருக்களின் பாதுகாவலர் ஆவார்.








பொருளடக்கம்

1 தொடக்க காலம்
2 குருப் பட்டம்
3 ஆர்சின் குருவாக
4 புனிதர் பட்டம்


தொடக்க காலம்


ஜான் மரிய வியான்னி லயன்ஸ் நகருக்கு அருகில் டார்டில்லி என்னும் இடத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் மத்தேயு - மேரி என்ற பெற்றோருக்கு மகனாக 1786 மே 8ந்தேதி பிறந்தார். இவருக்கு 3 வயதாக இருக்கும்போது பிரஞ்சு புரட்சி வெடித்தது. இவரது குழந்தைப் பருவத்தில் அவருடைய பெற்றோர்கள் மட்டுமே ஞான உபதேசம்  கற்றுக்கொடுத்தனர். இவர் வாழ்ந்த சூழலில் திவ்யபலிப்பூசையில்  பங்கேற்பது எளிதானதாக இல்லை.

இருப்பினும் இரு துறவற சகோதரிகள் வியான்னியின் முதல் தேவ நற்கருணை  வாங்க ஏற்பாடு செய்தனர். அந்நிகழ்வு 1799ல் இவருக்கு 13 வயது நிகழ்ந்தபோது, அதிகாரிகளுக்குப் பயந்து மூடப்பட்ட ஓர் இல்லத்தில் நிகழ்ந்தது. இவர் தன்னுடைய தோட்ட இல்லத்தை ஒரு சிறுவர்களின் ஞான உபதேசம் கூடமாக மாற்றினார். நெப்போலியன் மன்னன் புரட்சியாளர்களைத் தோற்கடித்து பரிசுத்த பாப்பரசுடன்  உடன்படிக்கை செய்துகொண்டதால் கத்தோலிக்க வேதம் பிரான்சு நாட்டில் 1802ஆம் ஆண்டு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. அப்பொழுது 16 வயதான வியான்னி, ஒரு குருவாக வேண்டும் என்று விரும்பினார்.

 குருப் பட்டம்


மூன்று ஆண்டுகளுக்கு பிறகே, வியான்னியின் தந்தை இவரது விருப்பத்துக்கு இணங்கி தோட்ட வேலையிலிருந்து இவருக்கு விடுதலை அளித்தார். பிறகு இவர், தனது பங்குத்தந்தையே நடத்தி வந்த வகுப்புகளுக்கு சென்று குருத்துவப் பயிற்சி பெற்றார். அங்கு பயின்றவர்களிலேயே வியான்னிக்குதான் வயது அதிகம்; படிப்பிலும் கடைசி நிலையில் இருந்தார். இலத்தீன் மொழி கற்பது இவருக்கு மிகவும் கடினமாக இருந்தது; தன் தாய் மொழியான பிரெஞ்சு மொழியிலும் போதிய அறிவு இல்லை. இவருடைய ஞாபக சக்தியும் மிகவும் பலவீனமாக இருந்தது. எனவே அர்ச்  ஜான் பிரான்சிஸ் ரெஜிஸ் என்பவருடைய திருத்தலத்திற்கு சென்று வேண்டினார். இவருடைய பங்குத்தந்தையின் ஆதரவே இவருக்கு ஊக்கம் ஊட்டியது.

1809-ல் நெப்போலியன் ஸ்பெயின் நாட்டின்மீது படையெடுத்தார். அப்பொழுது 23 வயதான வியான்னி, படையில் சேர்ந்து யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க விதி விலக்கு கேட்டார்; அது மறுக்கப்பட்டது. எனவே வீரர் உடை அணிவிக்கப்பட்டு பிரணி மலைக்கு அனுப்பப்பட்டார். அப்பொழுது அதிக மன வேதனை அடைந்தார். அங்கு இவர் சுகம் இல்லாதிருந்தபோது படையெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; படைகளுடன் சென்றபோது வழி தவறி நெப்போலியனுக்கு எதிரான மக்கள் வாழ்ந்த பகுதிக்குச் செல்ல நேர்ந்தது. எனவே அங்கு மக்களோடு இரண்டு ஆண்டுகள் தங்கிவிட்டார். பின்பு நெப்போலியன் உடன்பாட்டுக்கு பின்பு 1811-ல் அவர் வீடு திரும்பினார்.

இவருக்கு 25 வயதானபோது, உயர்நிலைப் பள்ளி கல்வி தொடங்கும் கட்டத்தில் இருந்தார்; மீண்டும் தன் பங்குத் தந்தையிடம் சென்று குருத்துவப் பணிக்குத் தயாரித்தார். 1812ல் இளம் குரு மாணவர் இல்லத்தில் சேர்ந்தார். அங்கு இருந்த 200 மாணவர்களில் இவரே கடைசியாக இருந்தார். பின்பு குருத்துவக் கல்லூரிக்குச் சென்று கற்க வேண்டியிருந்தது. ஆனால் பங்குத் தந்தையின் பரிந்துரையால்தான் அவர் குருப்பட்டம் பெற்றார். தன் பங்குத் தந்தைக்கே உதவியாக இருந்து மூன்று ஆண்டுகள் பணி புரிந்தார்.

ஆர்சின் குருவாக


வியான்னியின் பங்குத் தந்தை இறந்த பின்பு இவரை எங்கு அனுப்புவது என்று தெரியவில்லை. இறுதியாக மக்கள் அதிகம் இல்லாத ஆர்ஸ் என்ற கிராமத்தின் ஆலயத்துக்கு பங்குத்தந்தையாக அனுப்பப்பட்டார். அப்போது அந்த பங்கு ஆலயம் இடிந்து கிடந்தது. எனவே அதற்கு அருகில் இருந்த சிற்றாலயம் இவருடைய பங்கு ஆனது. அந்த ஆலயத்தைச் சார்ந்தவர்கள் 200 பேர் மட்டுமே இருந்தனர். அவர்கள் அனைவரும் கிறிஸ்துவ  பற்று இல்லாதவர்கள்.

அந்த மறைமாவட்டத்தின் தலைமை குரு வியான்னியிடம் அப்பணியைக் கொடுத்தபோது, “கடவுள் அன்பற்ற மக்களிடம், அவர் அன்பை உணரச் செய்வதே உமது பணியாகும்” என்று கூறினார். இத்தகைய மேலான ஆன்மீகப் பணியையே இவர் தனது உடனிருப்பாலும், போதனைகளாலும், தவ முயற்சிகளாலும் மக்களிடையே ஆற்றினார். அதிகாலையில் எழுந்து திருப்பலி நிறைவேற்றிவிட்டு பாவசங்கீர்த்தன இருக்கையில் அமரும் இவரிடம், எண்ணற்றோர் பாவசங்கீர்த்தனம் பெற வந்தனர்.

நாட்கள் உருண்டோடின. பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இவரைத் தேடி வந்தனர். உணவு உண்பதற்கும் நோயாளிகளைச் சந்திப்பதற்கும், ஞான உபதேச வகுப்புகள் கற்றுக் கொடுப்பதற்கும் மட்டுமே வியான்னி சிறிது நேரம் ஒதுக்குவார்; மற்ற நேரங்களில் எல்லாம் பாவசங்கீர்த்தனம் வழங்கிக் கொண்டே இருந்தார். இவருடைய போதனைகள் , மக்கள் மனதை ஆழமாகத் தொட்டன. குறிப்பாக இவர் மக்களைப் பாதித்த பாவங்களைப் பற்றியே எடுத்துரைத்தார்; அங்கு வாழ்ந்த விவசாயக் குடும்பத்தினர் மத்தியில் பரவிக் கிடந்த குடிப் பழக்கம், இரவு நடனங்கள், பக்தியற்ற நிலைமை ஆகியவற்றை மிகவும் அழுத்தமாக மக்கள் மனதில் பதிய வைத்தார். மக்கள் படிப்படியாக மனம் மாறினர்.
அர்ச். அல்போன்ஸ் லிகோரி எழுதிய அறநெறிப் பாடங்களைக் கற்று இவர் தன் பணியில் பயன்படுத்தினார். குருக்கள் மக்களுக்காகத் தவம் செய்ய வேண்டும் என்ற அவசியத்தை இவர் உணர்த்தினார். இவர் ஆன்மாக்களின் பாவங்களைக் கண்டுகொள்ளும் வரம் பெற்றிருந்ததால், பாவிகளிடம் கண்டிப்புடனும் கனிவுடனும் நடந்துகொண்டார். இவர் பாவிகளிடம் மிகவும் கனிவுடன் இருப்பதாக பல குருக்களின் குற்றச்சாட்டுக்கும் ஆளானார்.

 

புனிதர் பட்டம்



பிரான்சு நாட்டில் உள்ள ஆர்ஸ் நகரில் இருக்கும் புனித ஜான் மரிய வியான்னியின் அழியாத உடல்
வியான்னி பலவிதங்களில், சாத்தானின் துன்புறுத்தல்களுக்கு ஆளானார். ஏறத்தாழ 20 வருடங்கள் சாத்தான் இவரைத் தூங்கவிடாமல் தடுத்தான்; சில சமயங்களில் இவருடைய உடலை வதைத்தான்; இவருடைய பொருட்கள் பலவும் எரிந்து போகும்படி செய்தான்; இருப்பினும் விடாமுயற்சியுடனும் துணிவுடனும் போராடி செபத்தினால்  வெற்றி கண்டார்.

இறை ஞானத்தின் எளிய வடிவமாக விளங்கிய ஜான் மரிய வியான்னி, இறுதியாக 1859 ஆகஸ்ட் 4ந்தேதி மரணம் அடைந்தார். 1905ஆம் ஆண்டு, திருத்தந்தை 10ம் பயஸ் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கி இவரைப் ‘பங்குத்தந்தையரின் முன்மாதிரி’ என்று அறிக்கையிட்டார். 1925ல், திருத்தந்தை 11ம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். பங்குத்தந்தையரின் பாதுகாவலரான அர்ச். ஜான் மரிய வியான்னியின் அழியாத உடல் இன்றளவும் ஆர்ஸ் தேவாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இவரது இறப்பின் 150வது ஆண்டு நினைவை சிறப்பிக்கும் விதத்தில், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் ஜூன் 2009 - ஜூன் 2010 காலத்தை கத்தோலிக்க திருச்சபையில் குருக்களின் ஆண்டாக அறிவித்தார். அச்சமயம் வத்திக்கான் இவரின் உருவம் கொண்ட தபால் தலையை வெளியிட்டு சிறப்பித்தது.

தூசியாயிருக்கிறாய், திரும்பவும் தூசியாய்ப் போவாய் ( மரணம் பற்றி )

 தூசியாயிருக்கிறாய், திரும்பவும் தூசியாய்ப் போவாய் ( மரணம் பற்றி )


நீ தூசியாயிருக்கிறாய், திரும்பவும் தூசியாய்ப் போவாய் என்ற உண்மையை தீர்க்கமாய் தியானி.  நீ செத்துக் கல்லறையில், அழுகி, நாறி, புழுக்கள் உன் மூடு போர்வையாகும் என்ற இசையா வசனத்திருக்கிறார்.  இதே கதி பிரபுக்கும், குடியானவருக்கும்,  அரசனுக்கும், அழமைக்கும் சம்பவிக்கும்ää நீர் அவாகளின் உயிரைப் பறித்தால்? அவர்கள் மாண்டு, மண்ணாய்ப் போவார்கள். என்று தாவீது அரசன் பாடியபடி, ஆத்துமம் சரீரத்தை விட்டுப் பிரிந்த உடனே நித்தியத்தில் பிரவேசிக்கும்.  சரீரம் அழிந்து, மக்கி தூசியாய்ப் போகும்.

இப்போது ஒரு உயிர்விட்ட மனிதனை பார்ப்பதாக நினைத்துக்கொள்.  படுக்கையில் கிடக்கும் அவன் பிரேதத்தைப் பார்.  தலையானது மார்பில் சாய்ந்து கிடக்கிறது.  தலைமயிர் மரண வேதனையால் நணைந்து, அலோங்கோலமாய் கிடக்கிறது.  கண்விழிகள் துவாரத்துக்குள் மூழ்கிப்போயின.  உதடும் நாக்கம் உறுதியாகி, சரிரம் குளிர்ந்து பளுவாகி, பார்வைக்கு அலங்கோலமாய்க் கிடக்கிறது.  சவத்தை சூழ்ந்து நிற்பவர்கள் துக்கத்தால் முகம் மாறி புலம்பி அழுகிறார்கள்.  என்ன அவலக் காட்சி.  எத்தனையோ பேர் தங்கள் சுற்றத்தார், சிநேகருடைய மரணத்தைப் பார்த்தப்பின் உலகத்தைத் துறந்துவிட்டார்கள்.

சரிரம் அழிந்து நாறத் துவக்கும்போது அதை பார்ப்பவர்களுக்கு எவ்வளவோ அறுவறுப்பும் அச்ச நடுக்கமும் உண்டாகும்.  இதோ இந்த வாலிபன் இறந்து பத்து நாழிகை கூட ஆகவில்லை.  அதற்குள்ளாக வயிறு ஊதி பொறுக்க முடியாத நாற்றம் விசுகிறது.  அதனால் கதவு வாசலை விசாலமாய் திறந்துவிட்டு ஏராளமான வாசனை ஊதிபத்திகளை புகைக்க வேண்டி இருக்கிறது.  அந்த வியாதி விட்டிலுள்ள மற்றவர்களுக்கு பிடிக்காதபடி, பிரேதத்தை கல்லறையில் புதைக்க தீவிரிக்கிறார்கள்.

தனவந்தனுடைய சரீரம் அதிகமாய் புழுத்து நாறும் என்ற ஞானி எழுதியபடி, செத்தவன் ஐசரியனாய் இருந்தால் அவன் சரிரத்தினின்று அதிக நாற்றம் உண்டாகும்.  பெருமை சிலாக்கியத்திலும், தாறுமாறிலும் சிற்றின்ப சுகத்திலும் சீவித்து வந்த இந்த நிர்பாக்கிய மனிதனுடைய முடிவைப்பார்.  இவன் சாவதற்குமுன் மற்றவர்கள் கண்டு பேச மிக்க ஆவலுடன் காத்துகொண்டிருந்தார்கள்.  இப்போதோ வெறுப்புடன் தூரத்தில் நின்று பார்க்கிறார்கள்.  அவன் உயிரோடும் இருக்கும் போது அவன் புத்தி சாமர்த்தியம் திறமை முதலிய குணங்களை பற்றிச் சகலரும் பேசி புகழ்ந்தார்கள்.  ஆனால் அவன் மரித்த பின் அவன் ஞாபகம் ஓர் சத்தத்தால் அழிந்து போயிற்று.  என்னும் தீர்க்கதரிசன வாக்கியத்தின் படி அவனை சகலரும் வெகு சீக்கிரத்தில் மறந்து போவார்கள்.  அவன் குடும்பத்துக்கு மகிமை ஆபரணமாய் இருந்தான் என்றும்ää சிலர் தங்களுக்கு அவனால் ஏதாவது நன்மை வந்தபடியால் துக்கிப்பார்கள்.  இன்னும் சிலர் அவன் செத்ததினால் உண்டான லாபத்தைப் பற்றி சந்தோஷிப்பார்கள்.

ஆனால் சிறிது காலம் சென்ற பின் ஒருவரும் அவனைப்பற்றி நிணைக்கமாட்டார்கள்.  உன் உற்றார் சிநேகதருடைய மரண வேளையில் நீ எவ்விதமாக நடந்து கொண்டாயோ அவ்விதமே நீ சாகும்போதும் மற்றவர்களும் நடந்து கொள்வார்கள்.  ;இவ்விதமாக உன் மரணமானது வெகு சீக்கிரத்தில் பெரும் சந்தோஷத்திற்கு காரணமாகும்.  நீ உயிர் விட்டு யேசுகிறிஸ்துநாதரால் நடுதீர்க்கப்பட்ட அதேயிடத்தில் மற்றவர்கள் ஆடிப்பாடி, சிரித்து உல்லாசம் கொள்வார்கள்.  அப்போது உன் ஆத்துமம் எங்கே இருக்குமென்று சற்று யோசித்துப் பார்.


DownLoad Tamil Catholic Songs Here


Tamil Catholic Blog: Download Tamil Catholic Song

Tamil Catholic Blog: Download Tamil Catholic Song: You can download the Tamil Catholic old songs.  This blog is created to spread the catholic old songs.  Now a days the songs which we  li...

செவ்வாய், 3 ஜூன், 2014

Download Tamil Catholic Song

You can download the Tamil Catholic old songs.  This blog is created to spread the catholic old songs.  Now a days the songs which we  listening is like Cinema or Csi or Pentocost sons.


Here is some link so that you can download catholic songs.  Here is a link for which is about life history of St. Antony of Padua.  which was preached by Rev. Fr. Pancras.
He preached very clearly about st. Antony.  which has 12 parts.  You can download from Here.

Life History of St. Antony Part 1

Life History of St. Antony Part 2

Life History of St. Antony Part 3


Life History of St. Antony Part 4

Life History of St. Antony Part 5

Life History of St. Antony Part 6

Life History of St. Antony Part 7

Life History of St. Antony Part 8

Other part will be uploaded soon....


Download Catholic Tamil songs.  

Download the Matha Padalgal. ( Our Lady Songs)

தேவதாயின் மாதம் 

இந்த பூவிலே

கலங்கரை தீபமே

மாசில்லா கன்னியே

For More Pls Click Here..



சிறுவர்களும் சேசுவும்



              ஒரு சமயம் தாய்மார் சிலர் தங்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு சேசுவிடம் வந்தார்கள்.  ஆண்டவரது ஆசிரை பெற விரும்பினார்கள்.  அவர் இருந்த இடத்தை அனுகினார்கள்.  சீடர்கள் அதைக் கண்டு அவர்கள
அதட்டினார்கள்.  ஆண்டவர் சீடர்களைப் பார்த்து, "பாலர்களை என்னிடத்தில் வரவிடுங்கள்.  அவர்களை தடுக்காதேயுங்கள்.  ஏனெனில் சர்வேசுரனுடைய இராச்சியம் இப்படிப் பட்டவர்களுடையதே.  சிறுபிள்ளையைப் போல் சர்வேசுரனுடைய இராச்சியத்தை ஏற்றுக் கொள்ளாத எவனும் சர்வேசுரனுடைய இராச்சியத்தில் பிரவேசியானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்". என்று கூறினார்.  பின் அக்குழந்தைகளை அரவணைத்தார்.  அக்குழந்தைகளின் தலைமீது கை வைத்து ஆசிரளித்தார்.

நாம் எப்போதும் சிறு குழந்தைக்குரிய தூய உள்ளம் கொண்டவர்களாக இருக்கவேண்டும்.  எப்போதும் சேசுவை நாம் நேசிக்க வேண்டும்.  சேசுவும் எப்போதும் நம்மை தமது அரவணைப்பில் வைத்திருப்பார்.

திங்கள், 2 ஜூன், 2014

மலை பிரசங்கம்


                           
யூத மக்கள் சேசு செல்லும் இடமெல்லாம் சென்றார்கள்.  அவர் பல புதுமைகளைச் செய்தார்.  உடல் நலமில்லாதவர்களுக்கு உடல் நலம் அளித்தார்.  ஒரு சமயம் மக்களின் கூட்டத்தை கண்டார்.  மலைக்குச் சென்றார்.  அவருடைய சீடர்கள் அவரது பக்கத்தில் இருந்தார்கள்.  தம்மைச் சூழ்ந்து வந்த மக்களுக்கு அவர் போதித்தார்.

1. மனத்தரித்தர் பாக்கியவான்கள்.
 ஏனெனில் மோட்ச இராட்சியம் அவர்களுடையது.

2. சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்:
 ஏனெனில் அவர்கள் பூ மியை சுதந்தரித்துக் கொள்வார்கள்.

        3. அழுகிறவர்கள் பாக்கியவான்கள்:
 ஏனெனில் அவர்கள் ஆறுதலடைவார்கள்.

        4. நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்.
 ஏனெனில் அவர்கள் திருப்தியடைவார்கள்.

         5. இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்.
 ஏனெனில் அவர்கள் இரக்கமடைவார்கள்.

         6. தூய இருதயமுள்ளவர்கள் பாக்கியவான்கள்,
 ஏனெனில் அவர்கள் சர்வேசுரனை துதிப்பார்கள்.

         7.  சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்.
 ஏனெனில் அவர்கள் சர்வேசுரனுடைய மக்கள் எனப்படுவர்.

          8. நீதியினிமித்தம் உபத்திரவப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்:
 ஏனெனில் மோட்ச இராட்சியம் அவர்களுடையது.

உங்கள் பகைவர்களை நேசியுங்கள்.  உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.  உங்களை துன்புறுத்துகிறவர்களுக்காகவும, உங்கள் மேல் அபாண்டஞ் சொல்லுகிறவர்களுக்காகவும் வேண்டுங்கள். இவ்விதம் செய்தால், நல்லோர் மேலும் தீயோர் மேலும் தமது சூரியன் உதிக்கவும், நீதிமான்கள் மேலும் அநீதர்கள் மேலும் மழை பொழியவும் செய்கிற பரலோகத்திலுள்ள உங்கள் தந்தைக்கு ஏற்ற பிள்ளைகளாயிருப்பீர்கள்.

ஆகையால் பரமண்டலங்களிலேயிருக்கிற உங்கள் பிதா உத்தமராயிருக்கிறதுபோல நீங்களும் உத்தமராயிருங்கள்.



Click here to Download Tamil Catholic Songs .....

ஞாயிறு, 1 ஜூன், 2014

மரியாள் எலிசபெத்தம்மாளை சந்தித்தது



                       
  தன் உறவினர் எலிசபெத்தம்மாள் கருத்தரித்திருக்கிறாள் என்று கேள்விப்பட்ட மரியாள் அவளை பார்க்க விரும்பினாள்.  யூதேயா நாடு தெற்கே நெடும் தொலையிலிருந்ததது.  அங்கே செல்வதென்றால் பலநாள் பயணம் செய்ய வேண்டும்.  மலைப்பாங்கான இடம்.  எனினும் மரியாள் விரைந்து சென்றாள்.  எலிசபெத்தம்மாளின் வீட்டை அடைந்தாள்.  அப்போது அவள் திவ்விய இஸ்பிரித்து சாந்துவீனால் ஏவப்பட்டு மரியாள் கடவுளின் தாய் என்பதை உணர்ந்தாள். பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே: உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.  என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் எழுந்தருளிவர எனக்கு கிடைத்தத்தெப்படி?  என்று உரைக்க கூறினாள்.  அவ்வேளை அவள் வயிற்றிலுள்ள குழந்தை களிப்பால் துள்ளியது.

கன்னி மரியாள் கடவுளைக் கொண்டாடி என் ஆத்துமம் ஆண்டவரை மகிமைப்படுத்துகிறது.  என் இரட்சணியமாகிய சர்வேசுரனிடத்தில் என் மனமும் ஆனந்தமாய் எழுந்து மகிழ்கின்றது.  ஏனெனில் தமது அடியாருடைய தாழ்மையை கிருபாகடாட்சத்தோடு பார்த்தருளினார்.  ஆகையால் இக்காலமுதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள என்று தீர்க்கத்தரிசனமாய் உரைத்தார்கள்.  

மரியாள் மூன்று மாத காலம் அந்த இல்லத்தில் தங்கினார்.  கடவுளின் தாயாயிருந்தும் வீட்டு வேலைகளைச் செய்து உதவினாள்.  பிறர் சிநேகத்தோடு அவர்களோடு பழகினாள். அவர்களோடு கடவுளின் அரிய செயல்களையும் அளவிலா அன்பைப் பற்றியும் உரையாடினாள்.  மூன்று மாதங்கள் முடிந்தபின் தம் வீடு திரும்பினாள்.

தேவமாதா எலிசபெத்தம்மாளை சந்தித்த திருநாளை ஜீலை மாதம் 2ம் தேதி நாம் கொண்டாடுகிறோம்.