Quotes in Tamil
சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்
- அர்ச். பிலிப்புநேரி
"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்
- அர்ச். தெரேசம்மாள் -
சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்
- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்
Pages
- Home
- Download Tamil Catholic Songs
- Download Our Lord Songs
- Tamil Catholic Prayers & Quotes in Image
- அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம்
- பாரம்பரிய கத்தோலிக்க ஜெபங்கள் (Download Catholic Books & prayers)
- கத்தோலிக்க சிறுகதைகள்
- Little Month of St. Joseph
- Traditional Latin - Tamil Mass Missal
- லத்தீன் - தமிழ் பூசை புத்தகம்
- கத்தோலிக்க புத்தகங்கள் வாங்க!!! - 9487609983
- தேவ தோத்திர பாடல்கள்
செவ்வாய், 21 செப்டம்பர், 2021
Gregorian Chant - Kryie VI
சனி, 11 செப்டம்பர், 2021
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைப் பற்றிய ஒரு குறிப்பு. - A Note on the Second Vatican Council.
A Note on the Second Vatican Council.
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைப் பற்றிய ஒரு குறிப்பு.
1962 முதல் 1965 வரை இந்த சங்கம் நடைபெற்றது. ஆரம்பம் நன்றாகவேஇருந்தது. சங்கத்திற்கான அடிப்படை ஆவணங்கள் (Preparatory Texts) கத்தோலிக்க விசுவாசத்திற்கு ஏற்றபடியே தயார் செய்யப் பட்டிருந்தன.
அந்தோ! இந்த ஆவணங்கள் விரைவாக ஓரங்கட்டப்பட்டன. முற்றும் புதிய ஆவணங்கள் தயார் செய்யப்பட்டன. (இதன் பின்னணி என்ன, யார் இதற்கு காரணம் என்ற விபரங்கள் இணையதளத்தில் உள்ளன ) கூறப்பட்ட காரணம்: உலகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரியங்களைத் தான் இந்த சங்கம் முன் வைக்க வேண்டும்.
பதித சபைகளை சேர்ந்த ஏழு பேர் இந்த சங்கத்தில் பார்வையாளர்களாய் இருந்தனர். சங்கத்தின் நடவடிக்கைகளில் நேரடியாக இவர்கள் கலந்து கொள்ளாவிட்டாலும், உணவு மற்றும் இடைப்பட்ட நேரங்களில் நடந்த உரையாடல்களின் வழியாக இவர்களால் ஏற்ப்பட்ட பாதிப்பு மிக அதிகம்.
இந்த சங்கத்தில் பங்கேற்ற ஒரு அதிமேற்றிராணியார் கூறியது: பெரிய அளவில் மூளை சலவை (Brainwashing) இந்த சங்கத்தின் போது நடைபெற்றது.
தொடரும்...
மரியாயே வாழ்க!
=================
Second Vatican Council was in session between 1962 and 1965. The beginning was indeed good. All the Preparatory Texts had been prepared in accordance with the Holy Catholic Faith.
Alas! Soon these Texts were discorded and replaced by brand new Texts. (See the internet for the background to this and names of persons responsible). Reason given for this takeover: The outcome of the Council should be acceptable to the world.
7 leaders from the Protestant sects had been invited as observers to the second Vatican Council. Though they didn't directly participate in the deliberations of the Council, they had much impact by way of conversations during the breaks between the sessions.
An Archbishop who participated in this Council said: There was much Brainwashing going on during this Council.
To continue...
Ave Maria!
புதன், 8 செப்டம்பர், 2021
மகா பரிசுத்த தேவமாதாவின் பிறப்பு. - Nativity of the Blessed Virgin Mary.
Nativity of the Blessed Virgin Mary.
Happy Feast!
மகா பரிசுத்த தேவமாதாவின் பிறப்பு.
புண்ணிய ஆன்மாக்கள் பலர் இந்த நாளுக்காக காத்திருந்தனர். சிலரே அதை கண்டு கொண்டனர்.
மோட்சம் அக்களிக்கின்றது. உலகில் நல்ல மனதுடைய மனிதர்களின் நல் மகிழ்ச்சி. உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஆன்மாக்கள் பெரிய எதிர்பார்ப்புடன் இந்த தெய்வீகக் குழந்தையை உற்று நோக்கிய வண்ணம் உள்ளனர்.
நரகத்தில் எல்லாம் எதிர் மறை.
நமது இரட்சகரைப் பெற்றெடுத்த இந்த சிறு குழந்தை இன்று உலகில் பரவி வரும் சாத்தானிய சக்திகளுக்கு மிகவும் பயங்கரம்!
மரியாயே வாழ்க!
================
Many Holy Souls were waiting to see this Day. Only a few lived to see it with their eyes.
Heaven and all people of good will on Earth rejoice today.
Souls waiting in the Purgatory keep looking at this Little Baby with much expectation of their deliverance.
Alas! Everything is just the opposite in Hell.
This Baby grew up and gave birth to God the Incarnate and Our Saviour.
She is also a Destroyer! A Destroyer of all Evils let loose on the Earth in our end times.
Ave Maria!
வியாழன், 2 செப்டம்பர், 2021
புதன், 1 செப்டம்பர், 2021
Ordinary Jurisdiction and (Extraordinary) Supplied Jurisdiction. சாதாரண அதிகாரம், அசாதாரண அதிகாரம்.
Ordinary Jurisdiction and (Extraordinary) Supplied Jurisdiction.
சாதாரண அதிகாரம், அசாதாரண அதிகாரம்.
விசுவாச மறுதலிப்பும் பதித தப்பறைகளும் அவசங்கைகளும் பரவி வரும் இந்த காலத்தில் கத்தோலிக்கர்கள், குருக்கள் மற்றும் மேற்றிராணிமார்களின் சாதாரண மற்றும் அசாதாரண அதிகாரம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
திருச்சட்டங்களிலும் இது பற்றிய பகுதிகள் உண்டு. In Canon Law.
சாதாரண அதிகாரம்:
பாப்பானவர் ஒரு மேற்றிராணியாருக்கு ஒரு மேற்றிராசனத்தைக் கொடுத்து பரிபாலிக்கச் சொல்கிறார். ஒரு மேற்றிராணியார் குருக்களை பங்குகளை பரிபாலிக்கச் சொல்கிறார்.
இது சாதாரண அதிகாரம். Ordinary Jurisdiction. சாதாரண காலங்களில் இது மட்டுமே போதுமானதாக இருந்தது. உதாரணமாக இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முற்பட்ட காலத்தில்.
விசுவாச மறுதலிப்பும், தப்பறைகளும் அவசங்கைகளும் பரவி வரும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் நல்ல குருக்கள் மற்றும் மேற்றிராணிமார்களைத் தேடிச்சென்று திவ்ய பலி பூசை மற்றும் தேவதிரவிய அனுமானங்களைப் பெற்று க் கொள்ளும் நிலைக்கு உலகில் ஏராளமான கத்தோலிக்கர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக இந்த அசாதாரண அதிகாரம் பெரிய அளவில் உலகில் இன்று பயன் பாட்டில் உள்ளது.
இந்த அசாதாரண அதிகாரம் (Supplied Jurisdiction )எங்கிருந்து வருகிறது?
கிறிஸ்துவின் ஞான சரீரமாகிய கத்தோலிக்க திருச்சபையிலிருந்து நேரடியாக பெறப்படுகிறது.
சாதாரண அதிகாரம் எங்கிருந்து வருகிறது?
கத்தோலிக்க படி நிலை அதாவது (Catholic Hierarchy) வழியாக வருகிறது.
கிறிஸ்துவின் ஞான சரீரமும் இந்த Hierarchy யும் ஒன்றல்ல. முந்தையது என்றும் மாறாதது. ஆண்டவருக்கு பிரமாணிக்கம் தவறாதது. பிந்தையது மாறக்கூடியது. பிரமாணிக்கமும் தவரக் கூடியது.
மேலும், சாதாரண அதிகாரத்திற்கு எல்கைகள் உண்டு. குறிப்பிட்ட மேற்றிராசனம் அல்லது பங்கு.
அசாதாரண அதிகாரத்திற்கு எல்கைகள் கிடையாது. உலகில் எங்கும் இந்த அதிகாரம் செல்லுபடியாகும்.
மரியாயே வாழ்க!
====================
The Ordinary and Extraordinary Supplied Jurisdiction.
Catholics should know about the Ordinary Jurisdiction and the Supplied (Extraordinary) Jurisdiction of the Clergy in the present times of Apostasy, Heresy and Sacrileges prevalent in the Catholic World.
There are passages in the Canon Law about these matters.
Ordinary Jurisdiction:
Pope asks Bishops to look after designated Dioceses. Bishops ask Priests to look after the Parishes.
This Ordinary Jurisdiction was sufficient in the normal times before the second Vatican Council, for example.
Today a large number of Catholics in the world are pushed to seek the Holy Mass and Sacraments from Priests and Bishops who have only the Supplied Jurisdiction. Due to the Apostasy, Heresy and Sacrileges that are prevalent.
Thus the Extraordinary Supplied Jurisdiction is in use on a large scale all over the world today.
Where does this Supplied Jurisdiction come from?
Ths comes from the Mystical Body of Christ which is the Holy Catholic Church.
Where does the Ordinary Jurisdiction come from?
It comes from the Catholic Hierarchy of Pope, Bishops and Priests.
The Mystical Body of Christ and this Hierarchy are not one and the same. The former never changes and is ever faithful to Our Lord. The latter is subject to change and may also become unfaithful to its Master and Judge.
One more difference: The Ordinary Jurisdiction has specified territories. For example a Bishop's territory is his Diocese. A Priest's territory is his Parish.
The Extraordinary and Supplied Jurisdiction has no territories. It can be exercised by a Priest or a Bishop anywhere in the world.
Ave Maria!