இன்று, (14-1-2021) நம் மண்ணில் இந்துவாக பிறந்து , கிறிஸ்தவத்தை தழுவி, கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்ததால் இரத்த சாட்சியாக மரித்த தமிழ் நாட்டின் முதல் பொதுநிலையினர் மறைசாட்சி ஆன அருளாளர் தேவசகாயம் அவர்களின் நினைவு நாள். விருப்ப நினைவாக கொண்டாடி மகிழ்கிறோம். இந்தியாவில் பிறந்த்வருள் முதல் வேதசாட்சியும், பொது நிலையினர் வேதசாட்சியும் இவர்தான். மேலும் இங்கு பிறந்தவருள் முதல் போதுநிலையினர் புனிதரும், தமிழ் மண்ணின் முதல் புனிதரும் ஆக அறிவிக்கப்பட இருப்பவரும் இவரே.
இவர் ஒரு ஆச்சாரமான இந்து நாயர் குலத்தில் 1712ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தில் நட்டலம் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் நீலகண்ட பிள்ளை. இவர் தந்தையின் பெயர் வாசுதேவன் நம்பூதிரி. இவர் தற்போது கேரளாவில் உள்ள காயங்குலம் என்ற ஊரில் பிறந்தவர். இன்றைய கண்ணியாகுமரியில் உள்ள திருவட்டார் என்ற ஊரில் இருந்த ஶ்ரீ ஆதி கேசவ பெருமாள் கோவிலில் குருக்களாக இருந்தார்.இதே ஊரை சேர்ந்தவர் தாய் தேவகி அம்மா. நாயர் குல மரபு படி ,அருளாளர் தன் தாய் மாமாவால் வளர்தெடுக்கபட்டார். இநது சாஸ்திரங்களையும்,பல கலைகளையும் கற்றுத் தேர்ந்தார்.
இவருடைய குடும்பம் திருவாங்கூர் ராஜா மகாராஜா மார்த்தாண்ட வர்மா அரண்மனைக்கு நெருக்கமாக இருந்தார்கள். அருலாளரின் குணநலன்களை வைத்து ,அரசவையில் நிர்வாகத்தில் ஒரு உயர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியாக நியமிக்கப்பட்டார். நேர்மையாளர் ஆன இவர் ராஜாவின் நன்மதிப்பை பெற்றார்.
இதற்கிடையில் டச்சு தளபதி தே லானாயி உடன் நண்பர் ஆனார். உள்ளத்தில் அமைதி இன்றி தவித்த அருளாளர், கத்தோலிக்க தளபதியின் விவிலிய உபதேசங்களை கேட்டு ,உள்ளத்தில் அமைதி பெற்று கத்தோலிக்க திருமறை சத்தியங்களை கற்று தேர்ந்து, கிறிஸ்துவத்தால் ஈர்க்க பட்டு 1745 ம் வருடம் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவர் ஆனார். லாசர் என்ற பெயர் வைக்கப்பட்டது. லாசர் என்றால் God's help என்று பொருள்.எனவே இவர் தேவசகாயம் என்று அழைக்கப்பட்டார். இவர் மனைவி பார்கவி அம்மாளும் திருமுழுக்கு பெற்று ஞானப்பூ என்ற பெயர் வைக்கப்பட்டது. திருமுழுக்கு பெற்ற அருளாளர் கத்தோலிக்க திருமறையை பிறருக்கு உபதேசம் செய்தார் . அதனால் அனேகர் கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.
விசயம் ராஜாவின் பார்வைக்கு செல்ல ,அருளாளர் கிறிஸ்துவத்தை விட்டு விலகும் படி கட்டாயபடுத்தப்பட்டர். ஆனால் இவர் விசுவாசத்தில் நிலைத்திருக்க, உயர் அந்தஸ்தில் உள்ள பதவி பறிக்கப்பட்டு கரும்புளி,,செம்புளி குத்த பட்டு எருக்கமாலை போட பட்டு எருமையில் ஏற்ற பட்டு கொலை செய்யபடுவதற்காக ஆரல்வாய்மொழி என்ற இடத்திற்கு மக்கள் அதிகம் வசிக்கும் வீதி வழியாக கொண்டு செல்லப்பட்டார். காவல் வீரர்கள் அருளாளர் அவர்களை சொல்ல முடியாத சித்திரவதை செய்து கூட்டி சென்றார்கள்.வழியில் தாகத்திற்கு ஒரு பாறையை முழங்கையில் தட்டவே தண்ணீர் பெருக்கெடுத்தது. மேலும் இவர் கட்டி வைக்கப்பட்டிருந்த வேப்பமரத்தின் இலையை தின்று அநேகர் குணம் அடைந்தனர்.இறுதியில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்ட போது ,சுட முடியாததால், தண்டனை நிறைவேற்றுப்பவர்கள் கெஞ்சி கேட்க ,இவர் துப்பாக்கியை ஆசிர்வதித்து கொடுக்க பின் சுடப்பட்டு இரத்த சாட்சியாக 1752ம் வருடம் ஜனவரி 14ம் தேதி மரித்து சிலுவை பாடுகளை அனுபவித்த ஆண்டவர் இயேசுவிடம் சென்றார்.
அன்பானவர்களே, மேற்கொண்டு அரருளாளர் பற்றிய விபரங்கள்,அவர் பட்ட பாடுகள் முதலியவற்றை அனுப்பப்பட்டுள்ள, வீடியோக்களை முழுமையாக பார்த்து,மற்றும் விக்கிப்பீடியாக்கள் தயவுசெய்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து அருளாளர் உடைய விவரங்களை அவர்களிடம் கேட்போம்
இவருக்கு 2012ம் வருடம் டிசம்பர் 2ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அருளாளர் பட்டம் அளித்தார். இவரிடம் வேண்டிக்கொண்டதால் நடந்த புதுமையை,2020மம் வருடம் பெப்ருவரி 21மம் தேதி திருத்தந்தை ஏற்று கொண்டு, இவருக்கு புனிதர் பட்டம் கொடுப்பதற்கு ,வழி ஏற்படுத்தி உள்ளார். இந்தியாவில் பொதுநிலையினரில் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட போகிறவர் இவரே.
அனைவருக்கும் அருளாளர் தேவசகாயம் நினைவு தின வாழ்த்துக்கள்
அருளாளர் தேவசகாயம், எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
HAPPY MEMORIAL OF BLESSED DEVASAHAYAM
Bl.Devadahayam,pray for us
வாழ்த்துக்களுடனும் ஜெபங்களுடனும்
பி.பன்னீர் செல்வன்