வின்சென்ட் தே பவுல், கிளாவர் இராயப்பர், டொன்போஸ்கோ முதலிய அர்ச்சிஷ்ட குருக்கள் மேல்நாடுகளில் அநேகமாயிரம் பேரை மனந்திருப்பி உத்தம கிறீஸ்தவர்களாக்கியிருக்கிறார்கள். நம் நாட்டிலும் அர்ச். சவேரியார், அர்ச். அருளானந்தர் போன்ற அர்ச்சிஷ்ட குருக்கள் தேவ சிநேகத்தினால் ஏவப்பட்டு நமது முன்னோரின் ஆத்தும இரட்சண்யத்தில் ஈடுபட்டு உழைத்தனர். கத்தோலிக்க தேசங்களிலும் வேத போதகநாடுகளிலும் ஆயிரக்கணக்கான அர்ச்சிஷ்ட குருக்களை இன்றைக்கும் காணலாம். கத்தோலிக்கத் திருச்சபையே சர்வேசுரனால் ஸ்தாபி;க்கப் பட்ட மெய்யான திருச்சபை என்று சுட்டிக் காட்டும் நான்கு பிரதான இலட்சணங்களும் "அறுப்பு மிகுதியாயிருக்கிறது, வேலையாட்களோ சொற்பம்: ஆகையால் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுப்பின் எஜமானை மன்றாடுங்கள்”.(மத். 9:37) என்று திவ்விய சேசு திருவுளம்பற்றியிருக்கிறார் அல்லவா? சத்தியத்தைக் கைக்கொள்ள ஆவலாயிருப்பவர் அநேகர். அவர்களுக்கு வேத சத்தியங்களைப் போதிக்கும் குருக்களின் தொகையோ சொற்பம். இன்னும் அநேக குருமார்களைத் தெரிந்து அனுப்பும்படி இவ்வுலகிலுள்ள அமைத்து மக்களுக்கும் ஏக கர்த்தரும் எஜமானருமாகிய பரம பிதாவை நோக்கிப் பிரார்த்திக்கும்பழ திவ்விய இரட்சகர் நம் எல்லோரையும் அன்புடன் அழைக்கிறார்.
அர்ச்சிஷ்டதனம் ஒனறல்லவா? அப்படியானால் கிறிஸ்துராஐ சேவையில் பரிசுத்த குருக்கள் இல்லாதிருக்க முடியுமா? திருச்சபை உண்டானது முதல் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பரிசுத்த குருக்கள் இருந்திருக்கிறார்கள், எப்போதுமிருப்பார்கள். ஆனால் இன்னும் அதிக பரிசுத்த குருக்கள் இருப்பார்களேயானால், அஞ்ஞான மக்கள் சீக்கிரம் மனம் திரும்புவார்கள். பாவிகள் தங்கள் துன்மார்க்க சீவியத்தை விட்டொழித்து சன்மார்க்க சீவியத்தை கடைப்பிடித்து வாழ்வார்கள். நல்ல கிறிஸ்தவர்கள் புண்ணிய சாங்கோபாங்கத்தில் உயர்ந்தோங்கி வளர்ந்து திருச்சபைக்கு ஆபரணமாகவும் மனுக்குலத்திற்கு முன் மாதிரிகையாகவும் விளங்குவர். உலகிலுள்ள சீர்கேடுகள் பெரும்பாலும் மறைந்தொழியும்: திவ்விய இரட்சகர் தமது இரத்ததை சிந்தி உயிரைக் கொடுத்த பரித்தியாகப் பலியின் பலனையும் மக்கள் அடைந்து இம்மையிலும் மறுமையிலும் பாக்கியமாய் வாழ்வார்கள். இத்தகைய உன்னத பாக்கியம் உலகத்திலுள்ள சகலருக்கும் கிடைக்க வேண்டுமானால் சத்திய வேதக் குருக்கள் தொகையிலும் அர்ச்சியசிஷ்டதனத்திலும் அதிகரிப்பது அவசியம். இக்கருத்து நிறைவேறுமாறு கத்தோலிக்கராகிய நாம் சேசுவின் திரு இருதயத்தை நோக்கி இரந்து மன்றாட வேண்டும்.
குருத்துவத்தின் மகத்துவ மேன்மையும் குருக்களினால் நமக்கு வரும் எண்ணிறைந்த உந்நத நன்மை வரங்களும் இன்னவையென்று எவ்வளவுக்கு நாம் நன்கறிந்திருக்கிறோமோ அவ்வளவுக்கு, “இன்னும் அதிக குருக்களை, அதிலும் பரிசுத்த குருக்களை, எங்களுக்கு தந்நருளும்” என்று பரம பிதாவை நோக்கி நாமெல்லோரும் பக்தியுருக்கத்தோடும் ஆவலோடும் நம்பிக்கையோடும் வேண்டிக்கொள்வோம் என்பது திண்ணம்.
குருத்துவத்தின் மகத்துவ மேன்மையை ஐயம் நீங்கக் கண்டுணர்ந்து மதிக்கவேண்டுமாகில் நாம் கத்தோலிக்க குருவானவர் நிறைவேற்றிவரும் வேலை இன்னதென்று அறிந்திருப்பது அவசியம். குருவானவர் சர்வேசுரனுடைய பிரதிநிதி. தமது காரியங்களையெல்லாம் இவ்வுலகில் அவர் கண்காணிக்க சர்வேசுரனால் நியமிக்கப்பட்டவர். “சர்வேசுரனைச் சார்ந்த வேலைகள் தெய்வீக வெலைகளாம். தெய்வீக வேலைகளைச் செய்யும் குருவானவரின் பதவி தெய்வீகப் பதவி” என்கிறார் அர்ச். அம்புரோஸ். சர்வேசுரனுக்கு பகிரங்க ஆராதனை செலுத்தி அவரை இவ்வுலகில் மகிமைப்படுத்துவதும் அவரிடமிருந்து உன்னத நன்கொடைகளைப் பெற்று இவ்வுலக மக்களுக்கு கொடுப்பதும் சர்வேசுரனைச் சார்ந்த வேலைகளல்லவா? சகல சம்மனசுகளும் அர்ச்சிஷ்டவர்களும் சேர்ந்து தேவ மகத்துவத்திற்கு வருவிக்கும் மேலான ஆராதனை ஸ்துதி தோத்திரங்களைவிட குருவானவர் தாம் நிறைவேற்றும் ஒரேயொரு திவ்விய பூசை பலியினால் மேலான ஆராதனை ஸ்துதி வணக்கம் தேவ மகத்துவத்துக்குச் செலுத்துகிறார். மோட்சவாசிகள் சர்வேசுரனுக்கு வருவிக்கக் கூடிய மகிமை வணக்கமெல்லாம் ஒன்றுசேர்ந்தாலும் அவையாவும் மட்டுள்ளவை, அளவு உள்ளவையே குருவானவர் ஒப்புக்கொடுக்கும் திவ்விய பூசை பலியினால் சர்வேசுரனுக்கு உண்டாகும் மகிமை வணக்கமோ அளவு கடந்தது. கரைகாணா சமுத்திரம் போன்றது: தேவ சமுகத்தில் அளவற்ற மதிப்புள்ளது. மோட்சவாசிகளுக்கும் இவ்வுலக மக்களுக்கும் சர்வேசுரன் அளித்திருக்கும் எண்ணற்ற நன்கொடைகளுக்கு ஏற்றவாறு நன்றிசெலுத்த அர்ச்சியசிஷ்டவர்களாலும் முடியாது. ஆனால் குருவானவர் நிறைவேற்றும் பூசைப்பலியோ சர்வேசுரனிடமிருந்து சம்மனசுக்களும் மனுமக்களும் பெற்றிருக்கும் சகல உபகார சகாயங்களுக்கம் யோக்கியமான நன்றி சமர்ப்பிக்கப் போதுமானது. ஆதலால் பரலோக பதவிகளுக்கொல்லாம் மேலானது குருத்துவப் பதவி என்று வேதசாஸ்திரிகள் கூறுவதில் ஆச்சரியப்பட இடமில்லை.
இது மாத்திரமின்றி மனதர் செய்யும் பாவங்களை மன்னிக்கவும் மன்னியாதிருக்கவும் பாவங்களுக்குத் தக்க பரிகாரம் செய்யவும் சர்வேசுரன் தமது குருக்களுக்கு வல்லமையும் அதிகாரமும் அளித்திருக்கிறார். “எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவைகள் மன்னிக்கப்படும். எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவர்களுக்கு அவைகள் மன்னியாதிருக்கப்படும்” (அரு. 20:23) பாவங்களை மன்னிப்பதும் மன்னியாதிருப்பதும் தெய்வீக வேலையல்லவா? இந்த வேலையைச் செய்துவரும் குருவானவரின் பதவியை தெய்வீகப் பதவி என்று அர்ச். அம்புரோசியார் அழைப்பதில் என்ன ஆட்சேபனை?
மரணத்தருவாயிலிருக்கும் கிறீஸ்தவனுடைய மன்றாட்டுக்கிணங்கி அர்ச். மிக்கேல் அவனிடமிருந்து நரகப் பேயை அடித்துத் துரத்திவிடுவார்;: ஆனால் அவனுடைய ஆத்துமத்தைக் கட்டியிருக்கும் பாவச் சங்கிலியைத் துண்டித்து எறிய அவரால் முடியாது. சங்கிலியைத் துண்டித்டிதறிந்து பாவியைப் பசாசின் அடிமைத்தனத்திலிருந்து காப்பாற்ற வல்லமை பூண்டவர் கத்தோலிக்கக் குரு. கோவிலில் ஒரு பாவசங்கீர்த்தன தொட்டியில் நமது தேவ இரட்சகர் உட்கார்ந்து கொண்டு தம்மிடம் வரும் பாவியைப் பார்த்து “உன் பாவங்களைப் பொறுக்கிறேன்” என்று சொல்வாராகில் அவனுடைய பாவங்கள் உடனே பொறுக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. அதேபொல் மற்றொரு பாவசங்கீர்த்தனத் தொட்டியில் ஒரு குருவானவர் உட்கார்ந்து கொண்டு தம்மிடம் வரும் பாவியைப் பார்த்து, “உன் பாவங்களை பொறுக்கிறேன்” என்றால் அதே விதமாய் பொறுக்கப்படும். இவ்வுலகில் குருவானவர் செய்யும் நியாயத் தீர்ப்பைக் கிறீஸ்து ராஜா பரலோகத்தில் உறுதிப்படுத்துகிறார்.
அர்ச். சின்னப்பர் சத்தியவேதக் குருக்களை சர்வேசுரனுடைய பரம இரகசியங்களை மனிதருக்குப் பகிர்ந்து கொடுக்கிறவர்கள் என்று கூறுகிறார். திவ்விய பலிபூசையில் குருவானவர் நமது தேவ இரட்சகரின் பரிசுத்த சரீரத்தைத் தமது கரங்களினால் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுப்பதுமன்றி விசுவாசிகளுக்கும் அதைக் கொடுத்து அவர்க்ள ஆத்துமங்களை போஷிக்கிறார். மனிதன் பிறந்ததிலிருந்து மரிக்கும் வரையில் அவனுக்கு உனனத உதவி சகாயங்களை புரிந்துவருபவர் இவ்வுலகில் சர்வேசுரனுடைய ஸ்தானதிபதியாயிருந்து அவருடைய தெய்வீக வேலையைச் செய்ய அவரால் நியமிக்கப்பட்டக் கத்தோலிக்க குருவானவர்தான். குழந்தைக்கு ஞானஸ்தானம் கொடுத்து அவனைச் சர்வேசுரனுடைய பிள்ளையாக்குகிறவர் குருவானவர். அவனுடைய ஆத்துமத்திற்குத் தெய்வீக மன்னாவாகிய தேவநற்கருணையை அளித்து அதைப் போஷிப்பவர் குருவானவர். ஆத்தும நோய்களைப் பாவசங்கீர்த்தனத்தின் வழியாய் குணப்படுத்தி ஆத்துமத்தை ஞான ஜீவியத்தில் ஸ்திரப்படுத்துகிறவர் குருவானவர். கடைசியாக மனிதன் மரித்தப் பின் தேவ சந்நிதானத்தில் அச்சமின்றி சென்று தனது சீவியத்தின் கணக்கைக் கொடுக்க அவருடைய மரணப்படுக்கையினருகில் நின்று அவனுக்கு அவஸ்தைக் கொடுத்து ஆறுதல் அளித்து ஆயத்தப்படுத்துபவர்கள் குருவானவர். மெய்யாகவே சகல நன்மைகளும் குருவானவர் மூலமாகவே நமக்கு வருகின்றன. கத்தோலிக்க குரு இவ்வளவு மகத்துவமும் மகிமையும் கௌரவமும் பொருந்தி மேலான பதவியை வகித்து வருபவரென்றால் அதற்கு தகுந்த அர்ச்சியசிஷ்டத்தனம் அவரிடத்தில் விளங்க வேண்டும்.
அர்ச்சியசிஷ்ட குரு சர்வேசுரன் தமது மக்கள் மீது தயைபுரிந்து அளித்தருளும் விலைமதிக்கப்படாத ஒரு நன்கொடை என்பதை விசுவாசிகள் ஞாபகத்தில் வைத்திருப்பது அவசியம். நன்கொடை என்றால் அதைப் பக்தி விசுவாசமுள்ள ஜெபத்தினால் சர்வேசுரனிடமிருந்து இரந்து மன்றாடிஅடைந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் விசுவாசிகள் எப்படியோ அப்படியே குருக்களும். விசுவாசிகளின் பிள்ளைகள் தானே குருமடத்தில் சேர்ந்து குருப்பட்டம் பெறுகிறார்கள். நல்ல மரம் நல்ல கனியை கொடுக்கும். கிறீஸ்தவர்கள் பக்தி விசுவாசமுள்ளவர்களாயிருந்தால் அவர்களிடமிருந்து உற்பத்தியாகும் பிள்ளைகளும் உத்தம கிறீஸ்தவர்களாய் வளர்ந்து சேசுவின் திரு இருதயத்திற்கு உகந்த அர்ச்சியசிஷ்ட குருக்களாய் விளங்குவார்கள். கத்தோலிக்க தாய் தந்தையர் தங்கள் பிள்ளைகளுள் ஒருவரையாகிலும் தமது குருவானவராக திவ்விய சேசு ஏற்றுக்கொள்ளக் கிருபை புரியுமாறு மன்றாட வேண்டும். குருத்துவ அழைத்தலை அபிவிருத்தி செய்ய ஏற்படுத்தப்பட்டிருக்கும் அர்ச். பத்தாம் பத்திநாதர் சபையில் சேர்ந்துள்ள குருத்துவ மாணவர்களுக்கு தங்கலான உதவிகளை செய்யும் கிறீஸ்தவர்கள் நன்கொடைகளைப் பெறுவார்கள். மாதத்தின் முதல் சனி குருக்களின் தினமாக திருச்சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நாள். நமது நாட்டிலும் அர்ச்சியசிஷ்ட குருக்கள் அதிகரிக்க வேண்டுமென்று நாமெல்லோரும் தினந்தோறும் திரு இருதயத்தை நோக்கிப் பிராத்திக்க வேண்டும். விசேஷமாய் மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமைகளில் இந்த மேலான கருத்துக்காக நமது ஜெப தபங்களை ஒப்புக் கொடுப்போமாக.