Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

புதன், 30 அக்டோபர், 2013

தெய்வபயமே ஞானத்தின் தொடக்கம்

தெய்வபயமே ஞானத்தின் தொடக்கம்

பயத்தின் தோற்றம்:

சர்வேசுரனுக்குப் பயப்படாத மக்களாய் நாம் இருக்கும்போது உலகு சார்ந்த பயம் நம்மை சூழ்கிறது. இதை ஆதாம், ஏவாளின் வாழ்க்கையில் நாம் அறிவோம். பாவம் செய்த அவர்கள் அச்சத்தால் ஆட்கொள்ளப் படுகிறார்கள். அவர்களிடம் தேவையற்ற நாணம் ஏற்படுகிறது (ஆதி ஆகமம் 3:10). ஏனெனில் ஒரு வருகை நாணம் பாவத்திற்கு இட்டுச் செல்லும் (சீராக் 4:21).

சாராவின் நம்பிக்கைக்குறைவு:


எனவே நமது பாவங்கள்தான் நமது பாவஉணர்வுக்கு காரணமாக உள்ளது. சாராவுக்கு சர்வேசுரன் ஒரு மகனைத் தருவேன் என்று வாக்களித்த போது அவரது நம்பிக்கைக் குறைவு அவரை நகைக்க வைத்து அதன்பின் அச்சம் அவரை ஆட்கொள்கிறது. (தொ.நூ 18:15)

சினத்தைத் தூண்டும் பயம்:

காயின் செய்த பாவம், ஆண்டவர் அவனிடம் பேசிய போது சினத்துடன் பதில் பேசத் தூண்டியது. அதற்குக் காரணம் அவனது பயம். ஆபேலைக் கொலை செய்ததை ஆண்டவர் அறிந்துக் கொண்டார் என்று அறிந்து பயந்து, தனது பயத்தை மறைக்க சினத்தை வெளிப்படுத்தினான். சினம் பயத்தின் வெளிப்பாடுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல் நிறைவேறத் தடையாயுள்ளது. (யாக் 1:20)

ஆண்டவர் மீது அச்சமின்மை :

ஆண்டவரைப் பற்றிய அச்சமின்மை தீயோராயிருந்தும் தம்மைத் தேடி அழைத்த அரசரை, திருமண உடையணியாமல் அவமதிக்கக் காரணமாய் இருக்கிறது என்பதை திருமண விருந்து உவமையில் பார்க்கிறோம். (மத் 22:10)crucifiction நல்ல மற்றும் கெட்ட கள்ளன் உவமைகளைப் பார்ப்போம். ஆண்டவரைப் பற்றிய அச்சம் உலக மீட்பரை மரணத்தருவாயில் சந்திக்க வைக்கிறது. உணர வைக்கிறது. அவன் விண்ணகத்தை தாயகமாகக் கொள்கிறான். ஆனால் ஆண்டவரைப் பற்றிய அச்சமின்மை, அதன் விளைவான பாவஉணர்வற்ற தன்மை உலக மீட்பரை அவமதிக்கத் தூண்டுகிறது. அதுவே அவன் பாதாளத்தில் விழக் காரணமாகிறது.

குற்ற உணர்வு:

உலக நாட்டமுடையோருக்கு ஏற்படும் பய உணர்வு ஞானத்தை தராது. ஏனென்றால் அந்த பயஉணர்வு குற்றஉணர்வையே தூண்டும். கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவைத் துண்டித்து விடும். இதுதான் ஆசிப்பெற்றோர் வாழ்வில் பாவம் நுழைந்தபோது நிகழ்ந்தது. செய்தபாவம் குற்ற உணர்வைத் தூண்டியது. ஆண்டவரை நேருக்கு நேர் சந்திக்கும் நிலையைத் தடுத்தது.

தெய்வபயமே ஞானத்தின் தொடக்கம்:

அன்னை மரியாவின் தெய்வபயம் கன்னிமரியாவை உலகத்தினர் அனைவரின் தாயாக உயர்த்தியது. Virgin Maryதன் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுக்கும் கடவுளிடமும், மனிதரிடமும் போராடாமல் மனதில் இருத்தித் தியானித்தார். தெய்வபயம் நிறைந்த அவரிடம் உலகு சார்ந்த பயங்கள் ஏதும் இல்லை. தெய்வ பயம் சர்வேசுரன் விருப்பத்தை உணர்ந்து, புரிந்து, இறைவழி நடக்க இவருக்கு உதவியது. உள்ளத்தை ஊடுருவிப் பார்ப்பவர் நம் கடவுள். மறைவாய் உள்ளதை கூரைமேல் அறிவிப்பவர் நம் கடவுள். எனவே உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவைப் பார்க்கிறவர்க்கே நமது துதிகள் இருக்க வேண்டும். எனவே, போலியான வெளிவேட முகமூடியைக் களைந்து விட்டு சர்வேசுரனை ஆவியிலும் உண்மையிலும் தொழுவோம். தேவையற்ற உலக அச்சங்களை விலக்குவோம். இறை அச்சத்தால் நிரம்பப்பெற்று சர்வேசுரனின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்.


Download Latin songs- Click here

Download Tamil Catholic Songs - Click here

சனி, 26 அக்டோபர், 2013

Download Latin Song Kyrie 9

Download Latin Song Kyrie 9

Kyrie 9 is a Our Lady song ...This song will be sing during the feast Our Lady...

You can download latin song Kyrie 9


Kyrie

Gloria

Sanctus

Agnus Dei

Ite  missa est

வெள்ளி, 25 அக்டோபர், 2013

இலத்தின் பாடல் Kyrie 8

நீங்கள் லத்தின் பாடலான Kyrie 8 இங்கு பதிவிரக்கம் செய்யலாம்.

இந்த பாடல் தான் அனேக கோவில்களில் பாடப்படும் பாடல்


Right  click and Save link as


Asperges me


Kyrie


Gloria


Credo

Sanctus


Agnus Dei


Ite Missa est


Vidi Aquam (Paschal time)


You can download Kyrie 8 of Latin songs...
This song is used widely in India in Lain Mass..

செவ்வாய், 8 அக்டோபர், 2013

புனித தோமையார் மலை (St. Thomas Mount)

செயின்ட் தாமஸ் மவுண்ட் அதாவது புனித தோமையார் மலை (St. Thomas Mount) என்பது, பரங்கிமலை என்னும் பெயராலும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு சிறு மலையான புனித தோமையார் மலை, சென்னையிலுள்ள புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாகும். இம்மலை சென்னை நகரின் கிண்டி பகுதியில், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெகு அருகில் அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் இந்திய இராணுவப் பயிற்சி மையம் ஒன்றும் உள்ளது. இம்மலை கடல்மட்டத்தில் இருந்து ஏறக்குறைய 300 அடி உயரம் கொண்டது.  இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான புனித தோமையார் மறைசாட்சியாக இம்மலையில்தான் கொல்லப்பட்டார். இவர், இந்தியாவுக்கு முதன் முதலில் கிறிஸ்தவத்தைக் கொண்டுவந்தவர்.

இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னர், இந்தியாவின் Gondophare அரசரின் வணிகர் Habban என்பவருடன் தோமையாருக்குக் தொடர்பு ஏற்பட்டது. இந்த வணிகருடன் கி.பி.52ம் ஆண்டில் தற்போதைய கேரளாவின் மலபார் கடற்கரையில், கிரங்கனூரில்(Cranganore)வந்திறங்கினார். இக்கடற்கரைப் பகுதியில் பல ஆலயங்களைக் கட்டிய பின்னர், இந்தியாவின் கோரமண்டல் கிழக்குக் கடற்கரைப் பகுதிக்கும், பின்னர் தெற்குப் பகுதிக் கும் வந்தார் அப்புனிதர். அங்கு நற்செய்தி அறிவித்தபோது, எதிரிகளுக்குப் பயந்து முதலில் லிட்டில் மவுண்ட் சென்றார். பின்னர் தற்போதைய தோமையார் மலையாகிய பரங்கிமலை சென்றார். அம்மலையில் அவர் செபத்தில் ஆழ்ந்திருந்தபோது கி.பி.72ம் ஆண்டில் பகைவர்களால் கொலைசெய்யப்பட்டார். புனித தோமையார் உயிரிழந்த இடத்திலுள்ள ஆலயத்தில் அவர் வழிபட்ட சிலுவை இன்றும் வைத்து போற்றி பாதுகாக் கப்பட்டு வருகிறது. இங்குள்ள ஓவியங்கள் இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும். புனித லூக்காவினால் வரையப்பட்ட அன்னை மரியாளின் ஓவியம்,  இயேசு, அவரின் 12 திருத்தூதர்கள் என ஏராளமான பழமை மாறாத ஓவியங்கள் இன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவை ஏறக்குறைய 300 ஆண்டுகள் பழமையானவை. இந்த ஆலயம் 2011ம் ஆண்டு தேசியத் திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. புனித தோமையாரின் மலையில் ஏறுவதற்கு வசதியாக படிக்கட்டுகள் உள்ளன. சென்னையின் முழு அளவையும் இந்த மலையின் மீதிருந்து கண்டு இரசிக்கலாம்.