#அதிதூதரான_அர்ச்_மிக்கேல்
மி-கா-எல்: மிக்காயெல். இந்தப் பெயரின் பொருள் “#கடவுளுக்கு_நிகரானவன்_யார்?” என்பதாகும்.
அர்ச். மிக்கேல் அதிதூதர் கடவுளின் தூதர்களின் சேனையின் தளகர்த்தராக, கலகக்காரனான லூசிபருக்கு எதிராக விடுத்த #அறைகூவல்தான் இந்த வார்த்தைகள்.
*சர்வேசுரனுடைய படைகளின் தளபதியும், *தெய்வீகத் திடமாகிய புண்ணியத்தின் மாதிரிகையும்,
*தீய சக்திகளுக்கு எதிராகப் போராடும் ஒவ்வொரு விசுவாசமுள்ள ஆத்துமத்தினுடையவும் வல்லமையுள்ள பாதுகாவலருமான,
இந்த #அதிதூதர் இதே வார்த்தைகளைத் தம் பெயராகப் பெற்றுள்ளது மிகவும் பொருத்தமான காரியமாக இருக்கிறது.
ஏக,பரிசுத்த,சத்திய, கத்தோலிக்கத் திருச்சபை அர்ச்.மிக்கேல் அதிதூதரை எப்போதும் தன் #விசேஷ_பாதுகாவலராக ஏற்று வணங்கி வந்துள்ளது.
அது தன் *பாவசங்கீர்த்தன மந்திரத்தில் அவருடைய #பெயரைச்_சொல்லி மன்றாடுகிறது;
*மரண அவஸ்தைப்படும் தன் பிள்ளைகளின் #அருகில்_இருக்கும்படி அவரை அழைக்கிறது;
*உத்தரிக்கிற ஸ்தலத்தின் பரிசுத்தப்படுத்தும் தீச்சுவாலைகளில் இருந்து பரிசுத்த பேரொளியின் இராச்சியத்திற்கு அவர்களை #வழிநடத்திச்_செல்பவராக அவரையே அது தேர்ந்து கொள்கிறது.
இறுதியாக,
#அந்திக்_கிறீஸ்து பூமியின்மீது தன் இராச்சியத்தை ஸ்தாபக்கும்போது, அதற்கு எதிராகத் *#திருச்சிலுவையின் விருதுக் கொடியை விரித்துப் பறக்கச் செய்ய இருப்பவரும்,
திருச்சபையை அழித்து விடுவது பற்றிய சாத்தானின் சவாலைக் கேட்டபின், பாப்பரசர் 13-ம் சிங்கராயரால் மீண்டும் #திருச்சபையின் வெல்லப்பட இயலாத #பாதுகாவலராக ஸ்தாபிக்கப்பட்டவரும்,
#இறுதி_எக்காளத்தைத் தொனிக்கச் செய்பவரும்,
காட்சியாகமத்தில் கூறப்பட்டுள்ளபடி, #கள்ளத்_தீர்க்கதரிசியையும்_மிருகத்தையும சேர்த்துக் கட்டி, நித்திய அக்கினி எரியும் நெருப்புக் கடலில் அவர்களை வீசியெறிய இருப்பவரும்,
இதே அர்ச். மிக்கேல் அதிதூதர்தான்.
#அர்ச்_மிக்கேல்_சம்மனசானவரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
தொடரும்...