மூன்றாம் பிரிவு
மனிதனுடைய இரட்சிப்பு
22. நம்மை இரட்சிப்பதற்காக மனிதனாய் பிறந்தவர் யார்?அர்ச். தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் தான்
23. அவர் எப்படி உற்பவித்துப் பிறந்தார்?
இஸ்பிரித்து சாந்துவினாலே கர்ப்பமாய் உற்பவி;த்து அற்புதமாய் பிறந்தார்.
24. யாரிடத்தினின்று பிறந்தார்?
ஒருக்காலும் கன்னிமை கெடாத அர்ச். கன்னிமரியம்மாளிடத்திலே நின்று பிறந்தார்.
25. சுவாமி பிறந்த எட்டாம் நாள் அவருக்கு என்ன பெயரிட்டார்கள்?
சேசு என்னும் பெயரிட்டார்கள்.
26. சேசு என்னும் பெயருக்கு அர்த்தமென்ன?
நம்மை இரட்சிக்கிறவர்.
27. ஆகையால் சேசு கிறிஸ்துநாதர் யார்?
நம்மை இரட்சிப்பதற்காக மனிதனாய் பிறந்த இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரனேயாம்.
28. சேசுநாதர் சுவாமி இவ்வுலகில் எத்தனை ஆண்டுகாலம் இருந்தார்?
33 ஆண்டுகாலம் இருந்தார்.
29. இவ்வுலகத்தில் என்ன செய்து கொண்டு வந்தார்?
சகல புண்ணியங்களையும் அற்புதங்களையும் செய்து நம்முடைய திவ்விய வேதத்தை போதித்து அப்போஸ்தலர்களை ஏற்படுத்தினார்.
30. சேசுநாதர் சுவாமிக்கு எத்தனை சுபாவங்கள் உண்டு?
தேவசுபாவம் மனித சுபாவம் ஆகிய இரண்டு சுபாவங்கள் உண்டு.
31. எந்த சுபாவத்திலே பாடுபட்டார்?
மனித சுபாவத்திலே பாடுபட்டார்.
32. யாருக்காக பாடுபட்டார்?
நமக்காக பாடுபட்டார்.
33. என்ன பாடுபட்டார்?
போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் மிகுந்த பாடுபட்டுச் சிலுவையிலே அறையுண்டு கடினமான மரணத்தை அடைந்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
34. அப்போது சுவாமியுடைய திரு ஆத்துமம் எங்கே போனது?
பாதாளங்களிலே இறங்கி அங்கே இருந்த புண்ணிய ஆத்துமாக்களுக்கு மோட்சபாக்கியம் கொடுக்கப் போனது
35. சேசுநாதர் சுவாமி கல்லறையை விட்டு உயிர்த்தெழுந்தருளினாரா?
மரித்த மூன்றாம் நாள் கல்லறையை விட்டு உயிர்த்தெழுந்தருளினார்.
36. உயிர்த்த பிற்பாடு பூலோகத்திலே எத்தனை நாள் தங்கியிருந்தார்?
40 நாட்கள்.
37. அந்த நாற்பது நாளும் என்ன செய்து கொண்டு வந்தார்?
அநேகம் விசை தம்முடைய சீடர்களுக்கு தரிசினையாக தம்மை காண்பித்து அவர்களை வேத சத்தியங்களில் ஸ்திரப்படுத்திக் கொண்டு வந்தார்.
38. நாற்பதாம் நாள் எங்கே எழுந்தருளிப் போனார்?
பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலதுப் பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
39. இப்போது சேசுநாதர் சுவாமி எங்கே இருக்கிறார்?
சர்வேசுரானாகிய மட்டும் எங்கும் இருக்கிறார். சர்வேசுரனும் மனிதனுமாகிய மட்டும் பரலோகத்திலும் திவ்விய நற்கருணையிலும் இருக்கிறார்.