ஏழாம் பிரிவு
தேவ வரப்பிரசாதமும், செபமும் தேவ திரவிய அனுமானங்களும்
79. பாவத்தை விலக்கி மோட்சம் அடைவதற்கு நம்முடைய சொந்த பலன் போதுமா?
போதாது. நமக்கு தேவ வரப்பிரசாதத்தின் அனுக்கிரகம் வேண்டியது.
80. தேவ வரப்பிரசாதம் எத்தனை வகை உண்டு?
இரண்டு வகை உண்டு
1. தேவ இஷ்டப்பிரசாதம்
2. உதவி வரப்பிரசாதம்
81. தேவ வரப்பிரசாதங்களை அடைவது எப்பிடி?
செபத்தினாலும், தேவ திரவிய அனுமானங்களினாலும் அடையலாம்.
82. அடிக்கடி செபம் செய்ய வேண்டுமா?
வேண்டுமென்று கர்த்தர் கற்பித்தார்.
83. தேவ திரவிய அனுமானங்கள் எத்தனை?
ஏழு
84. ஏழும் சொல்லு?
85. ஞானஸ்தானம் ஆவதென்ன?
ஜென்ம பாவத்தையும் கர்ம பாவத்தையும் போக்கி, நம்மை சர்வேசுரனுக்கும் திருச்சபைக்கும் பிள்ளைகளாக்குகிற தேவ திரவிய அனுமானம்
86. உறுதி பூசுதல் ஆவதென்ன
நம்மை சத்திய வேதத்திலே திடப்படுத்துகிறதற்காக இஸ்பிரித்துசாந்துவையும் அவருடைய வரப்பிரசாதங்களையும் நமக்கு கொடுக்கிற தேவ திரவிய அனுமானம்.
87. நற்கருணை ஆவதென்ன?
அப்பத்தின் குணங்களுக்குள்ளேயும் முந்திரிகை இரசத்தின் குணங்களுக்குள்ளேயும் சேசுநாதர் சுவாமியுடைய திருச்சரீரமும் திரு இரத்தமும் தேவ சுபாபமும் அடங்கியிருக்கிற தேவ திரவிய அனுமானம்.
88. பச்சாதாபம் ஆவதென்ன?
ஞானஸ்தானம் பெற்ற பிற்பாடு செய்த பாவங்களை எல்லாம் விமோச்சனமாக்குகிற தேவ திரவிய அனுமானம்.
89. அவஸ்தை பூசுதல் ஆவதென்ன?
வீயாதிகாரரிடத்தில் மீதியான பாவங்களுக்கு பரிகாரமாகவும் அவர்களுடைய ஆத்துமத்துக்கும் சரிரத்துக்கும் ஆறுதலாகவும் உண்டாக்கப்பட்ட தேவ திரவிய அனுமானம்.
90. குருத்துவம் ஆவதென்ன
திவ்ய பலிபூசை செய்யவும், தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றவும் சுதந்திரம் கொடுக்கிற தேவ திரவிய அனுமானம்.
91. மெய்விவாகம் ஆவதென்ன
சமுசாரியாகிறவர்களுக்கு தேவ ஆசிர்வாதத்தையும் அவர்கள் தர்ம வழியில் நடக்கவும் தங்கள் பிள்ளைகளை தக்க பிரகாரமாய் நடப்பிக்கவும் வேண்டிய தேவ சகாயத்தையும் கொடுக்கிற தேவ திரவிய அனுமானம்.
92. தேவ திரவிய அனுமானம். ஆவதென்ன?
தேவவரப்பிரசாதத்துக்கு அடையாளமாகவும் அதனை ஆத்துமத்துக்கு கொடுத்தருளும் சாதனமாகவும், சேசுநாதர் சுவாமி ஏற்படுத்தின திருசடங்கே தேவ திரவிய அனுமானம்..
93. தேவ திரவிய அனுமானங்களுக்குள்ளே ஒரே விசை மாத்திரம் பெறக் கூடிய தேவ திரவிய அனுமானம்.எவை?
1. ஞானஸ்தானம்
2. உறுதி பூசுதல்
3. குருத்துவம்
94. இம்மூன்றையும் ஒரே விசை மாத்திரம் பெறக் கூடும் ஏன்?
அவைகளால் நமது ஆத்துமத்தில் அழியாத ஊர் தெய்வீக அட்சரம் பதியப்படுவதினாலே
95. தேவ திரவிய அனுமானம். நிறைவேறும்படி எத்தனை காரியங்கள் வேண்டியது
அதற்கான பொருளும்,வார்த்தையும் அவைகளை சரியாய் அனுசரிக்கும் குருவும் ஆகிய இம்மூன்றும்

ஞானஸ்தான விவரம்
96. ஞானஸ்தானம் கொடுக்கிறதெப்படி?
1.வது திருச்சபை ஞானஸ்தானம் கொடுக்கிற கருத்தோடு நானும் ஞானஸ்தானம் கொடுக்கிறேன் என்று நினைத்து கொள்கிறது.
2. வது பிள்ளைக்கு இட வேண்டிய பெயரை உச்சரித்து அதன் தலை மீது தண்ணீர் வார்கிறபோது தான் தானே சொல்ல வேண்டியதாவது
"பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரித்து சாந்துவுடையவும் நாமத்தினாலே நான் உன்னை கழுவுகிறேன்"
97. அவஸ்தை சமயத்தில் யாராகிலும் ஞானஸ்தானம் கொடுக்கலாமா?
அப்படிப்பட்ட சமயத்தில் யாராகிலும் கொடுக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக