Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

நரகத்தின் உண்மை பற்றி - On the Reality of Hell

 நரகத்தின் உண்மை  பற்றி

நரகம் நம் புலன்களுக்கு நேரிடையாக எட்டாத ஒன்று. அப்படி ஒருவேளை எட்டக்கூடியதாக இருந்தால் இந்த உலகமே நமக்கு நரகமாய் இருக்கும். அது ஆண்டவரின் சித்தம் இல்லை. 

ஆனால் நித்திய  நரகம் உண்மை. ஏனெனில் ஆண்டவர்


தாமே அதைப்பற்றி பேசி இருக்கிறார். எத்தனையோ நரகத்தைப் பற்றிய வேதாகமப் பகுதிகள் உண்டு.

மோட்சத்திலுருந்தும் பல எச்சரிப்புக்கள் உண்டு. பாத்திமாவில் தேவமாதாவும் நரகத்தையே மூன்று சிறுவர்களுக்குக் காட்டினார்கள்.

நரகத்தில் இருந்தும் பல எச்சரிக்கைகள் உலகத்தை எட்டியிருக்கின்றன. 

ஆனால் இந்த பேருண்மையை "கதை" என்று சொல்லி அசட்டை செய்யும் பரிதாபமான ஆன்மாக்கள் பலர். 

இன்னும் சிலர்: ஆண்டவர் அளவற்ற இரக்கம் உடையவர். யாரையும் நரகத்தில் தள்ள மாட்டார். நரகம் பசாசுக்களுக்கு மாத்திரம் என்று சொல்லுவார்கள்.

ஆண்டவர் அளவற்ற நீதியும் உடையவர். அளவுள்ள இந்த சின்ன மனிதன் அளவற்றவரை  மனது பொருந்தி பாவத்தால் எதிர்த்து நிற்கும் போது அதன் விளைவும் அளவற்றதாக இருக்கிறது. INFINITY X 1 = INFINITY. 

தமது அளவற்ற இரக்கத்தினால் இன்னும் அந்த ஆன்மாவை மன்னிக்க காத்திருக்கிறார். அவர் எதிர் பார்ப்பது ஒன்றே ஒன்றுதான்: "உத்தம மனஸ்தாபம்". ஊதாரிப் பிள்ளையின் உவமை நம் எல்லோருக்கும் தெரிந்ததே.

இன்று பலரிடம் நாம் பார்ப்பது பாவத்தில் பிடிவாதமாக நிலைத்திருப்பது. நல்ல ஆண்டவரிடம் திரும்ப வேண்டும் என்ற நல்ல மனம் இல்லை. 

இவர்கள் மனந்திரும்ப தேவமாதாவிடம் தினமும் குடும்ப செபமாலையில் வேண்டிக்கொள்வோம். 


மரியாயே வாழ்க!


================



The reality of Hell is beyond the direct perception of our senses. If it's otherwise this world would be Hell for us. And that was also not the Holy Will of God.


Eternal Hell is true. Our Lord Himself has spoken about it and warned us. There are very many references to it in the Sacred Scriptures. 


Heaven itself has disclosed it by several Apparitions. The Blessed Virgin herself showed it to the 3 little children at Fatima.


The truth about Hell has reached the world from Hell itself.

Even after all these evidences, many are indifferent to this truth. Some call it "a fiction" and others  say "Our Lord is infinitely merciful and no one goes to Hell. Hell is for the Devils only".

But Our Lord has Infinite Justice too.

Man, a small finite being, stands up against the Infinite God when he consents to sin knowingly. Its consequence also is infinite. INFINITY X 1 = INFINITY.

Still, God in His Infinite Mercy waits for the return of this Prodigal Son. But God expects only one thing: " True Contrition". 

We see today in many people arrogance and stubbornness instead of a good will to return the Good God.

We should pray for these people in our daily family Holy Rosary. 


Ave Maria!

சனி, 28 ஆகஸ்ட், 2021

மாசில்லா கன்னியே பாடலின் வரலாறு:

 



1884-ல் Vade mecum என்ற French மொழி இசைக்கோர்ப்பில், Regnam Marie என்ற பாடல் வெளியிடப்பட்டது. அதுதான் மாசில்லா கன்னியே பாடலின் முதல் tune. பின் அதுவே உடனடியாக Latin மொழியில் Ave Maris Stella என்று ஏறக்குறைய 21 ராகங்களில் வெளிவந்தது. 
 
பின் 1918-ல் இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, Immaculate Mary என்ற பாடலாக வெளியிடப்பட்டது. பின் 1923-ல் திரு. மனுவேல் கோஸ்தா என்பவரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு யாத்ரிகட்கு பாதை காட்டும் தாரகையே என்ற பாடலாயிற்று. இந்த பாடலின் இறுதி கண்ணிதான் மாசில்லா கன்னியே. 
 
பின் 1927 - ல் இலங்கையில் தமிழ் மாற்றம் செய்யப்பட்டு மாசில்லா கன்னியே என்று ஆரம்பித்து புதிய பாடலாக வெளிவந்தது. (தமிழ், ஆங்கில மற்றும் லத்தீன் ஒலிப்பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கேளுங்கள்) நன்றி.
 

 
 
 
 


 

தேவமாதாவை நோக்கி அநுதினம் வேண்டிக்கொள்ளும் ஜெபம்

 

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
தேவமாதாவை நோக்கி
அநுதினம்
வேண்டிக்கொள்ளும்
ஜெபம்
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
சம்மனசுக்களுடைய இராக்கினியே!
 
மனிதர்களுடைய சரணமே!
 
சர்வலோகத்துக்கும் நாயகியே! 
 
நாங்கள் எல்லாரும் உம்முடைய பிள்ளைகளாய் இருக்கிறோம்.
 
எப்படியாகிலும் எங்களை இரட்சிக்க வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். 
 
தாயாரே! மாதாவே! ஆண்டவளே! 
 
உம்மை நம்பினோம், எங்களைக் கைவிடாதேயும். 
 
விசேஷமாய் நாங்கள் சாகும்போது பசாசினுடைய தந்திரங்களையயல்லாம் தள்ளிப் போட்டு, 
 
உம்முடைய திருக்குமாரன் சேசுநாதருடைய அண்டைக்கு நாங்கள் வந்து சேருமட்டும் தேவரீர் துணையாயிரும். 
 
இது நிமித்தமாக உம்முடைய திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து உம்முடைய பரிபூரண ஆசீர்வாதத்தைக் கேட்கிறோம். 
 
இதை அடியோர்களுக்கு இரக்கத்தோடே கட்டளை பண்ணியருளும் தாயாரே! மாதாவே! ஆண்டவளே! 
 
ஆமென்.🙏🌹

அன்பின் அரசர் - King_of_Love என்ற ஆங்கில நுலின் தமிழாக்கம் Tamil Catholic Audio Book

 அன்பின் அரசர்  

 
King_of_Love என்ற ஆங்கில நுலின் தமிழாக்கம்.
 
சங்கைக்குரிய மத்தேயோ க்ராலி சுவாமியவர்களின் 
பிரசங்கங்களின் தொகுப்பு.
 
 
  பாகம் 3   
          3.10
          3.9
          3.8
          3.7
          3.6 
          3.5
          3.4
          3.3 
          3.2 
          3.1 

 

தமிழ் வினாடி வினா -Tamil Catholic Quiz 6

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

தமிழ் வினாடி வினா 5- Tamil Catholic Quiz 5

தமிழ் வினாடி வினா 4 - Tamil Catholic Quiz 4

தமிழ் வினாடி வினா 3 - Tamil Catholic Quiz 3

தமிழ் வினாடி வினா 2 - Tamil Catholic Quiz 2

Tamil Bible Quiz 1

Fruits of the Holy Spirit in Tamil - இஸ்பிரித்துசாந்துவின் கனிகள்

 இஸ்பிரித்துசாந்துவின் கனிகள் 

 

 இஸ்பிரித்துசாந்துவின் கனிகள் மொத்தம் 12.

  1.  பரம அன்பு
  2. ஞான சந்தோஷம் 
  3. சமாதானம் 
  4. பொறுமை 
  5. தயாளம் 
  6. நன்மை தனம் 
  7. சகிப்பு தன்மை 
  8. சாந்தம் 
  9. விசுவாசம் 
  10. அடக்கவொடுக்கம் 
  11. இச்சை அடக்கம் 
  12. நிறை கற்பு

 

Gift of the Holy Spirit in Tamil - இஸ்பிரித்துசாந்துவின் கொடைகள்

 இஸ்பிரித்துசாந்துவின்கொடைகள் 

 

இஸ்பிரித்துசாந்துவின் கொடைகள் மொத்தம்   7

 

 

1. ஞானம் 

2. புத்தி 

3. விமரிசை 

4. அறிவு 

5. திடம் 

6. பக்தி 

7. தெய்வ பயம்