மங்கள் வார்த்தை
(சுருக்கமான வியாக்கியானம்)
சர்வேசுரன் அனைத்தையும் சிறப்புற செய்வார் - என்றும் இவை அனைத்தும் நமது படிப்பினைக்காக தரப்பட்டது என்றும் நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம். அதே போன்றுதான் மங்கள வார்த்தை நிகழ்ச்சியின் போதும் ஒவ்வொரு காரியமும், ஒவ்வொரு வார்த்தைகளும், சிறப்புற கோர்க்கப்பட்டுள்ளது. அதனை அர்ச். லூக்காஸ் எழுதிய சுவிஷேத்தின் 1-ம் அதிகாரத்திலிருந்து காண்போம்.இங்கே மூன்று காரியங்கள் அடங்கியுள்ளன.
1. மாதாவின் கவனத்தை தன்னிடம் திருப்ப தேவதூதன் கூறியது.
1.1. வித்தியாசமான முறையில் வாழ்த்தியது பிரியதத்ததினாலே பூரணமானவளே
1.2. அதன் அர்த்தம் கடவுள் உம்முடனே 1.3. அதன் விளைவு ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே.2. மனிதாவதார இரகசியத்தை வெளிப்படுத்தியது.
2.1. நடக்கப்போவதை முன்னறிவித்தல் இதோ, உமது உதிரத்தல் கெற்பந்தரித்து, ஓர் குமாரனைப் பெறுவீர் (லூக் 1:31)
2.2. அவர் யார் அவர் பெரியவராயிருப்பார் ... அவருடைய அரசாட்சிக்கு முடிவு இராது என்றார். (லூக்.1:32,33)
3. இது கடவுளின் செயல் என்பதை நிரூபித்தல்
3.1. எலிசபெத்தின் உதாரணம் உமக்குப் பந்துவாகிய எலிசபெத் மலடி எனப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.
3.2. உதாரணம் எடுத்துரைக்கும் உண்மை - ஏனெனில் சர்வேசுரனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை .