Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 26 நவம்பர், 2019

ஆண்டவர் உங்களை அன்பு செய்கிறார்.

ஆண்டவர்  உங்களை அன்பு செய்கிறார்.

சர்வேசுரன் உலகத்தை எவ்வளவாக நேசித்தாரென்றால் தம்முடைய  ஏக சுதனைத் தந்து, அவர்மேல் விசுவாசமாயிருக்கிற எவனும் கெட்டுப்     போகாமல் நித்திய ஜீவனை அடையும் படி அருளியிருக்கிறார். (1 அரு. 4:9;  உரோ. 5:8.)
உலகத்துக்கு ஆக்கினைத் தீர்வையிடும்படி சர்வேசுரன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், உலகம் அவராலே இரட்சிக்கப்படு வதற்காகவே அவரை அனுப்பினார்.

நாம் அனைவரும் நமது கெட்ட சிந்தனைகளாலும் செயல்களாலும் பாவம் செய்கிறோம். அந்த பாவங்கள் நம்மை ஆண்டவரிடம் இருந்து பிரித்து விடுகிறது.

 நம்முடைய பாவங்களுக்காக மரிக்க சர்வேசுரன் தமது ஒரே மகனை இந்த உலகத்திற்கு அனுப்பினார்.

சேசுநாதர் பரிசுத்த தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆள். அவர் பாவமில்லாத வாழ்க்கையை வாழ்ந்தார். அவர் நம்முடைய பாவங்களை கழுவ அவர் ;சிலுவை மரத்தில் மரித்தார். "நாம் இன்னும் பாவிகளாயிருக்கும்போதே, குறிக்கப்பட்ட காலத் தில் நமக்காகக் கிறீஸ்துநாதர் மரித்த தினாலே சர்வேசுரன் நமதுபேரில் வைத்திருக்கிற அன்பை விளங்கப் பண்ணுகிறார்." (Rom.5:8)
 சேசுநாதர் மரித்த மூன்றாம் நாள் உயிர்த்து, நாற்பதாம் நாள் பரலோகத்துக்கு ஆரோபணமாகி பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது  பக்கத்தில் இருக்கிறார். அவர்களே நமக்கு நித்திய ஜீவனை தருபவர்கள். 

 சேசுநாதர் திருவுளம் பற்றினத்தாவது :  "வழியும், சத்தியமும், ஜீவனும் நானே. என் வழியாய் அல்லாதே பிதாவினிடத்தில் சேருகிறவன் ஒருவனுமில்லை"( Jn . 14 : 6)

சேசுநாதர் சுவாமி நம்மை எல்லாம் அழைக்கிறார். நாம் அவரது அழைப்பை ஏற்று என்றும் அவரது பிள்ளைகளாக இருக்க வேண்டும்
  
யாரார் அவரை ஏற்றுக்கொண்டு, அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களானார்களோ, அவர்கள் தேவ புத்திரராகும்படி அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்தார். (Jn . 1: 12)